CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label தனபாலு...கோபாலு..... Show all posts
Showing posts with label தனபாலு...கோபாலு..... Show all posts


இவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... அரட்டை

தனபாலு: எங்க போனான் இந்த கோபாலு.... கொஞ்ச நாளா கடை பக்கம் காணலியே.... எங்கிட்டாவது எவளையாவது இழுத்துக்கிட்டு ஓடிட்டானா? என் கிட்ட சொல்லாம எதுவும் செய்ய மாட்டானே...
(கோபாலு வருகிறான்)

கோபாலு: அண்ணே... அண்ணே... என்னண்ணே எப்பிடி இருக்கீங்க? ஏண்ணே டல்லா இருக்குற? தீபாவளி சமயத்துல இப்பிடி நீ டல்லா இருந்தா கடை யாவாரம் கொறஞ்சு போயிருமே...?

தனபாலு: வாடா... உலக நியாயம் பேசுறவனே.... உன்னத் தாண்டா தேடிட்டு இருக்கேன்... சொல்லாம கொள்ளாம இம்புட்டு நாளா எங்கடா போன?

கோபாலு: அண்ணே, மாமா வீட்டுக்கு போயிருந்தேன். வேலை வாங்கி தரேன்னு சொல்லி இருந்தார். அதான் போனேன். ஆனா பிரயோசனமே இல்லை. 

தனபாலு: என்னடா சொல்ற... வேலைக்கு போனியா? என்ன வேலை பார்த்த? சொல்லுடா...

கோபாலு: நீ வேற கடுப்ப கிளப்பாத... வேலையும் பாக்கல... ஒரு மண்ணாங்கட்டியும் பாக்கல.... அந்தாளு வேலை வாங்கித் தறேன்னு அவர் கூட எடுப்பா வச்சுகிட்டார்.

தனபாலு: ஹா...ஹா... ஏண்டா, சலிச்சுக்கற... அவருக்கு பொண்ணு இருக்குன்னு சொல்லி இருக்கியே, அத ரூட் விட வேண்டியது தானே...

கோபாலு: ஹி..ஹி.. அது ஒரு அரலூசு... எவன பார்த்தாலும் பல்ல காட்டும். அவள சின்ன வயசுல இருந்தே எனக்கு பிடிக்காதண்ணே... சரி பேச்ச விடு. எதுக்காக டல்லா இருந்த?

தனபாலு: அதுவாடா... தீபாவளி சமயமா இருக்கு. நீ கடையில கொஞ்சம் உதவியா இருப்பே... அதான் உன்னைக் காணாம்னு கவலையில இருந்தேன். வா.. வந்து யாவாரத்த பாரு... 

கோபாலு: வரேண்ணே ... அந்தாளுக்கிட்ட எடுப்பா இருக்கறதுக்கு பதிலா உன்கிட்ட எடுப்பா இருக்கலாம். ஒன்னும் தப்பில்ல. 

தனபாலு: டேய் ரொம்ப பேசாத.... வேலையை பாரு...

கோபாலு: அண்ணே ஊர்ல எலக்சன் எப்பிடி போகுது? யாரு ஜெயிக்கற மாதிரி தெரியுது? 

தனபாலு: எங்கடா... ஒரு கட்சிக்காரனும் காசை கண்ணுல காட்ட மாட்டிங்கறான். அதனால யாரு வருவாங்கன்னு யூகிக்க முடியல.

கோபாலு: நீங்க காசு கெடக்கலைன்னு கவலைப்படுறிங்க. விருதுநகர் காரியாபட்டியில கொடுத்த பணத்தை எடுத்திட்டு கம்பளைன்ட் பண்றாங்க. என்ன உலகம் இது. நீங்க பணம் கிடைக்கலைன்னு வருத்தப்படறிங்க. அங்க பணம் கொடுத்தாங்கன்னு வருத்தப்படறாங்க.

தனபாலு: யாரு ஜெயிச்சு வந்தாலும் நம்மளுக்கு பிரயோசனம் இல்லை. கொடுக்கிற பணமாவது நம்மளுக்கு மிஞ்சுமே. 

கோபாலு: கேப்டன் தரப்பு எப்பிடி இருக்கு? தேறுமா? தேறாதா?

தனபாலு: எப்பிடியும் கொஞ்சம் சீட்கள் வரும்னு நினைக்கிறேண்டா... ஏன்னா, கேப்டன் ஒவ்வொரு ஊரிலும் நடத்தற பிரச்சாரத்தில் மக்கள் கிட்ட ரொம்பவே கெஞ்சறாரு. எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க... கொடுங்கன்னு... அதனால கொஞ்சம் தேறும்ன்னு நினைக்கிறேன்.

கோபாலு: எப்பிடி தான் ஜெயிச்சு வந்தாலும் அம்மாவுக்கு எதிரா வாயை தொறக்க மாட்டாருன்னு தான் நினைக்கிறேன். ரொம்பவே அடக்கி வாசிக்கறாரு. அப்படியே தொறந்தாலும் எபெக்ட் ஒன்னும் இல்லை.

தனபாலு: பாவம்டா அவரு. கட்சியை வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி நடத்துறாரு போல... 

கோபாலு: ஓ.... அதான் வாயை தொறக்க மாட்டிங்கறாரா? சரி விடுடா, அவரே பேசல, நாம ஏன் அவர பத்தி பேசிட்டு...

தனபாலு: டேய், ஜாக்கி சான் தெரியுமா? அவரோட நூறாவது படமான "1911" ஐ நம்ம தமிழ்நாடு முழுசும் ஒரே நாள்ல ரிலீஸ் பண்ண போறாங்கடா.

கோபாலு: அய்!.... எப்பண்ணே ரிலீஸ் பண்ண போறாங்க? கண்டிப்பா மொத ஷோ பாக்க போகணும்.

தனபாலு: அடுத்த வியாழக்கிழமை ரிலீஸ் பண்றாங்க. கடை வேலையை பாரு...அப்புறமா படத்துக்கு போலாம். சரியாடா?

கோபாலு: சரிண்ணே.... கடையில் இருக்கிறேன். உங்களுக்காக படத்தை அப்புறம் பிரீயா இருக்கறப்போ பாக்கறேன். சரியா? 

தனபாலு: நடிகை திரிஷாக்கு கையில படமே இல்லை. ஆனா அம்மிணி இன்னமும் நடிகர்களை புகழ்ந்து தள்ளுது.

கோபாலு: என்னண்ணே, யார யார புகழுது?

தனபாலு: அஜித் ஸ்ட்ரைட் பார்வர்டாம். விஜய் ஸ்டைலானவராம். விக்ரம் திறமையான நடிகராம். இப்படி சொல்லுது திரிஷா.

கோபாலு: ரொம்ப சரியாக தானே சொல்லி இருக்காங்க. தப்பில்லைண்ணே..

தனபாலு: அஜித்தின் அடுத்த படமான பில்லா-2 க்கு யாரு ஹீரோயின் தெரியுமாடா?

கோபாலு: தெரியல. என்ன பெரிய ஒலக அழகியா நடிக்கப் போகுது? யாருன்னு சொல்லுங்க. 

தனபாலு: சொன்னாலும் சொல்லலைன்னாலும் அழகி தான் அவங்க. 2008 மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய பார்வதி ஓமன குட்டன் தான் ஹீரோயின்.

கோபாலு: அண்ணே, அந்த பொண்ணு நல்ல அழகு தான்... தமிழ் படத்துல நடிக்க வந்துட்டாலே நல்ல எதிர்காலம் இருக்கு. 

தனபாலு: ஆமாடா, எப்பவுமே கேரள பொண்ணுகளுக்கு தமிழக சினிமாக்கள் நல்லா கை தூக்கி விட்டிருக்கு. இந்த பொண்ணுக்கும் அந்த ராசி இருக்கான்னு பார்ப்போம். சரி, சரி அரட்டை அடிச்சது போதும்... யாவாரத்த கவனி.

கோபாலு: அதானே, அண்ணன் என்னதான் பேசினாலும் காரியத்தில் கண்ணா இருக்கிறாரே...

டிஸ்கி: மேலே படங்களில் இருப்பது அழகி பார்வதி ஓமன குட்டன்
மேலும் வாசிக்க... "இவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... அரட்டை"



தனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....

தனபாலு: டேய் கோபாலு... இந்த பெட்டியில நம்ம தோட்டத்துல புடுங்கின கொய்யாப்பழம், திராட்சை எல்லாம் இருக்குடா. இந்த அட்ரசுக்கு லாரியில பார்சலா அனுப்பிருடா.

கோபாலு: அண்ணே! என்னண்ணே புதுசா இருக்கு? யாருக்கும் ஓசியில தர மாட்ட. நான் கேட்டா கூட காசு வாங்கிட்டு தான் பழங்கள தருவ. இப்ப யாருக்கோ பார்சலா அனுப்பற? யாருக்கு அது?

தனபாலு: டேய்... போன வாரம் என் கொழுந்தியா குடும்பத்தோட வந்திருந்தா. அவ ஆசையா கேட்டா? அதான் பார்சல் அனுப்பறேன்.

கோபாலு: ஹா...ஹா... உன் ஆசை நிறைவேறாது. ஏனா இன்னையில இருந்து லாரி ஸ்ட்ரைக் நடக்குது. உன்னால பார்சல் அனுப்ப முடியாது. உன் கொழுந்தியாவையும் பாக்க முடியாது.

தனபாலு: அடாடா.. பழங்களை ரொம்ப விரும்பி கேட்டாளே. என்ன செய்யலாம்? யோசிப்போம்?

கோபாலு: நல்லா யோசிங்க.. பழம் அழுகி போறதுக்குள்ள யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்கன்னே.
தனபாலு: டேய்.... போதும் நிறுத்துடா? என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.

கோபாலு: அண்ணே! இந்த கொடுமையை எங்க போயி சொல்ல?

தனபாலு: டேய், சொன்னா சொல்லு? இல்ல, சொல்லாத?

கோபாலு: ஊழலுக்கு எதிரா கிளம்பின ஹசாரேயை உள்ள தூக்கி வச்சுட்டாங்களே சென்ட்ரல் கவர்மேன்ட்டு. அவரு ஜெயில்ல இருந்து வெளியே வர மறுக்கிராராம்.

தனபாலு: ஆமாண்டா,  உண்ணாவிரதம் இருக்க கண்டிசன் இல்லாத உத்தரவு கொடுத்தா வெளியே வருவேன்னு சொல்லிட்டு இருக்காரு.

கோபாலு: ஆமாண்ணே! அவரும் என்ன செய்வாரு. எவ்வளவு அமைதியா போராடுனாலும் விட மாட்டிங்கறாங்க. ஏதாவது காரணம் சொல்லி உண்ணாவிரதத்துக்கு அனுமதி தராமலே இருக்காங்க.

தனபாலு: டேய்.... உனக்கு விஷயம் தெரியுமா? உள்ளாட்சி தேர்தலிலும் காங் கூட தி மு க கூட்டணி இருக்காம்.

கோபாலு: அப்படியா? அப்ப அதுலயும் பீல்டு அவுட்டா? ஹையோ பாவம்..

தனபாலு: டேய், விடுடா.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்டா...

கோபாலு: அண்ணே, என்னமோ சொல்றிங்க... ஒண்ணும் புரிய மாட்டிங்குது.

தனபாலு: உன் மரமண்டைக்கு ஒண்ணும் புரியாதுடா... சமச்சீர் கல்வி இருக்கணும்னு கோர்ட் மூலமா கொண்டு வந்துட்டாங்க, என் பையனுக்கும் புக் வந்திருச்சு. ஆனா அவன் அந்த புக்கில் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டான்டா.

கோபாலு: என்ன ஆராய்ச்சி பண்றான் அண்ணே?

தனபாலு: கலைஞர் குடும்பத்தை பத்தி இருந்த பாடங்களை பேப்பர் போட்டு ஒட்டியிருக்காங்கல்ல. அதை சரியா ஒட்டாம இருக்காங்க. அதனால அந்த பேப்பரை கிழிச்சு என்ன போட்டிருக்காங்கன்னு ஆராய்ச்சி பன்றாண்டா..

கோபாலு: ஹா...ஹா... பசங்களே அப்படித்தான். அண்ணே, அண்ணி என்ன சாப்பாடு பண்ணியிருக்காங்க இன்னைக்கு?

தனபாலு: அத ஏண்டா கேட்கற... தக்காளி ரேட் ரொம்ப குறைஞ்சு போச்சுன்னு டெய்லியும் தக்காளி சாப்பாடு, இல்லைன்னா தக்காளி கூட்டுன்னு ஒரே தக்காளி மயமா இருக்குடா.

கோபாலு: எங்க வீட்டுலயும் இந்த தக்காளி மயமாத் தான் இருக்கு. அண்ணே, மழை காலம் ஆரம்பிச்சிருச்சு. அதோட வெள்ளப்பெருக்கும் ஆரம்பமாயிருச்சு.

தனபாலு: ஆமாண்டா, எங்க பார்த்தாலும் சிமென்ட் ரோடு போட்டுட்டாங்க. கம்மா இருக்கிற இடமெல்லாம் பிளாட் போட்டு விக்கறாங்க. இருக்கிற கம்மாவையும் தூர் வாராம போட்டு வச்சிருக்காங்க. அப்புறம் எப்படி மழை தண்ணி வெள்ளமா மாறாது? அம்மா கம்மாக்களை கவனிக்கணும்.

கோபாலு: அம்மா நடவடிக்கை எடுப்பாங்களான்னு பாக்கலாம்ன்னே. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நம்ம இந்திய டீம் மேல ரொம்ப கோவமா இருக்காரு.

தனபாலு: ஆமா பின்ன நம்பர் ஒண்ணு இடத்துல இருந்து கீழே போயிட்டாங்களே. அதுவும் வரிசையா மூணு மேட்ச்ம் தோத்துட்டாங்க. ஒரு பய புள்ளிகளும் சரியா விளையாடல? அப்புறம் கோவம் வராம கொஞ்சவா செய்வாங்க?

கோபாலு: நம்மாளுக ரொம்ப மோசமா தான் விளையாடினாங்க. ஆடுற மேட்ச் எண்ணிக்கையை மொதல்ல குறைக்கனும். அப்பத்தான் உருப்படுவாங்க. 

தனபாலு: நாம பேசி என்னா நடக்கப் போகுது? பாக்கலாம் இனியாவது ஜெயிக்கராங்களா? இல்லை தோக்கறாங்களான்னு?

கோபாலு: அண்ணே, நயன்தாரா மதம் மாறினாலும் மாறினாங்க, பக்தி ரொம்ப முத்தி போச்சு. கோயில் கோயிலா சுத்தறாங்க. 

தனபாலு: கோயில் கோயிலா சுத்த அனுமதி வேற வாங்கியிருக்காங்கலாம்.

கோபாலு: நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா, எப்போ கல்யாணம் பண்ண போறாங்களாம் அண்ணே?

தனபாலு: அதெல்லாம் ஏற்கனவே முடிஞ்சாலும் முடிஞ்சிருக்கும்? யாருக்கு தெரியும்?

கோபாலு: மங்காத்தா இந்த மாசம் ரிலீஸ் ஆகும் ஆகும்னு சொல்றாங்க... ஆனா பாதி மாசம் ஓடி போச்சே?

தனபாலு: ஹீ...ஹீ.... மங்காத்தாவுக்கு அப்படியாவது சொல்றாங்க, ஆனா வேலாயுதம் படத்துக்கு ஒரு நியூஸ் ம் வரலையே. ஒரு வேளை மங்காத்தா ரிலீஸ் பார்த்துட்டு ரிலீஸ் பண்ணுவாங்களோ என்னவோ?

கோபாலு: கருங்காலி அஞ்சலி ஒரு படத்துல நிஜ கேரட்டரில் நடிக்கறாங்களாம். அதுக்கு ரொம்ப பிராக்டிஸ் பண்றாங்களாம்.

தனபாலு: பண்ணட்டும், பண்ணட்டும், நல்லா நடிச்சா சரி தான். சரிடா கோபாலு எனக்கு நேரமாச்சு, திருச்சி கிளம்பறேன். பஸ்ல கூட்டமா வேற இருக்கும். சீக்கிரம் கிளம்பறேண்டா.

கோபாலு: அண்ணே, ஒரு வேலையும் இல்லைன்னு சொன்னிங்க. ஊருக்கு போறீங்க? என்ன விசயமா?

தனபாலு: ஆங்.... லாரி ஸ்ட்ரைக்ல அதான் பார்சலை பஸ்ல போட்டுட்டு நானே கொடுத்திட்டு வர போறேன். கொழுந்தியாவையும் பார்த்த மாதிரி ஆச்சு. சரிடா நேரமாச்சு கிளம்பறேன்.

கோபாலு: அட அண்ணே, என்னமா பிளான் பண்றீங்க. பார்சலை கொடுத்திட்டு உடனே கிளம்புங்க. 

தனபாலு: எனக்கு தெரியும் போடா..... பெருசா சொல்ல வந்துட்டான்.

கோபாலு: சரிங்கன்னே, போயிட்டு வாங்க. இத அண்ணிகிட்ட சொல்லாம இருக்கணும்னா கொஞ்சம் என்னையும் கவனிக்கணும். ஓகே வா?

தனபாலு: இந்தா பிடி நூறு ரூவா? போயிட்டு வந்து உன்னை கவனிக்கறேன். வரேண்டா.....

மேலும் வாசிக்க... "தனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து...."



தனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து)

தனபாலு: டேய் கோபாலு.... அடேய் கோபாலு.... வீட்டுல இருக்கியா இல்லையா? டேய் கோபாலு?

கோபாலு: எவன்யா காலங்காத்தால தூங்க கூட விடாம, சே...சே.... நமீதா கனவுல வந்து என் கையை பிடிச்சா? அதுக்குள்ள எவனோ எழுப்பிட்டான், யாரது கூப்பிட்டது?

தனபாலு: டேய், மணி பத்து ஆகுதடா, மர மண்டையா, நான் தான்டா கூப்பிட்டேன். நமீதா உன் கையை பிடிச்சா கூடவே போயிருவியா.... ஏண்டா ஒரு முக்கியமான வேலை இருக்கு. காலையில சீக்கிரமா கிளம்பி ரெடியா இருன்னு சொன்னேன்ல...

கோபாலு: அண்ணே, திட்டாதிங்க, நமீதா ஞாபகத்துல மறந்துட்டேன். இதோ ஒரு அரை மணி நேரத்துல கிளம்பிருறேன். கோச்சிக்காதிங்க...

தனபாலு: சரி வெயிட் பண்றேன், அந்த டி விய போட்டுட்டு போடா...

கோபாலு: இந்தாங்கண்ணே ரிமோட்டு, நீங்களே உங்களுக்கு பிடிச்சத பார்த்துக்கங்க.

தனபாலு: சீக்கிரம் வாடா, டைம் ஆகுது. சே.... டிவிய போட்டாலும் நமீதா பாட்டு தான் வருது.

கோபாலு: அண்ணே ரெடியாயிட்டேன். போகலாமா?

தனபாலு: ம். வாடா போலாம். நீ தான் சைக்கிள் மிதிக்கணும் சரியா, லேட் ஆக்குனதுக்கு உனக்கு தண்டனை.

கோபாலு: ம்ஹும். இன்னைக்கு மட்டுமா சைக்கிள் மிதிக்கிறேன். உங்க கூட எப்ப பழக ஆரம்பிச்சேன்னோ அப்ப இருந்து நான் தான் சைக்கிள் மிதிக்கிறேன், நீங்க சொகுசா பின்னால உட்கார்ந்து சைட் அடிச்சிட்டு வருவீங்க.

தனபாலு: சரி சரி பேச்ச விடு. ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கா?

கோபாலு: கர்நாடகா முதலமைச்சரா இருந்த எட்டியூரப்பா ஊழல் பன்னுதா புகார் கிளம்புச்சுள்ள, அவரை கட்சி மேலிடம் ராஜினாமா பண்ண சொன்னாங்களாம், அவரும் ராஜினாமா பண்ணிட்டாரு.

தனபாலு: அவரு தான்யா மனுஷன். ஊழல் பண்ணியிருக்காரோ இல்லையோ, புகார் வந்த உடனே ராஜினாமா பண்ணிட்டாரே, நம்ம ஊருலயும் தான் ஊழல் பண்ணினதா சொல்றாங்க. ஆனா யாருமே ராஜினாமா பண்ண மாட்டிங்கறாங்க. மக்களா பார்த்து அவங்கள தூக்கி எறிய வேண்டியிருக்குடா.

கோபாலு: ஆமாண்ணே... நீங்க சொல்றது சரி தான்... அண்ணே மும்பைய திணறடிச்ச தீவிரவாதி கசாப் இருக்கான்ல, அவன் தூக்கு தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு பண்ணியிருக்கானாம். அவனுக்கு இந்த அளவுக்கு இடம் தரக் கூடாது அண்ணே.

தனபாலு: ஆமாண்டா. இந்நேரம் அவன ஒண்ணுமில்லாம ஆக்கியிருக்கணும். நம்ம சட்டம் அவ்வளவு கடுமையா இல்லாம இருக்கு. என்ன செய்ய?

கோபாலு: அண்ணே, நடிகை மீனா வேற ஒருத்தர் கூட ஓடி போயிட்டாங்களாமே கேள்விப்பட்டீங்களா?

தனபாலு: அது கண்ணழகி மீனா இல்லடா, துணை நடிகை மீனா

கோபாலு: அண்ணே, ஐஸ்வர்யா தனுஷை வைத்து ஒரு படம் இயக்குறாங்களாமே, தெரியுமா?

தனபாலு: சொல்ற விஷயத்தை தெளிவா சொல்லுடா, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தான் தனுஷை வைத்து டைரக்ட் பண்ண போறாங்க. தனுஷ்க்கு ஜோடியா அமலா பால் நடிக்கிறதா சொல்றாங்கடா.

கோபாலு: தெளிவா தெரியாம தானே உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு போயி இப்படி சலிச்சுக்கறிங்க.

தனபாலு: டேய் கோபாலு, இந்தியா பர்ஸ்ட் டெஸ்ட் மேட்சுல தொத்ததுக்கு காரணம் ஹர்பஜன் அதிக விக்கெட் எடுக்காதது தான் காரனமாமே. அப்படியா?

கோபாலு: அண்ணே, அவரு மட்டுமல்ல, பேட்ஸ்மேன் யாரும் சரியா விளையாடல. ஜாஹிர்கானுக்கு காயம் வேற... என்ன செய்றது? தோக்கணும்னு இருக்கு தோத்திட்டோம். 

தனபாலு: ஆமாண்டா, எப்படியோ தோத்துட்டாங்க, அடுத்து நடக்கற மேட்ச்சுல ஜெயிக்கணும். பாக்கலாம்.

கோபாலு: அண்ணே, எங்க போகணும்... நான் பாட்டுக்கு சைக்கிள் ஓட்டிட்டு வந்துட்டே இருக்கேன். எடத்தை சொல்லுங்க. 

தனபாலு: மீனாட்சி பஜார் போடா. ஏதாவது புது பட சி டி வாங்கலாம்?

கோபாலு: அண்ணே, முன்னாடியே சொல்லியிருந்தா நான் இம்புட்டு தூரம் சைக்கிள் மிதிச்சிருக்க மாட்டேன். சி டி கடை எல்லாத்தையும் மூடி ஒரு மாசத்துக்கும் மேல ஆகுது. அம்மா ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுத்துட்டாங்க. அதனால ஒரு சி டி கடையும் இல்லை.

தனபாலு: அய்யோ. எப்படி இனி படம் பாக்கிறது? காசு நிறைய செலவு ஆகுமே.... சரி வா வீட்டுக்கு போலாம்

கோபாலு: அண்ணே, வீட்டுக்கு அப்புறமா போலாம். இம்புட்டு தூரம் சைக்கிள் ஓட்டிட்டு வந்திருக்கேன். நீங்க நெனச்ச மாதிரி சி டி யும் வாங்க முடியல, அதனால என்னை ஒரு படத்துக்கு கூட்டிட்டு போங்க.
தனபாலு: டேய் காசு ரொம்ப செலவாகுமே...

கோபாலு: அதெல்லாம் எனக்கு தெரியாது, இங்க பக்கத்துல தங்கரீகல் தியேட்டர் இருக்கு வாங்க அங்க போலாம். நானே சைக்கிள் ஓட்டறேன்.

தனபாலு: இன்னைக்கு எனக்கு மொய் வைக்காம விட மாட்ட? சரி வாடா போலாம். ஓட்டு சைக்கிளை, இனிமே உன்னை சைக்கிள் ஓட்ட சொல்லவே மாட்டேன்.


(இருவரும் தங்கரீகல் தியேட்டருக்கு போகிறார்கள்.)


டிஸ்கி: ஒரு சேஞ்சுக்கு இந்த முறை நடிகர்கள் படம் போட்டிருக்கேன். யாரும் எம்மேல கோவப்படாதீங்க.
மேலும் வாசிக்க... "தனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து)"



தனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து...!

கோபாலு: அண்ணே! அண்ணே! ஏண்ணே சோகமா இருக்கீங்க... அண்ணி உங்கள திட்டிடாங்களா?

தனபாலு: அடேய்.... எப்ப பாரு... அண்ணிய என்கூட சிண்டு முடிஞ்சு விடாம இருக்க மாட்டியே.... என் சோகத்துக்கு காரணம் வேறடா....

கோபாலு: சரிண்ணே... அண்ணிய பத்தி பேசல.... உங்க சோகத்துக்கு வேற என்ன காரணம்ண்ணே....

தனபாலு: எல்லாம் எம்பய படிப்பு பத்தி தான் கவலைப்படுறேன்...

கோபாலு: உம்பயலுக்கு என்னண்ணே... ராஜா வீட்டு கன்னுக்குட்டி...
மேலும் வாசிக்க... "தனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து...!"



தனபாலு, கோபாலு அரட்டை! - ஆரப்பாளயத்தில் இருந்து.

கோபாலு: அண்ணே! அண்ணே! தனபாலு அண்ணே.... வீட்டுல இருக்கிங்களா?

தனபாலு: மடையா ஏண்டா? இப்படி கத்தற, வீட்டுல தாண்டா இருக்கேன். வா அப்படி முக்குல நின்னு பேசுவோம்.

கோபாலு: இல்லைண்ணே, ஒரு வாரமா வீடு பூட்டியிருந்துசே, அதான் கேட்டேன்.

தனபாலு: ஓ...ஓ... அதுவா, சகலை ஊருக்கு குடும்பத்தோட போயிருந்தேன்டா..

கோபாலு: அப்படியாண்ணே, கொழுந்தியா வீட்டுக்கு போயிருந்தேன்னு சொல்ல வேண்டியது தானே.

தனபாலு: டேய்... தம்பி வம்பு இழுக்கற மாதிரி தெரியுது. ஒழுங்கா பேசுடா.

கோபாலு: சரிண்ணே, கொவப்படாதிங்க. எதாவது புதுசா மேட்டர் இருக்கா?

தனபாலு: என்னது? மேட்டரா? செய்தி இருக்கான்னு கேளுடா தம்பி.

கோபாலு: சரிண்ணே. ஏதாவது செய்தி இருக்கா?

மேலும் வாசிக்க... "தனபாலு, கோபாலு அரட்டை! - ஆரப்பாளயத்தில் இருந்து."



தனபாலு...கோபாலு.... அரட்டை! பெரியார் பஸ் ஸ்டாண்டில்

தனபாலு: டேய்....கோபாலு....கோபாலு.....கோபாலு....இப்டி கத்ரனே....ஒன் காதுல விழுதா? எரும மாடு...எரும மாடு...

கோபாலு: அண்ணே....அண்ணே.... வந்துட்டேன்..திட்டாதிங்க....என்ன விசயம்னே?

தனபாலு: ஒனக்கு விஷயந் தெரியுமா? நம்ம ஆனந்தியக்கா இருக்காங்கள்ள, அவங்க வலைச்சரத்துல நம்பள பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருக்காங்கடா...

கோபாலு: அப்படியாண்ணே! நாம ரெண்டு பெரும் அரட்டையடிக்றது இம்புட்டு பேமசு ஆயிருச்சா?! ஹி..ஹி...ஹி...


தனபாலு: டேய்..தேங்கா மண்டையா? மண்டைய இப்படி கரிச்ச மண்டையா வெட்டியிருக்க? என்ன விஷயம்டா?

மேலும் வாசிக்க... "தனபாலு...கோபாலு.... அரட்டை! பெரியார் பஸ் ஸ்டாண்டில்"



தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

  தனபாலு...கோபாலு.... புதிய அரட்டைப் பகுதி. இவிங்களுக்கு எத,எத பேசறதுன்னு ஒரு வரைமுறையே கிடையாது. எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவாங்க... இவிங்க என்ன பேசுராங்கன்னு அடிக்கடி கேட்ப்போம்.


கோபாலு: அண்ணே! என்னாச்சு? ரொம்ப சோகமா ஒட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க... என்ன விஷயமண்ணே?

தனபாலு: வேற ஒன்னுமில்லடா... இந்த வை.கோ வை பத்தி நெனச்சு கவலைப் பட்டிட்டு இருக்கேன்.. பாவம், அவரோட அரசியல் வாழ்க்கையே இருண்டு போச்சு.



கோபாலு: ஆமாண்ணே, அஞ்சு வருசமா, அ.தி.மு.க. கூட கூட்டணியில இருந்தும் இப்ப செல்லாக் காசாத்தானே இருக்காரு. போடாவுல ஜெயில்ல அடச்சும் ஜே- கிட்ட ஊறுகாய் மாதிரி தான் இருந்தாரு. இப்ப அந்த ஊறுகாய் ஊசி போச்சு பொல... அதான் கூட்டணில இப்ப நெறைய ஊறுகாய் வச்சிருக்காங்களே..
மேலும் வாசிக்க... "தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!"



தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!



தனபாலு:  கோபாலு... கோபாலு... வீட்டுக்குள உட்கார்ந்து என்னடா செயற?

கோபாலு:  டி வி ல நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கேன். ஜப்பான்ல சுனாமி வந்துச்சுல்ல.... அந்த நியூஸ் தான் பார்திக்கிட்டு இருக்கேன்...



தனபாலு:  பாவம்டா ஜப்பான் மக்கள்... வீடிழந்து, உடமைகளை இழந்து தெருவுல குளிருல இருக்காங்க... ஆயிரக்கணக்கானோர் எங்க போனாங்கன்னே தெரியலியாம். அவங்களுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்.

கோபாலு:  ஆமாண்ணே! நானும் அனுதாபப் படுகிறேன். என்ன விசயமா தேடி வந்திங்கண்ணே?

தனபாலு:  சும்மா! பொழுது போக்கலாம்ன்னு தாண்டா... விஷயம் தெரியுமா? ஜெயலலிதா ஒரு புது டெக்னிக் யூஸ் பண்ணப் போறாங்க..இந்த தேர்தல்லுல...
மேலும் வாசிக்க... "தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!"



தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

தனபாலு...கோபாலு.... புதிய அரட்டைப் பகுதி இன்று முதல் ஆரம்பம்.. இவிங்களுக்கு எத,எத பேசறதுன்னு ஒரு வரைமுறையே கிடையாது. எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவாங்க... இவிங்க என்ன பேசுராங்கன்னு அடிக்கடி கேட்ப்போம்.


தனபாலு: டேய், கோவாலு...ஒனக்கு விஷயந் தெரியுமா? நம்ம விஜய் ஆரம்பிச்சிருக்குற இயக்கத்துக்கு அ.தி.மு.க. தரப்புலயிருந்து மூணு சீட்டு ஒதுக்குராங்கலாம்டா...

மேலும் வாசிக்க... "தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு."

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1