என்னங்க, பதிவின் தலைப்பை பார்த்து யோசிக்கறீங்களா? ப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்னு நினைகிறீங்களா? நான் அப்படி சொல்ல வரவில்லை. ப்ளாக் எழுதுறவங்க அவங்களுக்குனு ஒரு ஸ்டைல் வச்சிருப்பாங்க,ஒவ்வொருவரும் தனித் தனித் துறையில் திறமையா இருப்பாங்க. வாசிக்கிற நாமளும் அவங்க அளவுக்கு திறமையா இருக்கணும்னு அவசியமில்ல. ஒரு சில அடிப்படையான விசயங்களையாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் பதிவுக்கான சரியான கருத்து சொல்ல முடியும். அப்படியிலாம நாமளும் கருத்து சொல்றோம்னு என்னத்தையாவது சொல்லக் கூடாது.
உதாரணத்துக்கு, அரசியல் பத்தின பதிவுகள்ல ஒருத்தர் கலைஞருக்கு எதிராகவோ, அல்லது ஜே - க்கு எதிராகவோ, எழுதியிருக்காங்கனு வைங்க, உடனே நாம கலைஞர் ஆட்சியா, அப்படிதான் அராஜகமா ஊழலா இருக்கும், ஜே இருக்குறப்ப அப்படியெல்லாம் இல்லைன்னு பின்னூட்டம் எழுதுவாங்க, ஒன்னு அவருக்கு, இல்லைன்னா இவருக்குன்னு ஒன்சைடா சப்போர்ட் பண்ணுவாங்க. அதுக்குதான் அரசியலைப் பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சு வச்சிருந்தா நடு நிலைமையா கருத்து சொல்லலாம்.
நாம என்னதான் அஜித் ரசிகராகவோ, விஜய் ரசிகராகவோ இருந்தாலும் சினிமா பத்தின பதிவுகள்ல அந்த பிடித்த நடிகருக்காக ஓவரா சப்போர்ட் செய்வது அவசியமில்லாத ஒன்று. ஏன்னா எல்லா நடிகர், நடிகைகளுக்கும் நடிப்பு தான் தொழிலே, அதுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா மக்களை இம்ப்ரெஸ் செய்வாங்க. ரஜினி படமா கமர்சியலா இருக்கும், கமல் படமா டெக்னிகலா இருக்கும், ( அப்ப ரஜினியின் எந்திரன் டெக்னிகல் படம் இல்லையான்னு கேட்காதிங்க). விஜய் படமா காமடி சண்டைனு கலவையா இருக்கும், அஜித், சூர்யா, விக்ரம் படங்கள்னா நடிப்பு திறமைக்கு தீனி போடுற படமா இருக்கும். அப்ப நாமளும் சினிமா பதிவுகளுக்கு கருத்து சொல்றப்ப அந்த பதிவுகள்ல உள்ள செய்திகள் ஓரளவு உண்மைதானா என தெரிஞ்சு நம்ம கருத்தை சொல்லலாம். அத விட்டுட்டு இந்த நடிகர் படமா? இப்படித்தான் சண்டையா இருக்கும், அந்த நடிகர் படமா? தியேட்டர்ல ஒக்கார முடியாதுன்னு அடிச்சு பிடிச்சு வாதம் பண்ணக் கூடாது. உண்மையான விஷயங்கள் என்னானு பல இணைய தளங்களை பாத்து தெரிஞ்சு வச்சிருக்கலாம். அப்ப தான் சரியா நல்ல கருத்து சொல்ல முடியும்.
அடுத்து, நகைச்சுவை பதிவுகள்ல எடுத்துக்கங்க, நமக்கு ஓரளவாவது நகைச்சுவை உணர்வு இருந்தாதான் மத்தவங்கள சிரிக்க வக்கிர மாதிரி பதிவுகள் எழுத முடியும். படிக்கிற நம்மளுக்கும் கொஞ்சமாச்சும் நகைச்சுவை உணர்வு இருந்தாதான் பதிவு நல்லாயிருக்கா, இல்லையானு சொல்ல முடியும். பதிவு சிரிக்குற மாதிரி இல்லாம கடிக்கிற மாதிரி இருந்தா நாம அழ வேண்டியதுதான்.
அடுத்ததா, கதை, கவிதை, கட்டுரைன்னு இலக்கிய படைப்பா எழுதுவாங்க. நாமளும் அதை படிச்சிட்டு ஆஹா, ஓஹோன்னு சொல்லனும்னா அந்த படைப்புகள் நம்ம அறிவுக்கு புரிஞ்சிருக்கனும். நம்மளுக்கு புரியணும்னா கண்டிப்பா இலக்கியத்த பத்தி கடுகளவாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் கருத்து சொல்ல முடியும். அதுக்காக படைப்புகள்ல ரெண்டு வரிய காபி/ பேஸ்ட் பண்ணி சூப்பர், அருமைன்னு சொல்லறத விட, கொஞ்சம் வித்தியாசமா கருத்து சொல்ல முயற்சிக்கலாம்.
இப்படியே பதிவுகள் எழுத, படிக்க தகுதி வேணுமா இல்லையானு நம்ம பட்டி மன்ற புகழ் சாலமன் பாப்பையாவை வச்சு ஒரு பட்டிமன்றம் போடலாம்.
இன்றைய பொன்மொழி:
பகை, பொறாமை, ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பவரும்.
இன்றைய விடுகதை:மழைக் காலப் பாட்டுக் காரன், துள்ளிக் குதித்து ஆடிடுவான் கடைசியில் பாம்புக்கு இறையாவான். அவன் யார்?
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை: கடல் அலை
முந்திய விடுகதைக்கு பதிவை பார்க்க: பெண்களே! ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்
14 கருத்துரைகள்:
இப்போ இதுக்கு என்ன பின்னூட்டம் போடுறது...???
உங்களோட பதிவுக்கு பின்னூட்டம் போடுற அளவுக்கு எனக்கு அறிவு இருக்கான்னு தெரியல பாஸ்! ஸோ இன்ட்லியில ஓட்டுப் போடுறேன்! ஓட்டுப் போட அறிவு தேவையா என்ன?
>>> மனதில் பட்டதை சொல்லி இருக்கிறீர்கள். நல்ல பதிவு நண்பா.
Thanks for sharing
ஓகே ஓகே
பின்னூட்டம் போட அறிவு இருக்கானு தெரியல ஆனால் நமக்கு ஒட்டு போட அறிவு இருக்கு அதான் போட்டுடோம்ல
பிளாக் எழுதுற படிக்கிற இரண்டு பேரும் படிக்கிற மாதிரி பதிவு எழுதி இரண்டு பேர் மனசிலும் இடம் பிடிச்சிட்டீங்க!
பதிவு நல்ல இருக்கு http://nekalvukal.blogspot.com/2011/02/blog-post_02.html
எனக்குத் தெரிஞ்சு தமிழ் படிக்கத் தெரிஞ்சா பிளாக் படிக்கலாம் தமிழ் எழுத தெரிஞ்சா பின்னூட்டம் போடலாம்ன்னுதான் நினைச்சிகிட்டு இருந்தேன் ஆனா உஙக பதிவு ரொம்பவே யோசிக்க வச்சிருச்சு
//அதுக்காக படைப்புகள்ல ரெண்டு வரிய காபி/ பேஸ்ட் பண்ணி சூப்பர், அருமைன்னு சொல்லறத விட, கொஞ்சம் வித்தியாசமா கருத்து சொல்ல முயற்சிக்கலாம்.//
அருமை ,சூப்பர்.நான் எல்லாம் அப்படி செய்யற ஆளில்லை.என்ன நாஞ்ச்சொல்றது?
Ph.D தேவையில்லையா!!! அப்ப நானே பதிவு போடாலாமென்ன.
ஆ... இது தெரியாம போச்சே!!!
vidukathai ku aana vidai...
paambukku irai aavathu...
THAVALAI.. puriuthaa...
vidukathai ku aana vidai...
paambukku irai aavathu...
THAVALAI.. puriuthaa...
நேத்து நடந்த பின்னூட்ட சண்டைக்கும்,இந்த பதிவுக்கும் ஏதாவது link இருக்குமோ?