முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா மாநில அரசு மற்றும் அந்த மாநில மக்களின் ஒரு தலைபட்சமான முடிவு மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளால் தமிழகம் பொங்கி எழுந்துள்ளது. முல்லை பெரியாரால் பயனடையும் மாவட்டங்கள் அனைத்தும் சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் ஒற்றுமை நிலைப்பாட்டையும் அணையின் உரிமை மீட்பு போராட்டத்திலும் கை கோர்த்து செயல்பட்டு வருகிறது. இந்த மக்களின் அதரவாக பல கட்சியினரும் பாகுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் கேரளா அரசுக்கு எதிராக தங்கள் குரலை உயர்த்தி எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
தேனியில் நேற்று கேரளா சாலையை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். மேலும் எல்லா தரப்பு மக்கள்களும் முல்லைப்பெரியாறு போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்கள்.
முல்லைப்பெரியாறு போராட்டதிற்கு ஆதரவாக தேனியில் தீக்குளித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் உயிர் மருத்துவமனையில் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. இவரின் இந்த செயலால் கேரளா அரசுக்கு எதிராக தென்தமிழகமே பொங்கி எழுந்துள்ளது. கோவை, தேனி, கம்பம், செங்கோட்டை, களியக்காவிளை, திருநெல்வேலி, நாகர்கோயில் போன்ற கேரளா செல்லும் பல வழிகள் முற்றுகை செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் முழுதும் கடையடைப்பு போராட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களும் களத்தில் குதித்துள்ளது. இன்று காலை முதல் எல்லா கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் கேரளா அரசை எதிர்த்து பேனர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. ஆளுங்கட்சியோ அல்லது எதிர் கட்சியோ ஒரு பிரச்னையை முன்னிறுத்தி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் எழும். கட்சிகள் அழைப்பு விடும் பந்தின் போதும் பாதி கடைகள் ஆங்காங்கே திறந்திருக்கும்.
ஆனால் முல்லைப்பெரியாறு உரிமை மீட்பு போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை முதல் நான் பார்த்த வரையில் சிறிய பெட்டிக்கடை கூட திறக்கவில்லை. ஆட்டோக்கள் ஸ்டாண்டில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது.
21 கருத்துரைகள்:
இது எங்க போயி முடியபோகுதோ!!
@மைந்தன் சிவா
நீதி கிடைக்கும் போது முடியும்
சகோ!
எந்தக் கட்சியும் தூண்டாமலேயே வெடித்துள்ளப் இப்
போராட்டமே மக்கள் புரட்சி யாகும்
மதுரை மாவட்ட மக்களுக்கு
நன்றி நன்றி!!
புலவர் சா இராமாநுசம்
அரசியலைதாண்டிய இது போன்ற ஆதரவு மகிழ்வடைய செய்கிறது.
ஒட்டன் சத்திரம் வரைக்கும் கடையடைப்பு நடந்து வருகிறதாமே...
பகிர்வுக்கு நன்றி....
இன்று என் வலையில் படிக்க
அரசியலில் சேர்ந்த பிரபல பதிவர் பதிவுலகமே அதிர்ச்சி..!
செவிட்டு ராஸ்கல் சிங்கிடி, கேரளா தேர்தலில் ஓட்டு கிடைக்காதுன்னு வாய் மூடி மௌனம் காக்குறான் அப்படிப்பட்ட பொரதமரை செருப்பால் அடித்தால் என்ன...? மக்களை பற்றி கவலையே படாதவன் என்ன ம....த்துக்கு ஆட்சி செய்ய வரணும் கொய்யால....!!!
//MANO நாஞ்சில் மனோ said...
செவிட்டு ராஸ்கல் சிங்கிடி, கேரளா தேர்தலில் ஓட்டு கிடைக்காதுன்னு வாய் மூடி மௌனம் காக்குறான் அப்படிப்பட்ட பொரதமரை செருப்பால் அடித்தால் என்ன...? மக்களை பற்றி கவலையே படாதவன் என்ன ம....த்துக்கு ஆட்சி செய்ய வரணும் கொய்யால....!!!///
@நாஞ்சில் மனோ-
யோவ்.... எம்ம தலீவரத் திட்டாத.... சொல்லிட்டேன்.... இல்லைன்னா, உம்மை நடுவுல நிக்கவச்சு துகிலுருச்சுருவேன்...
ஜாக்கிரத!!!!
:-)
மக்களின் போராட்டங்களை கைதுகள் மூலம் அடக்குவோருக்கும் எதிராக போராடவேண்டும்.
வணக்கம்,பிரகாஷ்!தகவலுக்கு நன்றி.மேலும்,ஒரு நீதியான முடிவு கிட்ட வேண்டுமென்பதே எங்கள் விருப்பமும்,வேண்டுதலும்!கிட்டுமென்ற நம்பிக்கையுண்டு.
இயல்பு வாழ்க்கை பாதிப்பா? நீ தான் மச்சி சொல்லணும், எங்ககிட்ட கேட்டா?
நல்லது நடக்கட்டும்
26 மதுரை சுற்றுலா வரலா என உள்ளோம் .. வரலாமா ?
மக்களின் போராட்டங்களை கைதுகள் மூலம் அடக்குவோருக்கும் எதிராக போராடவேண்டும்.
அன்பான ஆதரவு நல்ல நீதி கிட்டும் நண்பரே
சென்னை வரைக்கும் எதிர்ப்புகள் அதிகமாகத்தான் இருக்கு பிரகாஷ். இன்று கூட அம்பத்தூரில் ஆட்டோ ஒட்டுனர்கள் சங்கத்தின் சார்பாக இன்று போராட்டம் நடக்கிறது.
LET AS WAIT AND C....
IPPADI SOLLIYE ..KALATHAI KADATHUVOM
......
நண்பரே...அவர்கள் வாழ்க்கை முழுவதும் நலமாக இருக்க நம் ஒரு நாள் வாழ்க்கை பாதித்தால் தப்பில்லை. மதுரை அப்போலோ மருத்துவமனை சென்றிருந்த என் நண்பன் சொன்னான். ஒரு கடையும் திறக்கவில்லை என்று
விரைவில் ஒரு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும்!
உணர்வுபூர்வமான எதிர்ப்பிற்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை.
பாப்போம் நல்லதே நடக்குமென்று!
Arumai Sago. Madurai Makkal paarattukkuriyavargal.
Tamilmanam vote button enge Sago.?