கடந்த மாதம் நமது தளத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து இடுகைகள் இங்கே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
நம்ம மொபைல் பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் நீண்ட நேரம் இருக்க சில வழிகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என பார்ப்போமா?
உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.
ஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.
இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher.
உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் உத்திரவாதம் இருக்கான்னு இங்க கூடங்குளத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விடை தெரியாமல் போராடிக் கொண்டிருக்கையில் கூடங்குளத்தில் அணுஉலை மின்சார தயாரிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது.
படத்தில் இருப்பது யாரு? கண்டுபிடிச்சுட்டு பதிவை படிங்க.
சண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும் மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன்.
வணக்கம், பதிவுலக நண்பர்களே,
கடந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் (04-03-2012) - இல் நமது தமிழ்வாசியில் வந்த "பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?" என்ற பதிவு நச், கண்ணில் பட்டது என்ற பகுதியில் "பதற வைக்கும் பைக் ஸ்டாண்டு" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
என்னை மறுபடியும் ஸ்கூலுக்கு போயிட்டு வரச் சொன்ன ராஜி அக்கா அவங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். என்ன செய்ய? நம்மளுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி. அதனால என் மைண்டுல பள்ளி விஷயங்கள் பத்தி என்ன ஞாபகம் இருக்கோ அதை இங்கே எழுதறேன்.
மதுரையில டூவீலர் ஓட்டுறவங்க கட்டாயம் ஹெல்மெட் போடணும்னு சட்டம் வந்து சுமாரா ரெண்டு வாரம் ஆச்சு. போலிசும் சிக்னல் மற்றும் பொது மக்கள் கூடும் இடத்தில மைக் போட்டு ஹெல்மெட்டின் அவசியத்தை எடுத்து சொல்லி மக்களை ஹெல்மெட் அணியும் படி சொல்லிக்கிட்டு இருக்காங்க.
12 கருத்துரைகள்:
காமெடி பதிவுகளை விட, வழிகாட்டும், விழிப்புணர்வு பதிவுகள் அதிக பேரால் பார்க்கப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. பதிவுலகின் ஆரோக்கியமான மாற்றத்தினை காட்டுகிறது. வாழ்த்துகள் பிரகாஷ்.
பல நல்ல பதிவுகளை பகிர்ந்திருக்கீங்க. இதேப்போல நல்ல விசயங்களை பகிர வாழ்த்துக்கள்
பயனுள்ள பதிவுகளை அதிகம் பேரால் விரும்பப்படுகிறது என்பதற்கு இந்த பட்டியல் ஒரு சான்று. தொடர்ந்து இதுபோல பல பதிவுகள் எழுதுங்கள். நன்றி
வாழ்த்துக்கள்..தொடரட்டும் உம்ம பணி
பக்காவான பத்து பதிவுகள்!
வாழ்த்துக்கள் பிரகாஸ்!!!!
இப் பத்தையும் நான் விரும்பி படித்தேன் அண்ணா நல்ல பயனுள்ள தொளிநுட்பம் சார் தகவல்கள் எனக்கு மிகவும் பயன்பட்டன. பதிவுகளுக்கு நன்றி அண்ணா
இதெல்லாம் யார் பதிவு!
நண்பரே இதில் கூட தொழில்நுட்ப பதிவு தன முதல் இடம்.அதனால் நான் சென்ற முறை கூறியது போல தொழில்நுட்ப செய்திகளுக்கு என்று நீங்கள் தனியாக ஒரு வலைபதிவு தொடங்கி மேலும் உங்கள் சேவை தொடரட்டும்
அத்தனையும் அருமை சார். உடல் எடை குறைக்க உதவும் சார்ட் மிகவும் அருமை. நன்றி.
வாழ்த்துக்கள் பிரகாஷ் !
இதெல்லாம் பதிவேஇல்ல பிரகாஷ்....பாடம்....எல்லாப் பதிவையும் இப்பதான் படிச்சேன்.அருமையா இருக்கு.