CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
தைப்பொங்கல் வரலாறு:
    சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் போகிப் பண்டிகை:
       தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
        இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
     போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

இரண்டாம் நாள் தைப்பொங்கல்:
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

      தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
       பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
          மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
      உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
       உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல்:
      காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
       இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

டிஸ்கி: என் பக்கத்து வீட்டு ஆறாம்வகுப்பு படிக்கும் மாணவி பொங்கல் பண்டிகை பற்றிய குறிப்புகள் வேண்டும் எனக் கேட்டதால் இணையத்தில் தேடி எழுதிக் கொடுத்தேன். அந்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கும் பகிர்ந்துள்ளேன்.
நன்றி: விக்கிபீடியா

கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான் எழுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு:

கடந்த வருடம் போல இந்த வருடமும் மதுரையை சுற்றி நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் தொலைக்காட்சி தொகுப்பை தங்களுக்காக ஒளிப்பதிவு செய்து தர முயற்சிக்கிறேன்.



23 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

பொங்கலோ பொங்கல் மக்கா!

Unknown said... Best Blogger Tips

பொங்கல் திருவிழா தமிழர் திருவிழா அதைப்பற்றிய கட்டுரை சிறப்பு...ஜல்லிகட்டு வீடியோ பார்க்க ஆவாலாக உள்ளோம்

ராஜி said... Best Blogger Tips

தமிழர் திருநாளாம் பொங்கலை பற்றி இணையத்தளத்தில் தேடி படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவலத்தில் நம் எதிர்கால சந்ததியா?

MaduraiGovindaraj said... Best Blogger Tips

///ராஜி said...
தமிழர் திருநாளாம் பொங்கலை பற்றி இணையத்தளத்தில் தேடி படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவலத்தில் நம் எதிர்கால சந்ததியா?//

தமிழன் டமிலன் ஆகிவிட்டான்

அதன் விளைவு !

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ராஜிதமிழர் திருநாளாம் பொங்கலை பற்றி இணையத்தளத்தில் தேடி படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவலத்தில் நம் எதிர்கால சந்ததியா?////

இன்றைய காலகட்டத்தில் பள்ளிகள் மாணவ மாணவியருக்கு சில தலைப்புகளை கொடுத்து assignment எழுதி வரச் சொல்கிறார்கள். தலைப்புகளை தரும் போதே இணையத்தில் இருந்து தேடுங்கள் எனவும் சொல்கிறார்கள். இது நல்ல பழக்கம் தானே..... தேடுதல் திறனும், பெரிய பாராவிலிருந்து சிறு குறிப்பு எடுக்கும் திறமையும் வளருமே....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கோவிந்தராஜ்,மதுரை.
///ராஜி said...
தமிழர் திருநாளாம் பொங்கலை பற்றி இணையத்தளத்தில் தேடி படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவலத்தில் நம் எதிர்கால சந்ததியா?//

தமிழன் டமிலன் ஆகிவிட்டான்

அதன் விளைவு !///

ஆக, நான் இணையத்தில் தேடி எடுத்ததால் டமிலன் என சொல்றிங்க????

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

ரைட்டு...

நல்லதொரு தொகுப்பு...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

பிளாக் கலர் கலரா கலக்குது மச்சி

Rathnavel Natarajan said... Best Blogger Tips

வாழ்த்துகள் பிரகாஷ்.

முத்தரசு said... Best Blogger Tips

பொங்கல் வரலாறு - பொங்கவச்சிடியலே.

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மனசாட்சியின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips

உங்க வழியில் மீண்டும் பொங்கியது பொங்கல்..மாப்ள!

Admin said... Best Blogger Tips

பொங்கல் விளக்கம் நன்று..
முன்னதாகவே பொங்கல் மற்றும் தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

Admin said... Best Blogger Tips

இந்தமுறையும் ஜல்லிக்கட்டு காணொளியை பதிவில் இணையுங்கள்..

rajamelaiyur said... Best Blogger Tips

நல்ல செய்திகள் .. பொங்கல் பொங்கட்டும்

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

பொங்கலோ பொங்கல்.....

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!பொங்கிடுவோமில்ல????அட்வான்ட்ஸ் போங்கள் வாழ்த்துக்கள்!

ரஹீம் கஸ்ஸாலி said... Best Blogger Tips

பொங்கல் பற்றி ஒரு நல்ல பதிவு

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

நல்ல தகவல் பதிவு.ஏற்கனவே தெரிந்த விவரம் ஆனாலும் படிப்பதற்கு சிறப்பாக இருந்தது. நன்றி பகிர்வுக்கு.

கோகுல் said... Best Blogger Tips

பொங்கலுக்கு சொந்த கிராமத்துக்கு போக போறேன்,நீங்க சொன்னதெல்லாம் அனுபவிக்கப்போற பரவசம் இப்பவே வந்துடுச்சு.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

சிறப்பான தொகுப்பு! இது போன்ற கட்டுரைகளை அடிக்கடி வெளியிடலாம்!

Chitra said... Best Blogger Tips

nice post.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

KANA VARO said... Best Blogger Tips

தமிழ்வாசி பெரிய்ய ஆல்ரவுண்டர் போல, எல்லாம் கலந்துகட்டி அடிக்கிறார்.

Unknown said... Best Blogger Tips

பொங்கல் கட்டுரை நன்றாக இருந்தது

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1