CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நாய்நக்ஸ் நக்கீரர்
            சனி நைட் பதினொரு மணி வாக்கில் எனக்கு ஒதுக்கப்பட்ட ரூமுக்கு போனேன்.  கதவு மூடியிருந்துச்சு. தட்டினேன்...  டாக்.... டாக்.... .டாக்.... டாக்..... என்னது டாக்.. டாக்.. அப்படின்னு கேட்குது... எப்பவும் டொக்...டொக்...டொக்...டொக்... அப்படித்தான கேட்கும்? டாக... டாக்... அப்படி கேட்கறப்பவே உசாராயிட்டேன்... ரூமுக்குள ஏதோ ஒன்னு இருக்குன்னு... ரூம் கதவு தொறந்துச்சு... என் மூஞ்சிக்கு முன்னாடி ஒரே புகை மண்டலம்... அந்த புகை விலக கொஞ்ச நேரம் ஆச்சு. தமிழ்வாசி நான்தான் நக்கீரன் அப்படின்னு ஒருத்தர் சொன்னார். நக்கீரனா அப்படினா யாருன்னு கேட்டேன். அதான்யா நக்ஸ்.... நாய்நக்ஸ்... அப்படின்னு ஒண்ணு இருக்குல அது நான்தான் ஸ்டைல்லா சொன்னார். அதானே பார்த்தேன், கதவ தட்றப்பவே உள்ள நாய்நக்ஸ் இருக்காருன்னு சிம்பாலிக்கா சத்தம் கேட்டுச்சோ? 
பிரபா. செந்தில்
     அப்புறமா அங்கிட்டு ஒருத்தர் படுத்திருந்தாரு... அவரு யாருன்னு கேட்கறதுக்கு முன்னாடியே நான் செந்தில் அப்படின்னு சொன்னார். செந்திலா? யாருனே தெரியலையேன்னுனேன். நான் தான் ஆரூர் மூனா செந்திலுன்னு சொன்னார், உங்க அடையாள தாடி எங்க அப்படின்னு கேட்டதுக்கு வீட்டுல கழட்டி வச்சிட்டு வந்துட்டேன்னு சொன்னார். அதாங்க உங்க அடையாளமே, அத கழட்டி வச்சா எப்படி? அடுத்ததா அழகா நீள முடி வச்சிருந்த தத்துவ ஞானி(பிலாசபி). அவரது அடையாளமே அவர் பதிவுலகில் தத்துவஞானி என காட்டியது. அவரது பதிவில் வரும் ஒயின்ஷாப் அங்க பக்கத்துல இருந்துச்சு. ரைட்டு, நமக்கு வேணாம்னு ஒதுங்கிட்டேன். அப்படியே நாலு பெரும் பேசிட்டு இருந்தோம். என் மொபைல் அலறுச்சு.... யாருன்னு பார்த்தா கவிதவீதி. அட்டென்ட் பண்ணி பேசுனேன். மனுஷன் அங்க கொலைவெறியில இருந்தாரு. அவரு ஊர்க்காவல் படையில இருக்றதுனால நைட் டூட்டியாம். நான் தூங்காம இருக்கணும்னா உங்கள யாரையும் தூங்க விடமாட்டேன்னு சபதம் போட்டார். என்ன செய்ய இம்சையை தாங்கி தானே ஆகணும். வேறவழி, சௌந்தர் பக்கத்துல இருந்தா போட்டு மிதிக்கலாம். ஆனா சந்திப்புக்கு வராம டேக்கா தந்திட்டு சின்சியரா வேலை பார்த்துட்டு இருக்காரு.     
பிரபாவுக்கு யாராச்சும் பொண்ணு பாருங்க
   செந்தில் ரயில்வேயில் வேலைக்கு சேர போறாராம். அதனால நைட்டு தூங்குறப்போ ரயில் இன்ஜின் சவுண்டு வரும். கொஞ்சம் பொறுத்துக்கங்கனு சொன்னார். நானும் நக்கீரரும் டெர்ரர் ஆயிட்டோம். வேற வழி காதை மூடிட்டு தூங்க வேண்டியது தான். அப்பப்ப நக்கீரன் தன் ப்ளாக் பேரை பிரபலப்படுதனும்னு ரொம்ப வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டார். பிலாசபி அவர் வேலையை சரியா பார்த்துட்டு இருந்தார். அதான் டிவி சேனலை மாத்திட்டே இருந்தார். அப்படியே எல்லோரும் தூங்கிட்டோம். கொஞ்ச நேரத்துல மொபைல் அலறுச்சு. எடுத்து பார்த்தா சௌந்தர்... இவருக்கு வேற வேலை இல்லைன்னு நெனச்சிட்டு அட்டென்ட் பண்ணல. அப்புறம் நாலஞ்சு வாட்டி சௌந்தர் கிட்ட இருந்து போன் வந்துச்சு. நான் வேணும்னே அட்டென்ட் பண்ணல. தூங்குற மாதிரி பாவ்லா செய்தேன். நம்ம நக்ஸ் தான் அட்டென்ட் பண்ணி சௌந்தரை காய்ச்சிட்டு இருந்தார். காலையில எந்திரிச்சு மொபைல பார்த்தா பத்து கால்ஸ் சௌந்தர்கிட்ட இருந்து. பாவம் நம்ம நக்ஸ். தூங்கவே இல்லையாம். காலையில மனுஷன் பொலம்பி தள்ளிட்டார். 
சம்பத், சிவா, மணிவண்ணன்
      அப்புறம் மெட்ராஸ்பவன் ரூமுக்கு போனோம்.என்னை அடையாளம் கண்டுகிட்ட மெட்ராஸ்பவன் சிவா நைட் தனியா ஒரு ரூம்ல இருந்திங்களாமேன்னு கேட்டார். இல்ல சிவா பிரபா ரூம்ல தான் இருந்தேன்னு சொன்னேன். அங்க மெட்ராஸ்பவன் சிவா, கேஆர்பி, வீடு திரும்பல் ஆகியோர் இருந்தாங்க. அவங்கள இப்போ தான் மொத தடவையா பார்கிறேன். நானும் சிவாவும் ரொம்ப சீக்கிரமே நண்பர்களாயிட்டோம். சந்திப்பை எத்தன பேர் எத்தன பதிவு போட்டு தேத்த போறாங்கன்னு நக்கல் செய்தார். அப்புறமா ஒவ்வொருத்தரும் கிளம்பி நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு போனோம். அப்ப தான் நம்ம தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்தும், வீடு சுரேஷ்ம் வந்தாங்க. சிபிக்கு போன் செய்தா வர அரைமணி நேரம் ஆகும்னு சொன்னார். 
அப்புறம் விழா ஆரம்பிச்சு முடியற வரை தனி பதிவு போடலாம்னு இருக்கேன். அதனால நிகழ்ச்சியை ஸ்கிப் பண்ணிட்டேன்.
வீடு சுரேஷ், குணசீலன், நான், சம்பத்
         நிகழ்ச்சி முடிஞ்சு சாப்பிட வந்தோம். சிபியும் அங்க இருந்தார். வாங்க சிபி நான்வெஜ் சாப்பிடலாம்னு கூப்பிட்டேன். இல்லையில்ல நான் வெஜ்ன்னு சொன்னார். அதான் சிபி நானும் சொல்றேன் நான்வெஜ் சாப்பிடலாம்னு. இல்ல பிரகாஷ், மீ வெஜ் அப்படின்னு சொன்னார். அப்போ தான் எனக்கு புரிஞ்சுச்சு.  நம்ம சம்பத் பழனிக்கு மாலை போட்டிருந்தார். அதனால அவரு வெஜ் பக்கம் போயிட்டார். நான் நான்வெஜ் சாப்பிட்டுட்டு வந்தேன். அப்போ சிபி வெஜ் பக்கம் உட்கார்ந்திருந்தார் வெறும் இலையோட, அண்ணே சாப்பிடிங்களா?ன்னு கேட்டதுக்கு இல்லைய்யா வெறும் இலைதான்.. இனிமே தான் சாப்பிடனும்னு சொன்னார். 
ஒரு பதிவரை அடிக்க முற்படும் சிவா
        சிவகுமார், பிலாசபி, செந்தில், நக்ஸ் என ஒரு கூட்டமே அரட்டை அடிச்சுட்டு இருந்துச்சு. இப்படியே பேசிட்டு இருக்கும் போது நம்ம மெட்ராஸ்பவன் சிவா கோவப்பட்டு ஒரு பதிவரை அடிக்க கை ஓங்கினார். அந்த நேரம் பார்த்து நான் போட்டோ க்ளிக்கிட்டேன். சிவா அத பார்த்துட்டு வேகமா என் பக்கத்துல வந்து போட்டோவை டெலீட் செய்ய சொன்னார். நான் பதிவு தேத்தனும்னு சொன்னேன். அவரும் சரி போட்டுக்க அப்படின்னு பெருந்தன்மையா சொன்னார். அவரும் நிகழ்ச்சியில போட்டோ எடுக்கும் போதெல்லாம் முகத்தை மறச்சுகிட்டார். அந்த முகத்துல அப்படி என்ன இருக்குன்னு தெரியல. அப்படியிருந்தும் சில போட்டோஸ் எடுத்தாச்சு. 
வீடு சுரேஷ், அரசு ஓட்டுனர், நான் 
       இதுக்கு நடுவுல கஸாலி போன் பண்ணி நக்கீரன் கிட்ட பேசினார். அப்போ நம்ம பிலாசபி இங்க நிகழ்ச்சியே முடியல அங்க கஸாலி பதிவு போட்டு ஹிட்ஸ் வாங்கிட்டார்ன்னு மொபைல்ல பார்த்துட்டே சொன்னார். உடனே எல்லோரும் நக்கீரன் கிட்ட கஸாலி கிட்ட பேச வேணாம். அவரு நீங்க பேசுறதை அப்படியே டைப் பண்ணி பதிவா போட்டுட்டு இருக்கார்ன்னு சொனதுக்கப்புறம் போனை கட் பண்ணினார். ஆக அவர் புண்ணியத்தில் கஸாலி ஒரு பதிவு தேத்திட்டார் போல......  நான், சம்பத், சுரேஷ், குணசீலனும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். குணசீலன் இரண்டாவது தடவையா ஈரோடு சந்திப்புக்கு வந்ததா சொன்னார்.  தண்ணி குடிக்க டைனிங் ஹாலுக்கு போனேன். அப்பவும் சிபி பந்தியில உட்க்கார்ந்திருந்தார். அண்ணே எத்தனையாவது ரவுண்டுன்னு கேட்டேன்.இதான் பர்ஸ்டும், லாஸ்ட்டும்ன்னு சொன்னார்.
      இப்படியே பல சுவாரஸ்யங்கள் இந்த சந்திப்பில் இருந்துச்சு. அப்படியே ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பினோம். ஆனா எங்கள விட சிபி தான் வேகமா வீட்டுக்கு கிளம்பினார். அப்பவே புரிஞ்சிருச்சு பதிவு தேத்த தான் இம்புட்டு அவசரம்ன்னு. 
இன்னும் வரும்...
டிஸ்கி:

ஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...



41 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

ஸ்டார்ட் மியுசிக்....

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

செய்யங்கப்பா.. செய்யுங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

எல்லோருக்கு போன் பண்ணி கலாய்ச்சிருந்தா எல்லா பதிவிலும் நான் வந்திருப்பேனோ...

Unknown said... Best Blogger Tips

நடத்துங்க..மக்கா...சிபி நாலு ரவுண்டாவது புல் கட்டு கட்டிருப்பாரு போல....நான பார்க்கையிலும் சாப்பிட்டுதாய்யா...இருந்தாரு..

Unknown said... Best Blogger Tips

பய புள்ள எத்தன இலைதான் சாப்டான்னு தெரியலயே ஹிஹி!

MaduraiGovindaraj said... Best Blogger Tips

நக்கீரனா அப்படினா யாருன்னு கேட்டேன். அதான்யா நக்ஸ்.... நாய்நக்ஸ்... அப்படின்னு ஒண்ணு இருக்குல அது நான்தான் ஸ்டைல்லா சொன்னார். அதானே பார்த்தேன், கதவ தட்றப்பவே உள்ள நாய்நக்ஸ் இருக்காருன்னு சிம்பாலிக்கா சத்தம் கேட்டுச்சோ?
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V

sathishsangkavi.blogspot.com said... Best Blogger Tips

போட்டுத்தாக்கு... போட்டுத்தாக்கு...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நெல்லை சந்திப்புல பஃபேல பரிமாரிகிட்டு இருந்த வெயிட்டர்கிட்டே அடிவாங்குன ஆளாச்சே சிபி ஹி ஹி...!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஒரு பதிவரை அடிக்க முற்படும் சிவா//

எலேய் மெட்ராஸ் பவன், எதுக்குலேய் இப்பிடி அசின்கியமா கையை காட்டுறே ஹி ஹி...!!!!

Anonymous said... Best Blogger Tips

அது என்ன ஒரு பதிவர். நான் அடிக்க நெனச்சது நக்கீரரைத்தான். என் இலைல வச்ச பணியாரத்தை நான் பக்கத்தல இருந்தவர் கிட்ட பேசிட்டு இருக்கும்போது நைசா நக்கிட்டாருங்க. அந்த போட்டோ யார் கிட்ட இருக்கோ.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அவரும் நிகழ்ச்சியில போட்டோ எடுக்கும் போதெல்லாம் முகத்தை மறச்சுகிட்டார். அந்த முகத்துல அப்படி என்ன இருக்குன்னு தெரியல. //

ஹா ஹா ஹா ஹா ஹா...

Anonymous said... Best Blogger Tips

//அந்த முகத்துல அப்படி என்ன இருக்குன்னு தெரியல. //

அதத்தான் நானும் சொன்னேன். என் மொகத்த கண்ணாடில பாத்தா நாலு நாளைக்கு நானே சிரிச்சிகிட்டு இருப்பேன். போட்டோ எடுக்க வேணாம்னு சொன்னா கேட்டாத்தானே. அவ்வ்!!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

சிபி தான் வேகமா வீட்டுக்கு கிளம்பினார். அப்பவே புரிஞ்சிருச்சு பதிவு தேத்த தான் இம்புட்டு அவசரம்ன்னு.//

ஆனால் இவனை முந்திகிட்டாங்க ரெண்டுபேர், அங்கேயும் பல்பு வாங்கிட்டான் நாதாரி...!!!

M.R said... Best Blogger Tips

அழகிய சந்திப்பு படிக்கும்பொழுதே நேரில் இருந்த அனுபவம் ,தொடருங்கள் தொடர்கிறேன்

Anonymous said... Best Blogger Tips

அகில உலக கில்மா ஸ்டார் நாய் நக்ஸ் வாழ்க,

எங்க தலைவர் போட்டோவுல கிளாமர் கம்மியா இருக்கு இதனை கண்டித்து அகில உலக கில்மா ஸ்டார் ரசிகர் மன்ற தலைவரான நான் வரும் ஞாயிறன்று மதுஅருந்தும் போராட்டம் சென்னையில் ஏதாவது ஒரு டாஸ்மார்க்கில் துவங்குவேன் என்பதை எங்கள் தலைவரின் மீது ஆணையிட்டு உறுதி கூறுகிறேன்.

rajamelaiyur said... Best Blogger Tips

நல்லா என்ஜாய் பன்னிருகிங்க

rajamelaiyur said... Best Blogger Tips

உங்கள் பார்வைக்கு இன்று ..

இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.

பால கணேஷ் said... Best Blogger Tips

பதிவர் சந்திப்புல பல நட்புகள் கிடைச்சு அமர்க்களமா கொண்டாடியிருக்கிங்கன்னு தெரியுது. நான் வரமுடியாமப் போச்சேன்னு ஏக்கமா இருக்கு. அடுத்த ஆண்டு நான் நிச்சயமா இருக்கணும்னு உறுதி எடுத்துக்கிட்டேன் பிரகாஷ் சார்!

மாலதி said... Best Blogger Tips

பாராட்டுகள் நல்ல செய்தி பதிவர்கள் சங்கமத்திற்கு வாழ்த்துகள்

Admin said... Best Blogger Tips

அலப்பறை இம்மும் அடங்கலையா..

வரவை எதிர்பார்க்கிறேன்..

செத்தபின்புதான் தெரிந்தது..

சத்ரியன் said... Best Blogger Tips

இம்பூட்டு நடந்துச்சா அங்க?

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

அடுத்த ஆட்டமா?

முத்தரசு said... Best Blogger Tips

அப்படி போடு... இன்னும் எண்ணமெல்லாம் வருதோ..!!??

ராஜி said... Best Blogger Tips

பதிவர் சங்கமத்தை பதிவா போட்டு பொறாமையை கூட்டுறீங்கப்பா

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம்,பிரகாஷ்!////காதை மூடிட்டு தூங்க வேண்டியது தான்.//// நாமெல்லாம் கண்ணையும் மூடிட்டுத் தான் தூங்குவோமாக்கும்!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பிரபாகரன் டி வி பார்த்தாரா? நம்ப முடியலையே? எஃப் டிவியா?

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள் நண்பா..

Unknown said... Best Blogger Tips

என்ன ரணகளம்!!!பிலாசபிக்கு பொண்ணு குடுங்கப்பா!

Unknown said... Best Blogger Tips

என்ன ரணகளம்!!!பிலாசபிக்கு பொண்ணு குடுங்கப்பா!

Unknown said... Best Blogger Tips

என்ன ரணகளம்!!!பிலாசபிக்கு பொண்ணு குடுங்கப்பா!

Rathnavel Natarajan said... Best Blogger Tips

அருமை.
வாழ்த்துகள் பிரகாஷ்.

Prem S said... Best Blogger Tips

பிலாசபி சின்ன பையன்னா? பொண்ணு பாத்துருப்பார் நாம பாக்க வேண்டியது இல்லன்னு நினைக்கிறேன்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... Best Blogger Tips

கலகல கலாட்டா இரசிக்கும்படி இருக்கு...

Unknown said... Best Blogger Tips

நல்லா வாசிக்கறீங்க !

Anonymous said... Best Blogger Tips

ennum varuma, varattum varattum

ad said... Best Blogger Tips

இந்த சந்திப்ப பத்தி இன்னும் எத்துன பதிவு வரும்.?

KANA VARO said... Best Blogger Tips

செம ஜாலியா இருந்தீங்க போல.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

////விக்கியுலகம் said...
பய புள்ள எத்தன இலைதான் சாப்டான்னு தெரியலயே ஹிஹி!////

இலையுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

இன்னும் இருக்கா?

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

J.P Josephine Baba said... Best Blogger Tips

வாழ்த்துக்கள்!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1