ஈரோடு வலைப்பதிவர் குழுமம் நடத்திய சங்கமத்தில் விழா சிறப்புத் தலைவராக திரு. ஸ்டாலின் குணசேகரன் அய்யா அவர்கள் பங்கேற்று உரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே பகிரப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட பதினைந்து பதிவர்களை பாராட்டி பேசினார். அவர்களது திறமையை அங்கே காட்டப்பட்ட ஸ்லைடுகள் மூலம் தெரிந்து கொண்டதாகவும், நல்ல திறமைசாலிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தான் பங்கு கொண்டிருப்பதாகவும் பெருமையாக சொன்னார். இன்றைய காலகட்டத்தில் பதிவர்கள ஊடகங்களுக்கு போட்டியாக வளர்ந்து வருவதாகவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பத்திரிக்கை துறைகளை நாடாமல் தாங்களாகவே ஒரு தளம் தொடங்கி அதில் பதிவிட்டு வருவது நல்ல விஷயம் தான் என சொன்னார்.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் பற்றி சில மணித்துளிகள் கழித்தே தீவிரவாதிகளின் தாக்குதல் என ஊடகங்களில் வெளியானாலும் அந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் சிலர் சம்பவத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் அந்த சம்பவத்தின் அடிப்படை காரணத்தை, அதாவது விபத்து அல்ல தாக்குதல் என அறிய வைத்தார்கள். அந்த அளவுக்கு இன்றைய மக்கள் தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். இந்த மாதிரி தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள். இவர்களால் சிறந்த படைப்புகள் வெளி உலகிற்கு தெரிய வருகிறது.இதற்கு தொழில் நுட்பமும் பெரும் உதவியாய் உள்ளது.
மேலும் இந்த மாதிரியான பதிவர்கள், படைப்பாளிகள் சந்திப்பால் பலருக்கும் புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். பல பகுதிகளில் இருந்து இவர்கள் இங்கே ஒன்று கூடி இருப்பதால் இந்த சங்கமம் நிகழ்ச்சிக்கான அர்த்தம் உண்மையாகி உள்ளது. வெறும் சம்பிராதய நிகழ்ச்சியாக இல்லாமல் எல்லோரும் ஒன்று கூடி இந்த சந்திப்பை மறக்க முடியாத தருணமாக மாற்றியிருக்கிறார்கள். பொது விஷயங்கள் மட்டுமின்றி இணைய நுட்பங்களின் சிறப்புகளையும் இவர்கள் பகிர்கிறார்கள்.
இவ்வாறு நிகழ்ச்சி தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அய்யா அவர்கள் பேசினார்.
சங்கம நிகழ்ச்சியில் பாலபாரதி சொன்ன குட்டிக்கதை....
ஒரு பெற்றோர் தங்கள் மகனை, சிறந்த கல்வியை தரும் பிரபலமான பள்ளியில் அதிக கட்டணம் கொடுத்து சேர்த்தார்கள். அந்த பையனும் படிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டு வந்தான். இருந்தாலும் ஒரு முறை அந்தப் பெற்றோருக்கு, தங்கள் மகன் எந்த அளவுக்கு பாடம் படித்துள்ளான் என சோதித்து பார்க்க விரும்பினார்கள். மகனைக் கூப்பிட்டு A, B, C, D.... சொல்லு பார்ப்போம் என சொன்னார்கள். மகனும் A சொன்னான். ஆனால் அடுத்து B, C.. என சொல்லவில்லை. பெற்றோர்கள் திரும்பவும் A, B, C, D.... சொல்லு பார்ப்போம் என சொன்னார்கள். ஆனால் அப்போதும் அவன் A மட்டுமே சொன்னான். அந்த பெற்றோர்களுக்கு கோபம் வந்துவிட்டது. அதிக கட்டணம் கொடுத்து பள்ளியில் சேர்த்தால் ஒரு A, B, C, D.... கூட சொல்லத் தெரியவில்லையே என கவலைப்பட்டனர். இது சம்பந்தமாக பள்ளி ஆசிரியர்களிடம் கலந்து பேச வேண்டும் என அவர்கள் முடிவு செய்து தங்கள் அலுவகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு பள்ளிக்கு சென்றார்கள்.
பள்ளியில் முதல்வர் அறையில் பையனுக்கு பாடங்கள் சொல்லித்தரும் ஆசிரியர்கள் அனைவரும் கூடினார்கள். அந்த பெற்றோர் என் மகனுக்கு A, B, C, D.... கூட சொல்லத் தெரியவில்லை. இவ்ளோ காசு கட்டியும் பிரயோஜனம் இல்லாமல் இருக்குதே என ஆசிரியர்களிடம் கேட்டார்கள். ஆசிரியர்களும் தாங்கள் நன்றாக பாடம் சொல்லித் தருவதாகவும் பையனும் படிப்பில் நல்ல முனேற்றம் அடைந்து வருவதாகவும் சொன்னார்கள். ஆனால் அந்த பெற்றோர் அதை நம்பவில்லை. எங்கே A, B, C, D.... சொல்லச் சொல்லுங்க பார்ப்போம் என்றார்கள்.
பையனின் வகுப்பு ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு எங்கே A, B, C, D.... சொல்லு என சொன்னார்கள். பையன் A என சொன்னான். ஆசிரியர் "உம்" என சொன்னார். அடுத்து பையன் "B" சொன்னான். ஆசிரியர் "உம்" என சொன்னார். அடுத்து பையன் "C" சொன்னான், ஆசிரியர் "உம்" என சொன்னார். இப்படியே அவன் ஒவ்வொரு எழுத்தாக சொல்லச் சொல்ல ஆசிரியர் "உம்" சொன்னார். பையன் முழுவதும் சொல்லி முடித்ததும் ஆசிரியர்கள் பையன் சரியாகத்தான் சொல்கிறான் என அந்த பெற்றோரிடம் சொன்னார்கள். உடனே அவனின் தந்தை பையனிடம் A, B, C, D... சொல்லு என கேட்டார். அவன் "A" சொன்னான். தந்தை "உம்" என சொன்னார். உடனே பையன் "B" சொன்னான். தந்தை "உம்" என சொன்னார். இப்படியே பையன் சொல்லச் சொல்ல அவர் "உம்" சொன்னார். அப்போது தான் அவருக்கு புரிந்தது. A,B,C,D க்கு "உம்" போட்டால் தான் பையன் அடுத்த எழுத்து சொல்கிறான் என்றே.
சங்கம நிகழ்ச்சியை இனிதே நடத்திய ஈரோடு வலைப்பதிவு குழுமத்தினர் அனைவருக்கும், கலந்து கொண்ட அனைத்து பதிவர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முற்றும்...
டிஸ்கி:
தலைவர் உரையும், பாலபாரதியின் குட்டிகதையும் என் நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
17 கருத்துரைகள்:
குட் மெம்மரி பவர், தக்காளி நீ எங்களோட தானே வெளீல இருந்தே, எப்படிய்யா நோட் பண்ணே? அடங்கோ
haa haa யோவ், சுரேஷ், இதோ வாரேன்
அருமை!என் இனிய நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்! எதுவும் தவறு இல்லை!அபாரமான நினைவாற்றல் வாழ்த்துக்கள்!
நிகழ்ச்சி முடியும் வரை நானும் உங்களோடு தான் இருந்தேன் எனக்கு மறந்துவிட்டது! எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி!!
@சி.பி.செந்தில்குமார்
அண்ணே, எங்க இருந்தாலும் விசயத்துல கரக்டா இருப்போம்ல... ஹி..ஹி..
என்னெல்லாம் நடந்துருக்கு ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்
haa haa யோவ், சுரேஷ், இதோ வாரேன்///
சுரேசு கவனம்யா... வராராம்...
@veedu
நிகழ்ச்சி முடியும் வரை நானும் உங்களோடு தான் இருந்தேன் எனக்கு மறந்துவிட்டது! எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி!!///
என்னோடு இருந்ததுனால மறதி வந்திருச்சா? என்ன கொடுமை சுரேஷ்...
நிகழ்ச்சி முடியும் வரை நானும் உங்களோடு தான் இருந்தேன் எனக்கு மறந்துவிட்டது! எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி!!///
என்னோடு இருந்ததுனால மறதி வந்திருச்சா? என்ன கொடுமை சுரேஷ்...
உங்களோட இருந்ததால இல்ல நமக்கு மெமரி கம்மி உங்க அளவுக்கு ஒர்த் இல்லையின்னு சொல்ல வந்தேன் ஹஹ
சந்திப்புக்கு வாழ்த்துக்கள்....!!!
என்னதான் ஆளு வெளியே இருந்தாலும் காது உள்ளேதான் இருந்துருக்கு ஹி ஹி குட் மெமரி...!!!
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே
ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்
ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்
பகிர்வுக்கு நன்றி..
அன்போடு அழைக்கிறேன்..
வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்
சங்கமத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் அவரவர் கண்ணோட்டத்தில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொடுத்து பதிவிட்டதால் எங்களுக்கு நிகழ்சியை முழுமையாய் பார்த்த திருப்தி.
ஞாபகசக்தி அதிகம்தான் உங்களுக்கு. நல்ல பகிர்வு.
ஒருவரின் திறமை வெளிப்படனும்னா தட்டிக்கொடுக்கனும்னு சின்னக்கதை மூலமா சொல்லி இருக்காங்க . நல்லா இருக்கு.
நீங்க டைர்ரில ஏதோ கிறுக்கும்போது நெனச்சேன் இப்படி பதிவு வரும்னு
மேதகு பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியீடு! (படங்கள் )
அருமை நண்பரே. கருத்துக்களை நினைவில் வைத்து பதிவில் பதித்தமைக்கு..நன்றி.
நல்ல தகவல்களை ஞாபகம் வைத்துக் கொண்டு அழகாக எழுதி உள்ளீர்கள்! நன்றி நண்பா!