மங்காத்தா படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் பிரமாண்டமாக நடக்கவில்லை. இப்படத்திற்காக நடந்த பிரஸ்மீட்டிலும் கூட த்ரிஷா, லட்சுமிராய், அர்ஜுன் ஆகியோரின் தலைகளை காணாதது சப்பென்று ஆக்கியது நிகழ்ச்சியை. அப்ப தல எங்க...? அவர்தான் ஐதராபாத்தில் இருக்கிறாரே. ஆனால் இவர்கள் எல்லாம் இருந்திருந்தார் எவ்வளவு பேசியிருப்பார்களோ, அவ்வளவு பேசினார் வெங்கட்பிரபு.
சென்னை 28 லிருந்து மங்காத்தா வரை மிக நீண்ண்ண்ண்ட பேச்சு அது. பிரஸ்மீட்டின் ஸ்பெஷல் அட்ராக்ஷன் யுவன் ஷங்கர் ராஜாதான். ம்... என்னத்தை சொல்றது என்று மிக சுருக்கமாக பேச ஆரம்பித்த யுவன், அஜீத் பற்றி பேசிய விஷயங்கள் அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும்.
அஜீத் சார் இன்றைக்கு சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயரத்திலிருக்கிறார். இந்த கேரக்டரில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என்பதுதான் யுவன் பேச்சின் ஸ்பெஷல் வார்த்தைகள்.
இந்த படத்தில் எப்படி அஜீத் வந்தார் என்பதையே ஒரு ஸ்கீரின் பிளே போல சொன்னார் வெங்கட்பிரபு. முதலில் இந்த கதையில் அஜீத் சார் நடிப்பதாகவே இல்லை. சத்யராஜ் மற்றும் சிலரை வைத்துக் கொண்டு சின்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். க்ளவுட் நைன் சுஷாந்த்திடம் கதையை சொல்லி படம் இயக்க சம்மதம் வாங்கியாகிவிட்டது. அந்த நேரத்தில் அஜீத் சாரிடமிருந்து போன் வந்தது. அண்ணா சொல்லுங்கண்ணா... என்றேன்.
இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க, என்ன படம் பண்ணப் போறீங்க? என்றார். நான் சின்னதா ஒரு லைனை சொன்னேன். அந்த கதையில் வரும் ஹீரோவுக்கு நெகட்டிவ் ரோல். இதுக்குதான் ஹீரோவை தேடிட்டு இருக்கேன் என்று நான் சொன்னதும் எதிர்முனையில் சில வினாடிகள் மவுனம். சட்டென்று நானே நடிக்கிறேன்... என்றார். அப்படிதான் இந்த படம் வந்துச்சு. இது கெட்டவங்களோட கதை. அஜீத் சார் முதன் முறையா நெகட்டிவ் ரோல் பண்றார்.
சென்னை 28 படத்தில் யுவனுக்கு ஒரு பைசா கூட கொடுக்கல. அதுக்கு பிறகு சரோஜா படத்துக்கும் அவர் பணம் வாங்கல. ஏன்னா படத்தின் தயாரிப்பாளர் சிவாதான் இவரை முதன்முதலில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அதனால் வாங்கல. கோவா படத்திலிருந்துதான் அவருக்கு சம்பளம்னு கொடுக்க ஆரம்பிச்சோம். இந்த படத்தின் பாடல்களை பிரமாதமா கொடுத்திருக்கும் யுவன், பேக்ரவுண்ட் மியூசிக் போடுற பணியில் இருக்கார். இந்த மாதம் இறுதியில் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்றார் வெங்கட்பிரபு.
முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரிலும் பாடல் காட்சிகளும் அல்டிமேட்டாக அசத்தியிருந்தார் அஜீத். பொதுவாகவே பாடல் காட்சிகளில் பரபரப்பான மூவ்மென்ட்டுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதவர், இந்த படத்தில் ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு இணையாக ஆடியிருந்ததுதான் ஆச்சர்யம்.
நன்றி: குசும்பு
30 கருத்துரைகள்:
மகிழ்ச்சி...
Thala Rocks..
அப்போ வேலாயுதம் ஹி ஹி.....
வேலாயுதம் அவுட்டே.....!!!
தல தல தான்..
தல தல தான்..
இந்த மாதமே ரிலீசா..சூப்பர்!
//நன்றி: குசும்பு//
ஆமா..குசும்புக்கு நன்றி!
கலக்கட்டும் . ஒவ்வொரு அஜித் படம் வரும் போதும் இந்த படத்துல அஜித் கலக்குவார்னு நினைப்போம். ஆனா நம்ம வயிறு தான் கலங்கும். இந்த தடவ வெங்கட் பிரபு அதனால நம்பி போகலாம்னு இருக்கேன்.
super news!
எதிர் பார்ப்பை ஏற்படுத்துகிறது .......நிறைவேறுமா ?பார்ப்போம் ...
இது எல்லாம் படம் ரிலிஸ் ஆகும்போது
பண்றதுதான்........
தல போல வருமா ?..சரி பாப்போம் பிரச்சனை க்ளவுட்நைன் ல இருந்து தான் இருக்கும் ..ஆட்சி மாறின பின்ன ரொம்ப பந்தா பண்ண முடியலை .அதான் அடக்கி வாசிச்சு இருக்காங்க
தல ராக்ஸ்
உங்க தல கோவா படத்த பாத்திருந்தாருன்னா இந்தப் படத்துக்கு ஒத்துட்டு இருந்திருக்கவே மாட்டாரு.... அட பாத்திருந்தாலும் அந்த மாதிரியெல்லாம் அவருக்கு தோனாது..... சரி விடுங்கப்பு......
எனக்குத் தேவையில்லாத
செய்தி!
புலவர் சா இராமாநுசம்
தல படத்துக்கு காத்து இருகின்றோம்
இன்று என் வலையில்
ஜெயலலிதா உண்ணாவிரதம்
மங்காத்தா விளையாட நாங்களும் காத்திருக்கிறோம்
மங்காத்தா மகிழ்ச்சி
தமிழ் மணம் 12
முக்கியமான தகவல் தந்ததற்கு நன்றி மாப்பிள.. தமிழ் மணம்13
கட்டான் குழ போட்டான்..
அசத்தும் தல
மங்காத்தா ரிலீஸ்... தல ரசிகர்களுக்கு கொண்டாட்டந்தான்
தமிழ் மணம் 15
உலவு 5
தமிழ் 10 ல் ஊம குத்து
அஜித் ஆடினாலே அதிசயம். டான்ஸ் மாஸ்டர் லெவலுக்கு ஆடினார் என்றால் உலக அதிசயம். சீக்கிரம் சென்னைக்கு வாங்க..!!
மங்காத்தாவுக்கு வெயிட்டிங்
மங்காத்தாவுக்கு வெயிட்டிங்