CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



திரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
என்னை மறுபடியும் ஸ்கூலுக்கு போயிட்டு வரச் சொன்ன ராஜி அக்கா அவங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். என்ன செய்ய? நம்மளுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி. அதனால என் மைண்டுல பள்ளி விஷயங்கள் பத்தி என்ன ஞாபகம் இருக்கோ அதை இங்கே எழுதறேன். 

சரி, வாங்க ஸ்கூலுக்கு போலாம்.

ஒண்ணாம் வகுப்பு:
கொடைக்கானல் பக்கத்துல இருக்குற தாண்டிக்குடில தான் LKG ல இருந்து பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் வர படிச்சேன். அவ்ளோ தாங்க நம்ம இங்கிலீஸ் படிப்பு. என்னால இந்த மூணு வருசத்தையும் எப்பவுமே மறக்க மாட்டேன். ஏன்னா, . எங்க ஊரு தாண்டிக்குடிக்கு பக்கத்து ஊரு. அப்போ ஸ்கூல் பஸ் இல்லாததுனால அரசு பஸ் வரும்.  பஸ் செம கூட்டமா வரும். அந்த கூட்டத்துல அந்த சின்ன வயசுல பஸ்ல டிக்கெட் எடுத்து போயிட்டு வருவேன். ஒரு தடவ நாலாவது ரேங்க் வாங்கிட்டேன்னு ரொம்ப பீல் பண்ணினேன். எதுக்குனா மொத மூணு ரேங்க்குக்கு தான் ஸ்பெஷல் பேட்ஜ் தருவாங்க. நாலாவது ரேங்க்குக்கு பேட்ஜ் இல்லாததுனால தான்.

ரெண்டாம் வகுப்பு:
திண்டுக்கல் பக்கத்துல சின்னாளபட்டியில வீடு கட்டி செட்டில் ஆனோம். அதனால ரெண்டாம் வகுப்பு ஆர்சீ ஸ்கூல சேர்த்து விட்டாங்க. என்னவோ தெரியல தமிழ் மீடியத்துல சேர்த்துட்டாங்க. ஸ்கூல்ல சாயுங்காலமா எக்ஸ்ட்ரா டைமில் வாய்ப்பாடு புக்க வச்சிட்டு படிச்சு மனப்பாடம் செஞ்சது இன்னும் மறக்கல.

மூணாம் வகுப்பு:
டீச்சர் நோட்டுல கொஸ்ட்டின் ஆன்சர் எழுதச் சொல்வாங்க. நானும் பக்கத்துல இருக்றவனும் யார் பர்ஸ்ட் எழுதறான்னு போட்டி போட்டுட்டு கடகடன்னு எழுதுவேன். எழுதி முடிச்சுட்டு நோட்டை திருப்பி பார்த்தா கையெழுத்து ரொம்ப ஒர்ஸ்ட்டா இருந்துச்சு. அப்புறம் வேறென்ன, டீச்சர் கிட்ட இருந்து செம திட்டு தான் கெடைச்சுச்சு. 

நாலாம் வகுப்பு:
டீச்சருக்கு பிடிச்ச ஸ்டூடன்ட்டா இருந்தது நாலாம் வகுப்புல இருந்துதான். ஒரு எக்ஸாம்ல சயின்ஸ்ன்னு நினைக்கிறன். மார்க் கம்மியா போட்டிருக்காங்கன்னு டீச்சர் கிட்ட சண்டை போட்டதா ஞாபகம். ட்ராயிங் வரைய ஆரம்பிச்சது அப்போதான்னு நினைக்கிறேன். பென்சில் ட்ராயிங் ஓரளவு வரைவேன்.

அஞ்சாம் வகுப்பு:
அப்போ லீடரா இருந்தேன். மதியம் லஞ்ச் டைமில் படிக்காம விளையாடுறவங்க பேரை தினமும் எழுதணும். அப்போ ஒரு பொண்ணு பேரை எழுதிட்டு, அந்த பொண்ணு ரொம்ப கெஞ்சுச்சுன்னு அழிச்சுட்டேன். ஆனா டீச்சர் அந்த பேரையும் வாசிச்சு பணிஸ்மென்ட் தந்தாங்க. ஏண்டா, பேரை அழிச்சுட்டன்னு, என்னையும் திட்டினது இன்னும் ஞாபகம் இருக்கு,

ஆறாம் வகுப்பு:
திண்டுக்கல் MSP நாடார் ஸ்கூலுக்கு மாறினேன். புதுப்புது பசங்க. கொஞ்சம் மிரண்டுதான் போனேன். எப்பவும் அஞ்சு ரேங்க் வாங்கி பழக்கப்பட்ட நான் ஒரு மார்க், ரெண்டு மார்க் வித்தியாசத்துல பத்து இருபதுன்னு வாங்க ஆரம்பிச்சேன். எப்படி எழுதினாலும் ரேங்க் வர முடியல. காம்பிடிசன் அதிகம்.

ஏழாம் வகுப்பு:
கணக்கு பாடம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. மொத மொதலா டியூசன் போனேன். வீட்டுக்கு போக ஈவ்னிங் ஏழரை மணி ஆயிரும். அப்புறமா படிச்சு ஹோம் ஒர்க் எழுதியும் எழுதாம தூங்கிடுவேன். காலையில ஸ்கூலுக்கு பஸ்ல போறப்ப மீதி ஹோம் ஒர்க் செஞ்சதா ஞாபகம், 

எட்டாம் வகுப்பு:
இந்த கிளாஸ் எனக்கு மறக்க முடியாதது. ஏன்னா சோசியல் சயின்ஸ் பாடத்துல வகுப்புல அதிக தடவ பர்ஸ்ட் மார்க் வாங்கியிருந்தது தான். எப்படி வாங்க முடிஞ்சதுனா, சோசியல் சயின்ஸ் சார் காலையில சீக்கிரமா எங்கள வரச் சொல்லி ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு பக்கத்தையும் படிச்சு அப்படியே ஒப்பிக்க சொல்வார். அப்படி படிச்சதுனால எப்படி கேள்வி கேட்டாலும் பதில் எழுத முடிஞ்சது. அப்ப இருந்தே எல்லா பாடத்தையும் எல்லா பக்கமும் அட்லீஸ்ட் வாசிட்டு எக்ஸாமுக்கு போற பழக்கம் வந்துச்சு.

ஒன்பதாம் வகுப்பு:
இந்த வகுப்புல எல்லா வாத்தியார்களும் வழக்கத்துக்கு மாறா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அடுத்து டென்த்ல, அதனால எல்லோரும் நிறைய மார்க் வாங்கனும்கிற நோக்கத்தில பாடம் நடத்தினாங்க. எங்களையும் அப்படியே தயார் செஞ்சாங்க. கணக்கு பாடம் கொஞ்சம் கடினமா இருந்துச்சு. அதுல கொஞ்சம் கவனம் செலுத்தி படிச்சேன்.

பத்தாம் வகுப்பு:
என்னை பாக்றவங்க எல்லாம் நானூறு, நானூத்தி அம்பதுக்கு மேல வாங்கனும்னு சொல்லி சொல்லியே ஒரு பயத்தை உண்டாக்கினாங்க.  எழுதுன எல்லா மாச, ரிவிஷன் எக்ஸாம்ல மார்க் ரொம்பவே கம்மியா வந்துச்சு. எல்லா பசங்களுக்கும் அப்படித்தான். அப்படியே புக்ல இருக்றத வரி மாறாம எழுதினாலும் மார்க் வரவு கம்மி தான். அதனால புக்கை அட்டை டூ அட்டை படிச்சோம். பப்ளிக் எக்ஸாம் எழுதினேன். எங்கே, மார்க் கம்மியா வந்திரும்னு பயத்துல இருந்த நான் நானூத்தி அம்பதுக்கு மேல வாங்காட்டியும், நானூறுக்கு மேல வாங்கிட்டேன். அப்பத்தான் கொஞ்சம் பயம் போச்சு. 

பதினொன்னாம் வகுப்பு:
டூல் & டை(tool&die) படிக்கணும்னு ஆசைப்பட்ட நான் சில சூழ்நிலைக் காரணத்தால ஸ்கூல் வேற மாறி எங்க ஊர் தம்பித்தோட்டம் ஸ்கூலில சேர்ந்தேன். மொத்தமே ஐநூறு மார்க்குக்கு படிச்சு பழகி இருந்த எனக்கு ஆயிரத்து இருநூறு மார்க்கு பாடத்த பார்த்து மயக்கமே வந்திருச்சு. இருந்தாலும் ஆசிரியர்கள் நல்லா பாடம் சொல்லிக் கொடுத்தாங்க. அந்த வருஷம் ஆண்டு விழாவுல கப்பலோட்டிய தமிழன் அப்படின்னு ஒரு நாடகம் போட்டோம். அதுல நான்தான் மெயின் ரோல். சிதம்பரனார் இல்லை. ஆங்கிலேய துரை வேஷம். அதுக்காக பட்லர் இங்கிலீஷ் பேசிப் பேசி பழகினேன். ஓரளவு நல்லா வந்துச்சு பட்லர் இங்கிலீஷ். இந்த மாதிரி ஜாலியாவும், படிப்புமா அந்த கிளாஸ் போச்சு.

பனிரெண்டாம் வகுப்பு:
கல்வி வாழ்வின் முக்கியமான கட்டம் பன்னிரெண்டாம் வகுப்பு. அதுக்கேத்த மாதிரியே வகுப்புல ஆசிரியர்கள், வீட்டுல பெற்றோர்கள், நண்பர்கள் எல்லோர்  ஒத்துழைப்பு கெடச்சு நல்லா படிச்சேன். பிசிக்ஸ் சார் வீட்டுல நைட்டு தங்கி (ட்யூசன் தான். ஆனா நேரங்காலம் இல்லாமல்) கண் முழிச்சு படிப்போம், காலையில நாலு மணிக்கு பிசிக்ஸ் சார் கையில டீயோடஎங்கள எழுப்பி விடுவாரு. ஒவ்வொரு பாடத்துக்கும் பக்கம் பக்கமா படிச்சு, நிறைய நோட்ஸ் படிச்சு பப்ளிக் எழுதி ஓரளவு மார்க் வாங்கினேன். 

ரைட்டுங்க, என்கூட ஸ்கூலுக்கு பொறுமையா வந்த உங்களுக்கு நன்றிங்கோ.

என்னை மாதிரி கீழே இருக்குற அஞ்சு பேரை அவங்களோட ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகனும்னு அன்பா கூப்பிடுறேன்.
உணவுலகம் சங்கரலிங்கம் சார் அவர்கள்.
கற்போம் தள பிரபு அவர்கள்
இந்திராவின் கிறுக்கல்கள் இந்திரா அவர்கள்
தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்குமார் அவர்கள்
ரேவா கவிதைகள் ரேவா அவர்கள்

இந்த பதிவு மூலமா எனது பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கனும்னு ஆசை. யப்பா, ஸ்கூல் பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்கிங்களா?


45 கருத்துரைகள்:

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

இந்த பதிவு மூலமா எனது பள்ளிக்கால நண்பர்களை சந்திக்க முடியுமா?

யப்பா, ஸ்கூல் பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்கிங்களா?

Mahan.Thamesh said... Best Blogger Tips

பள்ளிக்கால நினைவுகளை சொல்லி எங்க நினைவுகளை மீண்டு வைத்தமைக்கு நன்றிகள் அண்ணா

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!நான் கூட உங்க கேஸ் தான்!///நம்மளுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி.///

தமிழ் மீரான் said... Best Blogger Tips

எத்தனைக் காலம் சென்றாலும் பள்ளிக் கால பசுமையான நினைவுகளை மறக்கவே முடியாது. நல்ல பதிவு
நன்றி!

சம்பத்குமார் said... Best Blogger Tips

////இந்த பதிவு மூலமா எனது பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கனும்னு ஆசை. யப்பா, ஸ்கூல் பிரண்ட்ஸ் யாராச்சும் இருக்கிங்களா?////

நல்ல முயற்சி நண்பா..

//அப்படியே புக்ல இருக்றத வரி மாறாம எழுதினாலும் மார்க் வரவு கம்மி தான். அதனால புக்கை அட்டை டூ அட்டை படிச்சோம். //

சொல்லவே இல்ல...

Rathnavel Natarajan said... Best Blogger Tips

மொத்தமே ஐநூறு மார்க்குக்கு படிச்சு பழகி இருந்த எனக்கு ஆயிரத்து இருநூறு மார்க்கு பாடத்த பார்த்து மயக்கமே வந்திருச்சு.

அருமையான பதிவு பிரகாஷ்.
வாழ்த்துகள்.

gvsivam said... Best Blogger Tips

ஆஹா அருமை,super.

சமுதாய நோக்குள்ள,பல இளைஞர்களுக்கு பயன் தரக்கூடிய படிக்கின்ற வாசகர்களுக்கு பயன் தரக்கூடிய பல வாழ்க்கை அனுபவங்களை உள் அடக்கிய தங்களின் பள்ளிக்கால அனுபவ குறிப்புகள் ஒரு பொக்கிஷம்.இந்த விலைமதிப்பில்லா அனுபவ பொக்கிஷத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.இதுபோன்ற படிக்கின்ற அனைவருக்கும் பயன் தரக்கூடிய பதிவுகளை தொடர்ந்து வழங்கவும்.
கலக்கரிங்க பாஸ்...ம்..ம்...Keep it up....

gvsivam said... Best Blogger Tips

பிரகாஷ்,
நானும் உன்கூட தான் படிச்சேன்பா.
எப்போன்னு கேக்கரியா?
அட LKG ல பா.

Unknown said... Best Blogger Tips

என்னமா ஞாபகம் வச்சி இருக்காங்கய்யா!...யோவ் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..நண்பனே பாட்டு ரேடியோல கேக்குதுய்யா!

ஆச்சி ஸ்ரீதர் said... Best Blogger Tips

அருமையான நினைவுகள்

Unknown said... Best Blogger Tips

நான் இப்பதான் ஸ்கூல் முடிச்சு 07 மாதம் ஆகுது திரும்ப போக வைக்க போறிங்களே.........

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

அருமையான நினைவுகள் ! நான் உங்க சீனியர் பிரகாஷ் ! (திண்டுக்கல் பள்ளியில்)

முத்தரசு said... Best Blogger Tips

..........நினைவுகள்..............

ம்.

Unknown said... Best Blogger Tips

பள்ளிக்கூடம் படிக்கும் போது கசக்கும் ஆனால் நினைவுகளில் இனிக்கும்!

வெளங்காதவன்™ said... Best Blogger Tips

ச்சே... இதுக்குத்தான் பள்ளிக்கூடம் போகக் கூடாதுன்னு சொல்லுறது!!!

:-)

இந்திரா said... Best Blogger Tips

தொடர்பதிவு ஆரம்பிச்சாச்சா..
பள்ளி நினைவுகளாச்சே.. எழுதாம இருக்க முடியுமா? கட்டாயம் எழுதுறேன் பிரகாஷ்..

இன்னொரு விஷயம்.. நான் இப்ப இருக்குறது தான் மதுரை. எனக்கும் சொந்த ஊர் திண்டுக்கல் தான். ப்ளஸ்டூ வரைக்கும் திண்டுக்கல்ல தான் படிச்சேன்.
மத்த விபரம் தொடர்பதிவுல..
அழைத்தமைக்கு நன்றி.

Prabu Krishna said... Best Blogger Tips

அருமையான நினைவுகள். கண்டிப்பாக எழுதுகிறேன் அண்ணா.

பாலா said... Best Blogger Tips

சுகமான பள்ளி நினைவுகள். எனக்கும் நினைவு படுத்தி விட்டீர்கள்.

Unknown said... Best Blogger Tips

பள்ளிக்கால நினைவுகள் பற்றிய உங்கள் பதிவு என் நினைவுகளுக்கும் அழைத்து சென்றது முடிவில ஒரு ஆச்சர்யம் என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கேங்க எப்படி எழுதாம இருக்க முடியும் எல்லார் வாழ்விலும் திகட்டாத காலமாச்சே...ரொம்ப நன்றி அண்ணா என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு....

Unknown said... Best Blogger Tips

Venkatesan said...
ஆஹா அருமை,super.

சமுதாய நோக்குள்ள,பல இளைஞர்களுக்கு பயன் தரக்கூடிய படிக்கின்ற வாசகர்களுக்கு பயன் தரக்கூடிய பல வாழ்க்கை அனுபவங்களை உள் அடக்கிய தங்களின் பள்ளிக்கால அனுபவ குறிப்புகள் ஒரு பொக்கிஷம்.இந்த விலைமதிப்பில்லா அனுபவ பொக்கிஷத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.இதுபோன்ற படிக்கின்ற அனைவருக்கும் பயன் தரக்கூடிய பதிவுகளை தொடர்ந்து வழங்கவும்.
கலக்கரிங்க பாஸ்...ம்..ம்...Keep it up....

>>>>>>>>>

ஹலோ Mr. வெங்கி சார் கோச்சிக்கலன்னா ஒன்னு கேட்டுக்கரேன்...உங்க நிஜ பெயர் என்ன பெட்டிசன் பெரிய நாயகனா...நேத்து என்னடான்னா இந்த பிலாக்ல ஏற்ப்பட்ட வாக்குவாதத்த எல்லா பதிவுலயும் போட்டு இருந்தீங்க...எதோ நாங்க பதிவுன்னு எங்களுக்கு தெரிஞ்ச்த போட்டுட்டு போறேம்..why this கொலவெறி?

ராஜி said... Best Blogger Tips

நீங்க படிப்பாளி, நல்ல பிள்ளைன்னு அழுத்தம் திருத்தமா சொல்ல வந்த பதிவு இது.

ராஜி said... Best Blogger Tips

மரத்துல நெல்லிக்காய், மாங்காய் அடிக்கலை, நண்பன் கூட சண்டை போட்டு சட்டை கிழியலை, கட்டுரை நோட்டு மிஸ் பண்ணிட்டு டீச்சர்க்கிட்ட அடி வாங்கலை, கிளாஸ் பொண்ணுக்கிட்ட லவ்லெட்டர் குடுத்து என்ன பதில் வருமோன்னு டென்ஷனா காத்திருக்கலை..., இதெல்லாம் பண்ணாம தம்பி நீங்கலாம் ஏன் ஸ்கூலுக்கு போகனும்?! 12 வருசத்தை மிஸ் பண்ணிட்டியே. மறுபடியும் ஸ்கூலுக்கு போய் “ஒழுங்கா” படிச்சுட்டு வா.

Anonymous said... Best Blogger Tips

என்னய்யா இதெல்லாம்? ஒரு வகுப்பு விடாம வரலாறு வகை வகையா இருக்கு? நல்லவேளை ஒண்ணாப்பு 7 அட்டெம்ப்ட் எழுதுன நக்ஸ் அண்ணனை கொத்து விடாம இருந்தீங்களே...

Anonymous said... Best Blogger Tips

//FOOD NELLAI said...

பள்ளி நாட்களின் பசுமையான நினைவுகள்,மீண்டும் வராதா என மனம் என்றும் ஏங்கும்.
கால அவகாசம் கொடுங்கள். தொடருகிறேன். //
மறுபடியும் அதே பள்ளில சேரப்போறீங்களா ஆபீசர்? அடுத்து காலேஜ், டுடோரியல் அனுபவங்கள் எல்லாம் தொடர்பதிவா எழுத சொல்வாரு இந்த தமிழ்வாசி. ரெடியா இருங்க.

Anonymous said... Best Blogger Tips

/விக்கியுலகம் said...

என்னமா ஞாபகம் வச்சி இருக்காங்கய்யா!...யோவ் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..நண்பனே பாட்டு ரேடியோல கேக்குதுய்யா!//

அந்தப்படம் வந்து பல வருஷம் ஆகுதே. ஆனாலும் நீங்க ரொம்ப ஓல்ட் ஸ்டூடன்ட் மாம்சு!!

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

! சிவகுமார் ! said...
என்னய்யா இதெல்லாம்? ஒரு வகுப்பு விடாம வரலாறு வகை வகையா இருக்கு? நல்லவேளை ஒண்ணாப்பு 7 அட்டெம்ப்ட் எழுதுன நக்ஸ் அண்ணனை கொத்து விடாம இருந்தீங்களே.../////

கொத்து" தா??
கோர்த்தா"????
ஏன் இந்த கொலை வெறி...???

Anonymous said... Best Blogger Tips

@ நாய் நக்கோ நக்ஸ்

//கொத்து" தா??
கோர்த்தா"????
ஏன் இந்த கொலை வெறி...???//

பதிவு எழுதறதை தவிர மத்த எல்லா வேலையும் செய்யற ஒரே பதிவர்(!!!????) நீர்தான் ஓய்!! மனசுல திருவிளையாடல் நக்கீரன்னு நெனப்பு. குத்தம் கண்டு பிடிக்கறாராம் :)))

MARI The Great said... Best Blogger Tips

சில ஞாபகங்கள் மீண்டும் மனக்கண்ணில் தோன்றியது.., !

gvsivam said... Best Blogger Tips
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@வெங்கடேசன்

தமிழ்வாசி பிரகாஷ் said...
ராம்குமார் - அமுதன் said...
நாய்சேகர் said...
கதம்பம் said... ///

வேறு தளத்தில் இந்த பதிவின் லிங்க் பார்த்து வந்து கருத்து சொன்ன உங்களுக்கு முதலில் நன்றி.

வெங்கடேசன், நாய்நக்ஸ் இருவருக்குமான கருத்து மோதல்கள் இங்கே நடந்தேறியுள்ளன. அன்று வலைப்பக்கம் வர இயலாததால் தடுத்து நிறுத்த இயலவில்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

வெங்கடேசன் எதிர் கருத்து சொல்கிறேன் என்று எண்ணி இதெல்லாம் ஒரு பதிவா? என என் பதிவிற்கான எதிர்வாததை ஏதேனும் உதாரண கருத்து சொல்லி எதிர்த்திருக்கலாமே.

பதிவின் அந்த வரியில் உங்கள் கருத்து தவறாக உள்ளது. இதில் தவறாக உள்ளது என சொல்லி இருக்கலாம்.
ஏதோ பொத்தாம் பொதுவாக தீண்டத்தக்காத பதிவு போல
"இதுக்குபேரு தொழில்நுட்ப பதிவா?என்ன கொடுமடா சாமி."
என சொல்லி இருக்கீங்க. இந்த பதிவு லேபில் பாருங்க தொழில்நுட்பம் என நான் குறிப்பிடவில்லை.
நீங்களா ஏதோ நெனச்சு அப்படி சொல்லி இருக்கீங்க.

///என்னுடைய விளக்கங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கூறிவிட்டேன்.விமர்சனங்கள் அனைத்தும் நமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என நினைப்பதும் தவறு.
பதிவில் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் செல் வாங்கும்போது தரும் மேனுவல் கைடு லேயே உள்ளது.வேறு ஏதேனும் அப்ளிகேஷன்/softwere இணைப்பது,அல்லது பேட்டரியின் தன்மை...போன்ற விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்த்தேன்.அப்படி இல்லாமல் இணையத்தில் ஏற்கனவே படிக்கப்பட்ட/மேனுவல் கைடிலேயே உள்ள விஷயமானதால் எமக்கு அந்த பதிவில் விஷயம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.அதனாலேயே அவ்வாறு கருத்திட்டேன்.///
இந்த கருத்தை சொல்லி முதலிலே எதிர் கருத்து சொல்லி இருக்கலாமே.
சரிங்க அப்படி அங்கே அந்த குறிப்புகள் சொல்லி இருந்தாலும் எல்லா மொபைல்களிலும் நான் குறிப்பிட்ட வசதிகள் இருக்கின்றனவா?
சில பேசிக் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு 3G / wifi என்றாலே என்னவென்று தெரியவில்லை.... அவர்கள் இந்த பதிவில் சில விசயங்களை அறிந்திருக்க வாய்ப்பு உள்ளதே.

நீங்க எதிர்பார்த்த விஷயம் இந்த பதிவில் இல்லையினா அதை கருத்துரையில் குறிப்பிட்டு பாஸ் இதையும் ஒரு பதிவா போடுங்க அப்படின்னு சொல்லி இருக்கலாமே. நல்ல பதிவு வேணும்னு நெனச்ச நீங்க மனசுக்குள்ள வச்சிக்கிட்டு "பதிவே இல்லையின்னு" எதிர் கமென்ட் போட்டிருகிங்க.

உங்க பிளாக் இன்விசிபிள் வச்சீங்க. ப்ரோபைல் இன்விசிபிள் வச்சீங்க. அப்படி வைக்க உங்களுக்கு உரிமை இருக்கு. அது போல இந்த பதிவை நான் எழுதவும் உரிமை இருக்கு. கருத்து சொல்லவும் உரிமை இருக்கு.
அப்புறம் ஏன் உங்க முகத்தை மறைசிட்டு எல்லா வலை பதிவிலும் என் தளத்தை பற்றி கீழ்த்தரமா வாசகம் போட்டு லிங்க் கொடுத்திருகிங்க??

இந்த கருத்து மோதலுக்கு நான் வெளியே நின்னு வேடிக்கை பார்க்கவில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவும். தவிர்க்க இயலாத காரணத்தால் வலைப்பக்கம் வரமுடியவில்லை.

அப்புறமா மற்றவர்கள் (நாய்னக்ஸ்) கருத்துக்கு அவர்களே பொறுப்பு. அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

மேலும் இந்த கருத்து மோதல் இத்துடன் முடிந்து விட வேண்டும் என விரும்புகிறேன்.
மேலும் மோதல் தூண்டும் வகையில் கருத்துகள் வருமாயின் அந்த கருத்துகளை என் மீதான தனிமனித தாக்குதலாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

கோவை நேரம் said... Best Blogger Tips

யாருப்பா...அது வெங்கடேஷ்....மறைஞ்சு நின்னு தாக்குதல் நடத்துறது....போதும்பா....முடியல.....

கோவை நேரம் said... Best Blogger Tips

யாருப்பா...அது வெங்கடேஷ்....மறைஞ்சு நின்னு தாக்குதல் நடத்துறது....போதும்பா....முடியல.....

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

அதிகமாக...O.C.-ல நெய் பொங்கல்,,,
புளியோதரை...
சுண்டல்,,,சக்கரை பொங்கல்..எல்லாம் ...
சாப்பிட்டா....இப்படிதான்...கொழுப்பு..
நெண்டுமாம்...

"ஒரு பயங்கரமான குருக்களை பார்க்க வேண்டுமா வாருங்கள் நண்பர்களே! "

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@வெங்கடேசன்
என்ன தமிழ்வாசி பிரகாஷ் சார்.
மொக்க பதிவா போடாதிங்கன்னு சொன்னாலும் அழுது ஆர்பாட்டம் பன்னி அடிஆள் செட் பன்னி மெரட்டுரிங்க.

சரி போனா போகுது நல்லா இருக்குன்னு ஒரு பொய்ய சொல்லி வைப்போம் னு பாத்தா.அதுக்கும் ஆள வச்சி கேள்வி கேக்கரிங்க.
நீங்க தெரிஞ்சத எழுதரிங்களோ,தெரியாதத எழுதரிங்களோ அது மேட்டரே இல்ல.பதிவுன்னு போட்டுட்டிங்கன்னா யார் வேனா கருத்து சொல்லலாம்னு செங்கோலே சொல்லிட்டாரு.
அண்ணன் நாய்நக்ஸ் சொல்ற மாதிரி காசு கொடுத்து கஸ்டம் டொமைன் வாங்கியிருக்கிங்கங்கரதுக்காக லாம் கருத்து சொல்லாம போகமுடியாது.
வேனா ஒன்னு செய்யிங்க

invite readers மட்டும் படிக்கர மாதிரி உங்க ப்ளாக்க செட் பன்னிக்கிட்டிங்கன்னா எங்களமாதிரி வெளி வாசகர்கள் உள்ள வராம உங்களுக்குள்ளயே ஆஹா,ஓஹோ,அருமை,சூப்பர்,கலக்கிட்ட போ,இப்புடி கமெண்ட் அடிச்சிக்கலாம்.///

ஆமா, உன்ன மாதிரி ஆளுங்க வர வேணாம். நாங்களே அடிச்சுக்குவோம். நீங்க ஒன்னும் கமென்ட் அடிக்க வேணாம். பொய் கமென்ட் தான் போடுவேன்னு அடம் பிடிச்சு இனி போட்டாலும் மத்த வாசகர்கள் உங்களை ஆதரிக்க மாட்டார்கள்.
உங்க கமென்ட் எதிர் பார்த்து என் கமென்ட் பாக்ஸ் தொறந்து வைக்கல. மத்தவங்களுக்கு தெரியும் என் வலைப்பதிவை பற்றி...
உங்க கருத்து என்னை ஒன்னும் செய்யாது.

ஆனாலும் இனியும் தனிமனித தாக்குதல் தொடர்ந்தால்......?????

சசிகுமார் said... Best Blogger Tips

மாப்ள தமிழ் முன்னேறாத காரணம் இப்ப புரியுதா...

விடியலை நோக்கி.... said... Best Blogger Tips

உங்களைப் போன்ற நல்ல பதிவர்கள் ஏன்? சிலரின் பின்னால் போகிறீர்கள்.......இது பதிவுலக சாபக்கேடு!

aalunga said... Best Blogger Tips

இவ்வளவு ஞாபகம் வைத்து சொல்லி இருக்கீங்களே!!

சில பல வருடங்களாக நடிக்க முயன்றாலும், நானும் முதன்முதலில் நாடகத்தில் நடித்தது (??! நான் மட்டும் தான் அப்படி சொல்லிக்கணும்) +1 இல் தான்.. அது தான் முதல் மற்றும் கடைசி முறை.. மேடையில் நடித்தது! அதை மறக்க முடியாது!!

உங்கள் பள்ளி நண்பர்களைக் கண்டறிய வாழ்த்துகள்.

தங்களின் பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!!

பி.கு: பழைய பதிவுகளின் கசப்புகளைப் புதியனவற்றில் கலக்க வேண்டாமே!

துரைடேனியல் said... Best Blogger Tips

மலரும் நினைவுகள் அருமை. நீங்களும் என்னை மாதிரி தானா? பல ஸ்கூல்ல படிச்சிருக்கீங்க போல. எங்கப்பா கவர்மெண்ட் வேலை. அதுனால் நானும் இப்படி பல பள்ளிகள்லதான் படிச்சேன். நல்லா எழுதியிருக்கீங்க சார்.

துரைடேனியல் said... Best Blogger Tips

tha ma 5.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

யோவ் மலரும் நினைவுகள் போடவேண்டியதுதான், ஆனா அதுக்காக இப்படியா? பிச்சிபுடுவேன் பிச்சி......!

ANBUTHIL said... Best Blogger Tips

வித்தியாசமான தொடர் தொழில்நுட்ப பதிவுகளுக்கு என தனியாக வலைபதிவு தொடங்கலாமே

உழவன் said... Best Blogger Tips

உங்கள் பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி...

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

இமா க்றிஸ் said... Best Blogger Tips

தினக்குறிப்பு போல வருடக் குறிப்பு! சுவாரசியமாக இருக்கிறது. :-)

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

வலைச்சர தள இணைப்பு : அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)

Angel said... Best Blogger Tips

உங்களின் இந்த பதிவை பற்றி வலைசரத்தில் கூறியுள்ளேன் .நேரம் கிடைச்சா வாங்க


..Special Thanks to D.D

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1