நம்ம ஏஞ்சல் அக்கா இருக்காகல... அவுக பத்து கேள்விய கேட்டுப்புட்டு, அதுக்கு பதிலும் சொல்லனும்னு மெரட்டிட்டு போயிருக்காக. அவுக பதிலை படிச்சா ரொம்ப பயமா இருக்குது. ஆமால்ல, அம்புட்டு இன்வால்மென்ட்டா எழுதியிருக்காக... சரி... சரி.. அவுகல பத்தி சொன்னது போதும்.. நீ கேள்விக்கு பதில் சொல்றியா? இல்லையான்னு? நீங்க ஆர்வத்துல? கேட்கறது என்னோட காதுல அறையுது.... ம்ஹும்... ரொம்ப வலிக்குது... இதோ சொல்லிப்புடுறேனுங்க....
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
அவ்வ்வ்வவ்... மொத கேள்வியே இப்டியா? ஏனுங்.. நூறு வயசு வர இருப்போம்னு நம்பிக்கைல கேட்டுப்புட்டிங்களே... சரி.. சொல்றேன்.. கேட்டுக்கங்க...
"எப்பவும் போல, பைக்ல மனைவிய கூட்டிக்கிட்டு கோயில் குளமா, ஹோட்டல் பிரியாணின்னு ஊரை சுத்திட்டு செம ஜாலியா கொண்டாடுவேனுங்க...."
2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
ஆங்.... செம கேள்விங்க... மேல கேட்டிங்கல்ல கேள்வி, அந்த நூறு வயசு கூட பத்தாது கத்துக்கறதுக்கு... அம்புட்டு இருக்கு இந்த ஒலகத்துல... நாம கத்துகிட்ட, கத்துக்கிற விசயங்களை மத்தவங்க தெரியாம முழிச்சுட்டு இருக்கும் போது நாம கண்டும் காணாம போறோம்ல... அப்படி இருக்கக் கூடாதுங்க.. அவங்களுக்கும் நாம கத்துத் தரனும்.. அதே போல மத்தவங்க கத்துக்கிட்ட விசயங்களை நானும் எப்படியாச்சும் கத்துக்கணும்னு நெனக்கிறேன். அதுக்கு சொந்தக்காரங்க, நண்பர்கள் கிட்ட கொஞ்சம் ஜோவியலா இருக்கணும்னு நெனக்கிறேன். அதை கத்துகிட்டாலே எனக்கு வேணுங்கறது கத்துக்கிருவேன்.
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
இந்தக் கேள்விய பாத்தவுடனே சிரிச்சேனுங்க.. அதான் இப்போதைக்கு கடைசி... ஆங்.. இருங்க.. அதைவிட இந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னு நெனச்சு சிரிச்சது தான் கடைசி சிரிப்புங்க. ஹா.. ஹா....
இன்னைக்கு காலைல டீ போட்டு மனைவிக்கு தந்தேன்... டீ எப்புடி இருக்குனு கேட்கக் கூடாத கேள்விய கேட்டேன்... ம்ம்ம்.... எப்பவும் போல நல்லாயிருக்கேன்னு சொன்னா... ம்ஹும்... மனசுக்குள்ள சிரிச்சுட்டே இப்டி சொல்லியே டீ போட வச்சுட்டியே இன்னைக்கும்!!!!
ஆங்... சொல்லக் கூடாதத சொல்லிட்டேனா?
4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
ஏனுங்க... இப்டி ஒரு ஆச? ம்ம்ம்.. சொல்றேன் கேட்டுக்கங்க. கண்டிப்பா அந்த 24 மணிநேரம் சண்டே அன்னிக்கு இருக்கக் கூடாது. அன்னிக்கு தான் நிம்மதியா தூங்கற நாள். சரி..சரி... வேற நாள் பவர்கட்ன்னு வச்சுக்கோன்னு சொல்றிங்களா? சரி... வச்சுக்கறேன். அன்னிக்கு மொபைல் சார்ஜ் சீக்கிரமா கொறஞ்சு போயிரும். ஏன்னா, ஹாயா... மல்லாக்கா படுத்து விட்டத்த பார்த்துட்டு மொபைல்ல இருக்கற இளையராஜா ஹிட்ஸ் கேட்டுட்டே ஈபி காரனை திட்டிட்டு இருப்பேன்.
அப்புறமா வாசிக்காம இருக்கற புக்ஸ் வாசிச்சு முடிக்கணும்னு எடுத்து வச்சுட்டு தூங்கினாலும் தூங்கிருவேன். இப்படியே பல நாட்கள் தூங்கியிருக்கேன். ஹி..ஹி..
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
ஆகா.... அருமையா கேள்வி கேட்டிங்க.. இப்பவரை உங்களுக்கு நாங்க இருந்தோம்.. நல்லது கேட்டதை நாங்களே பார்த்துகிட்டோம். இப்போ உனக்குன்னு ஒரு பேமிலி வந்திருச்சு. உனக்குன்னு பொறுப்பு கூடிருச்சு. அதனால, சின்னப்புள்ளையாட்டம் விவரமில்லாம இருக்காம, ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா, அன்பா இருந்து உங்க வாழ்க்கைய சிறப்பா கொண்டு போங்க.
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
எப்புடிங்க இப்டியெல்லாம் கேள்விய யோசிக்கறிங்க? இப்போதைக்கு உலகத்தில் எல்லோருக்கும் பொதுவா இருக்கற பிரச்சனை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுட்டே வர்றது தான். குப்பைகள் வர்ற காலத்துல குறையவே குறையாது. அதனால அதை ரீசைக்கிள் செஞ்சு பயனுள்ளவையா மாத்த முயற்சிப்பேன்.
நம்மூர்ல மரங்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணக்கூடிய நெலமைக்கு வந்திருச்சு. அதனால மரங்கள் நட்டு வைப்பேன். உலகம் முழுசும் பசுமையை கொண்டு வர முயற்சிப்பேன். இப்படியெல்லாம் நான் செய்யணும்னா உலகம் எனக்கு கீழ வரணும். நான் கண்ட்ரோல் பண்ணனும்... ஹா ஹா...
நம்மூர்ல மரங்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணக்கூடிய நெலமைக்கு வந்திருச்சு. அதனால மரங்கள் நட்டு வைப்பேன். உலகம் முழுசும் பசுமையை கொண்டு வர முயற்சிப்பேன். இப்படியெல்லாம் நான் செய்யணும்னா உலகம் எனக்கு கீழ வரணும். நான் கண்ட்ரோல் பண்ணனும்... ஹா ஹா...
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
எனக்கு நெசமாவே அட்வைஸ் கேட்கறது பிடிக்காது. ஆனா, நானா சில விசயங்களுக்கு அட்வைஸ் வேணும்னு நெனச்சு கேட்டிருக்கேன் நான் நம்புற சிலர் கிட்ட. ஆனா அட்வைஸ் கேட்கறதுல வயசு வித்தியாசம் மட்டும் பாக்க மாட்டேன். ஹி..ஹி... ஏன்னா நமக்கு அட்வைஸ் முக்கியம்ல..
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
இன்னைக்கு இருக்கற காலத்துல தப்பான தகவல் பரப்ப ரொம்ப பேரு இருக்காங்க. இன்னாருதான் வதந்தியை பரப்புனார்னு தெரிஞ்சா அந்தப் பக்கம் நாம தான் சாக்ரதையா இருக்கணும். ஆனா, இப்பவரை அப்டி ஆரும் இல்லீங்க.
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இறப்புங்கறது இன்னாருக்கு தான்னு எப்பவும் சொல்ல முடியாது. இறப்பினால் ஒரே நாளில் வாழ்க்கையே வெற்றிடமா போன அந்த நண்பரது குடும்பத்தை ஆறுதல் மூலமா மீட்டெடுக்க வைக்கணும்.
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
ஏனுங்... பிடிக்காத கேள்வி கேட்டுப்புட்டிங்க... ஏன்னா தனிமைங்கறது என்னைப் பொறுத்தவரை நம்மை சோம்பேறி ஆக்கற விஷயம்.. இப்போ நெட் இருக்கறதால எதோ தனிமைங்கற பீலிங் இல்லாம நம்ம பிரண்ட்ஸ் கூட இருக்காங்கற பீலிங் இருக்குது. அதனால, சில சமயம் தனிமையும் புடிச்சிருக்கு.
ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... ஸ்கூல் எக்ஸாம்ல பிட் அடிச்சு எழுதினாலும் ரெண்டு மூணு கேள்விக்கு பதில் எழுத மாட்டேன். ஆனா இங்க பத்துக்கும் பத்து கஷ்டப்பட்டு இருக்கற கொஞ்சூண்டு மூளையை கசக்கி எழுதிட்டேன்.. பாஸாகற அளவுக்காச்சும் மார்க் போடுங்க.
வாங்க நண்பர்களே...
சீனா ஐயா - ஐயா இப்போ பிரீயா இருக்கார். அவரையும் பதில் சொல்ல வைப்போமே...
ஸ்கூல்பையன் - இவுரு ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கறதுனால ஈசியா பதில் சொல்லிருவாரு...
செங்கோவி - வருங்கால சினிமா டைரக்டர் கிட்டேயே கேள்வி கேட்டுபுட்டோம்ல...
காயத்ரி தேவி - இவுக காலேஜ்ல கேள்வி கேப்பாக... இவுக கிட்ட நான் கேள்வி கேட்கறேன்.
ராம்குமார் - இவரிடம் எதார்த்தமான பதில்கள் கிடைக்கும்னு நினைக்கிறேன்.
நீங்க அல்லாரும் கேள்விக்கு பதில் சொல்லி பாஸ் மார்க்காச்சும் வாங்கிருங்க....
டிஸ்கி: தலைப்பு தலைப்புகாக மட்டுமே...
24 கருத்துரைகள்:
ஹா ஹா :) சூப்பர்ப் எல்லா கேள்விகளுக்கும் அழகா பதில் சொல்லியிருக்கீங்க ..
இந்த கேள்விங்களை தயார் செய்தது நம்ம சகோதரர் மதுரை தமிழன்தான் :)
@Angelin
ஹா ஹா :) சூப்பர்ப் எல்லா கேள்விகளுக்கும் அழகா பதில் சொல்லியிருக்கீங்க ..//
அப்ப பாஸா??
அவுக பதிலை படிச்சா பயம்மா // நானே ரொம்ப பயங்காட்டகூடாதின்னு பாதி உண்மையைத்தான் சொன்னேன் :)
@மதுரை தமிழன் அடுத்த second பார்ட் ஆரம்பிங்க கேள்விங்களை :)..பிரகாஷுக்கு ரொம்ப பயம்மா இருக்காம்
//எப்பவும் போல, பைக்ல மனைவிய கூட்டிக்கிட்டு கோயில் குளமா, ஹோட்டல் பிரியாணின்னு ஊரை சுத்திட்டு செம ஜாலியா கொண்டாடுவேனுங்க//
ரொம்ப அழகான அருமையான பதில் ..இப்படித்தான் சந்தோஷமாக இருக்கணும்
அக்கா உங்களோட பெர்த்டெக்கு ஸ்பெஷல் fridge வாங்கி தருவேனாம் :)
அதில தக்காளி சட்னி வக்க நிறைய ஸ்பேஸ் இருக்கும் :))
அப்புறம் எல்லா நாட்டு டீ பாக்கட்டும் ஒவ்வொரு கிலோ அனுப்பிடுவேன் :)
//எடுத்து வச்சுட்டு தூங்கினாலும் தூங்கிருவேன். இப்படியே பல நாட்கள் தூங்கியிருக்கேன். ஹி..ஹி..//
அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்னா ஒற்றுமை :)
@Angelin
@மதுரை தமிழன் அடுத்த second பார்ட் ஆரம்பிங்க கேள்விங்களை :)..பிரகாஷுக்கு ரொம்ப பயம்மா இருக்காம் //
போதும்.. ஒரு பார்ட்டே
@Angelin
ரொம்ப அழகான அருமையான பதில் ..இப்படித்தான் சந்தோஷமாக இருக்கணும்
அக்கா உங்களோட பெர்த்டெக்கு ஸ்பெஷல் fridge வாங்கி தருவேனாம் :)
அதில தக்காளி சட்னி வக்க நிறைய ஸ்பேஸ் இருக்கும் :))
அப்புறம் எல்லா நாட்டு டீ பாக்கட்டும் ஒவ்வொரு கிலோ அனுப்பிடுவேன் :)///
அவ்வ்வ்வ்... மீ எஸ்கேப்
100வது பிறந்த நாள் பிரியாணில இருக்கும் லெக் ஃபீஸ் சாப்பிட பல்லிருக்குமா!?
god! damn இவ்ளோ நாளா நீங்க ரொம்ப சீரியஸ் டைப் னு நினைச்சு பதிவுகளை மிஸ் பண்ணிட்டேன் :(( இப்போ கிரேஸ் ரெபர் பண்ணினாங்க. செம ஜாலியா இருக்கே பதில்கள்!!! follow பண்ண ஆரம்பிச்சுடேன்ல:)
தப்பா ஏதாவது சொல்லிருந்தா சாரி சகோ:))
த.ம ஐந்து
கலக்குரிங்கோ பிரகாஷ் அண்ணா ...எல்லா பதில்களும் ஜ்ஜுப்பேர்
நீங்களும் கலந்து கொண்டதில் மிக்க சந்தோசம்...! உங்கள் பாணியில் பதில்கள் கலக்கல்...
@ராஜி
100வது பிறந்த நாள் பிரியாணில இருக்கும் லெக் ஃபீஸ் சாப்பிட பல்லிருக்குமா!?///
பிறந்தநாளுக்கு நீங்களும் வாங்க.. ட்ரீட் தரேன்... அப்போ பாருங்க பிரியாணி சாப்பிடுறதை!!!
@Mythily kasthuri rengan
god! damn இவ்ளோ நாளா நீங்க ரொம்ப சீரியஸ் டைப் னு நினைச்சு பதிவுகளை மிஸ் பண்ணிட்டேன் :(( இப்போ கிரேஸ் ரெபர் பண்ணினாங்க. செம ஜாலியா இருக்கே பதில்கள்!!! follow பண்ண ஆரம்பிச்சுடேன்ல:)
தப்பா ஏதாவது சொல்லிருந்தா சாரி சகோ:))///
கிரேஸ் சகோ அவர்களின் பரிந்துரையால் வந்த உங்களை வரவேற்கிறேன்... பதிவு எழுத நேரம் கிடைக்கறதே பெரிசு.. அதுல சீரியஸ் யோசிக்க முடில... ஹா ஹா...
நீங்க ஒண்ணும் தப்பா சொல்லலியே?
@கலை
கலக்குரிங்கோ பிரகாஷ் அண்ணா ...எல்லா பதில்களும் ஜ்ஜுப்பேர்///
தாங்க்ஸ் கருவாச்சி
@திண்டுக்கல் தனபாலன்
உங்கள் பாணியில் பதில்கள் கலக்கல்...//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்
@Angelin
என்ன செகெண்ட் பார்ட்டா? அம்மாடி ஆளைவிடுங்க முதல் பார்ட் போட்டதுக்கே அவனவன் கொலைவெறியில் அலையுறாங்க என்னை அடித்து நொறுக்குவதற்கு ஏதோ வெளிநாட்டில் இருப்பதால் தப்பிச்சேன் இதில 2 வது பார்ட் போட்ட அவனவன் பணம் செலவழிஞ்சாலும் பரவாயில்லை இந்த மதுரைத்தமிழனை போட்டு த்ள்ளிவிட்டுதான் மறு வேலை பார்ப்பாங்க
நகைச்சுவையா ஆரம்பித்தாலும் போகப் போக பொறுப்பும் சிரத்தையுமான பதில்களைத் தந்து அசத்தியிருக்கீங்க. பாராட்டுகள் பிரகாஷ்.
#பாஸாகற அளவுக்காச்சும் மார்க் போடுங்க.#
கலக்கல் பதில்களுக்காக ஏழாவது வோட் போட்டு பாஸ் ஆக்கிவிட்டேன் boss!
பதில்களில் மெலிதான நகைச்சுவை உணர்வும் 8,9,10 கேள்விகளில் உங்களின் சீரிய சிந்தனைகளும் பளிச்சிட்டன பிரகாஷ். அருமையா பதில் சொல்லி அசத்திட்டீங்க....
ஹாஹா மிக அருமையான பதில்கள். பாலா சொன்னது போல் கடைசியில் சீரியசான பதில்கள்.
அருமை ப்ரகாஷ் அசத்திட்டீங்க :)
நல்ல பதில்கள் பிரகாஷ். ரசித்தேன்.
ஏம்பா பிரகாஷ் - நல்லாத்தான் ப்தைல் சொல்லி இருக்கே - ஆமா போற போக்குல சீனா வேல வெட்டி இல்லாம ஃஃப்ரீயா இருக்காருன்னு வேற சொல்லிட்டுப் போயிட்டே - ஏம்பா இப்படி - சரி சீக்கரம் கேள்வி கேக்கறவங்க கேளுங்கப்பா - வேல தலைக்கு மேல இருக்கு -
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்புள்ள அய்யா திரு.பிரகாஷ் அவர்களுக்கு,
வணக்கம். கேள்வி-பதில் நன்றாக இருந்தது.
எனது ‘வலைப்பூ’ பக்கத்தைப் பார்வையிட்டு கருத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in