CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label விஜயகாந்த். தேர்தல். Show all posts
Showing posts with label விஜயகாந்த். தேர்தல். Show all posts


திரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா?


       தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு சில முக்கிய கட்சிகளுக்கிடையே கூட்டணி தொடரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு இருந்த கூட்டணி அப்படியே இந்த தேர்தலுக்கும் தொடரும் என்றே நினைத்திருந்த சமயத்தில் கூட்டனிக்கிடையே பிளவை ஆரம்பித்தி வைத்தவர் ஜெயலலிதா. கடந்த சட்டசபை தேர்தலைப் போலவே இந்த தேர்தலுக்கும் கூட்டணி கட்சிகளை கலந்த ஆலோசிக்காமலே தன்னிச்சையாக போட்டியிடும் இடங்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளான தேமுதிக, அதிமுக உடன் கூட்டனியில் இருக்கிறோமா? இல்லையா? என்ற தெரியாத திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டது. 
           அதிமுக அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை ஜெ விடம் எப்படி பணிவுடன் நடந்து கொள்வார்களோ அந்த அளவுக்கு விஜயகாந்தும், அவரது கட்சியினரும் விசுவாசமாக நடந்து கொண்டார்கள். ஒரு எதிர் கட்சியாக இருந்து கொண்டு எந்த கேள்விகளும் கேட்காமலும், சட்டசபையில் எதிர் வாதங்களும் புரியாமல் அமைதி காத்து வந்தார்கள் தேமுதிக வினர். அப்படி நடந்தால் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்பார்த்த இடங்கள் கேட்டுப் பெற்று விடலாம் என்ற ஆசையில் இருந்தது. ஆனால் ஜெ நினைத்தது வேறு. தேமுதிக வளர இந்த உள்ளாட்சி தேர்தல் வாய்ப்பாக இருக்கும் என எண்ணியே இடங்கள் தராமல் எல்லா இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஒரு பெரிய கட்சியின் நிழலில் சட்டசபை தேர்தலில் ஜெயித்த தேமுதிக வுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இது ஒரு புறமிருக்க திமுகவும் காங்கிரஸை கழட்டி விட்டது. இது ஏற்கனவே எதிர்பார்த்த முடிவுதான். இப்படி திமுக, அதிமுகவும் கூட்டணிகளை விடுத்து தனித்தனியே போட்டியிடும் இடங்களை அறிவித்தது. ஆனால் தேமுதிக மிகவும் தாமதமாகவே போட்டியிடும் இடங்களை அறிவித்துள்ளது. இது அவர்களின் முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதத்தை காட்டுகிறது. அந்த சூழ்நிலையிலும், அதிமுகவுடன் கூட்டணியில் பழகிப் போன விஜயகாந்த் ஏதாவது கட்சியுடன் கூட்டணி சேர முடியுமா என எதிர்பார்த்திருந்தவருக்கு கம்யுனிஸ்ட் உதவியது. இப்படி ஒரு வழியாக கூட்டணி சேர்ந்து வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த கூட்டணி மூலம் தேமுதிக சந்தர்ப்பவாத கட்சியாக உருவெடுத்துள்ளது. 
           தனது கட்சியை வளர்க்க ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறும் பாமக போல யாருடனும் கூட்டணி வைக்கும் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது தேமுதிக. அக்கட்சி தொண்டர்களுக்கு அவர்களின் கொள்கையே மறந்து விட்டது போலும். மக்கள் நலனை காக்கும் கட்சி எங்கள் கட்சி என்று கூக்குரலிட்டவர்கள் யாருடன் கூட்டணி சேர்ந்து பாதுகாப்பு அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக. தேமுதிக கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பார்களா? அல்லது தேமுதிகவுக்கு வாக்களிப்பார்களா? இதே நிலை தான் மற்ற கட்சிக்கும். 
       மக்களின் வாக்களிக்கும் உரிமையை இவ்வாறான கூட்டனிகளே தீர்மானிப்பதாக இந்த சூழ்நிலை அமைகிறது. வாக்காளர்கள் தனித்து முடிவெடுப்பதெல்லாம் மலையேற்றி விட்டது இந்த கூட்டணி முறை. நான்கு மாதத்துக்கு முன் ஒரு கட்சிக்கு விரும்பி ஓட்டு போட்ட மக்களுக்கு இன்று அந்த கட்சி விரும்பாத கட்சியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் இந்த கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறியதே ஆகும். திமுக, அதிமுக, கம்யும்னிஸ்ட் போன்ற பழைய கட்சிகள் கூட்டணி தர்மத்தை மாற்றிக் கொண்டே இருக்கலாம், அது அவர்களுக்கு புதிதல்ல. ஆட்சியை பிடிக்க அவர்கள் போடும் கணக்கு இது. ஆனால் தேமுதிக எந்த கணக்குடன் கூட்டணி அமைகிறது? கடந்த சட்டசபை தேர்தலில் கொடுக்கப்படும் இடங்களின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணியை முடிவு செய்தது. அந்த சமயங்களில் அதிமுகவுக்கு பெறும் நெருக்கடியை கொடுத்தே அதிக இடங்களை பெற்றது. இந்த தேர்தலிலும் அவ்வாறான நெருக்கடிக்கு ஆளாகாமல் ஜெ சுதாரித்து விட்டார். அதனாலேயே தேமுதிகவுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டு கம்யுநிஸ்டுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டனியால் தேமுதிகவின் வாக்கு வாங்கி குறையுமா? கூடுமா? என்பது தேர்தல் முடிவைப் பொறுத்தே தெரியும். வாக்கு வாங்கி சரியும் பட்சத்தில் தேமுதிகவிடம் இருந்து மக்கள் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளார்கள் என்பது தெரிய வரும். விஜகாந்துக்கும், அவரது கட்சியினருக்கும் மக்கள் மத்தியில் நிலையான கட்சியாக உருவெடுத்துள்ளதா என்பதும் இந்த தேர்தல் முடிவைப் பொறுத்தே உள்ளது.
        தேமுதிக உருவான காலத்தில் மற்ற கட்சிகளுக்கு மாற்றாக ஒரு நல்ல கட்சி உருவெடுத்துள்ளது என உணர்வு தற்போது குறைந்து வருவதாக தெரிகிறது. கட்சி வளர்க்க போதிய நிதி வசதியும் இல்லாததை இந்த கூட்டணி அமைத்தலில் காணப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் குறைந்து வருவதாகவே தெரிகிறது. இதற்கு உதாரணம் சமச்சீர் கல்வி பிரச்சனையில் ஜெ வை ஆதரித்தும் பேசவில்லை, எதிர்த்தும் பேசவில்லை. அது ஏன்? இன்று வரை தேமுதிக எந்த கொள்கையுடன் செயல்படுகிறது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளதாக நினைக்கிறேன். மக்களுக்கு ஆதரவான கட்சியாக இருக்கப் போகிறதா? அல்லது, மற்ற கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெறுவதில் நெருக்கடி தரும் கட்சியாக இருக்கப் போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம் நண்பர்களே.
மேலும் வாசிக்க... "திரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1