நண்பர்களே,
நேத்து நைட் வீட்டுல இட்லி செஞ்சாங்க. நமக்கு இட்லி அவ்வளவா பிடிக்காது. அதனால தோசை வேணும்னு சொல்லிட்டே தண்ணீர் பாட்டிலை பிரிட்ஜ்ஜை தொறந்தேன். அங்க மூணு முட்டை இருந்துச்சு. அதைப் பார்த்த உடனே எனக்குள் இருந்த சமையல் கலைஞன் எந்திரிச்சுட்டான். ஆமாங்க, முட்டை கலந்து சில்லி இட்லி ரொம்ப நல்லாவே செய்வேன். அதனால சில்லி இட்லி செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன். காலையில் செய்த மீந்து போன இட்லியா இருந்தாலும் பரவாயில்லை. பிரஷ் இட்லியா இருந்தாலும் பரவாயில்லை. நாலஞ்சு இட்லி, கொஞ்சம் மட்டன் குழம்பு இருந்தாலே போதும். சரி, வாங்க செய்முறையை பார்ப்போம்.
தேவையானவை:
இட்லி - 5
முட்டை - 3 or 4
பெரிய வெங்காயம் - 3
மட்டன் குழம்பு ஒரு கப்
இடித்த மிளகு தூள் தேவையான அளவு.
உப்பு தேவையான அளவு
கடுகு உளுந்து சிறிது.
நல்லெண்ணெய் தேவையான அளவு
கருவேப்பிலை கொஞ்சம்.
மிளகாய் பொடி தேவைப்படின்
இனி செய்முறை:
ஒரு தட்டில் இட்லியை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் தேவையான அளவு ஊற்றி, கடுகு உளுந்து, கருவேப்பில்லை, நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். கட்டி சேராத அளவுக்கு முட்டைகளை கிளறிய பின்னர், உதிர்த்து வைத்த இட்லியை போட்டு மீண்டும் கிளறவும். பிறகு குழம்பு கரண்டியில் நான்கைந்து முறை மட்டன் குழம்பை இட்லி, முட்டை கலவையில் ஊற்றி மீண்டும் கிளறவும். ஓரளவு மட்டன், முட்டை, இட்லி என அனைத்தும் நன்றாக கிளறிய பின் இடித்து வைத்த மிளகு தூள் சேர்த்து மீண்டும் கிளறவும். மிளகு காரம், மட்டன் குழம்பின் காரம் இருப்பதால் தனியாக மிளகாய் தூள் சேர்க்க தேவையில்லை. ஆனாலும் காரம் கொஞ்சம் குறைவாக இருந்தால் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இட்லி நன்றாக உதிரியாக வந்த பின் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான சில்லி இட்லி ரெடி. சூடாக பரிமாறி சைடு டிஷ் ஆக மட்டன், சிக்கன் சுக்கா வைத்து சாப்பிட்டால் சுவையோ சுவை.
வீட்டுல எல்லோரும் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சுன்னு சொன்னாங்க நெஜமாவே.
பின்குறிப்பு:
சிக்கன் குழம்பு இருந்தாலும் பயன்படுத்தலாம். ஆனாலும் மட்டன் குழம்பு பயன்படுத்தினால் தான் டேஸ்ட் நல்லா இருக்கும்.
இந்த சில்லி இட்லி மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள முதலியார் இட்லிக் கடையில் சூப்பரா செய்வாங்க. அங்க சாப்பிட்டு ரொம்பவே பிடித்து போயி நானே செய்ய கற்றுக் கொண்டேன். ஹி..ஹி...
19 கருத்துரைகள்:
பிரகாஷ் ...இதுல இட்லிக்கு பதில் பிரட் சேத்துக்கலாமா? (வீட்ல.. புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க னு ஒரே நச்சரிப்பு.)
சில்லி இட்லி...கேக்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு.அடுத்த தடவை செங்கோவி வரும் போது எப்படியாவது இதை செய்து சாப்ட வச்சிடுங்க.
ஆஹா ! சமையல் இவ்வளவு சிம்பிளா இருக்கே !
எனக்கு சமையல் கை வந்த கலை. ஒரு முறை உங்க இட்லியையும் முயர்ச்சிக்கிறேன்.
நல்வாழ்த்து.
சில்லி இட்லி நல்லாத்தான்யா சமைக்கிறிங்க.....!சரி எத்தனை பிளேட் காலி செய்தீங்க..?
சாப்பிடனும் போல தான் இருக்கு. ஆனா மட்டன் குழம்பு செய்ய தெரியாதே?
:D :D :D
வெரி குட் நல்ல இம்ப்ரோவ்மென்ட்
@எஸ்தர் சபி
என்னடா இது இந்தக்காலத்திலேயும்., இந்த தங்கச்சி தனக்கு நல்ல சமைக்க தெரியும்னு சொல்லுது.?
தங்கச்சி நிச்சயம் நீங்க தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிக்கப்பட்ட வேண்டிய ஆளு தான் ஹி ஹி ஹி :D
@Abdul Basith கவலை வேண்டாம் பிரதர், பாஸோட அடுத்த பதிவு அதுதான் :D
புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்கப்பா சூப்பர் பாஸ் இந்தியாவில் எனக்கு பிடித்ததே அங்கே கிடைக்கும் வித விதமான உணவு வகைகள் தான்
அப்போ வீட்டுக்கு வந்தா உங்க சமையல் சாப்பாடுதானா ஹி ஹி...?
ஈசியா செஞ்சு ருசியா சாப்பிடலாம் போல...
நம்ம சமையல் பதிவுக்கு எதிர் பதிவு போட்டு எல்லாரையும் சில்லி இட்லி செய்ய வைத்த பிரகாஷ் அவர்களுக்கு நான் செஞ்ச கிரில் சிக்கன் பார்சல்/...
எனக்கு பிடித்த வலையுலகின் பிளாக்குகள் - 01
http://ideasofharrypotter.blogspot.com/2012/06/01_18.html
இட்லி நல்லாவே சுடுறீங்க...மாவு யாரு ஆட்டுறாங்க?
எனக்குப் பயன்படாதே
'சில்லி இட்லி' செய்வதை விட்டுட்டு 'சில்லி' தனமா இட்லி வேண்டாம் என்று சொல்லிட்டீங்களே!!
வீட்டில் செய்ய சொல்லி சாப்பிடப் போறேன்!!
ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...
அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_14.html
அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html
அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html
என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!
அன்புள்ள,
நம்பள்கி!
www.nambalki.com