பெண்களை ஆண்கள் ரசிப்பதற்கு காரணம் பெண்கள் தான். பெண்கள் என்னதான் அழகாக இருந்தாலும் அவர்களின் நடை, உடை, பாவனை தான் ஆண்களின் ரசனைக்கு முக்கிய காரணம். அதாவது, கழுத்துக்கு மட்டும் பாதுகாப்புக்காக போடும் துப்பட்டா, சாயம் பூசிய உதடுகள், ஆண்களை பார்த்ததும் செவிகளை மறைக்கும் மொபைல் போன்கள், பொது இடங்களில் சிரித்து பேசும் பெண்கள் இவர்களின் மீது தான் ஆண்களின் மோசமான பார்வை முதலில் விழுகிறது.
ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களில் முதலிடம் இத்தகைய பெண்களுக்கு தான். நேர்த்தியான உடையும், இயல்பான முகத்தோற்றமும், முறையான நடைமுறை வாழ்க்கையை மேற்கொள்ளும் பெண்கள் தான், ஆண்கள் மத்தியிலும், பொது வாழ்க்கையிலும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வெற்றி பெறுகின்றனர்.
அழகான பெண்கள் என்றல்ல, சுமாரான பெண்களைக் கண்டால் கூட சற்று சபலப்பட்டு ஈர்க்கப்படுவது ஆண்களின் குணம் என்பது ஒருபுறம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. நாகரிகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் அரைகுறை ஆடைகளைக் கண்டு ஈர்க்கப்படும் ஆண்களது கண்களை ஆயிரம் கைகள் மறைத்தாலும் தடுத்துவிட முடியாது.
அழகாக இருக்கும் பெண்கள் ஆண்களைக் கவர்வது என்பது இயல்பான உண்மை தான். ஜொள் விடும் ஆண்கள் பொதுவாகவே நிறம், அழகு, வயது வித்தியாசமின்றி, பெண்களிடம் நடந்து கொள்வர். இவ்வகை ஆண்களிடம் தான் பெண்களுக்கு அச்சம் இருக்க வேண்டுமே தவிர, அழகை ரசிக்கும் மனப்பான்மையை உடைய ஆண்களை புறக்கணிக்காதீர்கள் பெண்களே! இவர்கள் இல்லையென்றால், பெண்களுக்கு அழகு என்பதே தெரியாமல் போய்விடும்.
அழகு என்பது வரப்பிரசாதம். அதை ரசிக்க அனைவருக்கும் உரிமையுண்டு. வானவில்லைக் கண்டு நாம் ரசிப்பது போல தான், அழகு நம்மை ஈர்க்கிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் ஆண்களைக் கண்டு ஜொள் விடுவதை மறுக்க முடியாது. அழகு என்பது பொதுவானது.
உலகில் பெண்கள் படைக்கப்பட்டது ஆண்களுக்காகதான். ஆண்கள் படைக்கப்பட்டது பெண்களுக்காகதான். பெண்களிடம், ஆண்களுக்கான ஈர்ப்பே அவர்களது அழகுதான்.
*********************************
முந்திய பதிவில் பொன்மொழியும், விடுகதையும் தவிர்க்க முடியாத காரணத்தால் இணைக்க முடியவில்லை.
********************************
இன்றைய பொன்மொழி:பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்.
இன்றைய விடுகதை:உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை: தீக்குச்சி
முந்திய விடுகதைக்கு பதிவை பார்க்க: வெங்காயமா? இல்ல, தங்கமா?
10 கருத்துரைகள்:
ஒருவரின் அனுமதியில்லாமல் அவரின் புகைப்படத்தை வெளியிடுவது சரியல்ல. நடிகைகள் மற்றவர் பார்ப்பதற்கு போஸ் கொடுக்கிறார்கள் ஆனால் இவர்கள் அப்படியல்ல. யோசிக்கவும்...
மேலே உள்ளவரின் கருத்துதான் என்னுடையதும், புகைப்படங்கள் பர்சனலாக எடுக்கப்பட்டதும் அவர்கள் அனுமதியின்றி இணையத் திருடர்களால் பயன்படுத்தப் படுவதும் நன்றாகத் தெரிகிறது. தயவு செய்து நீக்கவும்.
சுதாகர், சிவா ஆகியோரின் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன் பிரகாஷ்! நாலாவதாகவும், ஐந்தாவதாகவும் உள்ள பெண்கள் நடிகைகள் போல தெரிகிறார்கள்! ஏனைய பெண்கள் கண்டிப்பாக சாதாரண பெண்களே! அவர்களின் படங்களை நீக்குவதுதான் முறை! யோசித்து செய்யுங்கள் நண்பரே!
அப்புறம் நீங்கள் எழுதியிருப்பதெல்லாம் நிஜம்தான்! இயற்கையின் படைப்பே அப்படித்தான் இருக்கிறது!
படங்கள் இணையத்திலிருந்து தான் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நண்பர்களே உங்கள் யோசனைக்கு உடன்படிகிறேன், இடுகையின் படங்கள் மாற்றப்பட்டுள்ளது.
நான் பதிவை படிக்கவே இல்லை... ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் ரசனை குறைவு தான்...
முந்தய பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆர்குட், பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புகளில் வந்த பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி இருப்பீர்கள் என்று தோன்றுகிறது... அது முற்றிலும் தவறானது..
@Philosophy Prabhakaran////முந்தய பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆர்குட், பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புகளில் வந்த பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி இருப்பீர்கள் என்று தோன்றுகிறது... அது முற்றிலும் தவறானது..////
ஆர்குட், பேஸ்புக்லிருந்து படங்கள் எடுக்கவில்லை. கூகிள் சர்ச் மூலமாக இணையத்தில் கிடைத்த படங்கள் தான் இணைக்கப்பட்டது. ஆனால் எல்லாம் homly look பெண்களாக இருந்ததால் தான் இந்த எதிர்ப்பு.
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
பகுதி 90. - 91-1, பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் கடவுளுக்கு வேலை என்ன?. உடலுறவுக்கு தேவடியாள்கள் விரும்பிய ஸ்த்ரிகள் நிறைய பேரை மோட்சலோகத்தில் அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.
பகுதி 89. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?
....
அழகை ரசிக்கும் மனப்பான்மையை உடைய ஆண்களை புறக்கணிக்காதீர்கள் பெண்களே!
இது ரொம்ப நல்ல இருக்கே
//அழகை ரசிக்கும் மனப்பான்மையை உடைய ஆண்களை புறக்கணிக்காதீர்கள் பெண்களே! இவர்கள் இல்லையென்றால், பெண்களுக்கு அழகு என்பதே தெரியாமல் போய்விடும். அழகு என்பது வரப்பிரசாதம். அதை ரசிக்க அனைவருக்கும் உரிமையுண்டு. வானவில்லைக் கண்டு நாம் ரசிப்பது போல தான், அழகு நம்மை ஈர்க்கிறது. //தங்களுக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருக்கிறார்களா? அவர்களை தங்களுடன் வெளியே அழைத்துச் செல்லும் போது மற்றவர்கள் அவர்களது அழக்கை ரசித்துப் பார்த்தால் அதைக் கண்டு மகிழ்வீர்களா?