வணக்கம் வலை நண்பர்களே,
பேஸ்புக்கில் வெறும் ஒரு வரி ஸ்டேடஸ் போட்டாலும் ஒர்த்துன்னு?? லைக்ஸ், கமெண்ட்ஸ் என கிடைகிறது. அந்த ஸ்டேடஸ் இங்க பிளாக்கில் பதிவா போட்டா ஓர்த்தா இருக்குமா? இருக்காதாதா? பார்ப்போமா?
இதோ இங்கே எனது பேஸ்புக் ஸ்டேடஸ்:
வேலை வாய்ப்புக்காக சீனா இளைஞர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கிறார்கள்....
ஜொள்ளுக்காக முகநூலில் இளைஞர்கள் பெண்கள் பெயரில் பேக் ஐடி வைத்துக் கொள்கிறார்கள்...
என்னமோ போங்கையா!!!!!!
சண்டை நல்லது....
முகநூலில் சண்டை நல்லது...
பொழுது ஈசியா போகும்....
மேட்டூர் அணை, 40வது முறையாக நேற்று, அதன் முழு கொள்ளளவும் நிரம்பியது. //// செய்தி.....
கழக கண்மணிகளே... அம்மா சொன்னதால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது என சொல்லிராதிங்க...
ஐயா தொடர்ந்து கடிதம் எழுதியதால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது என சொல்லிராதிங்க...
கர்நாடகாவில் மழை அதிகம்.. அதனால அவங்க அணைகள் நெறஞ்சு அதிகப்படியான தண்ணீரை தான் தொறந்து வுட்டு நம்ம மேட்டூர் அணை நிறைஞ்சிருக்கு...
அவ்ளோ தான் மேட்டரு....
காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரை சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பின் வெள்ளப் பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டுள்ளனர்.
உயிரை பயணம் வைத்து துணிகரமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மீட்புப் படையினரை கரையோரத்தில் நின்றிருந்த மக்களும், உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மீட்புப் படையினரின் துரித பணியை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.///// இது தினமலர் ஆன்லைன் செய்தி...
அதுக்கு ஒருத்தர் எழுதிய கமென்ட்:
நேத்து வெள்ளத்துல சிக்கனுவங்களை இன்னிக்கி காலைலதான் மீட்டாங்களா ? உயிரை பணயம் வைச்சது மீட்பு காரனுகளா? இல்லை நேத்து இருந்து வெள்ள தண்ணில சிக்குனுவங்களா ? ////
எப்புடி கேட்கிறான் பாருங்க....
கொய்யாபழம் வாங்க விரும்பி கிலோ எவ்வளவு என கேட்டு, கொஞ்சம் ரேட் கொறச்சு கொடுங்கன்னு கேட்க, முடியாதுன்னு சொல்லிட்டார்.
நான் வாங்கும் போதே, மூணு பேர் வாங்கினாங்க.. ஒருத்தரும் பேரம் கேட்கல...
ரொம்ப முன்னேறிட்டோமா? பொருளாதாரத்தில்....
டவுட்டா இருக்கு...
பார்த்தேன்...
பார்த்தாள்.....
வீழ்ந்தேன்....
கல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு???
அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே?///
பிளக்ஸ் பேனர் கலாச்சாரம்...
இம்புட்டு மொக்கையாவா இருக்கு????? ஹாஹா அப்படிதானே யோசிக்கறிங்க...
சென்னையில் நடைபெற இருக்கும் பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பின் இந்த பதிவை வாசிக்கவும்.

***********************************
சண்டை நல்லது....
முகநூலில் சண்டை நல்லது...
பொழுது ஈசியா போகும்....
***********************************
ஒரு நாளுக்கு அரை மணி நேரம் தொடர்ந்து ட்ராபிக்ல பைக் ஓட்றது எம்புட்டு சிரமமா இருக்கு?????
எந்த நேரமும் பைக்ல சுத்தற ரெப்-கள் எப்படி சமாளிக்கறாங்க???? — feeling tired.
எந்த நேரமும் பைக்ல சுத்தற ரெப்-கள் எப்படி சமாளிக்கறாங்க???? — feeling tired.
***********************
மேட்டூர் அணை, 40வது முறையாக நேற்று, அதன் முழு கொள்ளளவும் நிரம்பியது. //// செய்தி.....
கழக கண்மணிகளே... அம்மா சொன்னதால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது என சொல்லிராதிங்க...
ஐயா தொடர்ந்து கடிதம் எழுதியதால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது என சொல்லிராதிங்க...
கர்நாடகாவில் மழை அதிகம்.. அதனால அவங்க அணைகள் நெறஞ்சு அதிகப்படியான தண்ணீரை தான் தொறந்து வுட்டு நம்ம மேட்டூர் அணை நிறைஞ்சிருக்கு...
அவ்ளோ தான் மேட்டரு....
**************************
காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரை சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பின் வெள்ளப் பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டுள்ளனர்.
உயிரை பயணம் வைத்து துணிகரமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மீட்புப் படையினரை கரையோரத்தில் நின்றிருந்த மக்களும், உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மீட்புப் படையினரின் துரித பணியை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.///// இது தினமலர் ஆன்லைன் செய்தி...
அதுக்கு ஒருத்தர் எழுதிய கமென்ட்:
நேத்து வெள்ளத்துல சிக்கனுவங்களை இன்னிக்கி காலைலதான் மீட்டாங்களா ? உயிரை பணயம் வைச்சது மீட்பு காரனுகளா? இல்லை நேத்து இருந்து வெள்ள தண்ணில சிக்குனுவங்களா ? ////
எப்புடி கேட்கிறான் பாருங்க....
**************************
கொய்யாபழம் வாங்க விரும்பி கிலோ எவ்வளவு என கேட்டு, கொஞ்சம் ரேட் கொறச்சு கொடுங்கன்னு கேட்க, முடியாதுன்னு சொல்லிட்டார்.
நான் வாங்கும் போதே, மூணு பேர் வாங்கினாங்க.. ஒருத்தரும் பேரம் கேட்கல...
ரொம்ப முன்னேறிட்டோமா? பொருளாதாரத்தில்....
டவுட்டா இருக்கு...
*************************
பார்த்தேன்...
பார்த்தாள்.....
வீழ்ந்தேன்....
**************************
கல்யாண மணமக்கள் போட்டோவை டிஸைன் டிஸைனா போட்டு, திருஷ்டி பட வச்சு???
அப்புறமா திருஷ்டி பட்டுருச்சுன்னு சுத்தி போடுவாய்ங்க. மணமக்கள் படத்தை பப்ளிக்கா பகட்டா காட்டுறதை வுட்டுட்டு சிம்பிளா வைக்கலாமே?///
பிளக்ஸ் பேனர் கலாச்சாரம்...
**********************
இம்புட்டு மொக்கையாவா இருக்கு????? ஹாஹா அப்படிதானே யோசிக்கறிங்க...
சென்னையில் நடைபெற இருக்கும் பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பின் இந்த பதிவை வாசிக்கவும்.
29 கருத்துரைகள்:
நிமிட நேரத்தில் எழுதும் விசயங்கள் நொடிப் பொழுதில் நீர்த்துப் போகத்தான் செய்யும்.
ஆ சண்டையா......?
ஆஹா இபிடிஎல்லாமும் பதிவை தேத்தலாமா அவ்வ்வ்வ்....
பார்த்தேன்...
பார்த்தாள்.....
வீழ்ந்தேன்....
>>
இதுக்குதான் வண்டில போகும்போது பராக்கு பார்க்க கூடாதுங்குறது!!
இம்புட்டு மொக்கையாவா இருக்கு?????
>>
இதை நாங்க வேற சொல்லனுமா?!
@ஜோதிஜி திருப்பூர்
நிமிட நேரத்தில் எழுதும் விசயங்கள் நொடிப் பொழுதில் நீர்த்துப் போகத்தான் செய்யும்///
உண்மை தான் அண்ணே... பிளாக்கில் நொடி பதிவு எழுத முடியாது...
//கொய்யாபழம் வாங்க விரும்பி கிலோ எவ்வளவு என கேட்டு, கொஞ்சம் ரேட் கொறச்சு கொடுங்கன்னு கேட்க, முடியாதுன்னு சொல்லிட்டார்.
நான் வாங்கும் போதே, மூணு பேர் வாங்கினாங்க.. ஒருத்தரும் பேரம் கேட்கல//
அடங் "கொய்யா" ல
சர்தான்.... :-)
//பார்த்தேன்...
பார்த்தாள்.....
வீழ்ந்தேன்....//
பாத்து நடந்து வரக்கூடாதா ...ஐ மீன் தரையைப் பாத்து நடந்து வரக்கூடாதா ...
இங்க விழுந்த கமெண்டு, ஓட்டு ,ஹிட்ஸ் அளவுக்கு கூட அங்க லைக் விழுந்திருக்காது. பிளாக்கர் ப்ளாகர்தான்... பேஸ்புக் பேஸ்புக்குதான்.. பேஸ்புக்கில் கலக்குபவர்கள் பிளாக்கில் கலக்க முடியாது...பிளாக்கரில் கலக்குபவர்கள் பேஸ்புக்கில் ஜொலிக்க முடியாது.
முகநூல்ச்சண்டை பொழுது போகும் :)))))
கொஞ்சம் நீண்ட செய்திகளாய் உள்ளது...எழுதிக்கொண்டே இருங்கள்..இன்னமும் crisp ஆகி விடும்
ரெண்டும் நல்லாத்தான்யா இருக்கு, ரெண்டையும் சரியா கையாண்டா போதும்....!
முகநூல் பதிவு ஹைக்கூ கவிதை. வலைத்தளம் புதுக்கவிதை?note. மரபுக் கவிதை என்று சொல்லவில்லை.
பேஸ்புக்ல உடனடி முடிவு கிடைக்கும்.. பிளாக்ல அப்படி இல்ல.. ஒரு வருஷம் கூட ஆகும்...!!!
அது நிலைக்காது போயிட்டே இருக்கும்...!
இது நிலைக்கும்.. எப்பவுமே..!!
முகநூலில் பகிர்ந்தவற்றை தொகுத்து இங்கே பகிரலாம்...
பதிவை எப்படியாவது தேத்தி பகிர வேண்டும்... முகநூலிலோ இரண்டு வரியில் ஸ்டேட்டஸ் போட்டாலே போதும்...
@MANO நாஞ்சில் மனோ
ஆ சண்டையா......?
ஆஹா இபிடிஎல்லாமும் பதிவை தேத்தலாமா அவ்வ்வ்வ்.... ///
ஹி...ஹி... தேத்தலாம் மக்கா
@ராஜி
பார்த்தேன்...
பார்த்தாள்.....
வீழ்ந்தேன்....
>>
இதுக்குதான் வண்டில போகும்போது பராக்கு பார்க்க கூடாதுங்குறது!! ////
பார்ப்போம்...
@சேக்காளி
நான் வாங்கும் போதே, மூணு பேர் வாங்கினாங்க.. ஒருத்தரும் பேரம் கேட்கல//
அடங் "கொய்யா" ல ///
ஹா ஹா.. ஆமா கொய்யா தான்...
@Manimaran
பாத்து நடந்து வரக்கூடாதா ...ஐ மீன் தரையைப் பாத்து நடந்து வரக்கூடாதா ... ///
ஐ//மீன், அவளைத் தான் சொல்லறிங்க, தரையை பார்த்து வரணும்னு...
@Manimaran
இங்க விழுந்த கமெண்டு, ஓட்டு ,ஹிட்ஸ் அளவுக்கு கூட அங்க லைக் விழுந்திருக்காது. பிளாக்கர் ப்ளாகர்தான்... பேஸ்புக் பேஸ்புக்குதான்.. பேஸ்புக்கில் கலக்குபவர்கள் பிளாக்கில் கலக்க முடியாது...பிளாக்கரில் கலக்குபவர்கள் பேஸ்புக்கில் ஜொலிக்க முடியாது. ///
உண்மை தான் நண்பரே,
பேஸ்புக்ல உங்களோட ஒரு சில ஸ்டேட்ஸ் தான் படிக்க முடிஞ்சது! இங்க மொத்தமா படிச்சேன்! சூப்பர் ஸ்டேட்ஸ்! வாழ்த்துக்கள்!
நன்றி....!!! மீள் பதிவுக்கு....
//நேத்து வெள்ளத்துல சிக்கனுவங்களை இன்னிக்கி காலைலதான் மீட்டாங்களா ? உயிரை பணயம் வைச்சது மீட்பு காரனுகளா? இல்லை நேத்து இருந்து வெள்ள தண்ணில சிக்குனுவங்களா ? //////
நல்லா கேக்குறாங்கய்யா கேள்வி ...!சூப்பரு ..
ஆமாண்ணே ஒரு பதிவு எழுத எம்புட்டு நேரம் ஆகுது ஆனா ஒருதடும் கருத்து சொல்றது இல்ல அதே அங்க ஒரு லைக் க்ளிக் பண்ணுன போதும்
அந்த லைக் கும் பொண்ண இருந்தா தான் கிடைக்கும்
எனக்கென்னவோ பதிவின் சுகம் முகநூலிலிருப்பதாகத் தோன்றவில்லை!
//பார்த்தேன்...
பார்த்தாள்.....
வீழ்ந்தேன்....
//
ரசித்தேன்.....
இன்னும் முக நூலில் அத்தனை பிடிப்பு ஏற்படவில்லை..... :)
இத வச்சே ஒரு பதிவு தேத்திட்டீங்க!
எங்க போனாலும் முதல் போடாம யாவரம் ஆகாது...ஹிஹி!
எனக்கென்னமோ ப்ளாக் தான் பெட்டர் என்று தோன்றுகிறது மக்கா!