CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



இந்த வாரத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருட்கள்!

       இந்த வாரத்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருட்கள் இங்கே(Download3k) வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களுக்கு தேவையான மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். Download3k தளத்தில் நிறைய பயனுள்ள மென்பொருட்கள் இலவச தரவிறக்கமாக கிடைக்கின்றன.







































மேலும் வாசிக்க... "இந்த வாரத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருட்கள்!"



OS மாற்றும் போது முக்கியமான Softwares Backup எடுத்து வைக்கவில்லையா? Ninite Easy PC Setup இருக்கு!


நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மையாகிக் கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது வைரஸ் பாதிப்பினாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென்பொருட்களும், corrupt ஆகும்..
பின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவையான மென்பொருட்களை இன்டர்நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், இல்லையேல் நாம் முன்னெச்சரிக்கையாக backup எடுத்து வைத்திருந்தால் கவலையில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.

நமக்கு தேவையான, முக்கியமான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும். 

அப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. அதுவே Ninite Easy PC Setup...
இதில் எல்லா மென்பொருட்களும் அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...


இந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையானவற்றை கிளிக் செய்து  Get installer கொடுத்தால் போதும். தேவையான எல்லா  சாப்ட்வேர்  நம்ம  computer  - இல் இன்ஸ்டால் ஆகும்..


  Ninite Easy PC Setup... தேவைக்கு இங்கு கிளிக்கவும்...
repost
மேலும் வாசிக்க... "OS மாற்றும் போது முக்கியமான Softwares Backup எடுத்து வைக்கவில்லையா? Ninite Easy PC Setup இருக்கு!"



கொழு கொழு குழந்தையா? பெற்றோர்கள் கவனத்திற்கு!

        குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. தாயாவது ஒரு பெண்ணின் குறிக்கோள். அதை அடைய எத்தனையோ மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் சந்தோசமாக, ஒரு தவமாக அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் கணவனும், மனைவியும் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதில் சரியான முறைகளை கையாள்கிறார்களா? என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும்.

      நம் தாய்மார்களுக்கு குழந்தை கொழு கொழு என இருப்பது தான் ஆரோக்கியம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறந்த முதல் ஆண்டிலேயே குண்டாக வளரும் குழந்தை பெரியவனாகும் போதும் குண்டாக இருப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்புகள் இருகின்றன. குழந்தைகள் அதிக எடையோடு வளரும் போது அவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படுகின்றன என்பதைப்பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

         உடல் எடை அதிகமாவதால் அதிக சோர்வு ஓடி விளையாட சோம்பல், எந்த நேரமும் டி.வி பார்ப்பது அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுவது, படிப்பில் அக்கறையின்மை. இவை எல்லாவற்றையும் விட கால் எலும்புகள் வளைந்து போதல் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் இதெல்லாம் விட பெரிய ஆபத்து அவர்களுக்கு சிறுவயதிலேயே 5 வயது முதல் வரும் அதிக ரத்த அழுத்தம். அது போக சர்க்கரை வியாதி (டைப் இரண்டு), பெரியவர்களுக்கு மட்டுமே இந்த இரத்த அழுத்தமும் சர்க்கரை வியாதியும் வரும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாள் அது முழுக்க முழுக்க தவறு.

       குண்டான குழந்தைகளைக் குறி வைத்து தாக்கும் இந்த உயர் இரத்த அழுத்தம் குழந்தைகளுக்கு வந்திருப்பது கூட பெற்றோர்களுக்கு தெரியாது. நவீன சிகிச்சை முறையில் இந்த இரத்த அழுத்த நோயை இப்பொழுது குணப்படுத்தி விடலாம் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளை உடனே மருத்துவரிடம் காட்டி இரத்த அழுத்த நோயும், சர்க்கரை நோயும் இருக்கிறதா? என சோதனை செய்து பார்த்த பின்னர் உடனே சிகிச்சையை தொடங்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

       சரியான எடையுடன் ஆரோக்கியமாகக் குழந்தைகளை வளர்க்க certified children fitness மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். உணவு முறைகளையும் உடல் பயிற்சிகளையும் தெரிந்து கொண்டு அவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தி சரியான ஆரோக்கியமான மனிதனாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

    கவனிக்கப்படாத உயர் இரத்த அழுத்த நோய் குழந்தை இருதய நோயாளியாகவும், சிறுநீரக நோயாளிகளாகவும் மாறிவிடும் வாய்ப்பு அதிகம். வரும் முன் காப்பது சிறந்தது. வந்த பின் வருந்துவது வீண். அதை விரைவில் குணப்படுத்த முயற்சிப்பதே புத்திசாலித்தனம்.
images: google search
-Obesity Doctor-

அஞ்சலி தினம்
         தோழர் திரு. ராஜேஷ் (மாயஉலகம் வலைப்பூ) அவர்களின் மறைவை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை சகபதிவர்கள்  அனைவரும் பதிவிடாமல், அவரது குடும்பத்தினருக்கு நம் இரங்கலைத் தெரிவித்து ஓரிரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துவோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
மேலும் வாசிக்க... "கொழு கொழு குழந்தையா? பெற்றோர்கள் கவனத்திற்கு!"



உடம்புக்கு பீர், சாக்லேட் ஓகே, சுகர் நாட் ஓகே - ஆராய்ச்சி துணுக்குகள்

இன்று பேப்பரில் வாசித்த சில ஆராய்ச்சி துணுக்குகள்:

      நம்ம பூமியில் இருந்து 33 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு புதிய கிரகம் இருப்பதாக கண்ண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் நமது பூமியின் வெப்பத்தை விட குறைவாக இருப்பதாகவும், உயிரினங்கள் வாழ ஏற்ற சில சூழ்நிலைகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புதிய கிரகத்திற்கு GJ 667 C என பெயரிடப்பட்டுள்ளது.

           பீர் மற்றும் ஒயின் குடிப்பவர்களை வைத்து ஒரு ஆராய்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. மிதமான பீர் சாப்பிடுபவர்களில் சுமார் 31 சதவீதம் நபர்களுக்கு இருதய நோய் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்கிறது. பீரில் அதிக தண்ணீரும், குறைந்த அளவு ஆல்கஹாலும் இருப்பதால் குறைந்த அளவு ஆல்கஹால் மட்டுமே உடலில் சேர்க்கிறது. இதனால் இருதய நோய் தாக்கம் அவர்களுக்கு இருப்பது இல்லை.

      உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பால் கலக்காத டீ சாப்பிட வேண்டும். ஏனெனில் உடல் எடையை குறைக்கும் பல மூலப்பொருட்கள் டீயில் உள்ளன. ஆனால் நாம் கலக்கும் பாலில் உடல் எடையை அதிகரிக்கும் கொழுப்புச் சத்துக்கள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. எனவே பால் இல்லாத டீ குடிப்பது நல்லது. மேலும் பால் கலக்காத டீ தினமும் மூன்று வேளைகள் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

        வயிற்றுப்புண் மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு பி.பி.ஐ என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தால் கடும் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள். இம் மருந்து உட்கொள்பவர்களுக்கு எலும்பு மெல்ல மெல்ல பலவீனம் அடைவதாகவும், 45 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு எலும்பு பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகவும், பெண்களுக்கு இடுப்பு எலும்பை சேதப்படுத்துவதாகவும், எலும்பு முறிவு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


      சர்க்கரை விஷத்தன்மை வாய்ந்ததாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் உடல் பருமன், இதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளார்கள். எனவே, ஆல்கஹால், புகையிலைக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது போல சர்க்கரை விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என இந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

       அதிக அளவு சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று நோயின் தாக்குதல் குறைவாக இருக்கும் என ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சாக்லேட்டில் கோகோ கலக்கப்படுகிறது, அதில் ஆன்டி அக்சிடேன்ஸ் என்ற உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது, இதனால் புற்று நோய் தாக்கும் மூலக்கூறுகளை அழிக்கும் வல்லமை அந்த எதிர்ப்பு சக்திக்கு இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.
மேலும் வாசிக்க... "உடம்புக்கு பீர், சாக்லேட் ஓகே, சுகர் நாட் ஓகே - ஆராய்ச்சி துணுக்குகள்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1