வணக்கம் மக்காஸ், எப்படியிருக்கீங்க? நல்லாயிருக்கிங்களா..? நல்லது இதைப்படிச்சதுக்கு அப்புறமா வரும் விளைவுகளுக்கு பணியாரக் கம்பெனி பொறுப்பு ஆகாது. அப்புறம் இப்படியாகிட்டேன்…அப்படியாகிட்டேன்னு சொல்லக்கூடாது.
ஈரோடு பதிவர் சந்திப்புக்கு பிறகு நடந்த சண்டை சச்சரவுனால (என்ன சண்டைன்னு கேட்கப்படாது) மக்கா மறந்த விசயம் இரண்டு, ஒண்ணு நாம அங்க போனோமா? அப்படிங்கற சந்தேகம், இரண்டு, சிரிக்கக் கூடாது, முடிஞ்சா சீரியசா… ஆஸ்பத்திரிக்கு அல்ல... அப்பு! விஜயகாந்த் மாதிரி கண் சிவக்க கேளுங்க… சிவக்கலைன்னா உங்க கையால கண்ணை குத்திக்கங்க…. ஐயோ, அடிக்க வாராதிங்க நான் சொல்லுறத கேளுங்க.
அந்த இரண்டாவது, சம்சாரம் அடச் ச்சீ..ச்சீ... சாமாச்சாரம் முந்தானை முடிச்சு படம் பார்த்துட்டு வெளிய வரப்ப எப்படி முருங்கக்காய் கொடுத்தாங்களே…! (கொடுத்தாங்கன்னு வச்சுக்கங்க) அதனால முருங்கக்காய் ரொம்ப பேமஸ் ஆயிருச்சு…. அது போல பேமஸ் ஆனது தலைவர் நாய்நக்ஸ் அவர விடுங்க, இப்ப அடிச்ச தானே'ல அடங்கிப் போயிட்டாரு. பாவம் இன்னொண்ணு முட்டைப் பணியாரம். ஆமா, ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டு வந்ததிலிருந்து அது மேல அம்புட்டு ஆசை மக்கா….! மதுரையில் பல கடையில கேட்டேன், இல்லை மக்கா! ஒரு பயலும் இல்லைன்னுட்டான்…என்னைய மேலயும், கீழயும் பார்க்குறான் பயபுள்ளக…! இப்ப கொஞ்ச நாளா என் பேச்சே அது பத்திதான் அமைஞ்சு போச்சு….
மெத்தை வாங்கப் போன இடத்துல (எதுக்கோ வாங்கினேன், அம்புட்டுதேன்) மெத்தை நல்லா முட்டைப் பணியாரம் மாதிரி மெது மெதுன்னு இருக்கனும் அப்படின்னேன் கடைக்காரன் சிரிக்கிறான். சரி நமக்கு எங்க போனாலும் முட்டைப் பணியார ஞாபகமா இருக்கு, இது சரிபட்டு வராது, வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லி செஞ்சுத் தரச் சொன்னேன், எனக்கு தெரியாது, எப்படி செய்யறதுன்னு சொல்லுங்க?செஞ்சு தாரேன் அப்படினாங்க…. சரி நம்ம கூகுள்ல தேடி ஒரு வழியா செய்முறைய கண்டுபிடிச்சேன். புதுசா ஒரு கிரகத்தை கண்டு பிடிச்ச விஞ்ஞானி மாதிரி,
வேலை விட்டு வரும் போது ஒரு அஞ்சு முட்டை வாங்கிட்டு வந்தேன். கடைக்காரன் கிட்ட, வடிவேலு ஒரு படத்துல இது நல்லெண்ணெயா, கடலை எண்ணையான்னு கேட்ப்பாருல, அதே மாதிரி இதுல பணியாரம் வருமா, சாப்பிட்டா மெது மெதுன்னு இருக்குமா? அப்படின்னு கேட்டா முறைக்கிறான், என்ன செய்ய நமக்கு முட்டையில பணியாரம் வரணும், அது முக்கியமுல்ல. வீட்டம்மாகிட்ட முட்டைப் பணியார ரெசிபிய சொன்னேன், எப்படி செஞ்சாங்கன்னு சொல்றேன், நீங்களும் கேட்டுக்கங்க வாங்குன முட்டைகள ஒரு அகல பாத்துரதுல உடைச்சி ஊத்திக்குங்க. தேவையான அளவு உப்பு, மிளகு பொடி, கொஞ்சமா வெங்காயம் எல்லாத்தையும் தோசைமாவுல கலந்து நல்லா கலக்கி பணியாரக் குழியில பனியாரம் மாதிரியே ஊத்தினா மேட்டர் ஓகே, முட்டைப் பணியாரம் ரெடி. அவ்வளவு தான், பெருசா கஷ்டம் ஒன்னும் இல்லை. அம்புட்டுத் தான். வீட்டம்மா சுட்டு தட்டுல வைச்சு கொடுத்தாங்க. வாராந்தாவுல உக்கார்ந்து டிவி ஆன் பண்ணிட்டு ஒரு முட்டை பணியாரத்தை இப்படின்னு தொட்டு பார்த்தேன்.
பிரகாஷ்... பிரகாஷ் அப்படின்னு யாரோ கூப்பிட்டாங்க, யாருய்யா அது முட்டைபணியார பூசைல கரடின்னு வெளிய போய்ப் பார்த்தா அட நம்ம கரடி, அடிச்சே, அதான் நம்ம மனோ, சிபி ரெண்டு பெரும் நின்னுட்டு இருந்தாங்க. (ரெண்டு பேரும் மோப்பம் புடுச்சு வந்துட்டாங்களோ)
வாங்க சிபி, வாங்க மக்கா.. என்றேன். வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனதும் என் அமுதம் சிபி கண்ணுல பட்டு தொலைஞ்சிருச்சு, ஹேய் முட்டைப் பணியாரமா என வாயை தொறக்க.. மக்கா பக்ரைன்ல அரபிக்காரன் ஹோட்டல்ல "தக்காளி" (விக்கி மன்னிக்க) ரொட்டி போட்டு போட்டே நாக்க காலி பண்ணிட்டாம்ல என்று மனோ பணியாரத்தை பாத்துட்டே சொல்ல, மக்கா நான் என்ன சொல்ல சாப்பிடுங்கன்னு சொன்னேன். மக்கா எடுக்றதுக்குல சிபி நாலு பணியாரத்தை ஒரே வாயில அமுக்க, பாவம் மனோ எப்படியோ அடிச்சு புடிச்சு தட்டுல இருந்த மீதி நாலஞ்சு பணியாரத்தை எடுத்து லேப்டாப் பேக்கினுள் ஒளிச்சு வச்சார்.
என் ஆசை முட்டைப் பணியாரம் எல்லாமும் ஸ்வாகா... இதுக்கே என் பொண்டாட்டி சலிச்சிகிட்டு செஞ்சு தந்தா... அடுத்து கேட்டோம்னா அவ்ளவு தான். இருந்தாலும் எப்படியாச்சும் நைஸ் பண்ணி கதவு, ஜன்னல் எல்லாத்தையும் மூடிட்டு செஞ்சு சாப்பிடனும். ஒரு பய புள்ளைகளும் மோப்பம் பிடிக்க கூடாது.
அண்ணே, இம்புட்டு செஞ்சும் பணியாரத்தை கொஞ்சூண்டு கூட வாயில வைக்கல. யாராச்சும் சொல்லுங்கண்ணே! அடுத்த தடவை பதிவர் சந்திப்பு வெச்சா இரண்டு முட்டைப் பணியாரமா கொடுக்க சொல்லுங்க அண்ணே!


Best Blogger Tips
UA-18786430-1