முன்னணி வார இதழான ஆனந்த விகடன் - என் விகடனில் இந்த வார (15-02-2012) வலையோசை பக்கத்தில் நமது தமிழ்வாசி தளத்தை குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார்கள். மிகவும் நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன். விகடன் எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் வாசித்து வருகிறேன். 2000 - 2002 இல் கல்லூரி நாட்களில் பாட புத்தகங்களுக்கு நடுவில் விகடனும் இருக்கும். விகடனை வாங்கிக் கொண்டு தான் கல்லூரி பேருந்தில் ஏறுவேன். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்த ஆரம்பிப்பார். நான் விகடனை வாசிக்க ஆரம்பிப்பேன். முதலில் சினிமா விமர்சனத்தையும், ஒரு பக்க கதைகளையும் தேடிப்பார்த்து படிப்பேன். இப்படியே மதிய இடைவேளை வரும் வரையில் எப்படியும் இருமுறையாவது புரட்டி விடுவேன்.
அப்போதைய விகடனில் வந்த "மனசே ரிலாக்ஸ் பிளீஸ்" மிகவும் பிடித்த தொடர். கூட இருக்கும் நன்பர்களுக்கு விகடனை பிடிக்காது. காரணம் அதில் கவர்ச்சி படங்கள், சினிமா செய்திகள் என அதிகமாக இல்லையாம். அப்போது, விகடனின் அருமை உங்களுக்கு தெரியாது, என சொல்வேன். ஆனந்த விகடன் புத்தகத்தில் அவ்வளவு ஆர்வம். உலகம் முழுதும் பெரும்பான்மையான வாசகர்களை கொண்ட பெருமை வாய்ந்த விகடனில் நமது தமிழ்வாசி தளம் குறிப்பிடப்பட்டுள்ளது எனக்கும், என் தள வாசகர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.
தட்டுத்தடுமாறி எழுத ஆரம்பித்து இன்று, மெக்கானிகல் மாணவர்களுக்கு பயன்படும் ஒரு தொடர் (கண்டிப்பாக தொடரை எழுதி முடிப்பேன் என்ற நம்பிக்கையில்), அறிந்த பிளாக் நுட்பங்கள், பிளாக்கில் எனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், கூகிள் தேடலின் போது எனக்கு பயன்படும் வகையில் இருந்த சில தொழில்நுட்ப தளங்களையும் பதிவேற்றி வருகிறேன். என் அனுபவங்கள், அறிந்த விழிப்புணர்வு செய்திகளையும் அவ்வப்போது பதிவேற்றி வருகிறேன். இவ்வாறான அங்கீகாரம் இன்னும் என்னை கூர்மைப்படுத்தி கொள்ள உதவும் என்பதில் மாற்றமில்லை.
500க்கும் அதிகமான தொடரும் நண்பர்கள், 400க்கும் அதிகமான இடுகைகள், 8500க்கும் அதிகமான கருத்துரைகள், நான்கு லட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேலான பக்க பார்வைகள் என தமிழ்வாசியின் அனைத்தும் எனது வாசகர்களையும், நண்பர்களையும், எனது குடும்பத்தினரையுமே சேரும் என்பதை இத்தருணத்தில் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனந்த விகடனின் அங்கீகாரத்தை பாராட்டி மின்னஞ்சல், அலைபேசி, முகநூல் வழியே வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்து பதிவாக அவரது தளத்தில் பகிர்ந்த "வீடு" சுரேஷ்க்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.
பகிர்ந்த விகடன் குழுவிற்கும், பரிந்துரைத்த நண்பர்களுக்கும் நன்றி.....
ஆனந்த விகடனின் அங்கீகாரத்தை பாராட்டி மின்னஞ்சல், அலைபேசி, முகநூல் வழியே வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்து பதிவாக அவரது தளத்தில் பகிர்ந்த "வீடு" சுரேஷ்க்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.
பகிர்ந்த விகடன் குழுவிற்கும், பரிந்துரைத்த நண்பர்களுக்கும் நன்றி.....
"மகிழம்பூச்சரம்" சாகம்பரி அம்மா அவர்கள் THE VERSATILE BLOGGER விருது தமிழ்வாசிக்கு தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது சம்பந்தமான பதிவு விரைவில்....
51 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - விகடனில் பதிவுகள் பற்றி பிரசுரிக்கப்பட்டது குறித்து மிக்க் மகைழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்த்துகள், உங்க ஊர்க்காரர் முந்திக்கிட்டாரு இங்கே வாழ்த்து சொல்ல, ( சீனா அய்யா)
எங்க ஊர்க்காரர் பதிவு போட்டு வாழ்த்து சொல்றதுல உங்களை முந்திட்டாரு ( வீடு சுரேஷ்)
பார்ட்டி எப்போ?
அன்பு பிரகாஷ் ! மிகவும் சந்தோசப்படுகிறேன் ! பாராட்டுக்கள் ! மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் !
வாழ்த்துகள் மக்கா! நீங்கள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்,ஆனந்த விகடனுக்கு நண்பர்கள் அனைவரும் நன்றி கூறுகிறோம்
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
ஆனந்த விகடனின் அங்கீகாரத்த்திற்கு நிரைவான இனிய வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் நண்பரே!
காரஞ்சன்(சேஷ்)
பிரகாஷ் - விகடனில் பதிவுகள் பற்றி பிரசுரிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி - வாழ்த்துகள் - யாராக இருந்தாலும் சந்தோஷமே அதிலும் எனது ஊர்காரர் ஆக இருப்பதில் இரட்டிப்பு சந்தோஷமே வாழ்க வளமுடன்
பிரகாஷ்... இப்போது சென்னையில் வசித்தாலும் என் வேர் மதுரையில்தான். அந்த முறையில் மகிழ்வுடன் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல சிகரங்களைத் தொடவும் வாழ்த்துகிறேன்.
மிகவும் சந்தோஷமான விஷயம் தான்.
வாழ்த்துக்கள் பிரகாஷ்..
எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பிரகாஷ்...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே!
வாழ்த்துகள்,
அருமை அண்ணா. வாழ்த்துகள். தொடர்ந்து மென்மேலும் புகழ்பெற.
என் நண்பன் பிளாக் விகடனில் வெளியானது மனதுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தருகிறது, வாழ்த்துக்கள் மக்கா வாழ்த்துக்கள்...!!!
நண்பா இன்னும் உங்கள் புகழ் மேன்மேழும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ்மணம்........???!!!!
Vaalthukkal Sir!
வாழ்த்துகள் பிரகாஷ்.
பிரகாஷ் - விகடனில் பதிவுகள் பற்றி பிரசுரிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி - வாழ்த்துகள் -
வாழ்த்துக்கள் மனமகிழ்வுடன் !
வாழ்த்துகள் பிரகாஷ்.
வணக்கம் பிரகாஷ்,வாழ்த்துக்கள்!உலகெங்கும் உங்களை அறிமுகப்படுத்திய விகடன் குழுமத்துக்கும் நன்றிகள்!நீண்ட இடைவேளைக்குப் பின் மாபெரும் அங்கீகாரமொன்று.வாழ்த்துக்கள் மீண்டும்!!!!!
வாழ்த்துகள் பிரகாஷ், நண்பரை அறிமுகப்படுத்திய விகடனுக்கு நன்றிகள்!
பதிவுலகில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் பாஸ்! கலக்குங்க! :-)
காதல் தீபத்திற்கு வாழ்த்துகள்.
தூள் கிளப்பட்டும் நமது பதிவர்கள். வாழ்த்துகள் பிரகாஷ்!!
மீண்டும் வாழ்த்துகள் பிரகாஷ்..தொடர்ந்து கலக்குங்க..சிஎன்சி தொடரை நானும் ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.
பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் .
நிச்சயம் இது பெரிய அங்கிகாரம்தான் வாழ்த்துக்கள் பாஸ்
வாழ்த்துக்கள் பிரகாஷ் உங்களை தொடர்புகொண்டேன் விகடனை பார்த்தவுடன் உங்களை வாழ்த்த ! மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் எழுத்து பணி நன்றி
வாழ்த்துக்கள் நண்பரே............!
வாழ்த்துக்கள் பிரகாஷ்!
மிக்க மகிழ்ச்சி தோழர்..வாழ்த்துகள்.
வாழ்த்துகள் நண்பா
வாழ்த்துகள் நண்பா,
தொடர்ந்து பல நல்ல பதிவுகளை
எழுத இந்த அங்கீகாரம் நிச்சயம் ஊக்கமாக இருக்கும்.
வாழ்த்துகள் நண்பா!
வாழ்த்துக்கள்
கருத்துரையிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.....
வாழ்த்துக்கள் மாப்ள!
வாழ்த்துகள் பிரகாஷ்! கிடைத்த அங்கீகாரத்தை தக்க வைப்பதற்காகவே நீங்கள் இன்னும் நிறைய சிரத்தை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். ! மெக்கானிக்கல் துறையினருக்கான தொடரை தொடரந்து எழுதிமுடிக்க என்னுடைய வாழ்த்துகள்..!!
வாழ்த்துக்கள் நண்பா!
வாழ்த்துக்கள்
ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?
நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை.
அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.
அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.
சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!
Part 1: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1
Part 2: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1
.
வாழ்த்துக்கள் அண்ணா . உங்கள் எழுத்து பணி தொடர்ந்து சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
vaalththukkal....
Pl give link to ur original blog post on Madurai picnic spots.
Thanks