ரயிலில் உட்கார்ந்து கொண்டு, ""தாத்தா, பாட்டி வீட்டில் ஏண்டா எங்களை நிம்மதியா இருக்க விடலே? பாட்டி சமைத்தால் சாப்பிட மாட்டேன்னு ஏண்டா அடம் பிடிச்சே? அம்மா வீட்டிற்கு வந்து ஒரு மாதமாவது ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சா, நேரம் தவறாமல் சமையல் வேலைய செய்ய வைச்சுட்டியேடா!'' என்று, பிரபுவிடம் கோபமாய் கேட்டாள் சீதா.
பிரபுவிடமிருந்து, "இன்ஸ்டன்ட்' பதில் வந்தது.
""கடைசி காலத்தில் தனியா இருக்கும் தாத்தா, பாட்டியை உட்கார வைத்து, வாய்க்கு ருசியாய், வேளாவேளைக்கு சமைத்துப் போட்டு சந்தோஷப் படுத்த வேண்டாமா?
இரண்டு பேருக்கு சமைப்பதே பாட்டிக்கு கஷ்டம். அப்படியிருக்கும் போது, நமக்கும் சேர்த்து பாட்டியை சமைக்கச் சொல்லி சிரமம் கொடுக்கலாமா? எனக்கு மனசில்லேம்மா. வயதான காலத்தில் அவங்க கஷ்டப்படலாமா?''
திருமணமாகி நெல்லை சென்ற பின், தனிக்குடித்தன ஆசையில், சென்னைக்கு மாற்றல் வாங்கச் சொல்லி கணவனை நச்சரித்து வெற்றி பெற்ற சீதா, மகனின் கேள்வியால் அதிர்ச்சி அடைந்தாள்.
2 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் குமார் - நல்ல கதை - நீதி போதனை. தொடர்க - கதை எழுதுவதை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
அன்பின் பிரகாஷ் குமார் - நல்ல கதை - நீதி போதனை. தொடர்க - கதை எழுதுவதை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா