CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



தீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
தீயணைப்பான் வரலாறு:
முதன்முதலில்,1723ம் ஆண்டு தீயணைப்பான் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்புரோசு காட்ஃப்ரே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இது இன்றைய புதிய தீயணைப்பான்களுக்கு முன்னோடியான ஒரு கருவி. இதில் தீயை அணைக்க உதவும் நீர்மமும், வெடிமருந்தும் ஒரே பெட்டியின் இருவேறு அறைகளில் இருக்கும். தீவிபத்து (தீப்பற்று நிகழ்வு) ஏற்படும் சமயங்களில் பெட்டி வெடித்து, நீர்மம் (திரவம்) வெளியேறுவதால் தீ அணைக்கப்பட்டது.
இதன் பிறகு, 1819ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த சார்சு வில்லியம் மாண்பை நவீன தீயணைப்பானை உருவாக்கினார். இதில் இவர் பொட்டாசியம் கார்பனேட் கலவையையும் அழுத்தப்பட்ட காற்றையும் பயன்படுத்தினார்.
இதன் பிறகு 1881ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ரீட் & காம்பல் என்ற நிறுவனத்தால் அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான்களும், 1905 ம் ஆண்டில் உருசியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் லாரன்ட்என்பவரால் வேதிநுரை தீயணைப்பான்களும் , 1924ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வால்டர் கிட்டி நிறுவனத்தால் கார்பன்-டை-ஆக்சைடை அடிப்படையாக கொண்ட தீயணைப்பான்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
பொதுவாக நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கத்திலும் அமெரிக்கர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலன் 1211 மற்றும் காலன் 1301 ஆகிய வளிமங்கள் (வாயுகள்) 1970 களில் ஐரோப்பாவுக்கும் பரவியது. எனினும் இந்த வளிமங்கள் சூழ்நிலை சீர்க் கேட்டை உருவாக்கவல்லது என்ற காரணத்தால் ஐரோப்பா மற்றும் அவுத்திரேலிய நாடுகளில் தடைசெய்யப்பட்டது. இந்தியாவில் இந்த வளிமம் 1997ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்கா, ஆசியா, நடு கிழக்கு நாடுகளில் இந்த வளிமம் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.


தீயணைப்பான் வேலை செய்யும் முறை
நெருப்பு முக்கோணம்
பொதுவாக தீயணைப்பான்கள் நெருப்பு முக்கோண அடிப்படையில் இயங்குகின்றன. அதாவது ஓர் இடத்தில் தீ உருவாக அல்லது பரவ வெப்பம், எரிபொருள் மற்றும் ஆக்சிசன் ஆகிய மூன்றும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே இவை மூன்றில் ஏதாவது ஒன்றை நீக்கும்பொழுது நெருப்பு அணைக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் குளிர்வித்தல், போர்த்துதல் ஆகிய முறைகளில் தீ அணைக்கப்படுகின்றது.
குளிர்வித்தல்:
இந்த முறையில் தீப்பிடித்த பகுதிகளில் நீர் போன்ற குளிர்விப்பான்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் வெப்பம் நீக்கப்படுவதால் தீ கட்டுப்படுத்தப்படுகின்றது.
போர்த்துதல்:
இந்த முறையில் தீப்பிடித்த பொருள்களில் சில வேதிப்பொருட்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் நுரை தீப்பிடித்த பொருள்களின் மேல் படிகின்றன. இதனால் அந்தப் பொருள்களுக்கு ஆக்சிசன் தொடர்பு துண்டிக்கப்படுவதால், நெருப்பு அணைக்கப்படுகின்றது.


தீயணைப்பான்கள் வகைப்பாடு (Fire Extinguisher Classes): 
தீயணைப்பான்கள் பொதுவாக விபத்துக்கான எரிபொருள் அல்லது விபத்துக்கான காரணி ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடு நாட்டுக்கு நாடு வேறுபடும்.
இந்திய அளவில் தீவிபத்தானது பின்வரும் முறையில் ஐந்து வகையாக பகுக்கப்பட்டுள்ளது.
A பிரிவு தீவிபத்து: காகிதம், மரம், ரப்பர், நெகிழி போன்ற பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
B பிரிவு தீவிபத்து: எண்ணெய், கரைப்பான், பெட்ரோல் போன்ற நீர்ம பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
C பிரிவு தீவிபத்து: எளிதில் தீப்பற்றக்கூடிய வளிமங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
D பிரிவு தீவிபத்து: மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாசுபரசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய உலோகங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
E பிரிவு தீவிபத்து: மின்சாதன பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

மேற்கூறிய இந்திய தீவிபத்து வகைப்பாட்டின் படி தீயணைப்பான்களின் பயன்பாடு பின்வரும்படி நிர்ணயக்கப்பட்டுள்ளது.


நீர் தீயணைப்பான் WATER Fire extinguisher:
இவ்வகை தீயணைப்பான்களில் தீயணைப்பு கருவியாக நீர் பயன்படுகிறது. நீரை வேகமாக பீய்ச்சியடிக்க கார்பன்-டை-ஆக்சைடு பயன்படுகிறது. இவ்வகை தீயணைப்பான்கள் A வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை குளிர்வித்தல் முறையில் செயல்படுகின்றன.

வேதிநுரை தீயணைப்பான் Foam Fire Extinguisher:
இவ்வகை தீயணைப்பான்களில் குறிப்பிட்ட வேதிப்பொடிகள் தீயணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. வேதிப்பொடிகளை வேகமாக பீய்ச்சியடிக்க நைட்ரசன் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A & b வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன .

உலர் வேதிப் பொடி தீயணைப்பான் Dry Chemical Powder:
இவ்வகை தீயணைப்பான்களில் அம்மோனியம் பாஸ்ப்பேட் போன்றவை தீயணைப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் A,B,C & E வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.

கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பான் CO2 Fire Extinguisher:
இவ்வகை தீயணைப்பான்களில் கார்பன்-டை-ஆக்சைடு தீயணைப்பு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் B,C & E வகை விபத்துகளை தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.

சிறப்பு உலர்வேதிப்பொடி தீயணைப்பான் Special Dry Chemical Powder:
இவ்வகை தீயணைப்பான்களில் பல்வேறு வேதிப்பொடிகள் (உலோகத்துக்கு உலோகம் மாறுபடும்) தீயணைப்பு கருவியாக பயன்படுகின்றது. இவ்வகை தீயணைப்பான்கள் D வகை விபத்துகளைத் தடுக்க பயன்படுகின்றன. இவை போர்த்துதல் முறையில் தீயை அணைக்கின்றன.
source: wikipedia
நேற்றைய ட்ரான்ஸ்பார்மர் தீ சம்பவத்தால் மேற்கண்ட பதிவு பகிர்ந்துள்ளேன். டிப்ளமோ படிக்கும் போது தீயணைப்பான்கள் பற்றி படித்தது. சில Fire Extinguisher classes மறந்து விட்டது. ஆகையால் இணையத்தில் தேடி மீண்டும் படித்து அறிந்து கொண்டேன். விக்கிபீடியா தளத்தில் முழுமையான தகவல்கள் இருந்ததால் அதிலிருந்து பகிர்ந்துள்ளேன். நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.


12 கருத்துரைகள்:

கூடல் பாலா said... Best Blogger Tips

தகுந்த சமயத்தில் வந்த பதிவு!

ஸ்ரீதர்ரங்கராஜ் said... Best Blogger Tips

நல்ல பதிவு. பாராட்டுகள்.:-)))))))))

Unknown said... Best Blogger Tips

பயனுள்ள நல்ல கருத்துக்களை கொடுத்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்

பாலா said... Best Blogger Tips

நாம் அலுவலகத்திலோ அல்லது பொது இடத்திலோ அன்றாடம் பார்க்கும் ஒரு கருவி. ஆனால் அவற்றைப்பற்றி இவ்வளவு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தகவல்களுக்கு நன்றி

ANBUTHIL said... Best Blogger Tips

thanksfriend

Unknown said... Best Blogger Tips

நல்ல பகிர்வு!அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்...!

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

nalla pakirvu...

கோகுல் said... Best Blogger Tips

ரொம்ப நன்றிங்க பிரகாஷ்,
தீயினால் சமீபமாக சில துயரங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சில இடங்களில் இவையெல்லாம் இருந்தும் எப்படி பயன்படுத்துவது என அங்கே இருப்பவர்களுக்கே தெரிவதில்லை,இது குறித்து நான் சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன்.உங்களால் கிடைத்து விட்டது.நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

விளக்கமான தகவல் பிரகாஷ் ! நன்றி !

முத்தரசு said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி

தேவையான அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு

ராஜி said... Best Blogger Tips

கோடைக்காலம் வந்தாலே தீவிபத்துகள் அதிகம் நடைப்பெறும். தக்க சமயத்தில் பதிவிட்டமைக்கு நன்றி. இதுவரை அறிந்திடாத தகவல்களை அறிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

தேவையான தகவல் நண்பா..

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1