எம்மாம் பெரிய எலி? கொழுகொழுன்னு சும்மா ஒரு மாசமா தண்ணி காட்டுன எலி. டிவிக்கு பின்னாடி, பீரோவுக்கு பின்னாடி, கட்டிலுக்கு பின்னாடி, இப்படி வீட்டுல எல்லாத்துக்கு பின்னாடியும் போயி ஒளிஞ்சுக்கிட்டிருந்த எலி, நேத்து எலிப் பொறிக்கு உள்ளேயும் ஒளிஞ்சுக்கிருச்சு. அட, ஆமாங்க... எலிப் பொறி வச்சு எலிய பிடிச்சுட்டோம்ல.
இந்த எலி புடிச்ச கதையை கேளுங்க, மக்கா... இந்த எலி பகல்ல எங்க இருக்குன்னு தெரியல. நைட் ஆச்சுன்னா கரெக்டா வந்திரும். அங்க தாவும், இங்க தாவும், என்னத்தையாவது கர்க்.. கர்க்... கர்க்...ன்னு கடிச்சுகிட்டு இருக்குற சத்தம் மட்டும் கேட்கும். அந்த எலியை எப்படியாவது பிடிச்சே தீரனும்னு நானும் முடிவு பண்ணினேன். எலியை பிடிக்கறதுக்கென்னே மரக்கட்டையில செஞ்ச பொறி வீட்டுல இருந்த ஞாபகம். ரொம்ப நாளுக்கு முன்னாடி வாங்குனது. எங்க இருக்குன்னு தெரியாம அதை எடுக்க முடியல. ஆனாலும் இந்த எலி இம்சையினால அந்த பொறியை தேடி எடுக்க வேண்டி பரண் மேல தேடினேன். ஒரு மூலையில அது இருந்துச்சு. ஆகா, எலி மாட்டுச்சுன்னு சந்தோசப்பட்டு பொறியை எடுத்து தொடச்சு ஒரு தேங்காய்ச்சிள் வச்சு டெஸ்ட் பண்ணிப் பார்தேன். டெஸ்ட் ஓகே ஆச்சு. சரி, பொறியை எங்க வைக்கலாம்னு தேடி, அதாவது எலி வர்ற இடம் பாத்து வைக்கனும்ல, எப்படியோ ஒரு இடத்துல வச்சேன். அடுத்த நாள் பாத்தா ம்ஹும்... எலி நம்மள விட புத்திசாலி, அன்னைக்கு மாட்டல. அடுத்த நாள் வேற இடத்துல வச்சேன். அப்போதும் மாட்டல. இப்படியே ஒரு வாரம் நானும் பல இடத்துல பொறியை வச்சு வச்சுப் பார்த்தேன். சிக்கவே இல்லைங்க.
அதனால நானும் எலி புடிக்க முடியாதுன்னு சோர்ந்து போயிட்டேன். ஆனா அங்க அங்க எலி மட்டும் கண்ணுல படும். அப்ப மறுபடியும் வந்துச்சு வேகாளம். இந்த எலியை விடக்கூடாதுன்னு மறுபடியும் ஒவ்வொரு இடமா வச்சு வச்சுப் பார்த்தேன். மாட்டவே இல்லை. நேத்து நைட்டு பரண் மேல கர்க்.. கர்க்...ன்னு ஒரு சத்தம். ஒரு ஸ்டூலை போட்டு என்னான்னு ஏறிப் பார்த்தா ஒரு அட்டைப் பெட்டி மட்டும் லேசா ஆடிட்டு இருந்துச்சு. அங்க தான் எலி இருக்குன்னு கன்பார்ம் பண்ணினேன். அப்புறமா அந்த எடத்துல எலிப்புளுக்கையா இருந்துச்சு. ஒரு வேளை அந்த இடம் தான் எலி டெய்லியும் தங்குற இடமா இருக்கும்னு முடிவு பண்ணி, இதுவரைக்கும் தரையில வச்ச பொறியை அந்த இடத்துல வச்சேன். பொறி கொக்கியில தேங்காச்சிள் மாட்டி வச்சேன்.
நைட் டப்புன்னு அந்த பொறி மூடுன சத்தம் கேட்டுச்சு. எலி மாட்டுச்சா, இல்லையான்னு தெரியலையே...? காலையில மொத வேலையா அந்த பரண் மேல ஏறிப் பார்த்தேன். சக்சஸ்..சக்சஸ்... எலி உள்ளார மாட்டியிருந்துச்சு. ஆனா தேங்காய்சிள் எல்லாத்தையும் தின்றுச்சு போல. கொஞ்சம் கூட இல்லை. அந்த எலியை மெதுவா ஒரு சின்ன சாக்குல பிடிச்சு வீட்டுல இருந்து கொஞ்சம் தூரத்துல கொண்டு போயி முள்ளு காட்டுக்குள தூக்கி எறிஞ்சுட்டேன். மறுபடியும் வீடு தேடி வராதுன்னு ஒரு நம்பிக்கை தாங்க.
எப்படியோ ரொம்ப நாளா தண்ணி காட்டிட்டு இருந்த எலியை புடிச்சாச்சு. ம்ஹும்... இதுல இருந்து என்னா சொல்றேன்னா முயற்சி செய்யணும். செஞ்ச முயற்சி வீண் போகாது.
அப்புறமா ஒண்ணு சொல்றேனுங்க, இந்த பதிவு எழுதிட்டு இருந்தப்போ ஒரு ஓரமா குட்டி எலி ஒண்ணு ஓடுச்சு. அடங்கோ, மறுபடியும் எலி வேட்டையை ஆரம்பிக்கணுமா?
28 கருத்துரைகள்:
மொத பலி.. ச்சீ ..மொத எலி நான் தான்
ச்சே..மவுஸ் பிடிச்ச கையாள மவுஸப் பிடிக்க வச்சுடாங்களே... பிரகாஷ் அது ஆண் எலியா பெண் எலியா ?>
@Manimaran
ச்சே..மவுஸ் பிடிச்ச கையாள மவுஸப் பிடிக்க வச்சுடாங்களே... பிரகாஷ் அது ஆண் எலியா பெண் எலியா ?> ///
எலிய புடிச்சோம்மா... தூக்கி எரிஞ்சோம்ன்னு இருந்தா இவரு ஆராய்ச்சி பண்ண சொல்றாரே...
\\ இதுல இருந்து என்னா சொல்றேன்னா முயற்சி செய்யணும். செஞ்ச முயற்சி வீண் போகாது.\\
நிச்சயமா...புலிய கூட பிடிச்சிரலாம்.ஆனா இந்த தம்மாத்துண்டு எலிய பிடிக்கிறதுதான் பெரும் பாடு.
அண்ணே எப்போ மாத்தினீங்க தொழில??எங்க ஏரியா பக்கம் சாங்க ரொம்ப பிஸி ஆகிடுவீங்க.
எலி பிடித்த பதிவர்......வாழ்க
எலியை பிடிச்சமா வறுத்து தின்னமா அப்படின்னு இல்லாம என்னா இது...?
தமிழ்வாசி பிரகாஷ் said...
@Manimaran
ச்சே..மவுஸ் பிடிச்ச கையாள மவுஸப் பிடிக்க வச்சுடாங்களே... பிரகாஷ் அது ஆண் எலியா பெண் எலியா ?> ///
\\ எலிய புடிச்சோம்மா... தூக்கி எரிஞ்சோம்ன்னு இருந்தா இவரு ஆராய்ச்சி பண்ண சொல்றாரே...\\
அதில்ல பிரகாஷ்...பெண் பாவம் பொல்லததுனு சொல்வாங்க...கொன்றால் பாவம் தின்றால் போச்சுனும் சொல்வாங்க.அதான்.மதுரையில எலிக்கறி ரொம்ப பேமஸாமுல...
நல்ல எலி வேட்டை, அட்ரஸ் சொல்லுங்க பாஸ் நம்ம வீட்டிலேயும் ஒரு எலி தொந்தரவு செய்யுது.
அந்தப் பொறிக்குள்ள சிக்கின எலி பாடுற சோகப்பாட்டு என்காதில் கேட்குது...
"எலியப் புடிச்சி பொறியில் அடைச்சி டரியல் பண்ணுகிற உலகம்....."
அந்த எலிய நீங்க ரோஸ்ட் போட்டு ஸ்வேகா செய்யதா....தினத்தந்தியில போட்டிருந்தது.....!
எலியை வெற்றிகரமாகப் பிடித்ததற்கு TM-3
நீங்க பாக் பைப்பர் மாதிரி ட்ரை பன்னி இருக்கணும்.....
ஊர்ல உள்ள எல்லா எலியையும் கொண்டு போய் வெளியில விட்டிருக்கலாம்................!!!???!?!?!?!
நீங்க எலி பிடிச்சதை விட பிடித்ததை சொன்ன விதத்திற்க்குத்தான் இதுக்குள்ள 13 எலி (கமெண்ட்ஸ்) சிக்கியிருக்கு ..!
எலிப் பொறியைப் பாத்து ரொம்ப நாளாச்சு
தங்கள் பதிவின் மூலம்தான் பார்க்க முடிந்தது
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 4
வாழ்த்துக்கள் பிரகாஷ் ! ஹா ஹா .....
என்ன செய்ய கலிகாலம்
படிக்க இன்பம் வெளியில் இல்லை !
சரியான எலிவேட்டை நண்பரே..
எலி வேட்டை
நல்ல வேட்டைதான் தோட்ரட்டும் ம்(:
வணக்கம் பிரகாஷ்!பொழுதே போகல போல,அதான் எலி,எலியா வருது,ஹ!ஹ!ஹா!!!!!!!
// இந்த பதிவு எழுதிட்டு இருந்தப்போ ஒரு ஓரமா குட்டி எலி ஒண்ணு ஓடுச்சு.//
நக்கி மாமா கை கால வச்சிட்டு சும்மா இருந்தாதான..!!
ஆமாங்க எலிப் பொறி பார்த்தேன் தங்கள் பதிவின் மூலம் .
ஆமாங்க எலிப் பொறி பார்த்தேன் தங்கள் பதிவின் மூலம் .
எலி பிடி வீரர் பிரகாஷ் வாழ்க
பொறிக்குள் சிக்கிய எலி-பொறி தட்டியதோ? முயற்சி திருவினை ஆக்கும்- அருமை!
காரஞ்சன்(சேஷ்)
பொறிக்குள் சிக்கிய எலி-பொறி தட்டியதோ? முயற்சி திருவினை ஆக்கும்- அருமை!
காரஞ்சன்(சேஷ்)
எலியைப் பார்த்தாலே கிலி பிடித்துக் கொள்வோர் மத்தியில் நீங்கள் மாவீரர்தான்!ஐயமில்லை!
த ம ஓ 5
புலவர் சா இராமாநுசம்