CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-12

முந்தைய பாகங்களுக்கு...

வணக்கம் வலை நண்பர்களே,

டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும்.  நன்றி  

இந்தப் பதிவின் இறுதியில் விளக்க வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும். அதில் கீழ்க்கண்ட படத்திற்கான program எளிதாக புரியும்படி simulator மூலம் விளக்கப்பட்டுள்ளது. 


மேற்கண்ட படத்திற்கு absolute method-இல் ப்ரோக்ராம் எவ்வாறு எழுதுவது என பார்ப்போமா?

முதலில் கீழ்க்கண்ட வரிகளை ஒருமுறை படித்துப் பார்த்து அந்த வரிகளை மனதில் எப்போதுமே இருத்திக் கொள்ளுங்கள்.

1. G00 G90 G17 G21 G40 G80 G49; 
ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது இந்த CODES முதல் வரியாக கொடுத்தால் நல்லது.
மேற்கண்ட CODES மிக முக்கியமானது. ஏனெனில் ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது சில தேவையில்லாத CODES செயல்பாட்டில் இருக்கக்கூடாது. அதனால் இந்த G17- XY PLANE, G90- ABSOLUTE METHOD, G21- METRIC INPUT, G40- CUTTER RADIUS COMPENSATION CANCEL, G80 CANNED CYCLE CANCEL, G49- TOOL LENGTH OFFSET CANCEL ஆகிய இந்த CODESகளை தவறாமல் கொடுக்க வேண்டும்.

2. G91 G28 Z0. என்ற வரியை இரண்டாவதாக கொடுக்க வேண்டும்.

இந்த வரியில் G28- AUTOMATIC ZERO RETURN கொடுக்கப்பட்டு Z AXISஐ HOME POSITIONக்கு கொண்டு செல்ல வேண்டும்.

3. M06 T1; முதல் TOOL ஐ CALL செய்ய வேண்டும். முதல் TOOL ஆக நாம் செட் செய்து வைத்திருப்பதை T1 இல் CLAMP செய்து வைத்திருக்க வேண்டும்.


4. G0 G90 G54 X Y; இந்த வரியில் X,Y முதல் புள்ளியை கொடுக்க வேண்டும்.


5. M03 S3000; அடுத்து இந்த வரியை கொடுக்க வேண்டும். தேவையான SPINDLE SPEED மற்றும் SPINDLE ROTATION DIRECTION கொடுக்க வேண்டும்.


6. G43 Z100. H1; என்று கொடுக்க வேண்டும்.


7. G00 Z5. M08; என்று கொடுக்க வேண்டும். இங்கே COOLANT ON செய்ய வேண்டும் (தேவையெனில்).


8. G01 Z-1. F100; என கொடுக்க வேண்டும். தேவையான FEED RATE தர வேண்டும்.


மேற்கண்ட எட்டு வரிகளில் உள்ளவை PROGRAM-க்கு மேலே வர வேண்டும்.

9. படத்தின் அளவுகளுக்கான புள்ளிகளை கொடுக்க வேண்டும். (PROGRAM POINTS) 

கீழே உள்ள 10 - 14 வரிகள் PROGRAM-க்கு கீழே அடுத்தடுத்து வர வேண்டும்.

10. G01 Z5. M09; என்பது வர வேண்டும். COOLANT OFF செய்ய வேண்டும்.

11. G00 Z100. M5; என்பது வர வேண்டும். SPINDLE STOP செய்ய வேண்டும்.


12. G00 G91 G28 Z0; Z AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


13. G00 G91 G28 Y0; Y AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


14. M30; ஆகியவை வரிசையாக வர வேண்டும்.



PROGRAM எழுதுவதற்கு முன் ORIGIN எங்கே வைக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த படத்தில் நடுவில் ORIGIN உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே நமது PROGRAM அந்த ORIGIN புள்ளியை வைத்தே எழுதுவோம்.

N1 G00 G90 G17 G21 G40 G80 G49;
N2 G91 G28 Z0.;
N3 M06 T1;
N4 G0 G90 G54 X-10. Y-30.;
N5 M03 S1000;
N6 G43 Z100. H1;
N7 G00 Z5. M08;
N8 G01 Z-1. F100.;
N9 G01 X10. Y-30. F200.;
N10 X10. Y-10.;
N11 X30. Y-10.;
N12 X30. Y10.;
N13 X10. Y10.;
N14 X10. Y30.;
N15 X-10. Y30.;
N16 X-10. Y10.;
N17 X-30. Y10.;
N18 X-30. Y-10.;
N19 X-10. Y-10.;
N20 X-10. Y-30.;
N21 G01 Z5. M09;
N22 G00 Z100. M5;
N23 G00 G91 G28 Z0.;
N24 G00 G91 G28 Y0.;
N25 M30;

ABSOLUTE முறையில் PROGRAM எழுதிவிட்டோம். இதற்கான SIMULATION-ஐ ஒரு வீடியோ மூலம் பார்கலாமா?





அடுத்த பதிவில் incremental method-இல் program அமைப்பது பற்றி பார்ப்போம்.
மேலும் வாசிக்க... " மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-12"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1