இன்று மதியம் என் இண்டர்நெட் பில் கட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வீட்டுக்கு பக்கத்து தெருவில் வறப்போ ஒரு டிரான்ஸ்பார்மரில் அடிப்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. பைக்கில் போய்ட்டு இருந்ததுனால தீயை மட்டும் பார்த்தேன். ட்ரான்ஸ்பார்மர் இருக்கு என்பதையே கவனிக்கவில்லை. அதை தாண்டி போனதும் தான் ட்ரான்ஸ்பார்மர் கீழே தீ எரிஞ்சுகிட்டு என்பதே நான் கவனிச்சேன். உடனே பைக்கில் இருந்து இறங்கி ட்ரான்ஸ்பார்மர் பக்கத்துல போயி பார்த்தா அடிப்பகுதி முழுதும் நெருப்பு நல்லா பரவி எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. எனக்கு அந்த நிமிசத்துல என்ன செய்றதுன்னே புரியல. உடனே அக்கம் பக்கம் யாராச்சும் கூப்பிடலாம்னு பாத்தா யாருமே இல்லை. எல்லாரும் வீட்டை பூட்டிட்டு உள்ள இருந்திருப்பாங்க போல. கொஞ்சம் தள்ளி சின்ன கடை இருந்துச்சு. அங்க கேட்கற மாத்ரி தீ.... தீ.... ட்ரான்ஸ்பார்மர்ல தீ..ன்னு கத்தினேன். நான் கத்துனது அவங்களுக்கு கேட்கல. என்னடா செய்றதுன்னு திரும்பி திரும்பி பார்த்தேன். பக்கத்துல கொஞ்சம் உள்ள தள்ளி மணல் கொட்டி இருந்துச்சு. உடனே வேகமா போயி அந்த மணலை கையில அள்ளி நெருப்பு மேல போட்டேன். மணல் விழுந்த இடத்துல தீ கொஞ்சமா அனைஞ்சுச்சு.
மறுபடியும் ஒரு கை மணல் அள்ளிட்டு திரும்ப கத்தினேன். யாராச்சும் ஆள் வருவாங்களான்னு? அந்த பக்கமா ஒரு கட்டட வேலையில ரெண்டு சித்தாள்கள் என் சத்தத்தை கேட்டு வேகமா வந்தாங்க. அவங்க கிட்ட தண்ணி கேட்டதும் ஆளுக்கு ரெண்டு குடம் தண்ணி கொண்டு வந்தாங்க. குடத்தை வாங்கி நெருப்பு மேல ஊத்தினேன். ஓரளவு தீ முழுமையா அனைஞ்சது. ட்ரான்ஸ்பார்மர் ஆங்கிள் கம்பிகள் தீயில் பழுத்து இருந்துச்சு. திரும்ப ரெண்டு மூணு தடவ தண்ணி ஊத்தினேன். ஓரளவு தீ அனைஞ்சது. நல்ல வேளை சரியான நேரத்துல நான் பார்த்ததுனால தீயை அணைக்க முடிஞ்சது. இல்லையினா, தீ இன்னும் பரவி ட்ரான்ஸ்பார்மர் ஆயில் டேங்க்குக்கு பரவி இருந்தா பெரும் விபத்தே நடந்திருக்க வாய்ப்பு உண்டு.
28 கருத்துரைகள்:
Good Job.:-)))) எந்தப் பயலாவது சிகரெட்டயோ நெருப்புக் குச்சியவோ அணைக்காமப் போட்டிருப்பான். நல்லது செஞ்சீங்க. பாராட்டுகள்.
Ithukkum....
Yaaraavathu....
Vanthu
eethaavathu.....
Solluvaan
paaren....
ஆயிரத்தில் ஒருவர் நீங்கள் ..!
சமூகசேவை?!
டிரான்ஸ்ஃபார்மர் ஃபுல்லா தீ பற்றியிருந்தால் எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தீருக்கும். அதுப்போல் நடக்க விடாம உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி
நீங்க கலக்குங்க தோழர்
பாராட்டுக்கள்.
நல்லதொரு செயல் - பிரகாஷ்
நல்ல ஒரு சேவை செஞ்சிருக்கிறிங்க சார்,...உங்களாலதான் மழை கொஞ்சம் போல பெய்யுது...அவ்வ்வ்வ்
thanks....
சபாஸ் தல இது தான் நாட்டுக்கு தேவையான பதிவு.மனமார்ந்த வாழ்த்துகள்.
உன்னைதாம்ல தேடிக்கிட்டு இருக்கேன்..
எதுக்கா..?
பாரட்டத்தான்...
பதட்டத்திலும் சமயோசிதமாக செயல்பட்டதற்கு பாராட்டுக்கள்.
"காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
தக்க சமயத்தில் ஒரு தீ விபத்தைத் தவிர்த்து இருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்!
பிரகாஸ் நல்ல காரியம் செய்தீங்க...
கரண்டே இல்லை எதுக்குடா இதை வெச்சிருக்கிங்க என்று எவனாவது தீய வெச்சிருப்பான்....
மதுரையை மீட்ட பிரகாஷ் அண்ணா நன்றி.
அடுத்த முறை தண்ணீர் ஊற்றும் போதும் கவனமாயிருங்கள் தண்ணீரும் மின்கடத்தியே
வீடு K.S.சுரேஸ்குமார் said...
பிரகாஸ் நல்ல காரியம் செய்தீங்க...
கரண்டே இல்லை எதுக்குடா இதை வெச்சிருக்கிங்க என்று எவனாவது தீய வெச்சிருப்பான்....//
இருந்தாலும் இருக்கும்ங்க.
கை கொடுங்க .,பாராட்டுகள்.
தோடா.............
மதுரையை மீட்ட சுந்திர பாண்டியன்...
நீ கலக்கு மச்சி...
உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.
அதே நேரத்தில் உதவப்போய் நீங்கள் ஆபத்தில் சிக்கக்கூடாது.
மின்சாரத்தால் பரவும் தீயை கட்டாயம் தண்ணீர் ஊற்றி அணைக்ககூடாது.
மணல் போட்டு அணைக்க முயற்ச்சிக்க வேண்டும்.
நல்லதொரு செயல் ! பாராட்டுக்கள் பிரகாஷ் !
//உடனே பைக்கில் இருந்து இறங்கி ட்ரான்ஸ்பார்மர் பக்கத்துல போயி பார்த்தா அடிப்பகுதி முழுதும் நெருப்பு நல்லா பரவி எரிஞ்சுகிட்டு இருந்துச்சு. எனக்கு அந்த நிமிசத்துல என்ன செய்றதுன்னே புரியல. உடனே அக்கம் பக்கம் யாராச்சும் கூப்பிடலாம்னு பாத்தா யாருமே இல்லை. //
உடனே பதிவு போட ஒரு போட்டோ எடுத்துக்க வேண்டியது தான் மாப்ள....
@நீச்சல்காரன்
அடுத்த முறை தண்ணீர் ஊற்றும் போதும் கவனமாயிருங்கள் தண்ணீரும் மின்கடத்தியே/////
தண்ணீர் ஊற்றக் கூடாது என தெரியும் நண்பா. அந்த நேரத்தில் DRY powder fire extinguisher கிடைக்கலியே...
சிறிது பயத்துடன் தான் செயல்பட்டேன்.
@உலக சினிமா ரசிகன்
அதே நேரத்தில் உதவப்போய் நீங்கள் ஆபத்தில் சிக்கக்கூடாது.
மின்சாரத்தால் பரவும் தீயை கட்டாயம் தண்ணீர் ஊற்றி அணைக்ககூடாது.
மணல் போட்டு அணைக்க முயற்ச்சிக்க வேண்டும்.////
உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ்....
மணல் மூலம் முழுமையா அணைக்க முடியவில்லை.
ட்ரான்ஸ்பார்மர் இருந்த தரை பக்கத்தில் அதிக தீ இருந்ததால் தண்ணீர் ஊற்ற வேண்டியதா போச்சு.
அதிக ரிஸ்க் எடுத்து இருக்கிறீங்க.. கவனம் மாப்பிள உதவ போய் உயிராபத்த தேடாதீங்கோ.!
பக்கத்திலே போகவே பலபேர்
பயப்படுவாங்க!
தீங்க தைரியசாலிதான்
பாராட்டுக்கள்!
புலவர் சா இராமாநுசம்
கரண்டுக்கே ஷாக் குடுத்த பதிவரே..பார்த்துங்க....தண்ணீர் ஊத்தாமே பண்ணி இருக்கலாமே...கரண்டு இல்லாத தைரியம் ...இனி மீண்டும் இதை செய்ய வேண்டாம்
வாழ்த்துகள் பிரகாஷ்.