வணக்கம் வலை நண்பர்களே,
போன வாரம் மதுரைக்கு பக்கத்துல இருக்குற அழகர் கோவில் மலைக்கு போயிருந்தோம் குடும்பத்துடன். அங்க நுபுர கங்கை எனும் தீர்த்தம் நீராடும் இடத்தில் குரங்குகள் ரொம்ப அதிகமா இருக்கும். மக்கள் கொன்டு வர்ற உணவுப் பொருட்கள், பொரிகடலை என சாப்பிட குரங்குகளுக்கு நிறையவே கிடைக்கும்.
ஆனா, ஒரு குரங்குக்கு கூல்ட்ரிங்க்ஸ் இருந்த பாட்டில் கெடச்சுச்சு. அந்த பாட்டிலில் இருந்ததோ ரொம்ப கொஞ்சம் தான். ஆனா அந்த பாட்டில் மூடி இருந்ததுனால அந்த கொஞ்சூண்டு ஜூஸை எப்படி முயற்சி செஞ்சு குடிக்குதுன்னு பாருங்க...
கூல்ட்ரிங்க்ஸ் கொஞ்சம் இருப்பதை பார்க்கும் குரங்கு |
பாட்டிலின் அடிப்பக்கத்தை கடிக்க முயற்சி |
பாட்டிலின் அடிப்பக்கத்தை கடிச்சு இழுக்கிறது |
பாட்டிலில் ஓட்டை போட்டாச்சு. ஜாலியா கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குது. |
இன்னும் சில போட்டோஸ் இருக்கு. இனி வரும் பதிவுகளில் பகிர்கிறேன்...
21 கருத்துரைகள்:
மிகவும் ரசித்தேன்
அதன் அறிவு ஆச்சரியப்படுத்துகிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
முயற்சி திருவினையாக்கும்.....
உண்மை. அது கூட முயற்சி செய்வதை விடுவதில்லை.... நாம் தான் :(
அடடே...முன்னோர்களின் கவனத்திற்கு...
ரொம்ப ரசிச்சு எடுத்து இருக்கிங்க. . . . அழகா இருக்கு படங்கள். .
நல்ல முயற்சி..முன்னோர் சொன்னாக் கேட்டுக்கணும்!
மனுஷங்க சேட்டையை விட குரங்கு சேட்டை பெட்டர். பாக்கறதுக்கு சுவாரசியாமா இருக்கு.
படங்கள் ரொம்பவே தத்ரூபமா இருக்கு. வாழ்த்துக்கள்.
நான் பிறான்மலை போயி இருந்தப்ப என் கையில் இருந்து பலகாரத்தை பிடுங்கி கொண்டே ஓடியது
அடடே....குரங்கை வைத்து ஒரு தத்துவமே சொல்லிடீங்களே.... இதுல இன்னொரு தத்துவமும்(!!!) இருக்கு... மனுசங்க எல்லாம் மூடியை திறந்துதானே குடிக்கிறாங்க... நாம ஏன் அப்படி முயற்சி செய்து பாக்கக்கூடாதுன்னு அது நெனச்சிருந்தா கடைசி வரை குடிச்சிருக்கவே முடியாது. அதாவது மத்தவங்க என்ன செய்யுறாங்கன்னு யோசிக்காம தன்னால என்ன முடியுமோ அதை முயன்றதால்தான் அதால குடிக்க முடிஞ்சது..( நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா... )
அழகர் கோவில் செல்ல வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம்... வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செல்ல வேண்டும்....
மூதாதையர் அறிவுக்குப் பஞ்சமா என்ன?ஒரு முறை ஜூவில் காய்ந்த ரொட்டியை நீரில் முக்கித் தின்று கொண்டிருந்தது ஒரு குரங்கு!
ஆஹா அழகர் மலையில் நம் முன்னோர் அதிகம் தான்:))) நானும் ஒரு படம் எடுத்தேன் :)))
வீடியோவாக எடுத்து இருக்கலாம். நாங்கள் மதுரைவந்தபோது குரங்கு சேஷ்டைகளை நிறையவே கண்டு மகிழ்ந்தோம். ஒரு முறை பழனியில், ஒரு குரங்கு என்னுடன் வந்தவர்களின் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டிலை அப்படியே எடுத்துக் கொண்டு போய் , மூடியைக் கடித்து இழுத்து அவ்வளவு குளிர் பானத்தையும் குடித்து முடித்தது.
லைக் பட்டனைத் தேடுறேன்.
முகநூல் பாதிப்பு.
அவ்வ்வ்வ்..
வீடியோவா இருந்தா இன்னும் நல்லாயிருந்துருக்கும்
:)
2010 மே மாசத்துல ராக்காயி கோவிலுக்கு நானும் போய் இருக்கேன். அப்போதான் டிஜிட்டல் கேமரா வாங்குன புதுசு. புது மோகத்துல பார்க்குறாதுல்லாம் கேமராவுல சுட்டு தள்ள, ஒரு குரங்கு வந்து பறிக்க பார்த்தது. கேமரா ரோப்குள்ள கை விட்டு கேமரா பிடிச்சு இருந்ததால அதால முதல் அட்டெம்ப்ட்னால பிடுங்க முடியல. டக்குன்னு கையிலிருந்த குடையால அப்பா குரங்க அடிச்சதால கேமரா தப்பிச்சது.
மனுசந்தான் கண்டதையும் குடிச்சு உடம்பைக் கெடுத்துக்கிறான்னா...குரங்குமா செயற்கையை விரும்புகிறது ?
பன்னாட்டு கம்பெனிகள் என்னதான் சொக்குப் பொடிபோடுவாங்களோ ?
ஹூம்,நாமெல்லாம் யாரு?பாட்டில்ல ஓட்ட போடாமலே,மூடியத் தொறந்து நக்கிடுவமில்ல?ஹ!ஹ!!ஹா!!!
குரங்கு சேட்டை... அதிக படங்கள் எதிர்பார்த்தேன்... ரசிக்கும் படி உள்ளது...
குரங்குச் சேட்டை படமே கதை சொல்கிறது...
அழகர் கோவிலில் குரங்குகள் செய்யும் சேட்டைகள் அப்பப்பா அழகு...
குரங்குச் சேட்டை படமே கதை சொல்கிறது...
அழகர் கோவிலில் குரங்குகள் செய்யும் சேட்டைகள் அப்பப்பா அழகு...