வணக்கம் வலை நண்பர்களே,
வரும் செப்டம்பர் முதல் தேதி சென்னையில் பதிவர்கள் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1. நாம் சந்திக்க விரும்பும் பதிவர்களின் பெயரை மறக்காமல் இருக்க ஒரு தாளில் எழுதி வைக்கலாம்.இதனால் இணையத்தில் முகம் பாரா நண்பர்களாக இருப்பவர்களை மறக்காமல் சந்தித்து நட்புறவை வளர்க்க முடியும்.
2. விழா அரங்கில் நமக்கு அறிமுகமில்லாத பதிவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் நாமாக சென்று நம்மைப் பற்றி அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் பின்னாளில் அவர்களின் வலைப்பூவை வாசிக்கவும், அவர்களிடத்தில் நட்புறவை ஏற்படுத்தவும் உதவியாய் இருக்கும்.
3. நம்மைப் பற்றி, வலைப்பூவைப் பற்றி பிறரிடத்தில் அறிமுகம் செய்கையில் அவர்கள் நம்மை முழுமையாக அறியும் வண்ணம், தெளிவாக குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக "திடங்கொண்டு போராடு" என்றும், வலைப்பூ முகவரியாக "சீனுகுரு" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார்.
இவ்வாறு பல பெயரில் இருந்தால் பெயரில் குழப்பமாக இருக்கலாம். இதனால் நாம் நம்மைப் பற்றி கூடுதல் தகவல்களை குறிப்பிட்டால் மற்றவர்கள் அறிய எளிதாக இருக்கும்.
4. முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.
5. பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.
6. மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். அதே சமயம் முடிந்தவரை அமைதி காக்கவும் தவறக் கூடாது.
7. புதிய பதிவர்களை வரவேற்று, விழா அரங்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு பதிவுலக புரிதலும், பதிவர்களின் நட்பும் கிடைக்கப் பெறும்.
இன்னும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
பதிவர் விழாவில் பப்பே முறையில் வழங்கப்படும் மதிய உணவுகளின் மெனு:
அசைவம்
பைனாப்பிள் கேசரி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
சைவம்
பைனாப்பிள் கேசரி
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா
28 கருத்துரைகள்:
// "திடங்கொண்டு போராடு" என்றும், வலைப்பூ முகவரியாக "சீனுகுரு" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார். //
அவர் ஒரு மல்டிபிள் பர்சனாலிட்டி, அதான்.. ;-)
பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே....இது எனக்கு ரொம்பப் பிடிச்சியிருக்கு...என் வெளிப்பாடு என் வேலைக்குகூட பாதிப்பு வரலாம் அப்படியொரு மன்னாரன் கம்பெனி
அனைத்தும் நம்மை நாமே நெறி படுத்திக்கொள்ளும் விதிகள். தானாக சென்று அறிமுகம் செய்துகொள்வது நல்ல விஷயம்.
இரண்டாவது விஷயம் மிக சரியான ஒன்று
நல்ல கருத்துகள்தான்
//உதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக "திடங்கொண்டு போராடு" என்றும், வலைப்பூ முகவரியாக "சீனுகுரு" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார். //
ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் மற்ற பதிவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்தான் என்று சொல்ல இதைவிட வேறு என்ன வரலாற்று ஆதாரம் வேண்டும்...
லெட்ஸ் செலிப்ரேட் :-)
அவசியமான அருமையான பதிவுண்ணே...
வரிசையா பிரபல பதிவர்களையே அறிமுகப்படுத்தாம இடையில் புது பதிவர்களை அறிமுகப்படுத்தலாம். ஏன்னா, பிரபல பதிவர்களை முதல்லியே அறிமுகப்படுத்திட்டா கூட்டம் கலைய வாய்ப்புண்டு!!
தங்களுக்கு தெரிந்த பதிவரை அடுத்தவருக்கு அறிமுகப்படுத்தலாம்.
நல்ல கருத்துகள்.
மிக நல்ல குறிப்புகள்...
நன்றி
எல்லாமே அவசியமான ஆலோசனைகள்!! விழா சிறப்படைய உங்களின் இந்த குறிப்புக்கள் பேருதவியாக இருக்கும்!!
அவசியமான போஸ்ட் பிரகாஷ்!
ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் மற்ற பதிவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்தான் என்று சொல்ல இதைவிட வேறு என்ன வரலாற்று ஆதாரம் வேண்டும்... ///
ஹா ஹா ஹா
நல்ல யோசனைகள் மற்றும் அறிவுரைகள்.
// முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும். //
டாஸ்மார்க்கிற்கு பக்கத்தில் தான் நிகழ்ச்சி நடக்கும் இருக்குதாம் இப்படின்னு கிசு கிசு உலாவுது மச்சி...
சிக்கன் பிரியாணி போச்சே எனக்கு
நல்ல அறிவுரைகள்....
கடைபிடித்தால் நன்று.
விழாவில் பங்கேற்கும் அணைவரின் மொபைல் நம்பரை(அவர்கள் சம்மததுடன்) ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து அனைவருக்கும் வழங்களாமே!!!!
அனைவரையும் இனைத்து ஒரு குரூப் போட்டோ!!
மகிழ்ச்சி. பதிவர் சந்திப்பு நல்ல முறையில், சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
விழா நடக்கும் நாளில்...என்னை போன்றோர் திரட்டிகளில் அன்றைய பதிவை submitசெய்ய laptopவசதி செய்தால் நல்லது !
Very good. Agree with most of your suggestions
நல்ல ஆலோசனைகள் நிச்சயமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை.
நல்ல ஆலோசனைகள் நிச்சயமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை.
கலந்துக்கற பதிவர்களோட பெயர் போட்ட பேட்ஜ் மாதிரி ஏதாச்சும் ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா? அப்படியிருந்தா அந்த பேட்ஜ பார்த்தே பதிவர்களை அடையாளம் கண்டுபிடிச்சிறலாமே. அதற்குண்டான சிலவை எல்லா பதிவர்கள் கிட்டருந்தும் கலெக்ட் பண்ணிறலாம். இதுவரைக்கும் செய்யலன்னா இப்பவும் லேட் இல்லை.
இன்னொரு ஐடியா. வேணும்னா செய்யலாம். அரங்க வாசல்ல ஒரு நன்கொடை பெட்டி வைக்கலாம். இதுவரைக்கும் அனுப்ப முடியாதவங்க தங்களால முடிஞ்சத அந்த பெட்டியில போடலாமே. விழா செலவுகள சரிகட்றதுக்கு உதவியா இருக்கும்.
விசிலடித்து கைத்தட்டி அமைதி காக்க வேண்டுமா?
எங்க வாத்தியாரே தேவலாம் போலிருக்கே?!!
உங்ககிட்ட சொன்ன மாதிரியே இந்த முறையும் வர முடியாவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. எனினும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க....
பதிவர்கள் அல்லாதோர் வர கூடாதோ...? ம்ம்ம் வாழ்த்துகள்.