இன்னைக்கு பகல் ஷிப்ட் போக வேண்டி இருந்ததால் என் வொய்ப் சிக்கன் எடுத்துத் தரச் சொல்லியும் எனக்கு நேரமில்லாததுனால காலையில சிக்கன் வாங்க முடியல. இப்ப நைட் 7.15 மணிக்கு தான் வந்தேன். வந்ததும் ரெப்ரெஷ் ஆயிட்டு கம்ப்யூட்டரை ஆன் செஞ்சேன். என் யூபிஎஸ் பீப்.. பீப்...ன்னு கத்துச்சு. வீட்டுல லைட்டெல்லாம் ஆப் ஆயிருச்சு (கரண்ட் ஆப்பு). அதாங்க, ஏழரை சனி மாதிரி ஏழரை மணி கரண்ட் ஆப். இது தான் சான்ஸ்ன்னு வொய்ப் கடைக்கு போயி சாப்பிடலாம்னு சொல்லிட்டாங்க. ரைட்டுன்னு கிளம்பினோம். சிக்கன் வேணும்னு சொன்னதுனால சுகுணா பிரஷ் கடையில கிரில் சிக்கன் வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டு கூட்டிட்டு போனா, அந்த சுகுணா மூடியிருந்துச்சு. வேற, க்ரில்லுக்கு டைம் சரியிலைன்னு பிரியாணி சாப்பிடலாம்னு கோரிப்பாளையத்துல வேற கடைக்கு போனோம். அங்க சேர்ல உட்கார்ந்தோம். அப்போ அங்க 8.30 கரண்ட் ஆப் ஆச்சு(அங்கேயும் ஆப்பு). (ஆனா, அந்த டைம் என் வீட்டுல கரண்ட் வந்திருக்கும்) என்னடா சோதனைன்னு தலையில கையை வச்சேன்.
"சார், என்ன சாப்பிடுறிங்க" வெயிட்டர் கேட்டார்.வெளியிலே மெனு போர்டு பார்த்ததுனால, " ரொட்டி நான் ரெண்டு தாங்க"
ரொட்டி இல்லை சார், கரண்ட் போயிருச்சு, போட முடியாது."(ஹி...ஹி.. பல்பு)
"ஏன்"
"கரண்ட் அடுப்புல சுட்டு எடுக்கனும்ல. கரண்ட் இல்லையே"
"சரி, வேற.. புரோட்டா இருக்கா?"
"இருக்கு சார், ஆனா அதுவும் இப்ப கெடைக்காது"
"ஏன்"
"அதான் கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல"
"ஓ... அதுக்கும் கரண்ட் அடுப்பு தானா? சரி வேற என்னதான் இருக்கு?"
"மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி இருக்கு"
"சரி, ரெண்டுலயும் ஒன்னொன்னு கொண்டு வாங்க" (வொய்ப் ஆர்டர் படி)
(வேற வழி, வந்து கை நனச்சாச்சு, வேற கடைக்கு போக மனசு இடம் தரல) (ஹி...ஹி.. பல்பு)
"ஓகே சார், வேற என்ன வேணும்"
"வேற என்ன சாப்பிடுற மாதிரி இருக்கு?"
"போன்லெஸ், லாலிபாப். பெப்பர் சிக்கன்..."
"சைடு டிஷ் கேட்கல, சாப்பிடுற மாதிரி வேற டிபன் என்னா இருக்கு?"
"கரண்ட் இல்லை, அதனால பிரியாணி மட்டும் தான் இருக்கு" (ஹி...ஹி.. பல்பு)
"சரி, வேற வேணும்னா சொல்றேன்" மொதல்ல பிரியாணி கொண்டு வாங்க"
இந்த கரண்ட் இல்லாம பிரியாணி மட்டுமே சாப்பிட வேன்டியிருக்கேன்னு நொந்துகிட்டேன். வொய்ப் என்னைய மொறச்சுக்கிட்டே இருந்தாங்க. காலையில சிக்கன் வாங்கி தந்திருந்தா சூப்பரா சாப்பிட்டு இருக்கலாமேன்னு அவங்க சொல்லாமலே எனக்குள்ள கேட்டுச்சு. ஹி...ஹி... எப்படின்னு கேட்கறிங்களா? அதாங்க கப்பிள்ஸ் வேவ் லெந்த்...
பிரியாணி வந்துச்சு....." சார், வேற என்ன வேணும்"
"சாப்பிடுற மாதிரி வேற என்ன இருக்கு"
"போன்லெஸ், லாலிபாப். பெப்பர் சிக்கன்..."
"ஆக. சைடு டிஷ் தான் இருக்குன்னு சொல்றிங்க? சரி, ஒரு லாலிபாப் கொண்டு வாங்க" (வொய்ப் ஆர்டர் படி... ஹி..ஹி..)
பிரியாணி நல்ல டேஸ்ட். லாலிபாப்பும் வந்துச்சு. அதுவும் நல்லா இருந்துச்சு. சாப்பிட்டு முடிச்சு பில் பே பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.
வர்ற வழியில பீடா வாங்கலாம்னு(ஸ்வீட் பீடா தாங்க) அம்மா மெஸ் பக்கத்துல இருக்குற பீடா கடைக்கு வந்தா, அப்போ தான் பீடாக்காரர் கடையை மூடினார். அங்கயும் ஏமாந்து (ஹி...ஹி.. பல்பு) அப்படியே வீட்டுக்கு வந்தோம் (மணி 9.15).
போஸ்ட் போட்டு ரெண்டு நாளாச்சேன்னு இந்த பதிவு எழுத ஆரம்பிச்சேன். எழுதிட்டே இருந்தேன். திடீர்னு கரண்ட் போச்சு (மணி 9.45) அடடா பதிவுக்கு வந்துச்சு ஆப்பு (இதுதாங்க மின்சார ஆப்பு). என்னங்க செய்றது? இந்த கரண்ட் ஆப் பிரச்சனையில வலிய போயி பிரியாணிய சாப்பிட வேண்டியதா போச்சு. ஒரு வழியா 10: 30 க்கு கரண்ட் வந்துச்சுங்க. விட்ட பதிவ எழுத ஆரம்பிச்சேன். இப்ப எழுதி முடிச்சுட்டேன்னு நினைக்கிறேன்.
இந்த பவர் கட் இம்சையினால ஹோட்டல்ல விரும்பினத சாப்பிடறதுக்கு கூட முடியலைங்க. இதுதாங்க டின்னர் பல்பு. ஹி...ஹி...
39 கருத்துரைகள்:
கரண்ட் இல்லாமலே உங்களுக்கு பல்பு நல்லா எரியுதே?
@கோகுல்
கரண்ட் இல்லாமலே உங்களுக்கு பல்பு நல்லா எரியுதே?///
ஹி..ஹி.. இந்த பல்புக்கு கரண்ட் அவசியமே இல்ல கோகுல்.
பவர்கட்டு எல்லாத்தையும் கட் பண்ணிடும் போல....
நல்லாத்தான் பல்பு வாங்கறீங்க!!!!!!!!
நீ என்ன சாப்பட வேண்டும் என்பதனைக் கூட அரசு தான் நிர்ணயிக்கிறது. நீ கொடுத்து வைத்தவன்யா
யோவ் மாப்ள படிக்கும் போதே கஷ்டமா இருக்குய்யா..உன் போல எத்தன வீட்ல எவ்ளோ பல்ப்போ!
இதுக்குதான் ஒரு இன்வேர்ட்டர் போடுங்கன்னு சொல்றேன் கேகமாட்டேங்கிருறீங்க
அன்பரே எல்லா இடத்துலயும் ஒரே டைம்ல தான் பவர் கட் பன்றான்களா திருச்சி லையும் 7.30,9.45
@பன்னிக்குட்டி ராம்சாமி
பவர்கட்டு எல்லாத்தையும் கட் பண்ணிடும் போல....//
ஆமாண்ணே..... எல்லாமே கட் தான்
@பழனி.கந்தசாமி
நல்லாத்தான் பல்பு வாங்கறீங்க!!!!!!!!//
ஐயா, அங்க ஊர்ல எப்படிங்க இருக்கு பல்பு?
@cheena (சீனா)
நீ என்ன சாப்பட வேண்டும் என்பதனைக் கூட அரசு தான் நிர்ணயிக்கிறது. நீ கொடுத்து வைத்தவன்யா//
ஹி..ஹி.. இந்த கிண்டல் தானே வேணாங்கிறது....
@விக்கியுலகம்
யோவ் மாப்ள படிக்கும் போதே கஷ்டமா இருக்குய்யா..உன் போல எத்தன வீட்ல எவ்ளோ பல்ப்போ!///
அரசுக்கு தெரியமாட்டிங்குதே....
super mapla
மக்கா! பிரியாணியாவது சூடா இருந்ததா?
யோவ்! EB Bill கட்ட போனேன் கரண்டு இல்லை கம்யூட்டர் ஒர்க் ஆகுல நாளைக்கு வாங்கன்னு சொல்லிட்டாங்க......இது எம்மாம் பெரிய பல்பு! வாங்கியிருக்கேன் நானு வாய்யா கூடி அழுவோம்!
இவ்வளவு கஷ்டத்துலயும் பதிவு போட்டிருக்கீங்களே உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு போல
பல்பு..பல்பு..பல்போபல்பு ...
கரண்டு கட்டானாலும், கரண்டை காரணம் காட்டி பிரியாணியை ஒரு கட்டு கட்டிடிங்க..வாழ்த்துக்கள்
நானும் பதிவு எழுதரேன்னு கண்டதையும் ஒலர வேண்டியது.இதெல்லாம் ஒரு பதிவா?இதுக்கு 10பேர் கமெண்ட் வேர.
மாத்தி மாத்தி கமெண்ட் போட்டுக்கரிங்க.எங்கள மாதிரி வெளி ஆட்டக்கள் யாரும் இந்த அட்டகாசத்த ரசிக்கமாட்டாங்க
வக்கனையா பிரியாணி சாப்பிட்டுட்டு வந்து எங்களை வெறுப்பேத்தறிங்களா?... எங்க நாக்குல எச்சி ஊறுது சார்... எங்க பாவம் உங்களை சும்மா விடாது. குவாட்டருக்காவது ஏற்பாடு பண்ணுங்க!
தமிழ்வாசி பிரகாஷ் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
பவர்கட்டு எல்லாத்தையும் கட் பண்ணிடும் போல....//
ஆமாண்ணே..... எல்லாமே கட் தான்.///புழுக்கம் வேற ஜாஸ்தியா இருக்குமே?????
@நா.மணிவண்ணன்
இதுக்குதான் ஒரு இன்வேர்ட்டர் போடுங்கன்னு சொல்றேன் கேகமாட்டேங்கிருறீங்க///
தோ பார்ரா, மணி இன்வேர்டர் விளம்பரம் செய்றாரு.
@PREM.S
அன்பரே எல்லா இடத்துலயும் ஒரே டைம்ல தான் பவர் கட் பன்றான்களா திருச்சி லையும் 7.30,9.45//
நண்பரே, பேஸ்புக்கில் ஒரு இந்திய வரைபடம் போட்டிருந்தாங்க. அதுல தமிழ்நாட்டையே காணோம். அந்த போட்டோவுக்கு கீழ இந்த படம் இரவு நேரத்தில் சாட்டிலைட்தில் இருந்து எடுக்கப்பட்டது என போட்டிருந்தாங்க.
@சசிகுமார்
உங்க ஊர்ல கரண்ட் கட் கம்மி... அதான் சூப்பர்னு சொல்ற.
@வீடு K.S.சுரேஸ்குமார்
மக்கா, பெரிய பல்பு தான் வாங்கியிருக்க.
@ராஜி
இவ்வளவு கஷ்டத்துலயும் பதிவு போட்டிருக்கீங்களே உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு போல///
என்ன செய்ய அக்கா. கரண்ட் கட் தன் கடமையை ரொம்ப அதிகமாவே செய்யுது.
@மனசாட்சி
கரண்டு கட்டானாலும், கரண்டை காரணம் காட்டி பிரியாணியை ஒரு கட்டு கட்டிடிங்க..வாழ்த்துக்கள்///
வேற எதுவுமே இல்லைன்னுதான்.
@venkatesa gurukkal
நானும் பதிவு எழுதரேன்னு கண்டதையும் ஒலர வேண்டியது.இதெல்லாம் ஒரு பதிவா/////
ஓ... உங்க ரசனைக்கு ஒத்து போகாத பதிவா இருக்கா? எப்படியோ பத்து பேர்ல ஒருத்தரா நீங்களும் வந்துட்டிங்க.
@எஸ்.எஸ்.பூங்கதிர்
வக்கனையா பிரியாணி சாப்பிட்டுட்டு வந்து எங்களை வெறுப்பேத்தறிங்களா?... எங்க நாக்குல எச்சி ஊறுது சார்... எங்க பாவம் உங்களை சும்மா விடாது. குவாட்டருக்காவது ஏற்பாடு பண்ணுங்க!//
சார் கரண்ட் கட் ஆச்சுன்னா வாய்ப்பை பயன்படுதிக்கங்க
Intha power cut nala padura avaisthai irukke. Ayyayyo! Super post!
TM 6.
மின்தடைக்கு எப்போது ஏற்படுமோ தடை?
-காரஞ்சன்(சேஷ்)
பல்பு பிரியாணியா ..நீங்க சொல்லிட்டிங்க நாங்க சொல்லல அவளவுதான் தான் அண்ணா வித்தியாசம்....
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?
பல்போ....பலப் !
//சாப்பிடுற மாதிரி வேற என்ன இருக்கு?//
இதுக்குப் பதிலா இட்லி இருக்கா என்று கேட்டிருந்தா எஸ் ஆகியிருக்கலாம்!! (என்று நினைக்கிறேன்)
உங்களைப் பிளான் பண்ணி கவுத்திடாங்க என்று நினைக்கிறேன்...
இன்று கேரளத்தில் இருக்கும் ஒரு அலுவலக நண்பர் என்னிடம் கேட்டார்: "எப்ப பார்த்தாலும் பேஸ்புக், பிளாக் என்று இருப்ப.. இப்பல்லாம் பார்க்க முடியலியே? அவ்வளவு பிசியா?"
நான் சொன்ன பதில்: "கரண்ட் இருந்தா தானே!!"
அதான் கரன்ட்டே இல்லையே..அப்ப கூட பல்பு வாங்குற ஆளு நீங்க மட்டும்தான் போல.
தலைவா ! கலக்கல் !
பல்பு எரியுறதுக்கும் கரண்ட் வேணுமே.. ஹிஹிஹிஹி..
ஓ இந்த post தான் இவ்ளோ பிரச்சனைக்கும் காரணமா?
எனக்கென்னமோ அந்த பின்னூட்டம்லாம் இங்க இருக்கனுமோன்னு தோனல.(தோனுதுன்னு சொன்னா தமிழ்வாசி ஆள் வச்சி திட்டுவாரோன்னு பயம்தேன் காரணம்)
நாட்டுல கரண்ட் இருக்கோ இல்லையோ, உங்க பதிவுல நிறைய பல்பு இருக்கு.