CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label கரண்ட். Show all posts
Showing posts with label கரண்ட். Show all posts


நித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்!


கரன்ட்டுக்கும் லீவ் முடிஞ்சிருச்சு:
ஆமாங்க, ஸ்கூல் பசங்கள எக்ஸாம்க்கு கூட படிக்க முடியாம கரண்ட் கட் ரொம்ப இருந்துச்சு. சுமாரா பத்து மணிநேர வரை... கரண்ட் கட். அதுலயும்  நைட்டுல அடிக்கடி போயிட்டு இருந்துச்சுல. பசங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டதும் கரண்ட் கட்டுக்கும் லீவ் விட்டுட்டாங்க. அதுக்கு காரணம் காற்றாலை மின்சாரம் தேவையான அளவுல கெடச்சதுனால கரண்ட் கட் ஆகறது இல்லைன்னு அரசு அறிக்கை சொல்லுச்சு. இப்ப ஸ்கூல் ஆரம்பிச்சுருச்சு. கரண்ட் கட்டும் ஆரம்பிச்சுருச்சு.

நித்யானந்தரின் விதிமுறை மீறல்?
 நம்ம  நித்தி மதுரை ஆதீனமா ஆனாலும் ஆனாரு. பிரச்சனை மேல பிரச்சனை தான். இப்ப என்ன பிரச்சனைன்னா, அவர கடவுளா பாவித்து பூஜை செய்யணுமாம். அபிஷேகம் செய்யணுமாம். அப்புறமா பகவத்கீதை உபதேசம் செய்வாராம். இப்படி அவரை மையமா வச்சு என்னனமோ செஞ்சுட்டு இருக்காரு. இவரு செய்றத மடாதிபதியும் கண்டுக்க மாட்டிங்கறாரு, என்ன செய்றது????

தமிழக செயலைக் கண்டு கேரளா வியப்பு:
கேரளா வியப்புக்கு காரணம் என்னான்னா, பெரியார் அணையில ஏகப்பட்ட ஓட்டைகள் செக் பண்றதுக்காக கேரளா போட்டாங்கல! அந்த ஓட்டைகளை அடைக்க கோர்ட் அனுமதி தந்தத யூஸ் பண்ணி நம்ம பொதுப்பணித்துறை நுட்ப வல்லுனர்கள் செம ஸ்ட்ராங்கா ஓட்டையை அடைச்சுகிட்டு இருக்காங்க. அதாவது சிமென்ட், கான்கிரீட் கலைவையை அதிக அழுத்த கம்ப்ரசெரில் அதி வேகத்துல அந்த ஒட்டைக்குள்ள விடுறதுனால சைடுல ஏதாவது சின்ன சின்ன ஓட்டைகள் இருந்தாலும் அடைச்சுக்கிருமாம். இதனால அணை இன்னும் ஸ்ட்ராங்கா மாறிரும். இதனால அணை பலவீனமா இருக்குன்னு கேரளாவால சொல்ல முடியாது.

நடிகை அஞ்சலிக்கு  இம்சை:
நம்ம கலகல அஞ்சலிக்கு நம்ம ரசிகர்கள் போன்ல மணிக்கணக்கா பேசுராங்கலாம். ரசிகர்கள் ரொம்ப ஆர்வமா இப்படி பேசுறத அஞ்சலி இம்சையா எடுத்துக்கறாங்க. என்ன காரணம்னா, பேசுற எல்லாரும் லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுராங்கலாம். அம்மணிக்கு அது பிடிக்கலையாம். சினிமான்னு வந்துட்டா ரசிகர்கள் அன்பு வேணும் அம்மிணி. ஹி..ஹி... அம்மிணி போனை ஆப் பண்ணாம இருந்தா எல்லா பயபுள்ளைகளும் வழியத்தானே செய்வாங்க. யாராச்சும் அஞ்சலி நம்பர் கொடுங்கப்பா?
மேலும் வாசிக்க... "நித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்!"



பாகிஸ்தானுக்கு இருக்காம்! ஆனால் தமிழகத்திற்கு இல்லையாம்! என்ன கொடுமை?

      உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் உத்திரவாதம் இருக்கான்னு இங்க கூடங்குளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விடை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கையில் கூடங்குளத்தில் அணுஉலை மின்சார தயாரிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது. எப்படியும் கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தே ஆக வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 

        நம்ம ஊரு மக்களின் எதிர்ப்பை சந்தித்து பல மாநிலங்களும் வெளிச்சம் பெற போகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் பல மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கபடலாம். இந்நிலையில் இந்த ஆண்டு நிறைவுறும் ஐந்தாண்டு திட்டத்தின் சாதனைகளை விளக்கி ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுனில்குமார் பேசுகையில் தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது என கூறியுள்ளார். ஏன் இந்த பாரபட்சம்? தமிழகத்தில் எட்டு, பத்து மணிநேர மின்வெட்டு இருப்பது அவருக்கு தெரியாதா? இன்னும் சில மாதத்தில் மின்சாரம் தயாரிக்க இருக்கும் மாநிலத்திற்கு சிறிய அளவு கூட மின்சாரம் ஒதுக்க முடியாதா? மத்திய அரசு நினைத்தால் முடியும். ஆனாலும் காங்கிரஸ் எப்போதும் தென்னிந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு கடுகளவு கூட நல்ல திட்டங்கள் செய்யாது. இந்நிலையில் மின்சாரம் கிடைக்குமா? சந்தேகம் தான்.

    தமிழக அரசும் வேறு வழிகளில் முயற்சி செய்ததா எனத் தெரியவில்லை? கூடங்குளத்தை மட்டுமே நம்பி இருப்பது போல தெரிகிறது. இங்கே நமக்கு மின்சாரம் இல்லை என கை விரிக்கும் மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு சுமார் ஐயாயிரம் மெகாவாட் மின்சாரம் உதவி அளிப்பதாக நமது பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு உறுதி தந்திருப்பதாக பாகிஸ்தான் பேப்பரான நியூஸ் டெய்லி செய்தி (தினமலர் செய்தியின் படி) வெளியிட்டுள்ளது. 

        இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவ்வளவு மின்சாரம் எங்கிருந்து தரப்படும்? அந்த மின்சாரத்தில் ஒரு பத்து சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கினால் பல மணிநேரம் மின்வெட்டு கொஞ்சமாவது குறையுமே? ஆக, மின்சாரம் இருந்தும் நமக்கு தராமல் கை விரிகிறது மத்திய அரசு, என நம்பாமல் இருக்க முடிகிறதா? என்ன?
மேலும் வாசிக்க... "பாகிஸ்தானுக்கு இருக்காம்! ஆனால் தமிழகத்திற்கு இல்லையாம்! என்ன கொடுமை?"



மதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்

மதிப்புமிக்க தமிழக அரசே....
         நலமா இருக்கிங்களா? நீங்க நல்லாத்தான் இருப்பீங்க, என்ன மாதிரி பாமரன்கள் ஏதோ இருக்கோம். இருந்த வேலையும் போச்சு. ஆமாங்க அரசே, உங்கள நம்பி இருந்ததுக்கு என்ன போல நிறைய பேருக்கு வேலை இல்லாம போனதுதான் மிச்சம். இரும்பு பட்டறையில வேல பார்த்துட்டு தான் இருந்தேன். ரெண்டு மூணு மணி நேரம் கரண்ட் கட் ஆனா பரவாயில்லை. நாள் முழுதும் கட் ஆச்சுனா எப்படிங்க அரசே வேலை பாக்க முடியும்? நான் வேல பாத்த கம்பெனிக்காரங்க சின்னதா தொழில் செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்களால கரண்ட் கட் சமாளிக்க முடியல. அங்க என்னை மாதிரி பத்து பேரு வேலை பார்த்திட்டு இருந்தோம். சம்பளம் கொடுத்து கட்டுபடியாகலைன்னு வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. வேற பக்கம் போயி வேல பாக்கலாம்னா அங்கேயும் அதே பிரச்னையை சொல்லி வேலை தர மறுக்குறாங்க. வேற பொழப்பு பொழைக்கலாம்னா என்னோட வறுமை தடுக்குது. 
             எம் பொண்டாட்டியும் மிசின்தறி வேலைக்கு போயிட்டு இருந்தா... அங்கயும் கரண்ட் பிரச்னையை காரணம் காட்டி அவளுக்கும் வேலை போச்சு. எப்பவுமே ஆர்டர் கம்மி, மிசின் ரிப்பேர் அதனால வேலை கம்மியா இருக்குன்னு கேட்டு பழகிப் போன எங்களுக்கு கரண்ட் இல்லை அப்படின்னு முதலாளிக சொல்றது புதுசா இருக்கு. எங்க பொழப்புக்கு எமனா கரண்ட் கட் இருக்கு. வீட்டுல பாதி நேரத்துக்கும் மேல கரண்ட் இல்லை. அத எப்படியாச்சும் சமாளிச்சுக்குவோம். ஆனா வேலை இல்லையே, எங்க போயி என் கஷ்டத்த சொல்ல. அதான் அரசுக்கு கடிதமா எழுதறேன்.
           மழை இல்லை, ஆத்துல தண்ணி வரல, அதான் கரண்ட் கட் இருக்குதுன்னு இதுநாள் வரை சொல்லிட்டு இருந்திங்க. ஆனா இப்போ அதெல்லாம் சொல்லாம கூடங்குளம் தொறக்கல, அதான் கரண்ட் கட் ஆகுதுன்னு சொல்றிங்க. என்னமோ தொறங்க. எங்கள போல இருக்கறவங்க வேலைக்கு ஒரு வழி சொல்லுங்க. 
சரிங்க அரசே, உங்கள நம்பி ஒட்டு போட்ட எங்கள எப்படியாவது வாழ வழி செய்யுங்க. இந்த கடிதம் என்னைப் போல வேலை இழந்து வாடும் அனைவரின் சார்பில் எழுதியுள்ளேன். நன்றிங்க...

இப்படிக்கு,
தமிழ்ப் பாமரன்.
மேலும் வாசிக்க... "மதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்"



மின்சார ஆப்பும், டின்னர்ல பல்பும்...

      இன்னைக்கு பகல் ஷிப்ட் போக வேண்டி இருந்ததால் என் வொய்ப் சிக்கன் எடுத்துத் தரச் சொல்லியும் எனக்கு நேரமில்லாததுனால காலையில சிக்கன் வாங்க முடியல. இப்ப நைட் 7.15 மணிக்கு தான் வந்தேன். வந்ததும் ரெப்ரெஷ் ஆயிட்டு கம்ப்யூட்டரை ஆன் செஞ்சேன். என் யூபிஎஸ் பீப்.. பீப்...ன்னு கத்துச்சு. வீட்டுல லைட்டெல்லாம் ஆப் ஆயிருச்சு (கரண்ட் ஆப்பு). அதாங்க, ஏழரை சனி மாதிரி ஏழரை மணி கரண்ட் ஆப். இது தான் சான்ஸ்ன்னு  வொய்ப் கடைக்கு போயி சாப்பிடலாம்னு சொல்லிட்டாங்க. ரைட்டுன்னு கிளம்பினோம். சிக்கன் வேணும்னு சொன்னதுனால சுகுணா பிரஷ் கடையில கிரில் சிக்கன் வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டு கூட்டிட்டு போனா, அந்த சுகுணா மூடியிருந்துச்சு. வேற, க்ரில்லுக்கு டைம் சரியிலைன்னு பிரியாணி சாப்பிடலாம்னு கோரிப்பாளையத்துல வேற கடைக்கு போனோம். அங்க சேர்ல உட்கார்ந்தோம். அப்போ அங்க 8.30 கரண்ட் ஆப் ஆச்சு(அங்கேயும் ஆப்பு). (ஆனா, அந்த டைம் என் வீட்டுல கரண்ட் வந்திருக்கும்) என்னடா சோதனைன்னு தலையில கையை வச்சேன்.
"சார், என்ன சாப்பிடுறிங்க" வெயிட்டர் கேட்டார்.
வெளியிலே மெனு போர்டு பார்த்ததுனால, " ரொட்டி நான் ரெண்டு தாங்க"
ரொட்டி இல்லை சார், கரண்ட் போயிருச்சு, போட முடியாது."(ஹி...ஹி.. பல்பு)
"ஏன்"
"கரண்ட் அடுப்புல சுட்டு எடுக்கனும்ல. கரண்ட் இல்லையே"
"சரி, வேற.. புரோட்டா இருக்கா?"
"இருக்கு சார், ஆனா அதுவும் இப்ப கெடைக்காது"
"ஏன்"
"அதான் கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல"
"ஓ... அதுக்கும் கரண்ட் அடுப்பு தானா? சரி வேற என்னதான் இருக்கு?"
"மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி இருக்கு"
"சரி, ரெண்டுலயும் ஒன்னொன்னு கொண்டு வாங்க" (வொய்ப் ஆர்டர் படி)
(வேற வழி, வந்து கை நனச்சாச்சு, வேற கடைக்கு போக மனசு இடம் தரல) (ஹி...ஹி.. பல்பு)
"ஓகே சார், வேற என்ன வேணும்"
"வேற என்ன சாப்பிடுற மாதிரி இருக்கு?"
"போன்லெஸ், லாலிபாப். பெப்பர் சிக்கன்..."
"சைடு டிஷ் கேட்கல, சாப்பிடுற மாதிரி வேற டிபன் என்னா இருக்கு?"
"கரண்ட் இல்லை, அதனால பிரியாணி மட்டும் தான் இருக்கு" (ஹி...ஹி.. பல்பு)
"சரி, வேற வேணும்னா சொல்றேன்" மொதல்ல பிரியாணி கொண்டு வாங்க"


இந்த கரண்ட் இல்லாம பிரியாணி மட்டுமே சாப்பிட வேன்டியிருக்கேன்னு நொந்துகிட்டேன்.  வொய்ப் என்னைய மொறச்சுக்கிட்டே இருந்தாங்க. காலையில சிக்கன் வாங்கி தந்திருந்தா சூப்பரா சாப்பிட்டு இருக்கலாமேன்னு அவங்க சொல்லாமலே எனக்குள்ள கேட்டுச்சு. ஹி...ஹி... எப்படின்னு கேட்கறிங்களா? அதாங்க கப்பிள்ஸ் வேவ் லெந்த்...
பிரியாணி வந்துச்சு.....


" சார், வேற என்ன வேணும்"
"சாப்பிடுற மாதிரி வேற என்ன இருக்கு"
"போன்லெஸ், லாலிபாப். பெப்பர் சிக்கன்..."
"ஆக. சைடு டிஷ் தான் இருக்குன்னு சொல்றிங்க? சரி, ஒரு லாலிபாப் கொண்டு வாங்க" (வொய்ப் ஆர்டர் படி... ஹி..ஹி..)


பிரியாணி நல்ல டேஸ்ட். லாலிபாப்பும் வந்துச்சு. அதுவும் நல்லா இருந்துச்சு. சாப்பிட்டு முடிச்சு பில் பே பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.
வர்ற வழியில பீடா வாங்கலாம்னு(ஸ்வீட் பீடா தாங்க) அம்மா மெஸ் பக்கத்துல இருக்குற பீடா கடைக்கு வந்தா, அப்போ தான் பீடாக்காரர் கடையை மூடினார். அங்கயும் ஏமாந்து (ஹி...ஹி.. பல்பு) அப்படியே வீட்டுக்கு வந்தோம் (மணி 9.15).


போஸ்ட் போட்டு ரெண்டு நாளாச்சேன்னு இந்த பதிவு எழுத ஆரம்பிச்சேன். எழுதிட்டே இருந்தேன். திடீர்னு கரண்ட் போச்சு (மணி 9.45) அடடா பதிவுக்கு வந்துச்சு ஆப்பு (இதுதாங்க மின்சார ஆப்பு). என்னங்க செய்றது? இந்த கரண்ட் ஆப் பிரச்சனையில வலிய போயி பிரியாணிய சாப்பிட வேண்டியதா போச்சு. ஒரு வழியா 10: 30 க்கு கரண்ட் வந்துச்சுங்க. விட்ட பதிவ எழுத ஆரம்பிச்சேன். இப்ப எழுதி முடிச்சுட்டேன்னு நினைக்கிறேன்.


இந்த பவர் கட் இம்சையினால ஹோட்டல்ல விரும்பினத சாப்பிடறதுக்கு கூட முடியலைங்க. இதுதாங்க டின்னர் பல்பு. ஹி...ஹி...
மேலும் வாசிக்க... "மின்சார ஆப்பும், டின்னர்ல பல்பும்..."

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1