நம் தமிழ்வாசியில் கடந்த சில மாதங்களாக ஒரு ஓட்டு எடுப்பு நடத்தி வந்தோம். அதற்கு முடிவு கிடைத்துள்ளது. ஆனால் இப்ப கிடைக்கும், அப்ப கிடைக்கும் என முடிவுகளை பல முறை தள்ளிப் போட்டு வந்த நிலையில் இப்போது முடிவு கிடைத்துள்ளது.
என்ன ஓட்டெடுப்பு?
விஜயகாந்த் யாருடன் கூட்டணி சேருவார்?
நான்கு விதமான பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
1 . திமுக
2. அதிமுக
3. காங்கிரஸ்
4. மூன்றாம் அணி
இதில் நேற்று வரை ஒவ்வொரு பதிலுக்கும் கிடைத்த ஓட்டுகளின் எண்ணிக்கை பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
நம் நண்பர்களின் கணிப்பு படியே வரவிருக்கும் தேர்தலில் தே மு தி க, கட்சி ஜே வுடன் கூட்டணி வைத்துள்ளது. ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி...
கூட்டணி பற்றிய தே மு தி க. கட்சியின் அறிக்கை பின்வருமாறு,
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, கட்சித் தலைவர் விஜயகாந்த் கொடுத்துள்ள பிறந்த நாள் பரிசாகும் என்று அக்கட்சி கூறியுள்ளது.
நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான தேமுதிக குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களை மேற்கொண்டனர்.
ஒரு வழியாக அதிமுகவைத் தேடி தேமுதிக வந்ததைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களும், கூடவே தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த அவர்கள் மகிழ்ச்சி கோஷங்களை எழுப்பினர்.
இரு கட்சிகளும் வரும் பேரவைத் தேர்தலை சந்திப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் முதல் சுற்று பேச்சு சுமுகமாக நடந்தது. மீண்டும் அடுத்த சுற்று பேச்சு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் திரட்டி, தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில்தான், மக்களின் விருப்பப்படி அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர தே.மு.தி.க. முன் வந்தது. இது வெற்றிக் கூட்டணி.
எத்தனை தொகுதிகள் முக்கியம் என்பதைவிட, தி.மு.க.வை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதே லட்சியம். ஆட்சியில் பங்கும் கேட்கும் திட்டத்தில் எல்லாம் இல்லை.

தேமுதிக 60 இடங்கள், ஆட்சியில் பங்கு, விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி, தேர்தலை சந்திக்க நிதியுதவி கேட்டு வந்ததால் தொகுதிப் பங்கீடு இழுத்துக் கொண்டே போனது.
ஆனால், அதிமுகவோ அதிகபட்சம் 31 இடங்கள் தருவதாகக் கூறி வந்தது. ஆட்சியில் பங்கு பற்றி தேர்தலுக்குப் பின் பேசலாம்.. துணை முதல்வர் பதவி எல்லாம் தர முடியாது என்றும் கூறிவிட்டது.
இதையடுத்து அப்படி இப்படி இழுத்தடித்த விஜய்காந்த் இறுதியாக 50 சீட்கள் தந்தால் ஓ.கே என்று கூறிவிட, 48 தருகிறோம் என்று சொல்லி தேமுதிகவை இழுத்துள்ளது அதிமுக.
இன்றைய பொன்மொழி:இளமை இருக்கும் போது சேமிப்பு செய். முதுமை அடையும் போது செலவு செய்.
இன்றைய விடுகதை:ஊசி போல இலை இருக்கும், உருத்திராட்சம் போலக் காய் காய்க்கும், அது என்ன?விடை அடுத்த பதிவில்......
முந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: தலைமுடி.
19 கருத்துரைகள்:
வட!
காலைல நாலுமணிக்கே பதிவா? ரொம்பத்தான் ரிஸ்கு!
அப்போ அடுத்த முதல்வர் அம்மாவா?
நல்ல செய்தி. கருணாநிதி காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்படவேணும். அதுக்காக எவனுக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம். குடும்ப ஆட்சி மன்னராட்சி ஒழியணும்.
கேப்டன் நம்மை ஏமாற்றிவிட்டார்...
அடுத்த முதல்வர் அம்மாவே தான்......... போத்திஸ் விதவிதமா ட்ரெஸ் எல்லாம் ஒவ்வொரு முறையும் வருது. ஆனா நம்ம தமிழ்நாட்டுக்கு விதவிதமான முதலமைச்சரே இல்லை. அரைச்ச மாவாத் தான் இருக்கு. ஊசிப் போன ஊத்தப்பம், புளிச்சப் போன தோசை ரெண்டை விட்டா நமக்கு நோ சாய்ஸ் .......................................................
இலைய போட்டாச்சி...........நடக்கட்டும் இன்னும் எத்தன பேரு நாதாரிங்களா போகப்போகுதோ ஹி ஹி!
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
அட ஆமாம் பிரகாஷ்...அம்மா..தாத்தா னு இந்த பெருசுங்கலையே பார்த்து பார்த்து போர் அடிக்குது...பேசமால் நீங்கள் ஏன் முதல்வரா வரகூடாது...ஹ ஹ....பரவால்ல....சரியான நேரத்தில் அந்த பதிவுலக கணிப்பை வெளியிட்டு இருக்கீங்க...
m.. எல்லாம் முடிஞ்சிடுச்சு
இனி அம்மா ஊத்தி கொடுக்க கேப்டன் குடிப்பாரோ.....
எல்லாம் அவன் செயல் .....
@Philosophy Prabhakaran
///கேப்டன் நம்மை ஏமாற்றிவிட்டார்...//
உண்மை பிரபா.. ஏமாந்திட்டோம்.
@இக்பால் செல்வன்
///அடுத்த முதல்வர் அம்மாவே தான்......... போத்திஸ் விதவிதமா ட்ரெஸ் எல்லாம் ஒவ்வொரு முறையும் வருது. ஆனா நம்ம தமிழ்நாட்டுக்கு விதவிதமான முதலமைச்சரே இல்லை. அரைச்ச மாவாத் தான் இருக்கு. ஊசிப் போன ஊத்தப்பம், புளிச்சப் போன தோசை ரெண்டை விட்டா நமக்கு நோ சாய்ஸ் ///
நம்ம ஆதங்கப்பட்டு என்ன செய்றது நண்பரே..
@விக்கி உலகம்
///இலைய போட்டாச்சி...........நடக்கட்டும் இன்னும் எத்தன பேரு நாதாரிங்களா போகப்போகுதோ ஹி ஹி!///
பந்தியோட முதலீடு நம்மளுடயது.
@ஆனந்தி..
///அட ஆமாம் பிரகாஷ்...அம்மா..தாத்தா னு இந்த பெருசுங்கலையே பார்த்து பார்த்து போர் அடிக்குது...பேசமால் நீங்கள் ஏன் முதல்வரா வரகூடாது...ஹ ஹ....பரவால்ல....சரியான நேரத்தில் அந்த பதிவுலக கணிப்பை வெளியிட்டு இருக்கீங்க...///
அய்யாவை பார்த்தாச்சு.. இனி அம்மாவை, இல்லை இல்லை.. ஆனந்தி அம்மாவை வேணுமாம் தமிழக முதல்வரா?
@சி.பி.செந்தில்குமார்
///m.. எல்லாம் முடிஞ்சிடுச்சு///
இப்ப வருத்தப்பட்டு என்ன செய்றது?
@MANO நாஞ்சில் மனோ
///இனி அம்மா ஊத்தி கொடுக்க கேப்டன் குடிப்பாரோ.....///
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா
//இனி அம்மா ஊத்தி கொடுக்க கேப்டன் குடிப்பாரோ.....//
அம்மா எப்ப டாஸ்மாக் பார்ல வேலைக்கு சேர்ந்தாங்க.. சொல்லவேஇல்ல அவ்வ்........