வணக்கம் வலைப்பதிவர்களே...
வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுக்கோட்டையில்! விழா ஏற்பாடுகள் ஒருபுறம் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் என்று வலையுலகம் களைகட்டியுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ செல்லமுடியாதவர்களும் தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெறலாம்.
எந்தெந்த ஊரில் இருந்து யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று பார்க்க வருகைப் பதிவு பட்டியல் பாருங்கள்.
நீங்களும் கலந்துகொள்ள முடிவு செய்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வருகையை இங்கே சொடுக்கிப் பதிவு செய்யுங்கள். கடைசி நேரத்தில் முடிவு மாறலாம் என்று நினைத்தாலும் பரவாயில்லை, பதிவு செய்துவையுங்கள்.
வெளிநாட்டில் வசிக்கும் வலைத்தள நண்பர்களுக்கு ஒரு விசயம். நீங்கள் பதிவர் சந்திப்பிற்குப் போக முடியாவிட்டாலும் உங்கள் முத்திரையைப் பதிக்கலாம். எப்படி என்று கேட்கிறீர்களா?'தமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015' வெளியிடுவதற்கான புதிய முயற்சி நடக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் வலைப் பதிவர்களை அறிந்துகொள்ள உதவும் இக்கையேட்டில் விழாவிற்கு வருவோர் மட்டும் அல்லாது வர இயலாதோரும் சேர்க்கப்படுவர். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களைப் பற்றிய சில தகவல்களுடன் ஒரு மின்னஞ்சலை bloggersmeet2015@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
என்னென்ன தகவல் அனுப்பவேண்டும் என்றால்,
1. உங்கள் பெயர்
2. வயது
3. உங்கள் வலைத்தளத்தின் பெயர்
4. உங்கள் வலைத்தளத்தின் முகவரி
5. உங்கள் மின்னஞ்சல் முகவரி
6. உங்கள் புகைப்படம் அல்லது தளத்தின் லோகோ இணைப்பு
7. நீங்கள் வெளியிட்ட நூல்கள்/குறும்படங்கள் பற்றிய தகவல்
8. பெற்ற விருதுகள்
9. சிறப்பான பதிவின் இணைப்புகள்
10. அலைபேசி எண் (விருப்பப்பட்டால்)
11. முகநூல் முகவரி (விருப்பப்பட்டால்)
இவற்றோடு கையேட்டில் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பும் குறிப்புக்களைச் சுருக்கமாக வரும் 20-9-2015ஆம் தேதிக்குள் bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
12. வசிப்பிடம்
(இடம் கருதி, ஏற்றவற்றை வெளியிட விரும்புகிறது விழாக்குழு)விரைவாக அனுப்பிவிட்டால் அவற்றைத் தொகுத்து அச்சிட எளிதாக இருக்கும்.
இவ்வாறு தகவல் அனுப்பியோர் பட்டியலையும் இந்த பதிவில் காணலாம்.
மேலும் உங்கள் வாழ்த்துரையை 10-15 வரிகளுக்குள் எழுதியும் அனுப்பிவைக்கலாம். அவற்றைத் தேர்ந்தெடுத்து அரங்கில் எழுதி வைப்பார்கள்.
வலைப்பதிவர் சந்திப்பு 2015 என்று இதற்காகவே திறக்கப்பட்ட வலைத் தளத்தில் இதைப் பற்றிய பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
ஏதேனும் ஐயம் இருப்பின் bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி: தேன் மதுரத் தமிழ் கிரேஸ்
9 கருத்துரைகள்:
இதிலும் கீல்லர்ஜீ படமா....
அன்பின் இனிய
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
விழா சிறக்கட்டும்
நன்றி சகோ
விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.
400 தளங்களாவது வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்...
உரிய விவரங்களையும், புகைப்படங்களையும் அனுப்பிவிட்டேன். புதுக்கோட்டைக்காக நினைவூட்டியமைக்கு நன்றி. மிரட்டும் வகையிலான ஒரு படத்தினைப் போட்டு பயமுறுத்திவிட்டீர்களே?
தகவல் அனுப்பிவிட்டேன் நண்பரே
நன்றி
தம +1
Bulk Whatsapp Messages Whatsapp Marketing for Business