CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label பண்டிகை. Show all posts
Showing posts with label பண்டிகை. Show all posts


மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2013 - சிறப்புப்பார்வை

       மதுரையில் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று 23-04-2013  காலை 8:17 முதல் 8:41-க்குள் மேற்கு வடக்கு ஆடிவீதியில் உள்ள திருகல்யாண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நன்றி: விகடன்

மேலும் வாசிக்க... "மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2013 - சிறப்புப்பார்வை"



மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்திரை திருவிழா 2012

இன்று 5-05-2012 காலை ஆறு மணி அளவில் கள்ளழகர் எதிர்சேவை மூன்றுமாவடியில் நடந்தது. கள்ளழகர் தங்கபல்லக்கில் வலம் வந்ததை புதூர் ஐயப்பன் கோவில் அருகில் தரிசனம் செய்து எடுத்த படங்கள், உங்களின் தரிசனத்திற்காக...
கோவில் யானை வலம் வருதல்
புதூர் கற்பகநகரில்

கள்ளழகருக்கு விளக்கு பூஜை செய்கிறார் ஒரு பக்தர்

புதூர் ஐயப்பன் கோவிலுக்கு முன்பு கள்ளழகர்

வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடந்தது .மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவாகும். 

இதில் பங்கேற்க அழகர்கோவிலிருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நேற்று மாலை 5.21 மணிக்கு தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து அதிர்வேட்டு முழங்க பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் கோயிலை விட்டு வெளியே வந்தார். முதலில் வெள்ளையன்குன்றம் சண்முகராஜா, கூட்டு வண்டியில் முரசு அடித்து கொண்டு முன்னே செல்ல குட்டி யானை சுந்தரவள்ளி, அதனை தொ டர்ந்து 20 உண்டியல்கள் மற்றும் தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கி புறப்பட்டார். 

கோயில் கோட்டை வாசலை விட்டு வெளியே வந்த கள்ளழகர் பின்பு கருப்பணசாமி கோயில் அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சிறப்பு பூஜைக்கு பின்பு இரவு 7 மணி அளவில் புறப்பட்டு பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளினார். மீண்டும் 2 மணி அளவில் புறப்பட்ட கள்ளழகர் காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர்காலனி வழியாக இன்று அதிகாலை 6 மணிக்கு மூன்றுமாவடிக்கு வந்தார்.

அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு எதிர்சேவை செய்தனர். காலை 9 மணிக்கு புதூர் மாரியம்மன் கோயிலிலும், மதியம் 12 மணிக்கு ஆயுதப்படை குடியிருப்பிலும், மாலை 5 மணிக்கு தல்லாகுளம் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயிலிலும், மாலை 5.20 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்திலும் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வணங்கி வரவேற்பார்கள்இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுகிறார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். திருமஞ்சனமான பின்னர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை பெருமாளுக்கு சாத்தப்படும். 

பின்பு தங்க குதிரை வாகனத்தில் இரவு 12 மணிக்கு புறப்படும் கள்ளழகர் 2.30 மணி அளவில் கருப்பணசாமி கோயிலில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருகிறார். அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் இறங்குகிறார்.வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வெள்ளி குதிரை வாகனத்தில் வரும் வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு வரவேற்பார். 
செய்திகள் தொகுப்பு: http://maduraipost.com/2012/05/kallalagar-festival/
புகைப்படங்கள் என் மொபைல் மூலம்
மேலும் வாசிக்க... "மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்திரை திருவிழா 2012"



மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு


வீரர்களை எதிர்த்து விளையாடும் காளை
         மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், துள்ளி பாய்ந்த காளைகளை, அள்ளி அடக்கிய இளைஞர்கள், பரிசு மழையில் நனைந்தனர்.
அலங்காநல்லூர் காளியம்மன், முனியாண்டி கோவில் திருவிழாவில் நடக்கும் ஜல்லிக்கட்டு, உலக பிரசித்தி பெற்றது. அவனியாபுரம், பாலமேடை தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதி ஜல்லிக்கட்டு என்பதால், அலங்காநல்லூரில் கூட்டம் அலைமோதியது.

      போட்டிக்கு, 464 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில், 17 காளைகள் நீக்கம் செய்யப்பட்டன. 559 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்ததில், போதை பொருள் பயன்படுத்திய ஐந்து பேர், நீக்கப்பட்டனர். சிலர் வராததால், 493 பேர் களத்திற்கு வந்தனர். காலை 9.15 மணிக்கு, சுவாமி மாடுகளுக்கு பூஜை செய்த பின், மாடுபிடி வீரர்கள், களத்திற்கு அழைக்கப்பட்டனர். அனைவரும் வெள்ளை நிற, "டி ஷர்ட்' அணிந்திருந்தனர்.

   மாடுகள் முட்டியதில், 36 வீரர்கள் காயம் அடைந்தனர். நான்கு பேர், படுகாயங்களுடன் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மதியம், 3.50 மணிக்கு, ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.

வீடியோ தொகுப்பு - 1

வீடியோ தொகுப்பு - 2

வீடியோ தொகுப்பு - 3
thanks: Dmax, dinamalar
தொடர்புடைய இடுகை:

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு




மேலும் வாசிக்க... "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு"



மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு

சீறிப்பாயும் காளையை அடக்க பாயும் வீரர்
              மதுரை மாவட்டம் பாலமேட்டில், நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், 355 காளைகள் சீறி வந்து, ஆக்ரோஷமாக பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற, ஆறு வீரர்கள் படுகாயமடைந்தனர். 20 பேர் லேசான காயம் அடைந்தனர். பாலமேடு மஞ்சமலையாற்றில், காலை 10 மணிக்குத் துவங்கிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், முதலில், ஐந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 10.15 மணி முதல், வாடிவாசல் வழியாக மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள், பச்சை நிறத்தில் சீருடை அணிந்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. பாதுகாப்புப் பணியில், 1,500 போலீசார் ஈடுபட்டனர். 
காளைகளை அடக்க களத்தில் இறங்கும் வீரர்கள்
     கூரிய கொம்புகள், வெறியும் பயமும் கலந்த பார்வை, மிரட்டும் திமில்களுடன் காளைகள் களத்தில் இறங்கின. பயிற்சி பெற்ற வீரர்கள், "வந்து பார்...' என, திமில்களை பிடித்தும், காளையின் கால்களை தங்களின் கால்களால் மடக்கியும் அடக்கினர். வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, கிரைண்டர், சைக்கிள், பீரோ, பணம் பரிசுகளாக வழங்கப்பட்டன.பிடிபடாத மாடுகளின் உரிமையாளருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. 
சீறும் காளைகள் முட்டிக் கொள்ளும் காட்சி
         ஊமச்சிகுளம் வினோத், சின்ன ஊர்சேரி தினேஷ், முடக்கத்தான் மணி, அரிட்டாபட்டி கருப்பணன் போன்ற வீரர்கள், சீறிய காளைகளை, லாவகமாக அடக்கி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியதுடன், பரிசுப் பொருட்களையும் அள்ளிச் சென்றனர். கீழசின்னாளபட்டி பாஸ்கர், நான்கு மாடுகளைப் பிடித்து, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். மாலை 4.10 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிந்தது. இதில், 355 மாடுகள் பங்கேற்றன. விதி மீறல் காரணமாக, 35 மாடுகள், சோதனையின் போது தகுதியிழப்பு செய்யப்பட்டன.

வீடியோ தொகுப்பு - 1

வீடியோ தொகுப்பு - 2

வீடியோ தொகுப்பு - 3

thanks: Dmax, dinamalar
தொடர்புடைய இடுகை:

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு





மேலும் வாசிக்க... "மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு"



மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு


         பொங்கல் பண்டிகையின் சிறப்பு நிகழ்வாக, பாரம்பரிய விளையாட்டாக தொடரும் ஜல்லிக்கட்டு, அரசின் பல்வேறு கெடுபிடிகளுக்கு நடுவில், மதுரை அவனியாபுரத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது. ஜல்லிக்கட்டிற்கு தடை கோரி பிராணிகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த ஐகோர்ட் அனுமதியளித்தது. ஜல்லிகட்டு இந்தாண்டு நடக்குமா? என்ற சந்தேகத்தில் இருந்த மாடுபிடிவீரர்கள் நேற்று அவனியாபுரத்தில் உற்சாகத்துடன் களம் இறங்கினர். கலெக்டர் சகாயம், எஸ்.பி., ஆஸ்ரா கர்க், மத்திய பிராணிகள் நலவாரிய நிர்வாகிகள் தலைமையில் ஜல்லிக்கட்டு துவங்கியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் நாட்டாமைகளின் மாடுகள் களம் இறங்கின. இவற்றை வீரர்கள் பிடிக்க கூடாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக 260 மாடுகள் களத்தில் இறங்கின.
              பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாடுகள் பங்கேற்றன. சீருடை அணிந்த வீரர்கள் மட்டும் மாடுகள் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு வழக்கம் போல் மிக்சி, கிரைண்டர் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. 

       அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோட்டில் குருநாதன் கோயில்முன் வாடி வாசல் அமைக்கப்பட்டது. அப்பகுதி தார் ரோடாக உள்ளதால், காளைகள் வழுக்கி விழுந்துவிடாமலும், வீரர்கள் தவறிவிழுந்து காயம் அடையாமலும் இருக்க, வாடிவாசல் முதல் 200 அடி தூரத்திற்கு தேங்காய் நார் போடப்பட்டது.காலை 10.30மணிக்கு பூஜைகள் முடிந்து, கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்தார். முதலில் சுவாமி மாடுகள், நாட்டாமை, கிராமத்தினர் மாடுகள் வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டன.

தொடர்ந்து மதுரை, திருச்சி, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 154 மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. 131 வீரர்கள் காளைகளை பிடிக்க பெயர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் மூன்றுபேர் 21வயதிற்கு குறைவாக இருந்ததாலும், இரண்டுபேர் போதையில் இருந்ததாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.பல காளைகள் சீறிப்பாய்ந்து, வீரர்களிடம் பிடிபடாமல் ஏமாற்றி சென்று பரிசுகளை பெற்றன. எனினும் காளைகளை வீரர்கள் திறமையாக பிடித்து பரிசுகள் பெற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வீடியோ இணைப்பு:

thanks: riya tv, dinamalar


மேலும் வாசிக்க... "மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு"



சுடச்சுட..... பொங்கலோ பொங்கல்!

நண்பர்களே,
        இன்று தை மாதம் முதல் நாள். பொங்கல் திருநாள். இந்த வருட பொங்கல் எனக்கு விஷேசமான மறக்கமுடியாத பொங்கல் நாள். என்னான்னா திருமணம் முடிந்து மூன்று வருடமும் பெற்றோர்களுடன் சேர்ந்தே பொங்கலை கொண்டாடி வந்தோம். இந்த வருடம் நாங்கள் இருவரும் தனியாக பொங்கல் கொண்டாடுகிறோம். ஆம், பொங்கல் நாளன்று நாம் குடியிருக்கும் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். வீட்டில் பெரியவர்களிடம் சொன்னோம். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அப்படியே செய்யுங்கள் என ஆசிர்வதித்தார்கள்.

      அதிகாலையிலே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள், தேங்காய், பழ வகைகள் வைத்து சூரியனுக்கு படைத்தது சாமி கும்பிட்டு இனிதாக பொங்கல் கொண்டாடினோம்.

இந்த பொங்கல் திருநாளில் அனைவரும்
கல்வி,
அறிவு,
ஆயுள்,
ஆற்றல,
இளமை,
துணிவு,
பெருமை,
பொன்,
பொருள்,
புகழ்,
நிலம்,
நன்மை,
நல்லொழுக்கம்,
நோயின்மை,
முயற்சி,
வெற்றி...
என்ற  பதினாறு செல்வங்கள் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

பொங்கும் பொங்கலை போல,
தித்திக்கும் கரும்பை போல,
மஞ்சளின் மனம் போல,
உங்களின் வாழ்க்கை தித்திப்போடு,
மகிழ்ச்சி பொங்கி
வெற்றியுடன் அமைய
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

மேலும் வாசிக்க... "சுடச்சுட..... பொங்கலோ பொங்கல்!"



பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?!

தைப்பொங்கல் வரலாறு:
    சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் போகிப் பண்டிகை:
       தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
        இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
     போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

இரண்டாம் நாள் தைப்பொங்கல்:
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

      தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
       பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
          மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
      உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
       உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல்:
      காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
       இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

டிஸ்கி: என் பக்கத்து வீட்டு ஆறாம்வகுப்பு படிக்கும் மாணவி பொங்கல் பண்டிகை பற்றிய குறிப்புகள் வேண்டும் எனக் கேட்டதால் இணையத்தில் தேடி எழுதிக் கொடுத்தேன். அந்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கும் பகிர்ந்துள்ளேன்.
நன்றி: விக்கிபீடியா

கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான் எழுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு:

கடந்த வருடம் போல இந்த வருடமும் மதுரையை சுற்றி நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் தொலைக்காட்சி தொகுப்பை தங்களுக்காக ஒளிப்பதிவு செய்து தர முயற்சிக்கிறேன்.


மேலும் வாசிக்க... "பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?!"



மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ




மதுரையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இவ்விழா உலக புகழ் பெற்றதாகும். இவ்விழாவை காண பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரளாக வருவது உண்டு.  கடந்த 7-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.
மேலும் வாசிக்க... "மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ"



மதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இருக்கும் விழா நாளை நடக்கிறது. இதற்கு முன்னதாக இன்று அழகருக்கு எதிர் சேவை நடக்கிறது.

கடந்த 5ம் தேதி அழகர்கோவிலில் சித்திரை விழா துவங்கியது. மறுநாள் 6ம் தேதி அங்கு வரதராஜ பெருமாளுக்கு பூஜைகள் நடந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் கள்ளழகர் வேடம் கொண்டு அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பினார்.

மேலும் வாசிக்க... "மதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்"



அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு இன்று காலை தொடங்கியது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்ற தாகும்.

மேலும் வாசிக்க... "அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு"

நான் சாப்பிட்ட பொங்கல்

           என்ன மக்கா? பொங்கல் பண்டிகை எப்படி இருந்துச்சு எல்லோருக்கும்?
        நான் எப்படி பொங்கல் கொன்டாடுனேன்னு தெரிஞ்சுக்கங்க. இந்தப் பதிவு பிடிக்கலன்னா என்னைய திட்டாதீங்க.. இந்த பதிவுல நான் சாப்பிட்ட பொங்கலைப் பத்தியும் சொல்லியிருக்கேன். கண்டிப்பா படிங்க.. நம்ம தமிழக மக்களை எந்த அளவுக்கு முட்டாளா ஆக்கியிருக்காங்கன்னு தெரிஞ்சுக்குவீங்க.


மேலும் வாசிக்க... "நான் சாப்பிட்ட பொங்கல்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1