ரெண்டு மாசத்துக்கு முன் நண்பர் செங்கோவி கிட்ட இருந்து ஒரு மெயில் வந்துச்சு, இந்தியாவுக்கு வர்றேன்யா அப்படின்னு. வாங்க,,,, மாம்ஸ் வாங்க, ரொம்ப சந்தோசம், மீட் பண்ணுவோம் சீக்க்ரமா'ன்னு ரிப்ளை அனுப்பினேன். அப்ப இருந்து செங்கோவி எப்படி இருப்பார்னு ஒரே யோசனையா இருந்துச்சு. ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா? இல்ல, கருப்பா? இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.
அவரும் இந்தியா வந்ததும் டெய்லியும் போன் செஞ்சு எப்ப பிரகாஷ் பிரீயா இருப்பிங்க? மீட் பண்ணனும்னு கேட்க, மாம்ஸ், நீங்க எப்ப பிரீயா இருபிங்கன்னு நானும் கேட்க? சரிய்யா, குவைத் போறதுக்கு முந்தின வாரம் மீட் பண்ணலாம்னு ஓரு வழியா முடிவு செஞ்சோம். சும்மாவே கூகிள் வாய்ஸ் சாட்ல மணிக்கணக்கா பேசுவோம். இப்ப போன்லையும் தெனமும் அரட்டை தான். பிளைட் விட்டு இறங்கியதுல இருந்து மாமனார் வீட்டுல செம கவனிப்பாம். ஆடு, கோழி, மீன் என ஒரே நான்வெஜ் அயிட்டமா வயிறு முட்ட சாப்பிடுவதாக சொன்னார். சரிய்யா, மாமனார் வீடுன்னா சும்மாவா, என்ஜாய் பண்ணுங்கன்னு சொன்னேன்.
ஒருவழியா எங்க ரெண்ட பேருக்கும் ஒரு நாள் ஈவினிங் டைம் கெடச்சுசு. பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு ஆறு மணிக்கு வந்திருவேன்னு சொன்னார். வாங்க மாம்ஸ் நானும் கரெக்டா வந்திருவேன்னு சொல்லிட்டேன். ஆனா நான் கம்பெனியில இருந்து வீட்டுக்கு வந்து சேரவே ஆறு மணியாச்சு. அடாடா, செங்கோவி வந்திருவாரேன்னு நெனைக்க அவர் கிட்ட இருந்து போன், பெரியார் வந்துட்டேன் எங்க வெயிட் பண்ண என கேட்க, பர்மா பஜார் பக்கத்துல சர்ச்க்கு முன்னாடி வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். நானும் ரெப்ரெஷ் பண்ணிட்டு ஜங்சன் பக்கத்துல தங்கரீகல் தியேட்டர் பக்கத்துல பைக் பார்க் பண்றப்போ மணி ஆறு முப்பது. செங்கோவிக்கு போன் பண்ண மொபைலை எடுக்க அவரே கூப்பிட்டார். இதோ நீங்க நிக்கிற இடத்துக்கு பக்கத்துல வந்துட்டேன்னு சொல்ல ஒரு உருவம் என்னைப் பார்த்து கை அசைத்தது. ஆகா, கண்டேன் செங்கோவியை என மனசுக்குள் ஒரு சந்தோஷம். (நான் பதிவுலகிற்கு வந்து முதலில் எனக்கு நண்பரானவர் செங்கோவி. அப்போ அவரது பிளாக்கில் மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு. பிளாக்கிலும் கமென்ட் போட்டு, மெயில்லும் அனுப்பி அப்படியே சாட் செய்து நண்பரானோம். இப்போ இந்த நட்பு கதையை ஒத்தி வச்சுட்டு சந்திப்பு எப்படி இருந்துச்சுன்னு பார்ப்போம்) செங்கோவி எப்படி இருப்பார்னு கீழ இந்த போட்டோவை பாத்துக்கங்க.
இருவரும் பரஸ்பர விசாரிப்புக்கு பின், வெயிலுக்கு இதமா கரும்புச்சாறு சாப்டுட்டு பேசிட்டே பைக் இருக்குற இடத்துக்கு வந்தோம். செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார். என்ன மாம்ஸ், தியேட்டரை பார்த்து சிரிக்கறிங்க'ன்னு கேட்க, அதுவாயா, நான் காலேஜ் படிக்கிறப்போ இங்க தான்யா படங்கள் பாப்போம்ன்னு சொன்னார். அதாவது அப்போ தங்கரீகல் சகிலா நடிகையின் தியேட்டராக இருந்துச்சாம். இப்போ அப்படியே டோட்டலா மாறி நல்ல படங்கள் போடறாங்களேன்னு ஆச்சர்யப்பட்டார். தியேட்டர் நல்ல படத்துக்கு மாறி ஏழெட்டு வருஷமாச்சு என சொன்னேன். சரிய்யா, நல்லது நடந்தா சரிதான்யா... அப்படின்னு சொல்லிட்டே ஏதோ கடையை தேடினார். மாம்ஸ், என்ன கடையை தேடுறிங்க'ன்னு கேட்க, இங்க தியேட்டருக்கு பக்கத்துல ஒரு இலக்கிய புத்தக கடை இருந்துச்சே' என அவரின் பழைய ஞாபகத்தில் கிளறினார். இதோ இங்க இருக்குன்னு கடைக்கு கூட்டிட்டு போனேன். செங்கோவி கலகல காவியம் படைப்பவராச்சே, ஆனா உண்மையிலஇலக்கிய புழுவா இருக்காரே'ன்னு நினைச்சு ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன் (ஏன்னா அவரது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும், அவரது எழுத்து பற்றி).
புத்தக கடையில ஏதேதோ புத்தக பேரை சொல்லி செங்கோவி கேட்க கடைக்காரர் இல்லைன்னு தலையாட்டிட்டே வந்தார். அட, கடையில் இல்லாத புக்கா கேட்கறாறேன்னு ராணிமங்கம்மாள் சத்திரத்தில் இருக்குற வேற புத்தக கடைக்கு கூட்டிட்டு போனேன். அங்கேயும் அவர் கேட்ட புத்தகங்கள் இல்லை, அப்புறம் அவரா ரேக்ல தேடி ரெண்டு மூணு புத்தகங்கள் வாங்கிகிட்டார். நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.

புக் வாங்கிட்டு, சாப்பிட நல்ல வெஜிட்டேரியன் கடைக்கு போலாம்ன்னு சொன்னார். நான் அதிர்ச்சியாகி என்ன மாம்ஸ், அன்னைக்கு போன்ல நல்ல பிரியாணி கடையை சூஸ் பண்ணி வையுங்க, நாம மீட் பண்றப்ப போலாம்னு சொன்னிங்களே, அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன், இப்படி பொசுக்குன்னு வெஜ் தான் வேணும்னு சொல்லிடிங்களே'ன்னு கேட்க, இந்தியா வந்ததுல இருந்து இப்ப வரைக்கும் மாமனார் வீட்டுல போதும் போதும்ங்ற அளவுக்கு நான்வெஜ் சாப்பாடுதான், நைட் தூங்குறப்போ கூட சாப்பிட்ட ஆடு, கோழி எல்லாம் வந்து மிரட்டுது. அதான், ஒரு சேஞ்சுக்கு வெஜ் சாப்பிடலாம்னு சொன்னேன்,ன்னு அவர் சொல்ல, டவுன்ஹால் ரோட்டில் இருக்குற மீனாட்சிபவன் ஹோட்டலுக்கு கூட்டீட்டு போனேன். ஆளுக்கு சப்பாத்தி, சில்லி பரோட்டா சாப்பிட்டே பேசிட்டு இருந்தோம். எனது பதிவுகள், அவரது பதிவுகள், எழுதும், எழுதிய தொடர்கள், நாட்டுநடப்பு பற்றி பேசினோம்.
அப்போ நாய்நக்ஸ் பத்தி ரொம்பவே விசாரிச்சார். (எந்த பதிவரா இருந்தாலும் நாயநக்ஸ் பத்தி ஒரு முன்னேச்சரிகையாவே பேசுறாங்க? அவர்கிட்ட அப்படி என்ன தான் இருக்கோ?) ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன். செங்கோவியும் நானும் இருக்கோம்னு சொல்ல, அந்தாளு எந்த பார்ல என்னென்ன சரக்கு அடிச்சுட்டு இருக்கிங்கய்யா?ன்னு சட்டுன்னு கேட்டார். யோவ், அவர் கிட்ட போனை தரேன், நீங்களே கேளுங்க எங்க இருக்கோம்னு என சொல்லிட்டு செங்கோவி கிட்ட போனை தந்தேன். செங்கோவி எங்க இருக்கோம்னு சொல்ல, என்கிட்ட பேசனும்னு நக்ஸ் சொல்றார்னு என்கிட்ட போனை தந்தார். நான் ஹலோ, சொன்னது தான் மிச்சம், யோவ், ஏன்யா சரக்கடிக்கலன்னு கேட்க, செங்கோவிக்கு பழக்கம் இல்லையா, அதான் சாப்பிடலன்னு சொன்னேன். அதுக்கு நக்ஸ், தண்ணி அடிக்காதவரெல்லாம் ஒரு பதிவரா? இனிமே இந்த மாதிரி பச்சப் புள்ள பதிவருங்க கூட சேராதிங்கன்னு (பதிவர்களே நக்ஸிடம் கவனம் தேவை) சொல்ல, நான் நக்ஸ் அண்ணே, நாம அப்புறம் பேசுவோம்னு போனை கட் பண்ணிட்டேன்.

செங்கோவி புக்ஸ் வாங்குறப்போ அவருக்கு தெரியாம ஒரு போட்டோ எடுத்தேன். அதை அவர்கிட்ட காட்டி யாருன்னு கேட்டேன், அவரு யாரா இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சார். அட, நீங்க தான் அது. புக்ஸ் வாங்குறப்போ எடுத்தேன்னு சொன்னேன். அப்புறமா நல்லா உத்து பார்த்துட்டு அட ஆமாயா நான்தான்னு அசடு வழிஞ்சார். அப்புறமா சாபிட்டதுக்கு பில் பே பண்ணிட்டு கடைக்கு வெளியே வந்தோம். அங்க என் பைக்கை சுத்தி நாலஞ்சு லேடி கான்ஸ்டபிள்ஸ் நின்னுட்டு இருந்தாங்க. ஐயோ, நோ பார்க்கிங்ல நிறுத்திட்டோமான்னு வேகமா போனேன். ஆனா, அங்க பார்க்கிங்ன்னு தான் போட்டிருந்துச்சு. அப்புறம் ஏன் அங்க அவங்க நிக்கறாங்கன்னு யோசிச்சா, நான் அங்க நிறுத்தும் போது நிறைய பைக் இருந்துச்சு. இப்போ அந்த இடத்துல என்பைக் மட்டும் இருந்ததால கொஞ்சம் இடம் விலாசமா இருந்துச்சு. அதனால அங்க நின்னு அரட்டை அடிச்சிட்டு இருந்தாங்க போல.
செங்கோவியும் ஊருக்கு கிளம்பறேன்னு சொல்ல, அடுத்து எப்ப இந்தியா வருவிங்க?ன்னு கேட்டேன். அடுத்த வருசம்ன்னு சொன்னார். அப்போதாச்சும் ரெண்டு நாள் இங்க தங்குற மாதிரி பிளான் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னேன். அவரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏற்றி விட கூட்டிச் சென்றேன். அன்னைக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக், ட்ராபிக்ல ஊர்ந்து பஸ்ஸ்டாண்ட் போகவே அரை மணிநேரம் ஆச்சு. அவரை பஸ் ஏற்றி விட்டதுடன் எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டோமா என மனம் நினைத்தது. ஆனாலும் சாட்டில் எப்பவேணாலும் பேசிக்கலாமே என நினைக்க, அப்போது பஸ் கிளம்பியது. இருவரும் கையசைத்து விடை பெற்றோம். இனிதே எங்கள் சந்திப்பு நிறைவுற்றது.
நாய்நக்ஸ் கவனிக்க: தலைப்பில் ப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா? டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.
78 கருத்துரைகள்:
// மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு
//
நான் அதன் தொடர் ரசிகன் :)
ஆஹா............ செங்கோவிய பாத்தேபுட்டீங்க..................
@புதுகை.அப்துல்லா
// மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு
//
நான் அதன் தொடர் ரசிகன் :)///
நானும் தான்...
//////ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா? இல்ல, கருப்பா? இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.////////
யோவ் நடிகைங்க ரசிகரா இருக்கறதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?
@பன்னிக்குட்டி ராம்சாமி
ஆஹா............ செங்கோவிய பாத்தேபுட்டீங்க..................///
ஆமா, பாத்துட்டேன்...
///// பிளைட் விட்டு இறங்கியதுல இருந்து மாமனார் வீட்டுல செம கவனிப்பாம். ஆடு, கோழி, மீன் என ஒரே நான்வெஜ் அயிட்டமா வயிறு முட்ட சாப்பிடுவதாக சொன்னார்/////////
மனுசன் இதைச் சொல்லியே வெறுப்பேத்துறாருய்யா.......
@பன்னிக்குட்டி ராம்சாமி
//////ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா? இல்ல, கருப்பா? இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.////////
யோவ் நடிகைங்க ரசிகரா இருக்கறதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்? /////
ஹன்சி ரசிகர்ல, அதான் சம்பந்தம்...
/// செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார்.//////
எதை மறந்தாலும் இத மறக்க முடியுமா? அண்ணன் அப்போ பார்த்த படங்களுக்கே விமர்சனம் எழுதுனவராச்சே?
/////இங்க தியேட்டருக்கு பக்கத்துல ஒரு இலக்கிய புத்தக கடை இருந்துச்சே' என அவரின் பழைய ஞாபகத்தில் கிளறினார்.//////
யோவ் இது நீங்க நினைக்கிற இலக்கியம் இல்லிய்யா........ இது வேற இலக்கியம்......!
@பன்னிக்குட்டி ராம்சாமி
///// பிளைட் விட்டு இறங்கியதுல இருந்து மாமனார் வீட்டுல செம கவனிப்பாம். ஆடு, கோழி, மீன் என ஒரே நான்வெஜ் அயிட்டமா வயிறு முட்ட சாப்பிடுவதாக சொன்னார்/////////
மனுசன் இதைச் சொல்லியே வெறுப்பேத்துறாருய்யா....... ////
நீங்க இந்தியா வாங்க, மாமனார் அருமை தெரியும். அப்புறம் போஸ்ட் போட்டு வெருப்பேத்துவிங்க நீங்களும்...
//ஆகா, கண்டேன் செங்கோவியை//
இது..கண்டேன் சீதையைவிட ரொம்ப த்ரில்லா இருக்கே.
//// நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.//////
அண்ணன் ஒரு இலக்கிய வெறியோடதான் இருக்காரு போல?
ச்சே..இந்தப் போட்டோவிலும் முகத்த காட்ட மாட்டேங்கிறாரே...ஒரு கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு பில்டப் ஆயிட்டாரு...
//////ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன்.///////
ஏன் இந்த விபரீத வேலை?
@பன்னிக்குட்டி ராம்சாமி
/// செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார்.//////
எதை மறந்தாலும் இத மறக்க முடியுமா? அண்ணன் அப்போ பார்த்த படங்களுக்கே விமர்சனம் எழுதுனவராச்சே? ////
தியேட்டர் இப்ப இப்படி நல்லதா மாறிப்போச்சேன்னு வருத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு.
@பன்னிக்குட்டி ராம்சாமி
/////இங்க தியேட்டருக்கு பக்கத்துல ஒரு இலக்கிய புத்தக கடை இருந்துச்சே' என அவரின் பழைய ஞாபகத்தில் கிளறினார்.//////
யோவ் இது நீங்க நினைக்கிற இலக்கியம் இல்லிய்யா........ இது வேற இலக்கியம்......! ///
அண்ணே, அவரு கேட்ட புக்ஸ் பேரெல்லாம் இலக்கியமாத்தான் இருந்துச்சு. ஆனா, கடைக்காரங்க இல்லைன்னுட்டாங்க.ஹி..ஹி.. அந்தளவுக்கு இலக்கியம் கேட்டுப்புட்டாருல..
/////அப்புறமா நல்லா உத்து பார்த்துட்டு அட ஆமாயா நான்தான்னு அசடு வழிஞ்சார். ////////
ஒருவேள இதுவரைக்கும் கண்ணாடியே பாத்திருக்க மாட்டாரோ?
ப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா? டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.
/////////////////////////////
உமக்கு அதுல வருத்தம் போல...தெரியுதே..!
@Manimaran
//ஆகா, கண்டேன் செங்கோவியை//
இது..கண்டேன் சீதையைவிட ரொம்ப த்ரில்லா இருக்கே.///
ஹி..ஹி.. அவரும் திரில்லர்தான்..
//////தமிழ்வாசி பிரகாஷ் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
/// செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார்.//////
எதை மறந்தாலும் இத மறக்க முடியுமா? அண்ணன் அப்போ பார்த்த படங்களுக்கே விமர்சனம் எழுதுனவராச்சே? ////
தியேட்டர் இப்ப இப்படி நல்லதா மாறிப்போச்சேன்னு வருத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு.///////////
விட்டா ஒரு ஷோ பாத்திருப்பீங்க போல?
@பன்னிக்குட்டி ராம்சாமி
//// நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.//////
அண்ணன் ஒரு இலக்கிய வெறியோடதான் இருக்காரு போல? ///
ஆமாண்ணே, ரொம்ப வெறியா இருக்கார்.
//////வீடு சுரேஸ்குமார் said...
ப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா? டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.
/////////////////////////////
உமக்கு அதுல வருத்தம் போல...தெரியுதே..!////////////////
உமக்கு இதுல வருத்தம் போல தெரியுதே?
எந்த பார்ல என்னென்ன சரக்கு அடிச்சுட்டு இருக்கிங்கய்யா?ன்னு சட்டுன்னு கேட்டார்.
/////////////////////////////
அவரு அப்படி கேட்கலைன்னாத்தான் ஆச்சர்யம்!
அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,
////////////////////////////
தெரியுது......தெரியுது.......யோவ்! வெடிச்சிறாத...!
//////வீடு சுரேஸ்குமார் said...
அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,
////////////////////////////
தெரியுது......தெரியுது.......யோவ்! வெடிச்சிறாத...!//////////////
இதையே சாக்கா வெச்சி தமிழ்வாசி டெய்லி பிரியாணி சாப்புட்டு இருக்காரு போல?
@Manimaran
ச்சே..இந்தப் போட்டோவிலும் முகத்த காட்ட மாட்டேங்கிறாரே...ஒரு கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு பில்டப் ஆயிட்டாரு... ///
பாஸ், கவர்ச்சி நடிகைங்க முகத்தைக் காட்ட மாட்டாங்களா? ரைட்டுங்க நீங்க சொல்றது!!
@பன்னிக்குட்டி ராம்சாமி
//////ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன்.///////
ஏன் இந்த விபரீத வேலை? ///
ஆமாண்ணே, பேசுனதுக்கு அப்புறமா தெரிஞ்சது ரொம்ப விபரீதம்னு...
@பன்னிக்குட்டி ராம்சாமி//////வீடு சுரேஸ்குமார் said...
ப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா? டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.
/////////////////////////////
உமக்கு அதுல வருத்தம் போல...தெரியுதே..!////////////////
உமக்கு இதுல வருத்தம் போல தெரியுதே?
/////////////////////////////
இருக்காதா பின்ன..? சாம்பார் சாப்பாடு இல்லாம ஒரு கல்யாணமா?
@பன்னிக்குட்டி ராம்சாமி
/////அப்புறமா நல்லா உத்து பார்த்துட்டு அட ஆமாயா நான்தான்னு அசடு வழிஞ்சார். ////////
ஒருவேள இதுவரைக்கும் கண்ணாடியே பாத்திருக்க மாட்டாரோ? ///
இருகலாம்ன்னே
@வீடு சுரேஸ்குமார்
ப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா? டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.
/////////////////////////////
உமக்கு அதுல வருத்தம் போல...தெரியுதே..! ////
நக்ஸ்க்கு தான் வருத்தம்...
செங்கோவியை 'ஓரளவு' காண்பித்தது நீங்கதான்னு நெனைக்கிறேன்.அதுக்காக போட்டோ ரைட்ஸ்க்காக அது மேல http://www.tamilvaasi.com னா போடுறது?...
@பன்னிக்குட்டி ராம்சாமி//////வீடு சுரேஸ்குமார் said...
அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,
////////////////////////////
தெரியுது......தெரியுது.......யோவ்! வெடிச்சிறாத...!//////////////
இதையே சாக்கா வெச்சி தமிழ்வாசி டெய்லி பிரியாணி சாப்புட்டு இருக்காரு போல?
///////////////////////////////
ஆமாங்க வாசலை அகலமாக்கிருக்காரு வீட்டுல.... இப்ப! உள்ள நுழைய முடியலையாம்.......
சந்தித்தற்க்கு வாழ்த்துக்கள்!
வணக்கம் பிரகாஷ்!இப்புடித்தான் ஏப்ரலில் எழுத்தாளர் ஜெயமோகன் குவைத் போனப்ப சந்திச்சேன்னு ஒரு பதிவு போட்டாரே செங்கோவி,ஞாபகம் இருக்கா?அதே மாதிரி,இல்ல இல்ல, அத விடவும் இருட்டா(மணிரத்தினம் ஸ்டைல்ல)ஒரு போட்டோ புடிச்சு போட்டிருக்கீங்க,வாழ்த்துக்கள்,ஹ!ஹ!ஹா!!!!
அப்போ,பிரியாணி சாப்புடல?
ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா? இல்ல, கருப்பா? இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.////இல்ல,"என்னை"ய மாதிரி கருப்பா? இருப்பாரான்னு வரணும்!
நானும் மதுரைதான்
ஆனாலும் சுத்த சைவம்
அதனால்தான் அதிகப் பேரிடம் பழக்கமில்லை
சுவாரஸ்யமான பதிவு.வாழ்த்துக்கள்
Tha.ma 3
வாழ்த்துக்கள்......
ஆனா.......
பதிவுல நிறைய தகஅவல்கள்.....
விடு பட்டுடுச்சி....ஹி....ஹி.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அருமை.
எழுத்தால் பெற்ற நண்பர்களை நேரில் சந்திப்பது நல்ல நினைவுகளாகவே இருக்கும் அதில் சந்தேகமில்லை .. :)
நானும் பதிவர் சந்திப்பில் கலந்துகலாமா?? பிரகாஷ் அண்ணா
அட நம்ம செங்கோவி பாஸா அது உங்கள் புண்ணியத்தில் தல செங்கோவியை பார்த்தாச்சு
// நான் காலேஜ் படிக்கிறப்போ இங்க தான்யா படங்கள் பாப்போம்ன்னு சொன்னார். அதாவது அப்போ தங்கரீகல் சகிலா நடிகையின் தியேட்டராக இருந்துச்சாம். //
பாஸ் அது நல்ல படம் போடற தியேட்டரா மாறி 3 4 வருஷம் தான் ஆச்சி... சுப்ரம்ணியபுரம் தான் முதல் நல்ல படம்
குழந்தைகளுக்கு கூட தெரியும் பாஸ்
அப்பரமா அங்க ஷகிலா அக்கா எல்லாம் வர மாட்டாங்க ஒன்லி ஆங்கிலம் தான் அதுலயும் நோ பிட்
நான் நேத்துதான் அவரோட பதிவுகளை படித்தேன் அருமையாக இருந்தது
ஃபோட்டோவில் முகம் தெரியாதபடி, என் முகத்தில் ஃபோட்டோஷாப்பால் கரி பூசிய தமிழ்வாசிக்கு நன்றி.
//புதுகை.அப்துல்லா said...
// மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு
//
நான் அதன் தொடர் ரசிகன் :)//
நன்றி சார்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா............ செங்கோவிய பாத்தேபுட்டீங்க................//
என்னமோ ஹன்சியப் பார்த்த மாதிரி என்னா ஒரு பில்டப்பு...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.//////
அண்ணன் ஒரு இலக்கிய வெறியோடதான் இருக்காரு போல?//
யாருங்க அந்த இலக்கியா?
//////செங்கோவி said...
ஃபோட்டோவில் முகம் தெரியாதபடி, என் முகத்தில் ஃபோட்டோஷாப்பால் கரி பூசிய தமிழ்வாசிக்கு நன்றி./////////
விடுங்கண்ணே, அதுதான் உங்க கலர்னு இங்க யாருக்குமே சந்தேகம் வரலண்ணே......!
////செங்கோவி said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா............ செங்கோவிய பாத்தேபுட்டீங்க................//
என்னமோ ஹன்சியப் பார்த்த மாதிரி என்னா ஒரு பில்டப்பு...////////
ஹன்சிய கூட பாத்துடலாம் போல இருக்கே....?
//Manimaran said...
ச்சே..இந்தப் போட்டோவிலும் முகத்த காட்ட மாட்டேங்கிறாரே...ஒரு கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு பில்டப் ஆயிட்டாரு...//
கவர்ச்சி நடிகையா.......புதுசு புதுசாக் கேவலப்படுத்துறாங்களே!
//வீடு சுரேஸ்குமார் said...
அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,
////////////////////////////
தெரியுது......தெரியுது.......யோவ்! வெடிச்சிறாத...!//
முதல்ல பைக் டயர் தான் வெடிக்கப்போகுது சுரேஷ்!
//Yoga.S. said...
அப்போ,பிரியாணி சாப்புடல?//
ஹி..ஹி..முதல்நாள் சாப்பிட்டதே செரிக்காததால...........
//Ramani said...
நானும் மதுரைதான்
ஆனாலும் சுத்த சைவம்//
தெரியும் சார்..உங்க பதிவுகளைப் படிச்சிருக்கேன்!!
//மௌனகுரு said...
ஒன்லி ஆங்கிலம் தான் அதுலயும் நோ பிட்//
ஒய் ப்ளட்?.....சேம் ப்ளட்!
//அன்பை தேடி,,அன்பு said...
நான் நேத்துதான் அவரோட பதிவுகளை படித்தேன் அருமையாக இருந்தது//
நன்றி பாஸ்..இப்பவாவது படிச்சதுக்கு!
3 அல்லது 4 வருடம் 34 வருடம் அல்ல
//////மௌனகுரு said...
// நான் காலேஜ் படிக்கிறப்போ இங்க தான்யா படங்கள் பாப்போம்ன்னு சொன்னார். அதாவது அப்போ தங்கரீகல் சகிலா நடிகையின் தியேட்டராக இருந்துச்சாம். //
பாஸ் அது நல்ல படம் போடற தியேட்டரா மாறி 3 4 வருஷம் தான் ஆச்சி... சுப்ரம்ணியபுரம் தான் முதல் நல்ல படம்
குழந்தைகளுக்கு கூட தெரியும் பாஸ்
அப்பரமா அங்க ஷகிலா அக்கா எல்லாம் வர மாட்டாங்க ஒன்லி ஆங்கிலம் தான் அதுலயும் நோ பிட்//////////
பிட்டு இல்லேன்னு தெரிஞ்சிக்கிட்டே ஒருபடம்கூட விடாம பாத்திருப்பாரு போல?
செங்கோவி said... Best Blogger Tips [Reply To This Comment]
ஃபோட்டோவில் முகம் தெரியாதபடி, என் முகத்தில் ஃபோட்டோஷாப்பால் கரி பூசிய தமிழ்வாசிக்கு நன்றி. ////ஆமா,இல்லேன்னா இவரு அப்புடியே,எம்.ஜி.ஆர் கலரு,ஹ!ஹ!ஹா!!!!
@Manimaran
செங்கோவியை 'ஓரளவு' காண்பித்தது நீங்கதான்னு நெனைக்கிறேன்.அதுக்காக போட்டோ ரைட்ஸ்க்காக அது மேல http://www.tamilvaasi.com னா போடுறது?... //////
இந்த போட்டோவை நான் எடுக்க பட்ட பாடு இருக்கே???
அதனால தான்யா போட்டோரைட்ஸ் போட வேண்டியதா போச்சு...
@வீடு சுரேஸ்குமார்
@பன்னிக்குட்டி ராம்சாமி//////வீடு சுரேஸ்குமார் said...
அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன்,
////////////////////////////
தெரியுது......தெரியுது.......யோவ்! வெடிச்சிறாத...!//////////////
இதையே சாக்கா வெச்சி தமிழ்வாசி டெய்லி பிரியாணி சாப்புட்டு இருக்காரு போல?
///////////////////////////////
ஆமாங்க வாசலை அகலமாக்கிருக்காரு வீட்டுல.... இப்ப! உள்ள நுழைய முடியலையாம்....... ///
ஆமா, நைட் அவர சந்திச்சுட்டு வந்தா கதவு பூட்டி இருந்துச்சு. அதனால நுழைய முடியல..ஹி..ஹி....
@விக்கியுலகம்
வாழ்த்துக்கு நன்றி.
@Yoga.S.
இப்புடித்தான் ஏப்ரலில் எழுத்தாளர் ஜெயமோகன் குவைத் போனப்ப சந்திச்சேன்னு ஒரு பதிவு போட்டாரே செங்கோவி,ஞாபகம் இருக்கா?அதே மாதிரி,இல்ல இல்ல, அத விடவும் இருட்டா(மணிரத்தினம் ஸ்டைல்ல)ஒரு போட்டோ புடிச்சு போட்டிருக்கீங்க,///
ஆமா ஐயா... செங்கோவி ரூல்ஸ் அந்த மாதிரி இருந்துச்சு, என்ன செய்ய?
@Yoga.S.
இல்ல,"என்னை"ய மாதிரி கருப்பா? இருப்பாரான்னு வரணும்! ///
என்னைய விட பரவாயில்ல... அதான் அப்படி போடல...
எப்படியெல்லாம் கேள்வி கேட்கராங்கப்பா,,,ஸ்ஸ்ஸ்ஸ்
@Ramani
கருத்துக்கும், வருகைக்கும் நன்றி ரமணி சார்
@NAAI-NAKKS
ஆனா.......
பதிவுல நிறைய தகஅவல்கள்.....
விடு பட்டுடுச்சி....///
நானே எல்லாத்தையும் எழுதிட்டா பாவம் செங்கோவி எப்படி எழுதுவார்....?
என்னமோ பக்கத்துல உட்கார்ந்து கேட்ட மாதிரி இபப்டி கேள்வி வேற? போய்யா
@வினையூக்கி
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
@வரலாற்று சுவடுகள்
எழுத்தால் பெற்ற நண்பர்களை நேரில் சந்திப்பது நல்ல நினைவுகளாகவே இருக்கும் அதில் சந்தேகமில்லை .. :) //
ஆமாம், உண்மை தான் நண்பரே...
அதிலும் புகைப்படத்திலும் பார்க்காத நண்பர்களை பார்ப்பது ஒரு இனிமையான அனுபவம் தான்.
@எஸ்தர் சபி
நானும் பதிவர் சந்திப்பில் கலந்துகலாமா?? பிரகாஷ் அண்ணா ///
ஓ... தாராளமா... விரைவில் கோயம்பத்தூரில் சந்திப்பு நடத்த இருக்கிறார்கள்... அன்புடன் அழைக்கிறோம் தங்களை.
@K.s.s.Rajh
அட நம்ம செங்கோவி பாஸா அது உங்கள் புண்ணியத்தில் தல செங்கோவியை பார்த்தாச்சு ///
ஆமா, பார்த்துடிங்க...
@மௌனகுரு
ஒன்லி ஆங்கிலம் தான் அதுலயும் நோ பிட் ///
ஆமா, நீங்க போறப்பெல்லாம் பிட் கட் பண்ணிடாங்க போல...
@அன்பை தேடி,,அன்பு
நான் நேத்துதான் அவரோட பதிவுகளை படித்தேன் அருமையாக இருந்தது ///
முடிஞ்சா அவரோட லீலை தொடரை படிச்சு பாருங்க நண்பா....
@செங்கோவி
ஃபோட்டோவில் முகம் தெரியாதபடி, என் முகத்தில் ஃபோட்டோஷாப்பால் கரி பூசிய தமிழ்வாசிக்கு நன்றி. ///
உங்க ரூல்ஸ் கறுப்பு, கருப்புன்னு தானே சொன்னிங்க, அதான்..
நல்ல சந்திப்புக்கு வாழ்த்துக்கள் !
நல்ல சந்திப்பு! நானும் ஒரு செங்கோவி ரசிகன் தான்!
இது ராவான பதிவுங்க...கொஞ்சம் கூட தண்ணீ கலக்காத பதிவு...அதான் இப்படி சொல்றாரு நம்ம பதிவரு...அதாவது ராவா சலம்பி இருக்காங்க...(மாம்ஸ்....கொஞ்சம் தண்ணி சேர்த்துக்கோ...இல்லே டேஞ்சர் தான்....
ஒரு போன் போட்டா நானும் வந்திருப்பென்ல? பரவாயில்லை வாழ்த்துக்கள்