வணக்கம் வலை நண்பர்களே,
சென்னையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் தாங்கள் எழுதியவற்றை புத்தகமாக வெளியிட ஆயத்தமாகி வரும் இவ்வேளையில் இன்னும் சில பதிவர்கள் தங்கள் வலைபதிவுகளை ஒன்று திரட்டி புத்தகமாக வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அவர்கள் யாரென்று பார்ப்போமா?
மெட்ராஸ்பவன் சிவக்குமார்:
இவர் தான் எழுதிய வரலாற்று சிறப்புமிக்க சினிமா விமர்சனங்களையும், விளையாட்டு தொடர்பான பதிவுகளையும் ஒன்று திரட்டி புத்தகமாக தயார் செய்து வருகிறார். அட்டை பட டிசைனுக்கு பாலகணேஷ் அவர்களை தொடர்பு கொண்டதாகவும், உடனே அட்டை டிஸைன் வேண்டுமென்றால் ஐம்பதாயிரம் ரூபாய் செலவு ஆகும் என சொன்னதால் பிரவுன்சீட் ஒரு குயர் வாங்கி தனது புத்தகத்திற்கு அட்டை போட்டுக் கொண்டிருக்கிறாராம் சிவா.
புத்தகத்தின் தலைப்பு:விளையாட்டு மேதை
ஆரூர் மூனா செந்தில்:
இவர் சினிமா ரிலீஸ் ஆன அன்றே முதல் ஷோ படம் பார்த்து, அதன் விமர்சனமும், படம் பார்க்க சென்ற கதையையும் முதல் பதிவாக வெளியிட்டு பரபரப்பை கூட்டுவார். அந்த பதிவுகளை ஒன்று திரட்டி சுமார் நூறு பக்கமுள்ள புத்தகம் ஒன்றை ஒற்றை ஆளாக டைப் செய்து செராக்ஸ் எடுத்து வருவதாக தெரிகிறது. இவர் அட்டை படத்துக்காக பாலகணேஷ்க்கு ஐம்பதாயிரம் தர சம்மதித்துள்ளதாக தெரிகிறது.
புத்தகத்தின் தலைப்பு: பட ரிலீசும் முதல் ஷோ டிக்கெட்டும்
பிலாசபி பிரபாகரன்:
இவர் தனது அந்தமான் பயண பதிவுகளையும், டாஸ்மாக் பதிவுகளையும், சில தத்துவ கட்டுரைகளையும் கடைந்தெடுத்து வரலாற்று புத்தகமாக தயார் செய்து வருகிறார். இவர் பிரபல பதிவர் ஒருவரிடம் புத்தகத்தை டைப் செய்ய கொடுத்திருப்பதாகவும், கடைசி நேரத்தில் அவரது கம்ப்யூட்டர் புட்டுகிட்டதால் பக்கத்து தெருவில் இருக்கும் அழகான பிகரிடம் டைப் செய்ய தந்துள்ளதாகவும், அந்த பிகரே அட்டைப் படமும் தயார் செய்து விடுவதாகவும் வாக்கு கொடுத்திருக்கிறதாம். பிகர் கைவண்ணத்தில் புத்தகம் உருவாவதால் விலை சற்று அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
புத்தகத்தின் தலைப்பு: பிலாசபியும் தத்துவமும்
வீடு சுரேஸ்குமார்:
இவர் தான் வரைந்த ஓவியங்களையும், பதிவில் எழுத முடியாத சில சினிமாக்களின் விமர்சனங்களையும் புத்தகமாக எழுதி வருவதாகவும், அட்டை டூ அட்டை வண்ண வண்ண படங்களுடன் ஆயில் பிரிண்ட்டில் தயாராகி வருவதாகவும் தெரிகிறது. புத்தகம் கண்ணைக் கவரும் விதமாக உருவாவதால் விலை சற்று அதிகமாக இருக்கும் என தெரிகிறது. முதலில் வாங்கும் நூறு நபர்களுக்கு பத்து சதவீதம் கழிவு உண்டு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தகத்தின் தலைப்பு: வண்ணக்கலர்
இன்னும் யாரேனும் புத்தகம் வெளியிட விருப்பமா? உடனே தொடர்பு கொள்க நாய்நக்ஸ் நக்கீரன்.
11 கருத்துரைகள்:
/இவர் தான் எழுதிய வரலாற்று சிறப்புமிக்க சினிமா விமர்சனங்களையும்/
we will meet..wil meet. meet..
அடடா இப்பவே ஆரம்பிச்சாச்சா ஹா ஹா ஹா ஹா....
மொத்தம் எத்தன புத்தக வெளியீடு..?
ஹா ஹா ஹா ஹா....
சிவா அட்டை போட்டவுடன் மறக்காமல் லேபிள் ஒட்டிவிடவும்
புத்தகத்தை அவசியம் வாங்கனும்ன்னுலாம் எதும் கண்டிசன் இல்லியே!!
விழா களை கட்டுது;எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே!
அட்டைப்படத்துக்கு ஐம்பதாயிரமா...ஒரே அக்கப்போராக அல்லவா உள்ளது. :-)
tha.ma.3!
//பதிவில் எழுத முடியாத சில சினிமாக்களின் விமர்சனங்களையும்//
அவளோட ராவுகள்... பாப்பா போட்ட தாழ்பாள்... ?
நூல் வெளியிடும் எல்லா பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ஆமா, நீங்க வெளியிடலையா ப்ரகாஷ்??