வர்ற செப்டம்பர் ஒண்ணாம் தேதி சென்னையில் பதிவர் திருவிழா நடக்க இருக்கு. அதுல கலந்துக்க நாலா பக்கமிருந்தும் நம்ம பதிவுலக நண்பர்கள் தயாரா இருக்காங்க. அவங்களோட வேலைகள ஒதுக்கி, டிக்கெட் புக் செஞ்சு, துணைக்கு நண்பர்களையும் திரட்டி படையா வர ரெடி ஆகியிருக்குற நேரத்துல பதிவர்களின் மனைவி கிட்ட இருந்து "என்னங்க... எங்க போறீங்க? அம்புட்டு அவசியமா போகனுமா? லீவு இருந்தா வீட்டுல இருக்குற வழிய பாருங்க"ன்னு ஆர்டர் வந்தா எப்படி இருக்கும்? அதை சமாளிச்சு நம்ம பதிவர்கள் எப்படி வராங்கன்னு பார்ப்போமா?
நாய் நக்ஸ் நக்கீரன்:
அம்மாடி.. போயிட்டு வரேன்...
"எங்க போறீங்க"
என்னமா எப்பவும் கேட்காத கேள்விய கேட்கற..."
என்னமோ கேட்கனும்னு தோணிச்சி"
பதிவர்கள் சந்திப்பு மெட்ராசுல நடக்குது. அதான் வண்டியில போயிட்டு சீக்கிரமா வந்திறேன்"
"என்ன வண்டியிலா, வண்டி என்ன தண்ணியில ஓடுது? பதிவராம்... சந்திப்பாம்... அதெல்லாம் எங்கேயும் போக வேணாம்."
(நக்ஸ் மனசுக்குள்: வண்டி தண்ணியில ஓடாது, நான் வேணா தண்ணியில ஓடுவேன்")
"போவேங்கறேன்ல... ஒரு தபா முடிவு செஞ்சா மாத்த மாட்டேன்னு உனக்கு தெரியும்ல... நான் வரேன்னு வாக்கு தந்திட்டேன். என்னை நம்பி வண்டியில வர நாலு ஜீவன்கள் ரெடியா இருக்காங்க"
"என்ன கூட நாலு பேரு வராங்களா? அப்ப டீசல் காசு கிடைக்குமா"
"ஆமா பின்ன... காசு வாங்காம விட்ருவேனா? இங்க கிளம்பும் போதே கையில வாங்கிட்டு தான் வண்டியில ஏத்துவேன்"
"ஐ... காசு வாங்கறிங்களா... அப்ப சரி... டீசலுக்கு மேல ரேட் போட்டு வாங்குங்க..."
"ஆமா, அப்படித்தான் வாங்குவேன்.. அப்பதானே எனக்கும் போட முடியும்!"
சங்கவி:
" தாயீ... சென்னைக்கு போயிட்டு வரேன்... ஒரு புஸ்தகம் வெளியிட போறேன்..."
"என்ன சென்னைக்கா? புஸ்தகமா?"
"ஏம்மா, அலறுற... புஸ்தகம் தான்.. நானே கைப்பட எழுதின கவிதைகளை புஸ்தகமா போட்டிருக்கேன். அதான் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியில வெளியிட முடிவு செஞ்சிருக்கேன்"
"என்ன நீங்க கவிதை எழுதுனிங்களா? என்னால நம்பவே முடில... சரி.. சரி... அத வெளியிட சென்னை வரை போகனுமா? வேணாம்.. இங்கேயே வெளியிடுங்க... நானும் இருக்கேன்ல"
"அங்க வெளியிட்டா தான் புஸ்தகத்துக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும். நிறைய பேருக்கு புஸ்தகம் ரீச் ஆகும்... "
"அதெல்லாம் வேணாம். இங்கேயே வெளியிடுங்க... சொன்னா கேளுங்க"
யம்மா... அந்த கவிதைய வாசிச்சு பாரு.. எம்புட்டு அருமையா எழுதியிருக்கேன் தெரியுமா? உன் பேரு இருபது கவிதையில யூஸ் பண்ணியிருக்கேன். அதெல்லாம் உனக்கு தெரியாது. உன் பேரு தான் நான் கவிதை புஸ்தகம் போட காரணம்.."
"என்ன என் பேரு கவிதையா இருக்கா? என்னங்க.. எம்மேல எம்புட்டு ஆச வச்சு கவிதை எழுதியிருப்பிங்க!!!! போயிட்டு வாங்க சென்னைக்கு... நல்ல படியா புஸ்தகத்தை வெளியிட்டுட்டு வாங்க... ஆல் த பெஸ்ட்"
"சங்கவி மனசுக்குள்: (ஒரு பொய்க்கு இம்புட்டு மதிப்பா....ஆஆ....")
கோவை நேரம் ஜீவா:
"என்னங்க இப்பதான் சிங்கப்பூர், மலேசியான்னு போய்ட்டு வந்தீங்க. மறுபடியும் எங்க கிளம்புறீங்க?!"
"சென்னைல ஒரு பதிவர் சந்திப்பு அதான் கிளம்பலாம்ன்னு"
"என்னமோ
செய்யுங்க. இங்க நான் புள்ளைங்களை வச்சுக்கிட்டு அல்லல் படுறேன். நீங்க
ஊரு ஊரா சுத்திட்டு, கண்ட ஹோட்டல்லயும் சாப்பிட்டு வந்து ராத்திரி படுத்தா
உங்க வயத்துல கட முட கட முடான்னு சத்தம்
புள்ளைங்கலாம் பயந்து அழுகுதுங்க. இதுதான் கடைசி இனி இப்படியெல்லாம் போக கூடாது"
"சரிம்மா."
"பதிவர் சந்திப்புக்குதானே போறீங்க அப்புறம் எதுக்கு பக்கார்டியா சனியனை எடுத்து வைக்குறீங்க?!"
"நீ இல்லாம கூட இருப்பேன். ஆனா, பகார்டியா இல்லாம என்னால இருக்க முடியாது."
"எல்லாம் சரிங்க, பதிவர் சந்திப்புக்கு அழகான அம்மணிங்க வந்தாங்கன்னு ஓவரா ஜொள்ளு வடிச்சுக்கிட்டு இருக்காதீங்க."
"அம்மா செல்லம், பதிவர் சந்திப்புக்கு வர்ற லேடீஸ்லாம் என் சகோதரிங்க போல! அதனால, அங்க நான் பச்சபுள்ளயா நடந்துப்பேன். நீ பயப்படாம பத்திரமா இரு,"
திண்டுக்கல் தனபாலன்:
"என்னங்க"
"என்னம்மா"
"நீங்க பதிவர் சந்திப்புக்கு போகப்போறது சனிக்கிழமை சாயந்தரமா? இல்ல காலைலயா?"
"நான் இப்பவே கிளம்புறேன்"
"என்னது இப்பவா? இன்னிக்கு வியாழக்கிழமைதாங்க, நிகழ்ச்சி ஞாயித்துக்கிழமைதான்னு சொன்னீங்களே!
"ஆமா, ஆனா, திண்டுக்கல் தனபாலன்னா முதல் ஆளா வருவார்ன்னு எல்லார்கிட்டயும் பேரு எடுத்திருக்கேன். அதனால, நான் வியாழக்கிழமையே போய் மண்டபத்து வாசல்ல படுத்துக்குறேன்"
"எப்படியோ போங்க. நீங்களாச்சு உங்க பதிவுலகமாச்சு."
உணவுலகம் சங்கரலிங்கம்:
"என்னங்க பதிவர் சந்திப்புக்கு போகனும்னு சொல்லிட்டு இருந்தீங்களே! எல்லா திங்க்சையும் எடுத்து வைக்கட்டும்ங்களா?"
"ம்ம்ம்... எடுத்து வையும்மா"
"என்னங்க பதிவர் சந்திப்புக்கு போகனும்னு சொல்லிட்டு இருந்தீங்களே! எல்லா திங்க்சையும் எடுத்து வைக்கட்டும்ங்களா?"
"ம்ம்ம்... எடுத்து வையும்மா"
"ஏய் என்ன சோப்பு எடுத்து வைக்குறே? பிரிச்சது போல இருக்கு!!"
"ஆமாங்க, ஆல்ரெடி நீங்க மட்டும் யூஸ் பண்ணுற சோப் பிரிச்சு ரெண்டு நாள்தான் ஆகுது. அதனால அதையே டப்பாவுல போட்டு தரேன்.
ஸ்டுப்பிட் இப்படியா செய்வாங்க. அதனால, எவ்வளவு கெடுதி வரும் தெரியுமா?"
"ம்ம் சரிங்க, புதுசு எடுத்து வைக்குறேன், பேண்ட், சட்டை, துண்டு சொன்னா எடுத்து வைக்குறேன்"
"ம்ம் அதோ அங்க வச்சிருக்குற பேண்ட் சட்டையை சோப் போட்டு ஊற வச்சு சுடுதண்ணில அலசி, 75 டிகிரி சூட்டுல அயர்ன்பாக்ஸ் வச்சு துணிலாம் அயர்ன் பண்ணனும்"
"சரிங்க. அப்புறம் போற வழில சாப்பிட எதாவது எடுத்து வைக்கவா?"
"நோ நோ அப்படி கொண்டு போறதுனால சுற்றுச்சூழல்லாம் எவ்வளவு பாதிக்குது தெரியுமா? தேவையில்லாத கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சமிளகா கண்ட இடத்துல வீசி எறிஞ்சு, ஈ மொய்ச்சு, இதெல்லாம் தேவையா? அதனால நான் போற வழில பார்த்துக்குறேன்."
"சரி, சரி எப்படியோ உங்களுக்கு தெரியாத ஹைஜீனிக் புட்டா...அங்க போய் இந்த மண்டபம் இத்தனை பேரைதான் தாங்கும். இங்க இத்தனை பேர் ஏன் வந்தீங்கன்னும், காபில ஈ மொய்ச்சது, சாம்பார் சாதத்தை மூடி வைக்கலைன்னு அங்கயும் போய் நொய் நொய்ன்னு அவங்களைலாம் இம்சை பண்ணுவீங்க, அதனால நீங்க ஆணியே புடுங்க வேணாம். அதனால சென்னைக்கு போக வேணாம்"
"ஆத்தா,
மகமாயி, என் செல்லம்...!!! அங்க போய் இப்படில்லாம் பேச மாட்டேன். சுய அறிமுகத்தை
தவிர நான் வேற எதுக்கும் வாயை திறக்கலை போதுமா? ப்ளீஸ் ப்ளீஸ்"
டிஸ்கி:
சென்னை பதிவர் சந்திப்பின் காரணமாக நண்பர்களை கலாய்த்து...
என் பேரு வரும்னு தேடுனிங்களா? நம்மளை நாமளே கலாய்ச்சா நல்லா இருக்காதுல.. ஹி..ஹி...
21 கருத்துரைகள்:
உணவுக்குழு கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க! ஆபீசர் வராரு!
பகார்டியான்னா என்ன?
தமிழ்வாசி:
ஏங்க! இப்படி பம்மிக்கிட்டு நிக்குறீங்க?! என்ன விசயம்?!
அது வந்து, அது வந்து..,
அதான் வந்துட்டீங்கள்ல, சொல்லுங்க..,
செப்.1தேதி சென்னைல ஒரு பதிவர் சந்திப்பு இருக்கு. நான் போய் வரட்டுமா?!
நீங்க போய்ட்டா!? இந்த புது வீட்டுல நான் மட்டும் தனியா இருக்கட்டுமா?! சும்மா இல்லாம தெருவுல போன ஒரு பூனையை கொண்டாந்து வளர்த்துட்டீங்க அது கண்ணை பார்த்தாலே பயமா இருக்கு.
அப்படி சொல்லாதேம்மா! நான் வேணும்னா அதை கூட்டிட்டு போய்டுறேன்.
சரி, ஒரே ஒரு நாள்தான் டைம் சீக்கிரம் வந்துடனும். வந்துதான் புது வீட்டை பெயிண்ட் வாடை போக கழுவி விடனும்
சரிம்மா!!
அங்க போய் ஜீவாக்கூட ஜோடி சேர்ந்துக்கிட்டு எதாவது சாப்பிட்டு வந்தா வூட்டுக்குள்ளாயே சேர்க்க மாட்டேன்.
சரிம்மா! நீங்க பண்ணுற அழிச்சாட்டியத்தை கண்காணிக்க பதிவர்கள் வொயிஃப் சார்பா ராஜியக்காவை அப்பயிண்ட்மெண்ட் பண்ணி இருக்கோம்!! ஜாக்கிரதை.
இது வேறயா?! அந்தம்மா சும்மாவே பார்க்குறதெல்லாம் படமெடுக்கும். நீங்க வேற பர்மிஷன் கொடுத்துட்டீங்களா?! ஒண்ணும் பண்ண முடியாது. அதனால நான் சென்னைக்கே போகலை!!
@குட்டன்
உணவுக்குழு கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க! ஆபீசர் வராரு!
பகார்டியான்னா என்ன?///
உணவுக்குழு கவனம் தேவை..
பகார்டின்னா பகார்டி தான்
@ராஜி
அடங்...
சேச்சே... இப்படி அக்கா கமென்ட் போடுவாங்கன்னு தெரிஞ்சா, நானே பதிவுல என்னை காலாய்ச்சு போட்டிருக்கலாம்...
"ஆமா, ஆனா, திண்டுக்கல் தனபாலன்னா முதல் ஆளா வருவார்ன்னு எல்லார்கிட்டயும் பேரு எடுத்திருக்கேன். அதனால, நான் வியாழக்கிழமையே போய் மண்டபத்து வாசல்ல படுத்துக்குறேன்"\\\\\
ஹாஹா செம்ம காமடி
ha ha kalakal,rasithen...vazthukkal!!
//நீ இல்லாம கூட இருப்பேன். ஆனா, பகார்டியா இல்லாம என்னால இருக்க முடியாது."//
ஹஹஹா.. செம்ம..
super
மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்.
செம கலாய்ப்பு .நண்பரே..
ஆம்பள பதிவர்கள்னா இஷ்டம் போல கலாய்ப்பீங்க, பொம்பள பதிவர்களப் பத்தி ஒண்ணும் எழுத மாட்டியளோ? நல்லா கீதுய்யா ஒங்க நாயம்!
மச்சி நீ புகுந்து விளையாடு...
Post is good!
Raji Akkacomment is Super!
ஹஹஹ தம்பி இப்பவே இப்படியா பதிவர் சந்திப்பு முடிந்து இன்னும் எப்படி எப்படி எழுதுவிங்களோ ?
"முதல் ஆளா வருவார்ன்னு எல்லார்கிட்டயும் பேரு எடுத்திருக்கேன். அதனால, நான் வியாழக்கிழமையே போய் மண்டபத்து வாசல்ல படுத்துக்குறேன்" என்ற வரிகளைப் படித்த போது வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. நல்ல தமாஷ்தான்
"முதல் ஆளா வருவார்ன்னு எல்லார்கிட்டயும் பேரு எடுத்திருக்கேன். அதனால, நான் வியாழக்கிழமையே போய் மண்டபத்து வாசல்ல படுத்துக்குறேன்" என்ற வரிகளைப் படித்த போது வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. நல்ல தமாஷ்தான்
நல்ல வேளை,நான் தப்பிச்சேன் !
தமிழ் வாசி பிரகாஷ் பதிவர்களின் பதிவுகளை மட்டும்தான் வாசிப்பார் என நினைத்து இருந்தேன் ...MInd readingம் செய்வது இப்போதுதான் தெரிகிறது !
எங்க வீட்டம்மா உடனே சரிங்கன்னு பெர்மிஷன் குடுத்துட்டாங்க. அத்தோட விட்டா பரவால்லை. நானும் கார்ல வரேன் வடபழனியில புதுசா ஒரு மால் (Mall) திறந்துருக்கானாமே அங்க என்னெ இறக்கிவிட்டுட்டு போயி நீங்க சாவகாசமா வாங்க. நா ஒங்க தொல்லையில்லாம நாள் முழுக்க ஷப்பிங் பண்றேன்னு சொல்லிட்டாங்க. சென்னையிலயே இருக்கறவங்க கதி இதுதாங்க. ஊர் பக்கம்னா போக வர ஆயிரத்துக்குள்ள முடிஞ்சிருக்கும். இப்ப பாருங்க.. என்னென்னத்த வாங்க போறாங்களோங்கற கவலையில கூட்டத்துல நிம்மதியா இருக்க முடியாதுபோலருக்கு!
சில வரிகள் படித்து சிரிப்பு வந்தது களை கட்ட ஆரம்பிச்சுடுச்சு பதிவர் திருவிழா
ஹா ஹா எல்லோரையும் செம ஓட்டு ஓட்டியிருக்கீங்க! சூப்பர் பிரகாஷ்!!!
செமையா கலாய்ச்சி இருக்கய்யா...
அதுவும் தி.த...தான்...
முதல் ஆள்...செம...