ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க. இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா?
1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.
2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.
Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message
3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.
4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.
-tips and tricks-
நண்பகளே, error இப்போ வராது.... சிரமத்திற்கு மன்னிக்கவும்.....
.
20 கருத்துரைகள்:
[im]https://picasaweb.google.com/salemdeva/January272012?authuser=0&authkey=Gv1sRgCInCjIW78K2dqAE&feat=directlink[/im]
வணக்கம் பிரகாஷ்,
இது சூப்பரான ஐடியாவாக இருக்கு.
இதே போல நாம MS Word, மற்றும் இதர அப்பிளிக்கேசனிலும் இந்த முறையினைக் கையளலாம்.
Microsoft office இல் ஏலவே புரோக்கிராம் பண்ணப்பட்ட ஆங்கில உச்சரிப்பிற்கு ஏற்றாற் போல நம்ம உச்சரிப்பும் அமைந்தால் நாம பேசப் பேச டை பண்ணும் வசதியும் இருக்கு.
voice to type.
[ma]நல்ல தகவல் பிரகாஷ் இனி நான் உங்களுக்கு மெயில் அனுப்பும் போது இதையே பயன்படுத்துகிறேன்...ஆனா சைனீஸ்ல எழுதுவேன்....[/ma]
[ma]நல்ல தகவல் மிக்க நன்றி...[/ma]
அண்ணா microsoft vbs compilation error nu வருதுனா...
அண்ணா microsoft vbs compilation error nu வருதுனா...
error காமிக்குது.
நானும் டிரை பண்ணினேன்,error வருது.
நானும் ட்ரை பண்ணலாம்னு பார்த்தேன்.... ERROR காமிக்குதுன்னு சொல்றதால ட்ரை பண்ணல....ஹீ ஹீ
நண்பர்களே, error வருவதை சரி செய்து விட்டேன்....
சிரமத்திற்கு வருந்துகிறேன்.....
நன்றி,பிரகாஷ்.இப்பொழுது, சரியாக வருகிறது. ஆனால் பேசுவது பெண் குரல் மாதிரி இருக்கு.
ஹரே ஜி...போடா வெண்ணை என்று போட்டா திருப்பி நிம்மளை திட்ரான்......இன்னா இது.....
அதுவும் என்னே மாத்ரி போய்த்தா வெய்த்தேய் என்று....ஹஹ நன்றி சொல்றான் சேட்ஜி
நன்றி பிரகாஷ்!
ண்ணா.., சூப்பர்ண்ணா.
மனசுல நெனைக்கிற நேரமெல்லாம் ப்ளாக்கில் பதிவு போடற மாரி ஏதாச்சும் ஐடியாஸ்/ vb டெக்குனிக்ஸ் இருக்குங்களாண்ணா?
இருந்தா சொல்லுங்க்ண்ணா.
அன்பரே!
தங்கள் திறன் கண்டு
வியக்கிறேன்!
பலருக்கும் பயன் படும் பதிவு!
புலவர் சா இராமாநுசம்
ஹைய்யா...வந்துடுச்சு. ஆனா,குரல்தான் சரியில்ல.. SPB,ஜேசுதாஸ் வாய்ஸ் ADD பண்ண முடியுமா பாஸ்..?! ;)
சேலம் தேவா said...
ஹைய்யா...வந்துடுச்சு. ஆனா,குரல்தான் சரியில்ல.. SPB,ஜேசுதாஸ் வாய்ஸ் ADD பண்ண முடியுமா பாஸ்..?! ;)
adango
ம்ம் சூப்பருங்க ட்ரை பண்ணிட்டேன்
நண்பரே... நான் பயன் படுத்தினேன். நன்றி... ஆனால் அந்த உச்சரிப்பு மிக வேகமாக செல்கிறது.. சற்று நிதானமாக உச்சரிக்க என்ன செய்ய வேண்டும் எப்படி adjust செய்வது என்பதையும் கூறவும்
நன்றி
ஆச்சரியமான கணினி தகவல்கள், அற்புதமான மென்பொருட்கள்,
உபயோகமான தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் டிப்ஸ்&ட்ரிக்ஸ்
போன்ற அரிய தகவல்களை நீங்கள் அறிய வேண்டும்
என்பதற்காகவே இந்த இணையத்தளம் உருவாக்கபட்டது.
தங்களுடைய தளத்தில் தன்னுடைய ப்ளாக்கு இணைப்பு கொடுக்க
முடியுமா நண்பா
www.computertricksintamil.blogspot.com
இணைப்புக்கு என்னுடைய தளத்தில் இமேஜ் ஒன்றை வைத்துளேன்
அதனை பயன் படுத்தி கொள்ளுங்கள் நண்பரே
தன்னுடைய தளத்தை உங்களுடைய தளத்தில் இணைத்து
கொண்டால் உங்கள் தளத்தின் ஒரு விளம்பர இமேஜ் ஐ நான் என்
தளத்தில் விளம்பரம் செயுகிரேன்
நன்றி தோழா