வணக்கம் மகா பொது ஜனங்களே....
நான் தான் மதுரைக்காரன் விஜயகாந்த் பேசறேன். (ஐயா மதுரைக்காரன்னு சொல்றிங்களே, ஏதும் உள்குத்து இருக்கா?) இந்தம்மாவை நம்பி நான் மோசம் போயிட்டேன். நீங்க அன்பா, ஆசையா என்னைய அவங்க கூட கூட்டணி வைக்க சொன்னிங்க. மக்கள் ரொம்ப ஆசைப்படறாங்களேன்னு நானும் கூட்டணி வச்சேன். அவங்க புண்ணியத்துல செவப்பு கறுப்பு கட்சிய விட அதிகமா சீட்டு வாங்கி மொத தடவையா தமிழகத்துல எதிர்க்கட்சி தலைவரா வந்தேன்யா. நல்ல பொறுப்பா எதிர்க்கட்சி தலைவரா இருக்கலாம்னு நெனச்சா, அவங்க தரப்புல இருந்து என் வாயை தொறக்கக் கூடாதுன்னு கண்டிசன் போட்டுட்டாங்க. பெருசா கை வேற எனக்கு மாறுச்சு. அதான் நானும் வாயை தொறக்கல. வாயைத் தொறக்காம இருந்து மக்கள் கிட்ட கெட்ட பேரு வாங்கினாலும் எதிர்க்கட்சி தலைவர்ன்னு மப்புல ச்சே..ச்சே.. கெத்துல இருந்துப்புட்டேன்.
ஆனாலும் சட்டசபையில அவங்க பண்ணுன அட்டகாசம் தாங்க முடியல. என்னால சும்மா உட்க்கார்ந்து இருக்க முடியல. அதான் கையை நீட்டி, நாக்கை மடக்கி என்னன்னம்மோ பேசிப்புட்டேன். அந்தப் பேச்சுல உடன்புறப்புகளும் ஆடிப் போயிட்டாங்க. ஆனாலும் அவங்க ரேஞ்சுக்கு என்னால முடியாட்டியும், என் ரேஞ்சுக்கு எதிர்க்கட்சி தலைவரா பேசுனேன்னு ரொம்ப தெனாவெட்டா இருந்தேன். ஆனா நான் பேசுனது குத்தம்னு எல்லா டிவியிலும் மாத்தி மாத்தி போட்டுக் காட்டிட்டாங்க. அப்படி என்னத்த பேசிட்டேன். கையை நீட்டி... நாக்கை சுத்தி.. சரி விடுங்க. நான் பேசுனது தப்புன்னு வச்சுகிட்டாலும், அதுக்காக சட்டசபையில இருந்து என்னை சஸ்பென்ட் பண்ணினது ரொம்ப ஓவர்யா.. அத்திப் பூத்த மாதிரி சட்டசபைக்கு போயிட்டு இருந்த என்னை தூக்கி வெளியில போட்டது ரொம்ப தப்புங்க. மெதுவா என்கிட்டே சொல்லி இருந்தா நானே அடுத்தநாள் வராம இருந்திருப்பேன்ல. சரி, விடுங்க நடந்ததை கெட்ட கனவா நெனச்சு மறந்துட்டேன்.
கொஞ்ச நாளுக்கு முன்னாடி மஞ்சத்துண்டு தலைவர் புள்ளைங்க ரெண்டு பேரும் அடிச்சு புடிச்சுக்கிட்டதுல ஏதாச்சும் எனக்கு சாதகமா கிடைக்கும்னு பார்த்தா ஒண்ணுமே கிடைக்கல. சரி, அவங்க குடும்பம் ரெண்டுபட்டா நமக்கு ஏதாச்சும் கிடைக்கும்னு நெனச்சது என் தப்பு தானே. இந்த விலைவாசி ரொம்ப ஏறிட்டே போகுதேன்னு அம்மா கிட்ட போயி நின்னா பேச்சே வர மாட்டிங்குது. ஏன்னா, அவங்க சொல்ற ரீசன் கரெக்ட்டா இருக்குதா, அதனால பேச முடியல. அங்க இருந்து வந்து மக்கள் கிட்ட மேடை போட்டு பேசினா அவங்க விலையேத்துனது தப்புன்னு தோணுது. அங்க ஆவேசமா பேசிடுறேன். ஆனா, எதிர்க்கட்சி தலைவர் சும்மா விமர்சனம் செயறார்னு பேப்பர்ல போட்டுடறாங்க. உண்மையில விலை ஏறிப்போச்சுனு சொன்னாலும் என்னமோ நான் பேசுறது காமெடியாவே இருக்குது போல அவங்களுக்கு.
இதோ, இப்ப புதுக்கோட்டை தேர்தல் பிசியில இருக்கேன், ஆனா மஞ்சள் துண்டு தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுங்கன்னு ஏகப்பட்ட மனு வந்துச்சு அவங்க தரப்புல இருந்து. ம்ஹும், நான் தலை வளைஞ்சு தரவே இல்லையே. ஏன்னா, நான் எதிர்க்கட்சி தலைவர்ல்ல. என்னை விட ஓட்டு கம்மியா வாங்குன கட்சி தலைவர் கிட்ட தலவணங்குறதா? நியாயம் இல்லையேன்னு வாழ்த்து சொல்ல முடியாதுன்னு கம்முன்னு இருந்துட்டேன். இந்த இடைத்தேர்தல்ல நான் அவங்க கூட கூட்டணி வைக்கணும்னு ரொம்பவே தூது விட்டாங்க. நான் சிக்கவே இல்லையே. ஏன்னா எப்பவுமே நான் மக்கள் கூட்டணி மகேசன் கூட்டணின்னு நினைக்கிறவன் நான்.
மக்களே, என்னமோ உங்க கிட்ட கொஞ்சமா மனசு தொறந்து பேசனும்னு நினைச்சேன். பேசிட்டேன். வரட்டுமா.. அக்காங்க்க்க்க்ங்...
10 கருத்துரைகள்:
மக்களின் நம்பிக்கையை வீணாக்கி விட்டார் விஜயகாந்த் !
இணையத் தமிழன்,
http://www.inaya-tamilan.blogspot.com/
அட இப்படி ஒருத்தர் இருக்காரா.....?????????
அக்காங்க்க்க்க்ங்...
பாவம் இவருக்கு சரியாக அறிவுரை சொல்ல ஆளில்லை.
வணக்கம் பிரகாஷ்!என்னமோ,உங்க வாய்சிலயாச்சும் உள்ளக் கிடக்கைய கொட்டிப்புட்டாரே,பொழச்சுப் போகட்டும் விடுங்க!ஹ!ஹ!ஹா!!!!
சிங்கம் களம் இறங்க்கிருச்சு டோய் ..!
ஆகா ஆரம்பிச்சுட்டாங்கய்யா....
மனசு தொறந்து பேசுறார இல்ல மப்புல பேசுறார...அண்ணா
செரீங்.....தலீவரே!
என்ன பிரகாஷ் ஒரு ஆஃப் உள்ள விட்டுக்கிட்டு பதிவு எழுதினீங்களா? அப்படியே கேப்டன் பேசுற மாதிரியே வந்திருக்கே, அதான் டவுட்டு....... ஹி..ஹி...