CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மானிட்டர் பட்டனை அமுக்கினால் கம்ப்யூட்டர் இயங்குமா? முதல் கணினி அனுபவம் - தொடர்பதிவு

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

வணக்கம் வலை நண்பர்களே,

           கொஞ்சம் மந்தமாக இருந்த பதிவுலகம் மீண்டும் களை கட்டியுள்ளது. ஆம், நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகில் தொடர்பதிவுகள் வலம் வரத் துவங்கியுள்ளது. ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் பதிவுகள் எழுதப்பட்டு, அதே தலைப்பில் மற்ற பதிவுலக நண்பர்களையும் எழுத அழைப்பதே தொடர்பதிவின் சிறப்பு. 


இப்போது இந்த தொடர்பதிவை ஆரம்பித்து வைத்த பெருமை "காணாமல் போன கனவுகள்" வலைபதிவர் ராஜி அக்காவையே சாரும். வலைபதிவில் வெறுமனே கிறுக்கிக்கிட்டு இருக்கேன் பிரகாஷ், ஏதாச்சும் உருப்படியா எழுத யோசனை தா'ன்னு அவங்க கேட்க, ரொம்ப நாளா தொடர்பதிவு நாம யாரும் எழுதறதே இல்லை. அதனால ஏதாவது தலைப்பில் தொடர்பதிவு ஆரம்பிச்சு வையுங்க'ன்னு சொன்னேன். நீயே தலைப்பும் சொல்லிடுன்னு அவங்க சொல்ல, நானும் உடனே எனக்குள் தோன்றிய தலைப்பான "என் முதல் கணினி அனுபவம்"ன்னு எழுதுங்கன்னு சொன்னேன். அவங்க எழுதறேன்னு உறுதியா சொல்லல. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு அவங்க பதிவா போட்டு என்னையும் முதல் ஆளா கோர்த்து விட்டுடாங்க. நானும் பதிவெழுத மேட்டர் வேணுமான்னு ஒரு பயனுள்ள பதிவு??? போட்டிருக்கோம்ல. அதுல இருக்குற ஒவ்வொரு பாயின்ட்டுக்கும் நம்ம பதிவர்கள் எழுத ஆரம்பிச்சுட்டாங்க. சரி, இந்த வரலாறை இதோட நிறுத்திட்டு என் கம்ப்யூட்டர் அனுபவத்தை ஆரம்பிப்போம்.

           இந்த நூற்றாண்டின் மொத வருஷம். டிப்ளமோ மெக்கானிக்கல் பிரிவுல சேர்ந்தேன். மெஷினை கழட்டி, மாட்டுற வேலைக்கு தான் படிக்கறோம்னு நெனச்சுட்டு இருந்த எனக்கு கம்ப்யூட்டரும் மெக்கானிக்கல் வேலைக்கு உதவும்னு Autocad Lab வர்ற வரை எனக்குத் தெரியாது. Autocad Lab வாரத்துல ரெண்டு முறை வரும். மத்த லேப், ஒர்க் ஷாப் பீரியடுக்கெல்லாம் கிளாஸை கட் அடிச்சுட்டு திண்டுக்கலுக்கு போயி ஏதாவது தியேட்டர்ல படம் பார்த்துட்டு இருப்போம். ஆனா, autocad lab-க்கு மட்டும் கட் அடிக்க மாட்டோம். ஏன்னா, அதுக்கு காரணம் கம்ப்யூட்டர் தான். முதல் நாள் Autocad வகுப்பில், autocad-ன்னா என்ன, அதன் யூசேஜ் என்னான்னு தியரி நடந்துச்சு. ரெண்டாவது நாள் வகுப்புல தான் Autocad Lab-க்கு கூட்டிட்டு போனாங்க. ஒவ்வொரு கம்ப்யூட்டர்-ல நாலு நாலு பேரா உட்காருங்கன்னு வாத்தியார் சொன்ன அடுத்த செகன்ட் ஆளுக்கொரு கம்ப்யூட்டரில் சீட் பிடிச்சோம். கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ண தனி கோர்ஸ் படிச்சாத்தான் முடியும்னு நெனச்சுட்டு இருந்த எனக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கறதே இனம் புரியாத சந்தோசமாகவும், பெருமையாகவும் இருந்துச்சு. சில கம்ப்யூட்டர் ஆன்லயும், சிலது ஆப்லயும் இருந்துச்சு. பக்கத்துல இருந்த கம்ப்யூட்டர்-ரை என் பிரண்ட் எதையோ அமுக்கி ஆன் செஞ்சான். நான் சரியா கவனிக்கல. நான் என் கம்ப்யூட்டரை (ஆமா, நான் உட்கார்ந்திருக்குற கம்ப்யூட்டர் என்னுடையது தானே) ஆன் பண்ணலாம்னு மானிட்டர் பட்டனை அமுக்கி அமுக்கி பார்த்தேன், ம்ஹும் ஆன் ஆகல. இத பார்த்த வாத்தியார் மண்டையில ஒரு தட்டு தட்டிட்டு பவர் பிளக், CPU ரெண்டையும் ஆன் செஞ்சார். அப்புறமா தான் கம்ப்யூட்டர் ஆன் ஆச்சு. கம்ப்யூட்டர் ஆன் ஆயிருச்சே, ஆனா, என்ன செய்யணும்னு எனக்கு தெரியல. வாத்தியார் Autocad class எடுக்க எடுக்க Autocad படம் வரஞ்சுட்டே, கம்ப்யூட்டர் இயக்கரதை பத்தி கொஞ்சம் கொஞ்சமா கம்ப்யூட்டர் பேஸிக் அனுபவ பாடமா கத்துகிட்டேன்.

      அப்புறம் பிரண்ட் ஒருத்தன் அவங்க வீட்டுல கம்ப்யூட்டர் இருக்கு கேம்ஸ் விளையாடலாம்னு கூப்பிட்டான். ஆர்வக் கோளாறுல உடனே அவன் வீட்டுக்கு போனேன். அங்க கம்ப்யூட்டர்-க்கு தனியா ஒரு ஃபேன் போட்டிருந்தான். டேய், இங்கிட்டு எம் பக்கமா அந்த பேனை திருப்புன்னு சொல்ல, இல்ல இல்ல, கம்ப்யூட்டர்க்கு தான் பேன். பேன் காத்து இல்லாட்டி கம்ப்யூட்டர் ஹேங் ஆயிரும்னு சொல்லிட்டான். பைக் ரேஸ் கேம் போட்டான். எப்படி விளையாடறதுன்னு சொல்லி காட்டினான். அப்புறம் நான் விளையாட ஆரம்பிச்சேன். பாவம்யா, பைக் ஓட்றவன், தொபுகடீர்னு விழுந்துட்டே இருந்தான். எனக்கு சரியா ஓட்ட தெரியல. முன்ன பின்ன பைக் ஒட்டியிருந்தா அனுபவம் இருக்கும், சைக்கிள் ஓட்டிட்டு கம்ப்யூட்டர்ல பைக் ஒட்டுனா எப்படி முடியும்? அப்புறம் டெய்லி அவன் வீட்டுக்கு போயி பைக் ரேஸில் முதல் இடத்துக்கு வர ரெண்டு வாரம் ஆச்சு. இப்படித்தான் கம்ப்யூட்டர்ல வேர்க்க விறுவிறுக்க பைக் ஒட்டி பழகினேன். ஹி...ஹி... அவன் கடைசி வரை பேனை கம்ப்யூட்டரை விட்டு திருப்பவே இல்லை.

     டிப்ளோமா முடிச்சுட்டு 2003-இல் கோயம்பத்தூருக்கு CNC படிக்க போனேன். அங்க, Autocad, MS Word, சொல்லித் தந்தாங்க. கூடவே CNC simulation-ம் இருந்ததுனால டெய்லி பாதி நேரம் கம்ப்யூட்டர் லேப்ல தான் இருப்பேன். கம்ப்யூட்டர் ஓரளவு கத்துக்கனும்னா MS word கத்துக்கிடாலே போதும்னு நினைக்கிறேன். அங்க தான் BE படிச்ச அண்ணன்களும் பிரண்ட் ஆனாங்க. அவங்க மூலமா மெயில் ஐடி ஓபன் செஞ்சும், மெயில் அனுப்பறத பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். அப்படியே இன்டர்நெட் ப்ரௌசிங் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். வீக் எண்டு எப்படியும் ரெண்டு மூணு மணி நேரமாச்சும் ப்ரௌசிங் தான். யாகூ சாட் பண்றது, ஆன்லைன்ல படம் பாக்றது, பாட்டு கேட்கறது, விதவிதமான பேர்ல மெயில் ஐடி ஓபன் செய்றதுன்னு ஓடுச்சு அந்த நாட்கள்.

      CNC படிப்பு முடிச்சுட்டு கோயம்பத்தூரிலேயே வேலைக்கு சேர்ந்தேன். அப்ப ஒரு ஆறு மாசம் கம்ப்யூட்டர் தொடர்பு இல்லாம இருந்துச்சு. ரூம்ல கூட இருந்த பிரண்ட் ஊர்ல இருந்து ஒரு கம்ப்யூட்டர் எடுத்துட்டு வந்தான். அந்த கம்ப்யூட்டர்ல அதிகபட்சம் சிடி போட்டு படம் பாக்கலாம். நமக்கு பயோடேட்டா ரெடி பண்ணலாம், அவ்வளவு தான். 
கம்ப்யூட்டர்க்கு சொந்தக்காரன் எப்படியும் மாசத்துக்கு நாலு தடவையாச்சும் கழட்டி எதையாவது நோண்ட ஆரம்பிச்சிருவான். அப்ப தான் கம்ப்யூட்டர் பார்ட்ஸ் பத்தி(பேரு மட்டும் தான்) கொஞ்சம் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். 

        அப்புறம் கொஞ்ச நாள் cnc tuter- ஆ இருந்தேன். அங்க தான் சாப்ட்வேர் இன்ஸ்டால் எப்படி செய்றது? crack file ஓபன் பண்றது எப்படின்னு தெரிஞ்சுகிட்டேன். CNC - machining center பத்தி சொந்தமா MS word மூலமா ஒரு புக் ரெடி பண்ணினேன். அதன் மூலமா கிட்டத்தட்ட MS word-இன் பல வசதிகளை தெரிஞ்சுகிட்டேன்.


     2005ல மதுரைக்கு வந்து டிவிஎஸ் கம்பெனில சேர்ந்தேன். அப்போ தங்கிருந்த ரூம்ல ரெண்டு கம்ப்யூட்டர் இருந்துச்சு. இன்டர்நெட் வசதியும் இருந்துச்சு. ரூம்ல இருந்த பசங்கள்ல எனக்கு மட்டுமே ஷிப்ட் இருந்ததுனால கம்ப்யூட்டர் பெரும்பாலும் நானே யூஸ் செய்வேன். அங்க தான் torrents, video cutter, software downloads, chats, என நிறைய தெரிஞ்சுகிட்டேன். முக்கியமா நெட்ல எப்படி நமக்கு தேவையானதை சர்ச் செய்றதுன்னு நிறைய தெரிஞ்சுகிட்டேன்.

    2008 இல் சொந்தமா கம்ப்யூட்டர் வாங்கினேன். எதையாவது நோன்டிட்டே இருப்பேன். சில சமயத்துல OS புட்டுகிரும். அப்படியே OS install செய்ய கத்துகிட்டேன். 2010இல பிளாக் அறிமுகம் ஆச்சு. அப்ப இருந்து இப்ப வரை ஒவ்வொரு பதிவு போடும் போதும் ஏதாவது கத்துகிட்டே இருக்கேன். அதோட எனக்கு தெரிஞ்சதை மத்தவங்களுக்கும் சொல்லி தந்துட்டு இருக்கேன்.

        இன்னும் நிறைய கத்துக்கணும்னு ஆர்வம் இருக்கு. கம்ப்யூட்டர், நெட் என உலகமே ஒரு ஸ்கிரீன்ல அடங்கியிருச்சு. தினமும் புதுசு புதுசா வந்துட்டே இருக்கு. அதனால நான் இதுவரை தெரிஞ்சுகிட்டது ஒரு அணு துகள் அளவு கூட இல்லைன்னே நினைகிறேன்.

      ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா... ஒரு வழியா தொடர்பதிவை எழுதியாச்சு. இதே தலைப்பில் பதிவு எழுத இன்னும் அஞ்சு நண்பர்களை கோர்த்து விடனும்??? யார்? யார்?

1.செங்கோவி நண்பனை கூப்பிடறது தன்னைத் தானே கூப்பிட்டுக்குறதுக்கு சமம்ன்னு யோசிச்சு சசி அக்காவை கூப்பிட்டேன். ஆனா, சசி அக்கா தன்னை வேற ஒருத்தர் கூப்பிட்டதால என்னை மதிக்காம போய்ட்டதால..., இந்த இக்கட்டான சூழ்நிலையில நண்பனை தவிர வேற யார் கைகொடுக்க ஆள் இருக்காங்க?! அதனால, நண்பர் செங்கோவி.

2. மனதில் உறுதி வேண்டும் வலைப்பூவில் புரட்சியாய் எழுத்துக்களை பதிக்கும் நண்பர் மணிமாறன்.

3. அம்பாளடியாள் வலைப்பூவில் புரட்சி பாடல்களை படைக்கும் அம்பாளடியாள் சகோ.

4. நாஞ்சில் மனோ வலைப்பூவில் அனுபவங்களை சுவையாக படைக்கும் மக்கா மனோ.

5. சிவகாசிகாரன் வலைப்பூவில் தன் அனுபவங்களை கதை வடிவில் படைக்கும் நண்பன் ராம் குமார்.
----


48 கருத்துரைகள்:

கார்த்திக் சரவணன் said... Best Blogger Tips

முதல் கணினி அனுபவம் சூப்பர்....

rajamelaiyur said... Best Blogger Tips

அனுபவங்களை அருமையாக தொகுத்துள்ளீர்கள். . .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Best Blogger Tips

முதல் கணினி அனுபவங்களை சுவாரசியமாக சொல்லி இருக்கிறீர்கள்.அடுத்த தலைமுறையினருக்கு இந்த அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பிள்ளை.ஏனெனில் பிறக்கும்போதே அவர்கள், கையில் செல்போனும்,மௌசும் குடியேறி விடுகிறதே.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நகைச்சுவையுடன் அனுபவம் சூப்பர்...! நான் இனிமேல் தான் எழுதணும்...!

தனிமரம் said... Best Blogger Tips

அனுபவம் சூப்பராக இருக்கு !

அம்பாளடியாள் said... Best Blogger Tips

ஒரு சுவாரசியமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் சகோ .உங்களின் விடா முயற்சியை நிட்சயம் பாராட்டியேயாக வேண்டும் .வாழ்த்துக்கள் .தான் மட்டும் கற்றுக் கொள்ளாமல் தான் கற்றுக்
கொண்டதைப் பிறருக்கும் கற்றுக் கொடுக்க எண்ணும் தங்களின்
முயற்சிகள் யாவும் வெற்றி பெற .

செங்கோவி said... Best Blogger Tips

நம்ம தலைமுறை எல்லாருக்குமே இதே போன்ற அனுபவம் தான்..சரி, என்னை ஏம்யா தொடர் பதிவு எழுத கூப்பிடலை? நான் இன்னும் பதிவர் தாம்யா.

Manimaran said... Best Blogger Tips


நல்லா சுவாரஸ்யமா இருந்தது பிரகாஷ்... முன்பெல்லாம் மெக்கானிகல் பீல்டில் இருப்பவர்களுக்கு கம்ப்யூடர் வாசம் படவேண்டுமென்றால் cad -cam துறையில் இருந்தால் மட்டுமே சாத்தியம்.. அப்போதெல்லாம் சொந்தமாக கம்ப்யூடர் வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்களாகத்தான் இருந்திருக்கணும்.

இன்னும் மெக்கானிகல் துறையில் ஆபரேட்டராக இருக்கும் ஒருசில வெளிநாட்டு நண்பர்களுக்கு கம்ப்யூடர் இயக்கவே தெரியாது என்பது கசப்பான உண்மையும் கூட.. அடுத்து என்னை கோத்து விட்டுருக்கீங்க... என்னுள்ளும் பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது.. விரைவில் எழுதுகிறேன்.

Manimaran said... Best Blogger Tips

//மனதில் உறுதி வேண்டும் வலைப்பூவில் புரட்சியாய் எழுத்துக்களை பதிக்கும்//

நான் புள்ளபூச்சியை பாத்தாலே பயப்படுற ஆளு... புரட்சியா....ஹா..ஹா...

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

மக்கா....அந்த கணிணி எல்லாம் இன்னும் உசுரோட....இருக்கா....???

நம்ம ராசி அப்படி....அதான் கேக்கேன்.....

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

நகைச்சுவையான அனுபவம் சூப்பர்...

பால கணேஷ் said... Best Blogger Tips

ஆஹா... தப்பிச்சுட்டேன் தப்பிச்சுட்டேன்னு குதிச்சுட்டிருந்த சசியை மாட்டி விட்டுட்டீங்களா...? புள்ள திருதிருன்னு முழிக்கறத வேடிக்கை பாக்கோணும். நான் போயிட்டு மறுபடி வாரேன்!

ராஜி said... Best Blogger Tips

முன்ன பின்ன பைக் ஒட்டியிருந்தா அனுபவம் இருக்கும், சைக்கிள் ஓட்டிட்டு கம்ப்யூட்டர்ல பைக் ஒட்டுனா எப்படி முடியும்?
>>
என் தம்பி இம்புட்டு தெளிவா இருக்குறதை பார்த்து கண்ணுல தண்ணி பொங்குது.

ராஜி said... Best Blogger Tips

வலைபதிவில் வெறுமனே கிறுக்கிக்கிட்டு இருக்கேன் பிரகாஷ், ஏதாச்சும் உருப்படியா எழுத யோசனை தா'ன்னு அவங்க கேட்க,
>>
நேரம்தான். இப்படியா கேட்டேன். எதாவது தொடர்பதிவு எழுதலாமா?ன்னு தானே கேட்டேன்.

Unknown said... Best Blogger Tips

கற்பனை மட்டுமே செய்யத் தெரிந்த என் போன்ற பதிவர்களுக்கு உங்களைப் போன்றோரின் உதவி அவசியம் தேவை ...ஏற்கனவே உங்கள் உதவியை பெற்றவன் என்ற முறையில் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் ..உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்!

பால கணேஷ் said... Best Blogger Tips

முதல் அனுபவம்னு சொல்லிட்டு முதல் அனுபவத்துலருந்து இப்பவரை அப்டுடேட்டா விவரங்களைத் தந்துட்டீங்க தம்பி! அசத்தலாச் சொல்லியிருக்கீங்க... தொழில்நுட்பப் புலியான நம்ம பிரகாஷே முதல் முறைல திணறிருக்கான்னு ஒரு சின்ன ஆறுதல். ஹி... ஹி...!

பால கணேஷ் said... Best Blogger Tips

இப்பதான் கவனிச்சேன்.. அதென்ன... மறக்காம ஓட்டுப் போட்டுட்டு போங்கன்னு கண்டிசன்லாம் போடுற... நான் மறக்காம முக்கியமான அந்த 7வது ஓட்டைப் ‌போட்டுட்டேம்பா! ஹா... ஹா...!

மதுரை சரவணன் said... Best Blogger Tips

அனுபவத்தை பாக்கியராஜ் பாணியில் தொய்வில்லாமல் சொல்லிட்டப்பா.. அற்புதம். தொடரட்டும் கணினி அறிவு.

அருணா செல்வம் said... Best Blogger Tips

நல்ல அனுபவ பதிவு. வாழ்த்துக்கள்.

(அப்படியே என் அனுபவத்தையும் வாசிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி.)

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அடப்பாவீஈஈ........பம்மிகிட்டு ஒளிஞ்சி ஓடிட்டு இருந்த என்னையும் மாட்டி விட்டுட்டியலேய்.....அந்த வீச்சறுவாளை எங்கே வச்சேன்னு கூட மறந்துப்போச்சேலேய் அவ்வ்வ்வ்வ்வ்....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஸ்கூல் பையன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்கூல் பையன்...

என் ராஜபாட்டை : ராஜா said... Best Blogger Tips///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாத்தி..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@T.N.MURALIDHARAN
அடுத்த தலைமுறையினருக்கு இந்த அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பிள்ளை.ஏனெனில் பிறக்கும்போதே அவர்கள், கையில் செல்போனும்,மௌசும் குடியேறி விடுகிறதே. /////

உண்மை நண்பரே....
செல்போன் ரிங் டோனை கேட்டுட்டே தான் இன்னைக்கு குழந்தையே பொறக்குது...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன்

நகைச்சுவையுடன் அனுபவம் சூப்பர்...! நான் இனிமேல் தான் எழுதணும்...! //

விரைவில் உங்கள் அனுபவத்தை எதிர்பார்க்கிறேன் நண்பரே...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தனிமரம்
அனுபவம் சூப்பராக இருக்கு ! ///

நன்றி பாஸ்...

உம்னை கோர்த்துவிட மறந்துட்டேனே????

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Ambal adiyal

கொண்டதைப் பிறருக்கும் கற்றுக் கொடுக்க எண்ணும் தங்களின்
முயற்சிகள் யாவும் வெற்றி பெற . ///

கருத்திற்கு நன்றி சகோ...

உங்களையும் கூப்பிட்டிருக்கேன் பதிவெழுத... மறந்துராதிங்க சகோ..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
நம்ம தலைமுறை எல்லாருக்குமே இதே போன்ற அனுபவம் தான்..சரி, என்னை ஏம்யா தொடர் பதிவு எழுத கூப்பிடலை? நான் இன்னும் பதிவர் தாம்யா. ////

யோவ்... திரும்ப உன்னை கூப்பிட்டிருக்கேன்..
சசிகலா அக்காவை இன்னொருத்தர் கூப்பிட்டதுனால அந்த வாய்ப்பு உமக்கு கொடுத்துள்ளேன்....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Manimaran

உண்மை...

மெக்கானிகல் துறையில் இருப்பவர்கள் கணினி பீல்டில் இன்னைக்கு நல்ல நிலையிலே இருக்காங்க.... cad/cam உதவியுடன்....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நாய் நக்ஸ்
மக்கா....அந்த கணிணி எல்லாம் இன்னும் உசுரோட....இருக்கா....???///

நக்ஸ்.. வேலை பாக்குற இடத்துல இன்னனும் நான் windows2000 OS யூஸ் பண்ணிட்டு இருக்கேன்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பால கணேஷ்

ஆஹா... தப்பிச்சுட்டேன் தப்பிச்சுட்டேன்னு குதிச்சுட்டிருந்த சசியை மாட்டி விட்டுட்டீங்களா...? ///

இன்னொரு நண்பரும் சசி அக்காவை மாட்டி விட்டிருகாங்க அண்ணே..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ராஜி

முன்ன பின்ன பைக் ஒட்டியிருந்தா அனுபவம் இருக்கும், சைக்கிள் ஓட்டிட்டு கம்ப்யூட்டர்ல பைக் ஒட்டுனா எப்படி முடியும்?
>>
என் தம்பி இம்புட்டு தெளிவா இருக்குறதை பார்த்து கண்ணுல தண்ணி பொங்குது. /////

ஹா ஹா... அழாதிங்க... உங்க பாசம் ரொம்ப வழுக்குது அக்கா....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Bagawanjee KA

கற்பனை மட்டுமே செய்யத் தெரிந்த என் போன்ற பதிவர்களுக்கு உங்களைப் போன்றோரின் உதவி அவசியம் தேவை ..////

கருத்திற்கு நன்றி சார்....
நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு பகிர்வதிலும் ஏதாவது விசயத்தை கற்றுக் கொண்டுதான் இருக்கேன்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பால கணேஷ்

தொழில்நுட்பப் புலியான நம்ம பிரகாஷே முதல் முறைல திணறிருக்கான்னு ஒரு சின்ன ஆறுதல். ஹி... ஹி...! ///

அட.. நீங்க வேற... புலி கிளின்னு....

கத்துக்கறது இன்னும் நிறைய இருக்கு அண்ணே...

Avargal Unmaigal said... Best Blogger Tips

நான் நீங்க எலக்ட் ரானிக் அல்லது கம்பியூட்டர் எஞ்சினியரின்னு நினைச்சேன்.. ஆமா ராஜிக்கு ஐடியா கொடுத்து என்னை வம்பில் மாட்டிவிட்டது நீங்கதான்னா இருங்க இருங்க மதுரை வருகிற போது உங்களை நல்லா கவனிச்சு அனுப்புகிறேன்.

ADMIN said... Best Blogger Tips

உங்களுடைய கம்ப்யூட்டர் அனுபவங்கள் ரொம்ப சுவராஷ்யமா இருந்துச்சு.. மானிட்டர் பட்டனை அழுத்தி கம்ப்யூட்டர் இயங்கலேன்னு காத்திட்டு இருந்த ஆட்கள்ல நீங்களும் ஒருத்தர்.. அவ்வளவுதான்.. உங்கள மாதிரியே நிறைய நண்பர்களுக்கும் அதுபோல் செய்திருக்காங்க..!!!

புதுசா கம்ப்யூட்டர் கோர்ஸ் செய்ய வர்றவங்க எல்லோரும் இதைதான் முதல்ல செய்வாங்க.. கம்ப்யூட்டர் ஆன் பண்ணியும் இன்னும் ஆன் ஆகலேயே... ஏதாவது தப்பா பட்டன் அழுத்திட்டமோ என்று பயந்த ஆட்களும் நிறைய எனக்குத் தெரியும்..

நல்லதொரு "தொடர்பதிவை" ஆரம்பிச்சிருக்கீங்க..

வாழ்த்துகள் தமிழ்வாசி..!!!

ரூபக் ராம் said... Best Blogger Tips

சுவையான அனுபவங்கள் .... என் நினைவுகளை மனதில் அசைப்போட செய்துவிட்டிங்க

சீனு said... Best Blogger Tips

ம்க்கும் சிவகாசியவும், மணிமாறனையும் நீங்க கூட்ப்டுடீங்களா... எ யாராப்பா யார் அங்க... சீக்கிரம் புது பிளாக் ஓபன் பண்ணுங்க... உங்கள தொடர் பதிவுக்கு கூப்பிடனும்..

கும்மி க்ரூப் தான் பாக்கி... யாராவது கும்மிய கோர்த்து விட்டீங்க.. அப்புறம் நானே ஐஞ்சு பிளாக் ஓபன் பண்ணி ஐஞ்சுலையும் எழுதிருவேன் பீ கேர்புல் :-)

வெற்றிவேல் said... Best Blogger Tips

இதுக்கெல்லாம் காரணம் நீங்க தானா? நல்லா வருவீங்க பாஸ்... உங்கள் முதல் அனுபவம் அழகு...

சசிகலா said... Best Blogger Tips

சகோ நீங்க தானே இங்க இப்ப நிறைய பேருக்கு குரு... ப்ளாக் வடிவமைப்பதில் .

கோகுல் said... Best Blogger Tips

ம்ம்ம்,பதிவுலகம் களை கட்ட ஆரம்பித்துவிட்டது

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Avargal Unmaigal
நான் நீங்க எலக்ட் ரானிக் அல்லது கம்பியூட்டர் எஞ்சினியரின்னு நினைச்சேன்.. ஆமா ராஜிக்கு ஐடியா கொடுத்து என்னை வம்பில் மாட்டிவிட்டது நீங்கதான்னா இருங்க இருங்க மதுரை வருகிற போது உங்களை நல்லா கவனிச்சு அனுப்புகிறேன். ////

மெக்கானிக்கல் தான் நம்ம வாழ்க்கையே...

உங்கள் வருகையை எதிர்பார்த்து தான் இருக்கேன்...

நல்லா கவனிக்கணும்.. ஆமா சொல்லிட்டேன்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தங்கம் பழனி

ஆரம்பத்தில் எல்லோரும் கணினி இயக்கத்தில் தினறத்தானே செய்வார்கள் பழனி??!!!

கருத்திற்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ரூபக் ராம்

சுவையான அனுபவங்கள் .... என் நினைவுகளை மனதில் அசைப்போட செய்துவிட்டிங்க /////

உங்களையும் நம்ம நண்பர்கள் பதிவிட கூப்பிடுவாங்க...
அதில் அசை போடுங்க ரூபக்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சீனு

ம்க்கும் சிவகாசியவும், மணிமாறனையும் நீங்க கூட்ப்டுடீங்களா... எ யாராப்பா யார் அங்க... சீக்கிரம் புது பிளாக் ஓபன் பண்ணுங்க... உங்கள தொடர் பதிவுக்கு கூப்பிடனும்..////

சீனுவுக்கு பிளாக் பஞ்சமா போச்சா?
உங்களுக்கு காதல் கடிதம் எழுதுன பதிவர்கள் லிஸ்ட் இருக்குமே... அதுல தேடிப்பிடிங்க சீனு..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@இரவின் புன்னகை
இதுக்கெல்லாம் காரணம் நீங்க தானா? நல்லா வருவீங்க பாஸ்... ///

ஏம்பா, வெற்றி???
புகழறியா, இகழ்றியா?????

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Sasi Kala
சகோ நீங்க தானே இங்க இப்ப நிறைய பேருக்கு குரு... ப்ளாக் வடிவமைப்பதில் . ////

இப்படி சொல்லச்சொல்லி சத்தியமா நான் உங்களுக்கு பணம் தரலியே.... அவ்வ்வ்வவ்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கோகுல்

ம்ம்ம்,பதிவுலகம் களை கட்ட ஆரம்பித்துவிட்டது ///

வாங்க கோகுல்... நீங்களும் களத்தில் குதிங்க...

Unknown said... Best Blogger Tips

அனுபவப் பகிர்வு நன்று!/// இதெல்லாமே நான் பாத்து தெரிஞ்சுகிட்டது தான்.இன்னும் கொஞ்சம் வளரணும்.ஊரில வண்டி ஓட்டக் கத்துக்கிட்டதும்,சும்மா பஸ் டிரைவர் பக்கத்துல நின்னு பாத்து தான்,ஹ!ஹ!!ஹா!!!

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - 74 ல வங்கில சேந்து - 84 ல கணினின்னா என்னன்னு தெரிஞ்சிகிட்டு தடவித் தடவி - கத்துக்கிட்டேன் - தோசக்கல்லு மாதிரி எட்டு இஞ்சு ஃபிளாப்பி ட்ரைவ்ல தான் கத்துக்கிட்டோம் - ஹார்ட் டிஸ்கா ? அப்படின்னா என்ன ? ம்ம்ம்ம்ம் - 30 வருஷம் ஆச்சு - உன்னோட அனுபவமும் பதிவும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1