இன்று மதியம் என் இண்டர்நெட் பில் கட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வீட்டுக்கு பக்கத்து தெருவில் வறப்போ ஒரு டிரான்ஸ்பார்மரில் அடிப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. பைக்கில் போய்ட்டு இருந்ததுனால தீயை மட்டும் பார்த்தேன். ட்ரான்ஸ்பார்மர் இருக்கு என்பதையே கவனிக்கவில்லை. அதை தாண்டி போனதும் தான் ட்ரான்ஸ்பார்மர் கீழே தீ எரிஞ்சுகிட்டு என்பதே நான் கவனிச்சேன். உடனே பைக்கில் இருந்து இறங்கி ட்ரான்ஸ்பார்மர் பக்கத்துல போயி பார்த்தா அடிப்பகுதி முழுதும் நெருப்பு நல்லா பரவி எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. எனக்கு அந்த நிமிசத்துல என்ன செய்றதுன்னே புரியல. உடனே அக்கம் பக்கம் யாராச்சும் கூப்பிடலாம்னு பாத்தா யாருமே இல்லை. எல்லாரும் வீட்டை பூட்டிட்டு உள்ள இருந்திருப்பாங்க போல. கொஞ்சம் தள்ளி சின்ன கடை இருந்துச்சு. அங்க கேட்கற மாத்ரி தீ.... தீ.... ட்ரான்ஸ்பார்மர்ல தீ..ன்னு கத்தினேன். நான் கத்துனது அவங்களுக்கு கேட்கல. என்னடா செய்றதுன்னு திரும்பி திரும்பி பார்த்தேன். பக்கத்துல கொஞ்சம் உள்ள தள்ளி மணல் கொட்டி இருந்துச்சு. உடனே வேகமா போயி அந்த மணலை கையில அள்ளி நெருப்பு மேல போட்டேன். மணல் விழுந்த இடத்துல தீ கொஞ்சமா அனைஞ்சுச்சு.
மறுபடியும் ஒரு கை மணல் அள்ளிட்டு திரும்ப கத்தினேன். யாராச்சும் ஆள் வருவாங்களான்னு? அந்த பக்கமா ஒரு கட்டட வேலையில ரெண்டு சித்தாள்கள் என் சத்தத்தை கேட்டு வேகமா வந்தாங்க. அவங்க கிட்ட தண்ணி கேட்டதும் ஆளுக்கு ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்தாங்க. குடத்தை வாங்கி நெருப்பு மேல ஊத்தினேன். ஓரளவு தீ முழுமையா அனைஞ்சது. ட்ரான்ஸ்பார்மர் ஆங்கிள் கம்பிகள் தீயில் பழுத்து இருந்துச்சு. திரும்ப ரெண்டு மூணு தடவ தண்ணி ஊத்தினேன். ஓரளவு தீ அனைஞ்சது. நல்ல வேளை சரியான நேரத்துல நான் பார்த்ததுனால தீயை அணைக்க முடிஞ்சது. இல்லையினா, தீ இன்னும் பரவி ட்ரான்ஸ்பார்மர் ஆயில் டேங்க்குக்கு பரவி இருந்தா பெரும் விபத்தே நடந்திருக்க வாய்ப்பு உண்டு.


Best Blogger Tips
UA-18786430-1