இசைக்கும் மயங்காதவர்கள் உண்டோ? இந்த பரபரப்பான வாழ்க்கையில், நமக்கு பிடித்தமான இசையை நாம் கேட்டோமானால் நமது மனதும் சூழ்நிலையும் லேசாகிறது. இத்தகைய இசையை சிறுவயது முதலே கற்கும் குழந்தைகளின் IQ POWER மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிறுவயதில் பியானோ, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயிற்சி பெரும் குழந்தைகள், வயதான காலத்திலும் நல்ல புத்திக் கூர்மையுடன் இருப்பதாக வல்லுனர்கள தெரிவிக்கிறார்கள். சாதாரண இசையை கற்காத குழந்தைகள் விட நன்கு இசையை கற்ற குழந்தைகள வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இசையை கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம், மூளையின் இடது, வலது பாகங்களை ஒரு சேரப் பயன்டுத்தும் ஆற்றல சாதாரணக் குழந்தைகளை விடவும் இசையை கற்ற குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக வல்லுனர்களின் ஆராய்ச்சி சொல்கிறது.
இளவயதில் மேற்கொள்ளும் இசைப்பயிற்சி வயதான காலத்தில் மூளை நரம்புகளில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள உதவுகிறது. சிறுவயது இசைப்பயிற்சி மூளையை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால், மற்றவர்களை விட இசையை கற்றவர்கள் அறிவு நுணுக்கத்துடன் செயல்படுவதைக் காண முடிகிறது, என வல்லுனர்கள் கருத்து சொல்கிறார்கள்.
மனதுக்கு இதம் அளித்து பட்டதைக் குறைக்க உதவும் இசை, ஆழ்ந்த தூக்கத்தை இரவில் பெறவும் உதவுகிறது. மெல்லிய இசை நரம்புகளை நெகிழ்வடையச் செய்து உடலுக்கு உற்சாகம் அளிக்கிறது. இது மட்டுமில்லாமல், மூளை நரம்புகள், மிகச் சிறப்பாக செயல்படவும் உதவும் இசையை குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள். குழந்தைகள் சிந்திக்க தூண்டும் இசையை கற்க உங்கள் குழந்தைகளை இசைப்பயிற்சிக்கு இன்றே சேர்த்து விடுங்கள், என்கிறார்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள்.
ஒரு கட்டுரை வாயிலாக இவ்விசயத்தை அறிந்தேன். ஆகையால் பகிர்ந்துள்ளேன்.
.
15 கருத்துரைகள்:
உண்மையில் நல்ல தகவல்...
குழந்தைகளை இசை பண்படுத்தும் என்பது உண்மைதான்....
அதனால்தான் நம் குழந்தைகள் தாலாட்டு கேட்டு தூங்குகிறது...
பகிர்வுக்கு நன்றி
என் சின்ன பொண்ணுக்கு இசையில ஆர்வம் அதிகம்.ஆனா படிக்குற வயசுல ஏன் பாடுற, பாட்டு கேட்குறேன்னு திட்டுவேன். இனி திட்ட மாட்டேன். பக்ர்வுக்கு நன்றி சகோ
@கவிதை வீதி... // சௌந்தர் //
கருத்துக்கு நன்றி போலிஸ்
@ராஜி
அமாம் சகோ, என்கரேஜ் பண்ணுங்க...
This is true thanks makka...
வணக்கம் பிரகாஷ்!அருமையான பகிர்வு!பிறந்த குழந்தைகள் இசைகேட்டு உறங்குவதென்பது உண்மையே!தாலாட்டில் ஆரம்பித்து வைக்கப்படுகிறது இசைப் பயிற்சி!வயதானோருக்கு இசைமூலம் சிகிச்சை அழிக்கப்படுவதும் உண்டே?மழை வேண்டிக்கூட இசை இசைக்கப்படுகிறதே!இசைக்கு மயங்காதார் பூலோகத்திலில்லை.பகிர்வுக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்!
ஒரு கட்டுரை வாயிலாக அறிந்த இவ்விசயத்தை நாங்களும் அறிந்துகொள்ளுமாறு செய்தமைக்கு நன்றி.இசையின்றி உயிரணு அசையாது..
அருமையான பகிர்வு... நன்றி பிரகாஷ்...
உண்மைதான் பிரகாஷ் சார். இசையில் ஆர்முள்ள குழந்தைகளின் ஐக்யூ அபாரமானதுதான். நானும் அனுபவத்தில் கண்ட உண்மை. எனக்கும் இசையில் ஆர்வம் அதிகம்தான். (ஆனா ஐக்யூவைப் பத்தி கேட்காதீங்க.). கடந்த உங்கள் பல பதிவுகளுக்கு கணினி கோளாறினாலும் (உங்க தளம் மற்றும் சில நண்பர்களின் தளங்கள் உதாரணம் முனைவர் குணசீலன தளம் அணுக முடியவில்லை. இன்று அணுக முடிகிறது. அதனால்தான் வர முடியவில்லை. அழகான பதிவுகளை அசத்தலாய் வெளியிட்டு வருகிறீர்கள். தொடரவும்.
தமஓ 7.
Coming Soon...
http://faceofchennai.blogspot.in/
கருத்துள்ள பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
நல்லிசை மனதைப் பண்படுத்துமென்பது உண்மை.
இசைப்பயிற்சி எல்லோருக்கும் சாத்தியப்படுமா? பயிற்சிக்கு முன் ரசனை என்பதனை வளர்ப்பதே முக்கியமாகப்படுகிறது; அதை விட நல்லிசைத் தேர்வு..... இல்லாவிடில் " கொலை வெறி" ரசனை தான் வளரும்.
அதனால் பிள்ளைகளுக்கு முன் நாம் நல்லிசை வகையை உணர்ந்து ரசிப்பவர்களாவோம்.
அதுவே நம் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகும்.
நல்ல கருத்து...
இசை குழந்தைகளைப் பண்படுத்தும்.. உண்மை!
ஆனால், இன்று 'ரியாலிட்டி ஷோ' என்ற பெயரில் குழந்தைகளை வைத்து நடத்தப்படுபவை அனைவர் மனதையும் புண்படுத்துகிறன!இதுவும் உண்மை!
இசையைக் கற்றல் தவறல்ல.
ஆனால், அதனை வைத்து (வெற்றியாளர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட) ரியாலிட்டி ஷோக்களில் உடனே புகழ் அடைய நினைக்க கூடாது.. இது பெற்றோருக்கும் பொருந்தும்!
இசை எல்லோரையும் வசப்படுத்தும்..நல்ல பதிவு..நன்றி சகோ.
வணக்கம் சகோ,
உங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்...நன்றி