CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



முட்டைப் பணியாரத்துக்கு இப்படியா? பல்பு வாங்கிய பதிவர்!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
      வணக்கம் மக்காஸ், எப்படியிருக்கீங்க? நல்லாயிருக்கிங்களா..? நல்லது இதைப்படிச்சதுக்கு அப்புறமா வரும் விளைவுகளுக்கு பணியாரக் கம்பெனி பொறுப்பு ஆகாது. அப்புறம் இப்படியாகிட்டேன்…அப்படியாகிட்டேன்னு சொல்லக்கூடாது.

       ஈரோடு பதிவர் சந்திப்புக்கு பிறகு நடந்த சண்டை சச்சரவுனால (என்ன சண்டைன்னு கேட்கப்படாது) மக்கா மறந்த விசயம் இரண்டு, ஒண்ணு நாம அங்க போனோமா? அப்படிங்கற சந்தேகம், இரண்டு, சிரிக்கக் கூடாது, முடிஞ்சா சீரியசா… ஆஸ்பத்திரிக்கு அல்ல... அப்பு! விஜயகாந்த் மாதிரி கண் சிவக்க கேளுங்க… சிவக்கலைன்னா உங்க கையால கண்ணை குத்திக்கங்க…. ஐயோ, அடிக்க வாராதிங்க நான் சொல்லுறத கேளுங்க.

       அந்த இரண்டாவது, சம்சாரம் அடச் ச்சீ..ச்சீ... சாமாச்சாரம் முந்தானை முடிச்சு படம் பார்த்துட்டு வெளிய வரப்ப எப்படி முருங்கக்காய் கொடுத்தாங்களே…! (கொடுத்தாங்கன்னு வச்சுக்கங்க) அதனால முருங்கக்காய் ரொம்ப பேமஸ் ஆயிருச்சு…. அது போல பேமஸ் ஆனது தலைவர் நாய்நக்ஸ் அவர விடுங்க, இப்ப அடிச்ச தானே'ல அடங்கிப் போயிட்டாரு.  பாவம் இன்னொண்ணு முட்டைப் பணியாரம். ஆமா, ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டு வந்ததிலிருந்து அது மேல அம்புட்டு ஆசை மக்கா….! மதுரையில் பல கடையில கேட்டேன், இல்லை மக்கா! ஒரு பயலும் இல்லைன்னுட்டான்…என்னைய மேலயும், கீழயும் பார்க்குறான் பயபுள்ளக…! இப்ப கொஞ்ச நாளா என் பேச்சே அது பத்திதான் அமைஞ்சு போச்சு….

   மெத்தை வாங்கப் போன இடத்துல (எதுக்கோ வாங்கினேன், அம்புட்டுதேன்) மெத்தை நல்லா முட்டைப் பணியாரம் மாதிரி மெது மெதுன்னு இருக்கனும் அப்படின்னேன் கடைக்காரன் சிரிக்கிறான். சரி நமக்கு எங்க போனாலும் முட்டைப் பணியார ஞாபகமா இருக்கு, இது சரிபட்டு வராது, வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லி செஞ்சுத் தரச் சொன்னேன், எனக்கு தெரியாது, எப்படி செய்யறதுன்னு சொல்லுங்க?செஞ்சு தாரேன் அப்படினாங்க…. சரி நம்ம கூகுள்ல தேடி ஒரு வழியா செய்முறைய கண்டுபிடிச்சேன். புதுசா ஒரு கிரகத்தை கண்டு பிடிச்ச விஞ்ஞானி மாதிரி,

         வேலை விட்டு வரும் போது ஒரு அஞ்சு முட்டை வாங்கிட்டு வந்தேன். கடைக்காரன் கிட்ட, வடிவேலு ஒரு படத்துல இது நல்லெண்ணெயா, கடலை எண்ணையான்னு கேட்ப்பாருல, அதே மாதிரி இதுல பணியாரம் வருமா, சாப்பிட்டா மெது மெதுன்னு இருக்குமா? அப்படின்னு கேட்டா முறைக்கிறான், என்ன செய்ய நமக்கு முட்டையில பணியாரம் வரணும், அது முக்கியமுல்ல. வீட்டம்மாகிட்ட முட்டைப் பணியார ரெசிபிய சொன்னேன், எப்படி செஞ்சாங்கன்னு சொல்றேன், நீங்களும் கேட்டுக்கங்க வாங்குன முட்டைகள ஒரு அகல பாத்துரதுல உடைச்சி ஊத்திக்குங்க. தேவையான அளவு உப்பு, மிளகு பொடி, கொஞ்சமா வெங்காயம் எல்லாத்தையும் தோசைமாவுல கலந்து நல்லா கலக்கி பணியாரக் குழியில பனியாரம் மாதிரியே ஊத்தினா மேட்டர் ஓகே, முட்டைப் பணியாரம் ரெடி. அவ்வளவு தான், பெருசா கஷ்டம் ஒன்னும் இல்லை. அம்புட்டுத் தான். வீட்டம்மா சுட்டு தட்டுல வைச்சு கொடுத்தாங்க. வாராந்தாவுல உக்கார்ந்து டிவி ஆன் பண்ணிட்டு ஒரு முட்டை பணியாரத்தை இப்படின்னு தொட்டு பார்த்தேன்.

        பிரகாஷ்... பிரகாஷ் அப்படின்னு யாரோ கூப்பிட்டாங்க, யாருய்யா அது முட்டைபணியார பூசைல கரடின்னு வெளிய போய்ப் பார்த்தா அட நம்ம கரடி, அடிச்சே, அதான் நம்ம மனோ, சிபி ரெண்டு பெரும் நின்னுட்டு இருந்தாங்க. (ரெண்டு பேரும் மோப்பம் புடுச்சு வந்துட்டாங்களோ) 

      வாங்க சிபி, வாங்க மக்கா.. என்றேன். வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனதும் என் அமுதம் சிபி கண்ணுல பட்டு தொலைஞ்சிருச்சு, ஹேய் முட்டைப் பணியாரமா என வாயை தொறக்க.. மக்கா பக்ரைன்ல அரபிக்காரன் ஹோட்டல்ல "தக்காளி" (விக்கி மன்னிக்க) ரொட்டி போட்டு போட்டே நாக்க காலி பண்ணிட்டாம்ல என்று மனோ பணியாரத்தை பாத்துட்டே சொல்ல, மக்கா நான் என்ன சொல்ல சாப்பிடுங்கன்னு சொன்னேன். மக்கா எடுக்றதுக்குல சிபி நாலு பணியாரத்தை ஒரே வாயில அமுக்க, பாவம் மனோ எப்படியோ அடிச்சு புடிச்சு தட்டுல இருந்த மீதி நாலஞ்சு பணியாரத்தை எடுத்து லேப்டாப் பேக்கினுள் ஒளிச்சு வச்சார். 
  
            என் ஆசை முட்டைப் பணியாரம் எல்லாமும் ஸ்வாகா... இதுக்கே என் பொண்டாட்டி சலிச்சிகிட்டு செஞ்சு தந்தா... அடுத்து கேட்டோம்னா அவ்ளவு தான். இருந்தாலும் எப்படியாச்சும் நைஸ் பண்ணி கதவு, ஜன்னல் எல்லாத்தையும் மூடிட்டு செஞ்சு சாப்பிடனும். ஒரு பய புள்ளைகளும் மோப்பம் பிடிக்க கூடாது.

       அண்ணே, இம்புட்டு செஞ்சும் பணியாரத்தை கொஞ்சூண்டு கூட வாயில வைக்கல. யாராச்சும் சொல்லுங்கண்ணே! அடுத்த தடவை பதிவர் சந்திப்பு வெச்சா இரண்டு முட்டைப் பணியாரமா கொடுக்க சொல்லுங்க அண்ணே!



16 கருத்துரைகள்:

MaduraiGovindaraj said... Best Blogger Tips

நாந்தான் முதல்ல முட்டபநியரம் திம்பேன்

Admin said... Best Blogger Tips

ஈரோடு,பதிவர் சந்திப்பு,முட்டை பனியாரம் இன்னும் அதையெல்லாம் மறக்கலையா..தோழர்..

சரி அப்படியே வந்துட்டு போங்க.

சரணடைகிறேன்

ப.கந்தசாமி said... Best Blogger Tips

என்னை உட்டுட்டு ஈரோடு பதிவர் சங்கமத்தில என்னென்னமோ செஞ்சிருக்காங்க, என்கிட்ட சொல்லவேயில்லை. அடுத்த தடவ ரெண்டு நாள் முன்னயே போயி, கதிரு கூடவே ஒட்டிக்கப்போறேன்.

Unknown said... Best Blogger Tips

பாவம் பிரகாஸ் பனியாரத்து மேல இம்புட்டு ஆசையா...இருப்பார்ன்னு தெரியலை.....

Unknown said... Best Blogger Tips

மாப்ள நீர் முதுகு நிமிற பணியாரம் சுட்டுபுட்டு வீட்டுக்காரம்மா செய்ன்ச்சி கொடுத்ததா ஏமாத்தாதீரும்...விடுங்க இதெல்லாம் நமக்கு புதுசா...அப்புறம் அந்த ரெண்டு பேரும் எப்படி வந்தாங்க தெரியுமா...நீர் அப்போ கம்பியூட்டர ஆன்ல வச்சி இருப்பீரு...அது உள்ள் இருந்து பகாசூரர்கள் வந்துட்டாங்க போல ஹிஹி!

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் மச்சி,

முதல் பாதி நிஜம் என்று தோன்றுகிறது,

சிபியும், மனோவும் வந்த காட்சிகள் கற்பனை.

முட்டைப் பணியார ருசியினால் கவரப்பட்டு பல்பு வாங்கிய மக்கா வாழ்க!

வட்டார நடையில் சூப்பரா எழுதியிருக்கிறீங்க.

பதிவு நகர்வு, நகைச்சுவை ரெண்டுமே கலக்கல்.

மெத்தை கூட முட்டைப் பணியாரம் மாதிரி மெது மெதென்று இருக்கனும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இத மட்டும் செங்கோவி படிக்கனும்;-))))

Prem S said... Best Blogger Tips

பதிவர் சந்திப்பு ரகளைகள் தொடராக போடலாம் போல .கலக்குங்க


பதிவர்களுக்கு :தமிழின் முதன்மை திரட்டிகளில் பதிவை ஒரே கிளிக்கில் இணைக்க உதவும் TOOLBAR இணைக்க

Anonymous said... Best Blogger Tips

ஆஹா இப்படியெல்லாம் பதிவ தேத்தலமா? ஆனாலும் முட்டை பணியாரம் செய்முறை விளக்கம் சூப்பர்... நானும் எழுதி வச்சுகிட்டேன்..

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Vanga makka.....

Iinuma en melay ulla
poraama mudiyalai....????

Innum enakku thirushti
suthi podanuma.....

Mudiyalai.....

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!முட்டப்பணியாரம் சூப்பர்!அடுத்த வாட்டி செய்யிறப்போ எனக்கும் சேர்த்து ரெண்டே,ரெண்டு வீட்டுக்காரம்மாகிட்ட சொல்லி செஞ்சு பார்சல் அனுப்பிடுங்க,பிளீஸ்!

முத்தரசு said... Best Blogger Tips

பணியாரம்... பணியாரம்.. இம்புட்டு ஆசையா?

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

பேரை மாத்திருவோமா...?

----"முட்டை பணியாரம்"பிரகாஷ்-----

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

வாங்க சிபி, வாங்க மக்கா.. என்றேன். வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனதும் என் அமுதம் சிபி கண்ணுல பட்டு தொலைஞ்சிருச்சு, ஹேய் முட்டைப் பணியாரமா என வாயை தொறக்க..//


அவன் ஒரே வாயில அம்புட்டையும் தின்னுருவானே....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

கதவு, ஜன்னல் எல்லாத்தையும் மூடிட்டு செஞ்சு சாப்பிடனும். ஒரு பய புள்ளைகளும் மோப்பம் பிடிக்க கூடாது.//

மோப்பம் பிடிச்சு கதவை உடைச்சுட்டு வந்துருவான் சிபி அண்ணன் ஜாக்குரதை...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அடுத்த தடவை பதிவர் சந்திப்பு வெச்சா இரண்டு முட்டைப் பணியாரமா கொடுக்க சொல்லுங்க அண்ணே!//

யோவ் ஆபீசர்கிட்டே சொல்லி வச்சிருக்கேன் கவலைப்படாதேய்யா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

இந்தப் பணியாரத்துக்கு என்ன சைட் டிஸ் நல்லாருக்கும்? (ம்மூதேவி இதுவே ஒரு சட் டிஷ்தாண்டான்னு நாஞ்சிலாரு இப்ப சொல்வாரு....)

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1