காதலர் தின ஸ்பெஷல்ன்னு போட்டுட்டு காதல் பண்ணாதிங்கன்னு வேற போட்டிருகேனேன்னு யோசிக்கறிங்களா? சரி.... சரி... யோசிக்றத விட்டுட்டு வாசிங்க... எம்மனசுல தோனுனத சொல்றேன்...
ஆணோ, பெண்ணோ தங்களுக்கு மனசுக்கு பிடிச்ச ஜோடியை செலக்ட் பண்றதுக்கு முன்னாடி கடைசி வரை இணைபிரியாம சந்தோசமான வாழ்க்கை நடத்தணும்னு முடிவு செய்றது ரொம்ப முக்கியம். அதுவும் முதல் காதலன், காதலியாக இருக்கணும். சும்மா சும்மா காதலனோ, காதலியோ அப்பப்ப மாத்துறது கூடவே கூடாது. சிலருக்கு அதே வேலையாவே வச்சு இருப்பாங்க. அது தப்புங்க.
இனக் கவர்ச்சிக்காகவோ, அல்லது வெறும் சவால்களுகாக, போட்டிக்காக காதல் செய்யக்கூடாது. ஏன்னா காதல் விளையாட்டு பொருள் இல்லை... வேணும்னா ஜெயிக்றதும், வேனாட்டி தோக்கிறதுக்கும்,.. காதல் நம்ம வாழ்க்கைப் பயணத்திற்கான முதல்படிங்கிறத ஞாபகம் வச்சுக்கணும்.
காதல் பண்ணுங்க... காதலிக்க ஆரம்பிச்சவுடன் ஒருத்தருக்கு ஒருத்தர் அவங்கள பத்தி முழுசா புரிஞ்சுக்றதுக்கான வாய்ப்பை நீங்களாவே உருவாக்குங்க. ஆகா, காதலனோ, காதலியோ கிடைச்ச சந்தோசத்தில ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்காம விட்டுட்டிங்கன்னா அப்புறம் கல்யாணம், வாழ்க்கை என எல்லாமே பொம்மை நாடகமா போயிரும்.
அவங்கவங்க வீட்டுக்கு உங்க காதலை எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, சொல்லிருங்க. நம்மள பெத்து, வளர்த்து நம்மள ஒரு தகுதியான ஆளா மாத்துறது அவங்க தான். காதல்ன்னு வந்தவுடனே பெத்தவங்கள தூக்கி எரிஞ்சுறாதிங்க. உங்களோட காதலை, துணையை, அவங்க குடும்பத்தை உங்கள பெத்தவங்களுக்கு புரிய வையுங்க. அவங்க ஆசிர்வாதம் ரொம்ப அவசியம்.
காதலை கோழை ஆக்காதிங்க. காதலனோ, காதலியோ, காதல் கைக் கூடலைன்னா விபரீதமான முடிவுக்கு போகாதிங்க. தன்னை வருத்திக்கறது, பழி வாங்குறது, கேவலப்படுத்துவது என தப்பான முடிவுக்கு வந்துறாதிங்க. ஏன்னா, உங்க காதலை நீங்கதான் விரும்பி ஏற்படுத்திக்கிட்டிங்க. இதனால உங்களுக்கு மட்டும் துன்பம் வர்றது மட்டுமிலாம உங்கள பெத்தவங்களும் துன்பம் வரும். நீங்க தப்பான முடிவ எடுத்தா அவங்க நெலமை என்னாகும்னு யோசிங்க. எந்த சூழ்நிலையிலும் நம்மளால யாருக்கும் பிரச்சனை வரக் கூடாது.
கல்யாணம் செஞ்சுக்கனும்னு சூழ்நிலை வரும்போது யாருக்கும் பிரச்சனை இல்லாம பாத்துக்கங்க. இன்னைக்கு சூழ்நிலையில பெரும்பாலும் பொண்ணு வீட்டு பக்கம் தான் பிரச்சனை ஆரம்பமாகுது. பொண்ணு காதலிக்கறான்னு தெரிஞ்ச உடனே, அவளுக்கு மாப்பிள்ளையை தேட ஆரம்பிச்சுறாங்க. மொதல்ல அதச் செய்யாம பொண்ணு சொல்ற பையன விசாரிங்க, குடும்பத்தை விசாரிங்க. உங்க மகளுக்கு ஏத்த வகையில இருந்தா தாராளமா கல்யாணம் செஞ்சு வைக்கலாமே. இப்போதைக்கு உள்ள காலத்துல சொந்தத்துல பொண்ணோ, பையனோ அமையறது புளியங் கொம்பாத்தான் இருக்கு. புரோகர வச்சு அந்நியதுல முடிவு பண்றதுக்கு பொண்ணோ, பையனோ விரும்பியவங்கள சேர்த்து வைக்றதுல தப்பே இல்லைங்க.
பெத்தவங்க கல்யாணத்துக்கு எதிர்ப்பு காட்டியும், அவங்கள எதிர்த்துட்டு கல்யாணம் செஞ்சா, மறுபடியும் அவங்க கால்ல விழுந்திருங்க. தப்பே இல்லை. அவங்க உங்கள ஏத்துக்கற மாதிரி, உங்கள நம்பும்படியாக வாழ்ந்து காட்டுங்க.
சரிங்க, முடிவா சொல்றேன், காதல் பண்ணுங்க. சக்சஸ் ஆகுற மாதிரி காதல் பண்ணுங்க, பிரச்சனைன்னு வந்தா சமாளிங்க, கோழையான முடிவுக்கு போகாதிங்க. காதலை டைம் பாஸ் பண்ற பொருளா மாத்திறாதிங்க.
டைம் பாஸ்ன்னு நெனச்சா ஒரு நிமிஷம் கூட காதல் பண்ணாதிங்க.
ஏனப்பா, நான் சொல்றது சரிதானே....
19 கருத்துரைகள்:
ம்ம் ஏகப்பட்ட அனுபவம் போல அன்பருக்கு !
காதலர்தின கட்டுரை அனுபவசாலி நீங்க சொன்னா கேட்டுக்கனும்...
செம அட்வைஸ் !
சும்மா சும்மா காதலனோ, காதலியோ அப்பப்ப மாத்துறது கூடவே கூடாது. சிலருக்கு அதே வேலையாவே வச்சு இருப்பாங்க. அது தப்புங்க.//
இது நீங்க அனுபவிச்சு எழுதினதா?
டைம் பாஸ்ன்னு நெனச்சா ஒரு நிமிஷம் கூட காதல் பண்ணாதிங்க.
ஏனப்பா, நான் சொல்றது சரிதானே....
//
சரிங்கண்ணோவ்
// சும்மா சும்மா காதலனோ, காதலியோ அப்பப்ப மாத்துறது//
ஹ..ல்...லோ அதுதாம்யா லேட்டஸ்ட் ட்ரென்ட்
வணக்கம் பிரகாஷ்!காதலர் தின வாழ்த்துக்கள்!///ஏனப்பா,நான் சொல்றது சரிதானே....///சரிதாங்க!
அட உண்மையை சொல்லாதிங்க.அருமை பதிவு வாழ்த்துகள்
உங்க கல்யாணம் காதல் கல்யாணமா? காதலர் தின வாழ்த்துக்கள்
அறிவுரை ஈசியா சொல்லிடலாம் மாப்ள அனுபவிப்பவர்களுக்கு தான் தான் அதன் வலியும், சந்தோசமும் புரியும் ஹீ ஹீ
இவர் அட்வைஸ் பண்ணி இருக்கறத பார்த்தா..... சரி விடுங்க....!
ஓகே...ஓகே...
ஓகே...ஓகே...
அறிவுரை நல்லாயிருக்குண்ணே....
அழகாகச் சொல்லியிருக்கீங்க நண்பா..
kaathalar thina vaalththukkal.. anupaviththu eluthiya kathai maathiri therikirathu... any way super..
நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனால் இவற்றையெல்லாம் பொறுமையாக படித்து, அதன்படி பின்பற்றி காதல் செய்பவர்கள் உண்டா? கடைசி வரியில் சொல்லி இருக்கும் காதல்கள்தான் இங்கு அதிகம்.
நல்லதொரு பதிவு ! நன்றி பிரகாஷ் !
ரொம்ப சரிங்க!