CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மதுரையில் பரவும் பகட்டுக் கலாச்சாரம்!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


        அரசியல் தலைகளின் நகரமா, அதிகார வர்கத்தின் நகரமா, கூலிப்படைகளின் நகரமா, கோவில்களின் நகரமா, ரோட்டோர இட்லிக் கடைகளின் நகரமா  இருக்குற, இருந்த மதுரையில மக்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக... இல்லையில்லை... வேகமாக மாறி வருது... வேறொன்னுமில்ல பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் தான்.
 

         முன்னாடில்லாம் அரசியல் மாநாட்டு சமயத்துல, பெரிய பணக்காரர்களோட குடும்ப விழா சமயத்துல, சாமி திருவிழா சமயத்துலயும் விளம்பரமாக சுவத்துல எழுதுவாங்க. தட்டி போர்டு வைப்பாங்க. சின்னதா போஸ்டர் ஓட்டுவாங்க. இதனால ஆர்ட்ஸ் கலைஞர்களுக்கு வேலையும் இருந்துச்சு. அப்புறம் பிளக்ஸ்ங்கற தொழில்நுட்பம் வந்த பிறகு அவங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. சின்ன சைசுல இருந்து கண்ணால பாக்க முடியாத அகலத்துக்கு பெருசா பெருசா பிளக்ஸ் போர்டு வைக்க ஆரம்பிச்சுடாங்க..

           எங்க பாத்தாலும் பளீர் போகஸ் லைட்டோட பிளக்ஸ் போர்டுகள் மின்னுது. கிராபிக்ஸ்னு  புகுந்து விளையாடறாங்க. அரசியல் தலைவர்ல இருந்து தொண்டன் வரைக்கும் பல்ல காட்டிட்டு மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குற  அவலமும் பிளக்ஸ் மூலமா வந்துச்சு. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு எடுத்துக்கிட்டாலும், இந்த சாதாரண மக்களின் பிளக்ஸ் ஆசை இருக்கே, அதான்யா ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு. அதிலும் மதுரையில் பிளக்ஸ் பேய் பிடித்து ஆட்டும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த பேய்களை தனியா அடையாளம் காட்டி சங்கடங்களை பெற எனக்கு விருப்பமில்லைங்க.

                கல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, என எல்லாத்துக்கும் பிளக்ஸ் வைக்கறாங்க.  இல்ல விழாங்கற பேர்ல மண்டப வாசலை மறைச்சு, ரோட்டை மறைச்சு, கடைகளை மறைச்சு அவங்க பிளக்ஸ் பேனர்  வைக்குற இடங்களோட செலக்சன் இருக்கே, மதுரை செல்லூர் பகுதிக்கு வந்து பாருங்க. MM லாட்ஜ் பாலம் ஸ்டேசன் ரோட்ல இருந்து, தத்தனேரி ESI மருத்துவமனை வரை இருக்குற  பகுதிகள் பிளக்ஸ் போர்டுகளால் எந்நேரமும் பிஸியா இருக்கும். அதில்லாம, பிளக்ஸ் பேனர் சைஸ் பார்த்தா அசந்து போயிருவிங்க. மாடி கைப்பிடி செவுத்துல நீள் செவ்வகமா அடிச்சு ஒட்டியிருப்பானுங்க. ஒரு ஓட்டு வீட்டு முன்னாடி பார்த்தேன் பாருங்க அவிங்க கலைநயத்தை... ஓட்டு மேற்கூரையில் முன்பக்கம் முக்கோண வடிவமா இருக்குமே, அதுக்கேத்த மாதிரி முக்கோணமா பிளக்ஸ் அடிச்சி ஒட்டியிருக்காங்க. இப்படி பிளக்ஸ் மோகத்தோட பகட்டு காட்டுறவங்க பணத்தையும் அவங்க நகை நட்டுகளையும்  டிஸைன் டிஸைன்னா அடிச்சு ஒட்டுவாயிங்க.

       பிறந்த குழந்தைல இருந்து சாகுற நெலமையில இருக்குற கிழவன், கிழவிகள் வரை பிளக்ஸ் போர்டில் சிரிச்சுட்டு இருப்பாங்க. அதிலும் இப்ப கூலிங்கிளாஸ் போட்டு பந்தா காட்டுற ஆட்கள் தான் ரொம்ப அதிகம். சிறுசு முதல் பெருசு வரை ஆளாளுக்கு விதவிதமா கூலிங்கிளாஸ் போட்டு, அங்க இங்க கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டு, பிளக்சில் காட்டும் போஸ் இருக்கே, சினிமா நடிகர்களே தோத்துப் போயிருவாங்க.

           அதிலும் சில குல விளக்குகள் இருக்காங்களே, பிளக்ஸ் போர்டுக்கென தனியாவே பட்டுசேலைகள் முதல் நகை செட்டுகள் வச்சிருப்பாங்க போல. தம்பதி ஜோடியா அவர்களின் புகைப்படம் பிளக்சின் மொத்த உயரத்துக்கும் கம்பீரமாக நிற்கும்.  நகைக்கடை விளம்பர பிளக்ஸ் மாடலிங் பெண்கள் தோற்கும் அளவுக்கு இவர்களின் பகட்டு ஆடம்பரம் பிளக்சில் ஜொலிக்கும். பெண்களுக்கு  சளைச்சவங்க நாங்களும் இல்லை என ஆண்களும் ஜொலிப்பாங்க.

         விழாவுக்கு நாலு மாசத்துக்கு முன்னாடியே பிளக்ஸ் வச்சு அழகு பாக்கறவங்க தான் ரொம்ப அதிகம். இதைச் சரியா திருத்தி சொல்லனும்னா, மண்டபம் புக் செய்ற அன்னிக்கே பிளக்ஸ் வச்சிருவாங்க. அதிலும் மண்டபங்கள் பக்கத்துல பக்கத்துல நிறைய இருந்துச்சுன்னா, பிளக்ஸ் போட்டியே இருக்கும். அடுத்த நாள் விழாவுக்கு முதல் நாள் நைட்டு பிளக்ஸ் கட்டுவாங்க. அந்த பிளக்ஸ் பக்கத்து மண்டபத்தில் நடக்கும் விழா பிளக்ஸ விட பெருசா இருந்தா ஒரே ரகளை தான். உடனே அவர்களுக்கும் அந்த நடு இரவில் அதைவிட பெருசா பிளக்ஸ் அடுச்சு போட்டிக்கு வச்சு ரகளையை கூட்டுவாங்க. மேலும் இந்த பிளக்ஸ் போர்டுக்கு காவலும் காப்பாங்க புல் கட்டு போதையுடன்.

          கல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு??? அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே?

             வட்டியில்லா மொய் பணத்தை வாங்க எந்த விழாவும் இல்லாட்டியும், இல்ல விழான்னு மண்டபத்தை புக் செஞ்சு, பத்திரிக்கை அடிச்சு அதுக்கும் கலர் கலரா போட்டோ போட்டு பிளக்ஸ் ஒட்டி கறி சோறு ஆக்கி போட்டு வசூல் வேட்டை நடத்துவாங்க நம்மூரு ஆட்கள்.

            ஆட்டோலயும் பிளக்ஸ் கட்டுற இடமாக்கிருவாங்க நம்மூரு ஆட்கள். ஏதோ அரசியல் தலைவர் மாதிரி போட்டோ போட்டு, அவங்க சாதி பேரை போட்டு, சாதி சம்பந்தமா புரட்சி வரியையும் சேர்த்து போட்டு கலக்குவாய்ங்க.

           விழாவுக்கு அடையாளமா மண்டபத்தில, அப்புறம் வீட்டுக்கு பக்கத்தில் பிளக்ஸ் வைக்கலாம். அதவுட்டுட்டு ஊரே அடிச்சு ஓட்டினா என்ன நியாயம்?  இதனால வர்ற சிரமங்கள் அந்த பகட்டு ஆட்களுக்கு புரியுமா? வண்டியில ஓடறவங்க கவனத்தை திசை திருப்பும், பிளக்ஸ் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு வரும். காத்து அதிகமா வீசுனா பிளக்ஸ் சரிஞ்சு விழவும் வாய்ப்பு இருக்கு. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.

           என்னமோ சொல்லனும்னு தோணுச்சி. சொல்லிட்டேன். யாரும் திருந்த மாட்டாயிங்க.

பகிர்ந்துள்ள படங்கள் கூகிள் இமேஜ் மூலம் பெறப்பட்டவை.


36 கருத்துரைகள்:

தருமி said... Best Blogger Tips

சாதி வெறி, மத வெறி மாதிரி இதுவும் ஒரு போஸ்டர் வெறி. போடுற நகையெல்லாம் சொந்தமா .. வாடகையா?

கேவலமா இருக்கே! இதெல்லாம் அவங்களுக்கு ஏன் அசிங்கமா தோணலை?

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

இங்கும் அதே நிலை தான்... பல இடங்களிலும் (வத்தலக்குண்டு - Top...!) இதே நிலை அதிகமாவதும் கொடுமை...!

ராஜி said... Best Blogger Tips

இப்போலாம் சாவுக்கும், கருமாதிக்கும் கூட பேனர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க தம்பி. போன வாரம் வேலூர் போய் இருந்தேன் அங்க 1 வயது ஆண் குழந்தை இறந்ததை பேனர் வச்சிருக்காங்க. எனக்கு பத்திக்கிட்டு வந்துச்சு. அந்த குழந்தை அவங்க குடும்பத்துக்கே ஒரே ஆண் வாரிசு. யாரும் கவனிக்காத பொழுது தண்ணி தொட்டில விழுந்து 2 நாள் ஊறி அப்புறம் கண்டெடுத்த அகால மரணத்துக்கு பேனர் வச்சு ஊருக்கு சொல்றாங்க. இதுல கண்ணுல இருந்து தண்ணி வர்ற மாதிரி கிராஃபிக்ஸ். ச்ச்சேன்னு வெறுத்து போச்சு எனக்கு.

துளசி கோபால் said... Best Blogger Tips

உண்மைதான். ஏழு வருசத்துக்கு முன் உறவினர் திருமணமுன்னு மதுரை தாண்டிப்போறோம்..... வழியெங்கும் ப்ளெக்ஸ் பேனர். என்னடா இப்படின்னு ஆத்தமாட்டாமப் புலம்பிக்கிட்டே போனால் நம்மூட்டு கல்யாண மண்டபவாசலில் ஒன்னு பெருசா நிக்குது!!!

நல்லவேளை அதுலே நம்ம பெயர்களை மட்டும் போட்டுருந்தாங்க! தப்பிச்சோம்:-))))

ப்ளெக்ஸ்லே ஆம்பிளைங்க எல்லோரும் செல்ஃபோன் பேசிக்கிட்டே இருக்கும் போஸ் பார்க்கலையா:-))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

யாரோ ரெண்டு பேருக்கு கல்யாணம் நடக்கிறதுக்கு, எவன் எவனோ வாழ்த்து சொல்றீங்க, அதை சம்பந்தமே இல்லாத நாங்க ஏன்டா தெரிஞ்சிக்கனும்? உங்க பப்ளிசிட்டி அட்ரோசிட்டிக்கு ஒரு அளவே இல்லியாடா?

தி.தமிழ் இளங்கோ said... Best Blogger Tips

உங்க ஊரில் மட்டுமில்லை. எல்லா இடத்திலேயும் இந்த ப்ளக்ஸ் போர்டு கலாச்சாரம்தான். யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வைத்தால் சரி! இந்த ப்ள்க்ஸ் போர்டு தொழிலால் சில பேருக்கு வேலை கிடைக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். படித்துவிட்டு சரியான வேலை கிடைக்காத நமது சொந்தக்கார இளைஞர்கள் கூட அதில் இருக்கலாம்.

Unknown said... Best Blogger Tips

ப்ளெக்ஸ் போர்டின் வாசகங்கள் பல இடங்களிலும் சாதிய வெறியை தூண்டுவதாகவே இருக்கிறது பிளாசி போர் என்று சரித்திரத்தில் படித்தததாய் நினைவு ...இனி ஒரு ப்ளெக்ஸ் போர் வந்தாலும் வியப்பதற்கில்லை !.

கவிதை வானம் said... Best Blogger Tips

நண்பரே...உங்கள் பதிவு உண்மையானது...நானும் மதுரையில் 4 வருடங்கள் படித்தவன்தான்...சமீபத்தில் மதுரை போயிருந்தேன்..மேலூரில் ஆரம்பிக்கும் இந்த பகட்டு கலாச்சாரம்...யானைக்கவுனி வரை பார்த்து...அசந்துவிட்டேன் ..சென்னை மதுரையிடம் தோற்றுப்போகும்..

Manimaran said... Best Blogger Tips

ஒரு காலத்தில சினிமா தியேட்டர் முன்னாடிதான் பிளக்ஸ் பேனர் வைப்பாங்க... கல்யாணத்துக்கு போஸ்டர் அடிச்சாலே பெரிய விசயமாக இருந்தது. இன்னைக்கு கருமாதிலிருந்து வயசுக்கு வர்ற சங்கதிவரைக்கும் பிளக்ஸ் வக்கிராணுவ... அடுத்து டிஜிட்டல் பேனர் வரும் பாருங்க..

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

பிறந்தநாள் முதல் கருமாதி வரை எல்லாத்துக்கும் இப்போ இந்த ப்ளக்ஸ்தான்! என்று ஒழியுமொ இந்த மோகம்? பகிர்வுக்கு நன்றி!

ஜோதிஜி said... Best Blogger Tips

கேவலமா இருக்கே! இதெல்லாம் அவங்களுக்கு ஏன் அசிங்கமா தோணலை?


உங்க எல்லாருக்கும் பொறாமை? எம்பூட்டு பெரிய அழகன் அழகி மூஞ்சியெல்லாம் இந்த ப்ளக்ஸ் போர்ட்டில் பார்க்க முடிகின்றது.

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips

எனக்கும் சொல்லனும்னு தோணிச்சு
நீங்க மிகச் சிறப்பா சொல்லீட்டீங்க
வாழ்த்துக்கள்

ezhil said... Best Blogger Tips

உங்க ஊர்ல மட்டுமில்ல எல்லா ஊர்லயும் நடக்கிறதுதான் இப்போ எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில தான் கவனிக்கப்படணும்றதில குறியாயிருக்காங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தருமி

சாதி வெறி, மத வெறி மாதிரி இதுவும் ஒரு போஸ்டர் வெறி. போடுற நகையெல்லாம் சொந்தமா .. வாடகையா?

கேவலமா இருக்கே! இதெல்லாம் அவங்களுக்கு ஏன் அசிங்கமா தோணலை?/////

நகை சொந்தமாவும், வாடகையாவும் கூட இருக்காது. ப்ளக்ஸ் போட்டோ எடிட் பண்ற இடத்துல நிறைய மாடல் வச்சு, நகைகளை ஒட்டிருவாங்க.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன்
இங்கும் அதே நிலை தான்... பல இடங்களிலும் (வத்தலக்குண்டு - Top...!) இதே நிலை அதிகமாவதும் கொடுமை...!///

கரெக்ட்... வத்தலக்குண்டுல நானும் பார்த்திருக்கேன்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ராஜி

இப்போலாம் சாவுக்கும், கருமாதிக்கும் கூட பேனர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க தம்பி.////

வேறென்ன சொல்ல... பகட்டுக்கு எந்த கருமாந்திரமா இருந்தா என்னா?ன்னு நெனச்சிருப்பாங்க

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@துளசி கோபால்

ப்ளெக்ஸ்லே ஆம்பிளைங்க எல்லோரும் செல்ஃபோன் பேசிக்கிட்டே இருக்கும் போஸ் பார்க்கலையா:-))))))///

செல்போன் ஓல்டு பேஷன் சார்...

கூலிங்கிளாஸ் தான் இப்ப ட்ரெண்டு..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

யாரோ ரெண்டு பேருக்கு கல்யாணம் நடக்கிறதுக்கு, எவன் எவனோ வாழ்த்து சொல்றீங்க, அதை சம்பந்தமே இல்லாத நாங்க ஏன்டா தெரிஞ்சிக்கனும்? உங்க பப்ளிசிட்டி அட்ரோசிட்டிக்கு ஒரு அளவே இல்லியாடா?///

அண்ணே.... ரொம்ப ஓவரா பண்றாங்கன்னே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தி.தமிழ் இளங்கோ
இந்த ப்ள்க்ஸ் போர்டு தொழிலால் சில பேருக்கு வேலை கிடைக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். படித்துவிட்டு சரியான வேலை கிடைக்காத நமது சொந்தக்கார இளைஞர்கள் கூட அதில் இருக்கலாம். ///

உண்மை தான் ஐயா.... வேலை கிடைகிறது....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Bagawanjee KA
பிளாசி போர் என்று சரித்திரத்தில் படித்தததாய் நினைவு ...இனி ஒரு ப்ளெக்ஸ் போர் வந்தாலும் வியப்பதற்கில்லை !.////

போர்ன்னு சொல்லாதிங்க, வெட்டுக்குத்து பைட் வந்தாலும் வரும்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@PARITHI MUTHURASAN
நண்பரே...உங்கள் பதிவு உண்மையானது...நானும் மதுரையில் 4 வருடங்கள் படித்தவன்தான்...சமீபத்தில் மதுரை போயிருந்தேன்..மேலூரில் ஆரம்பிக்கும் இந்த பகட்டு கலாச்சாரம்...யானைக்கவுனி வரை பார்த்து...அசந்துவிட்டேன் ..சென்னை மதுரையிடம் தோற்றுப்போகும்..///

உண்மை தான் ...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Manimaran
ஒரு காலத்தில சினிமா தியேட்டர் முன்னாடிதான் பிளக்ஸ் பேனர் வைப்பாங்க... கல்யாணத்துக்கு போஸ்டர் அடிச்சாலே பெரிய விசயமாக இருந்தது. இன்னைக்கு கருமாதிலிருந்து வயசுக்கு வர்ற சங்கதிவரைக்கும் பிளக்ஸ் வக்கிராணுவ... அடுத்து டிஜிட்டல் பேனர் வரும் பாருங்க..///

வயசுக்கு வந்த பொண்ணை, தென்னை ஓலை குச்சு கட்டி தனியா வச்சிருப்பாங்க. அது பாரம்பரியம்...

ஆனா அந்த பொண்ணை பப்ளிக்கா போட்டோ போட்டு பப்ளிக் பண்றது இப்போதைய பாரம்பரியம்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@s suresh
பிறந்தநாள் முதல் கருமாதி வரை எல்லாத்துக்கும் இப்போ இந்த ப்ளக்ஸ்தான்! என்று ஒழியுமொ இந்த மோகம்? பகிர்வுக்கு நன்றி!//

மோகம் ஒழியாது... அதிகரிக்கும்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஜோதிஜி திருப்பூர்
உங்க எல்லாருக்கும் பொறாமை? எம்பூட்டு பெரிய அழகன் அழகி மூஞ்சியெல்லாம் இந்த ப்ளக்ஸ் போர்ட்டில் பார்க்க முடிகின்றது.//

அண்ணே, முடியல அண்ணே... அந்த அழகு மூஞ்சிகளை பாக்க முடியல அண்ணே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Ramani S
எனக்கும் சொல்லனும்னு தோணிச்சு
நீங்க மிகச் சிறப்பா சொல்லீட்டீங்க
வாழ்த்துக்கள்///

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ezhil
உங்க ஊர்ல மட்டுமில்ல எல்லா ஊர்லயும் நடக்கிறதுதான் இப்போ எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில தான் கவனிக்கப்படணும்றதில குறியாயிருக்காங்க...///

கரெக்ட் சகோ...

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

ஆமாங்க.... நீங்க சொல்வது உண்மைதான் பிரகாஷ்... செல்லூர் பகுதியில பிளக்ஸ்ல பெண்கள் நகைகளை அள்ளிப் போட்டுக்கிட்டும் பசங்க ராம்ராஜ் காட்டன்ல காலரை தூக்கிவிட்டுக்கிட்டும் பேனரா ஜொலிக்கிறாங்க போங்க....

எல்லாம் காலம் செய்த கோலம்....

தனிமரம் said... Best Blogger Tips

இதுவும் ஒரு வெறிதான் பிரகாஸ்§

ரூபக் ராம் said... Best Blogger Tips

//கல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு??? அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே?// இந்தக் கொடுமைகளை கண்டு பல நாள் மனம் எரித்தது உண்டு. மதுரையில் மட்டும் அல்ல, தமிழகம் முழுவதுமே இந்த நோய் பரவிக் கொண்டுதான் இருக்கிறது...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எல்லாப் பேனரையும் வெட்டி சாயிங்கலேய் மக்கா கொய்யால...

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

என்னமோ சொல்லனும்னு தோணுச்சி. சொல்லிட்டேன். யாரும் திருந்த மாட்டாயிங்க// அதுக்கு எண்டா சொல்ற?

பால கணேஷ் said... Best Blogger Tips

கல்யாணம்னு சினிமா கதாநாயகி ரேஞ்சுக்கு கல்யாணப் பெண்ணையோ, பூப்புனிது நீராட்டு விழான்னு வயசுக்கு வந்த பெண்ணையோ வைத்து பேனர் வெக்கிறவங்க, அதுக்குப் பக்கத்துல நின்னு அதப் பாக்கறவங்க அடிக்கற ‌கமெண்ட்டை ஒரு தரம் கேட்டாங்கன்னா... ஜென்மத்துக்கும் ஃப்ளக்ஸ் வெக்க மாட்டாங்க. நான் சில சமயம் கேட்டு மனசு வருத்தப்பட்டதுண்டு பிரகாஷ்!

தேன் நிலா said... Best Blogger Tips

பிளக்ஸ் கடைகாரர்களுக்கு நல்ல வருமானம்தான் போங்க..!

மத்தவங்களுக்கு பாதிப்பு இல்லாம அவங்க வீட்டு அன்றாட நிகழ்ச்சிகளுக்கு கூட பிளக்ஸ் போர்ட் வச்சிட்டுப் போகட்டும்...!!!

senthil said... Best Blogger Tips

Valuable post. It is high time that people should think about it. Why is that we are unable to view blogs in thiratti.com?

Unknown said... Best Blogger Tips

இப்போ எதுக்கு வெனர் வைக்கிறது இல்ல எல்லாம் பணம் மிஞ்சின செப்பம்

குலசேகரன் said... Best Blogger Tips

It is all through our State. Since you are living in MDU, you talk about MDU only.

Majority of the people, anywhere in the world, imitate the general culture. You can't blame them for that.

For e.g. today, even a poor man wants to spend laksh of borrowed rupees on the marriage of his daughter coz he does not want to be left alone.

Similarly, flex board culture. Everyone keeps one - for all occasions. Why should I be left out? If I don't keep, what will my neighbours say but 'He is a beggar fellow!'

If you want to exercise your intellect, please find out how the general we detest so much, came into our lives.

Others too can attempt instead of simply dittoing Prakash.

I like to learn that from you, Sirs and Madams

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1