இந்த வருடம் நமது நாட்டிற்கு 13-வது ஜனாதிபதி தேர்தல் வரபோகுது. நாமெல்லாம் இதுக்கு ஓட்டு போட முடியாது. நாம விருப்பப்பட்டு? தேர்ந்தெடுத்த பெரிய ஆளுங்க எல்லாம் சேர்ந்து ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பாங்க. எப்பவுமே ஜனாதிபதி தேர்தல்ல ஆளுங்கட்சி ஒருத்தரை சொல்வாங்க, மற்ற கட்சிகள் எல்லாம் அவரை ஆதரிச்சு அவரையே ஜனாதிபதியா உட்கார வச்சிருவாங்க. ஆனா இந்த வருஷம் எம்எல்ஏ, எம்பி தேர்தல் போல ஜனாதிபதிக்கும் ஏகப்பட்ட போட்டி வந்திருச்சு. ஆளுங்கட்சி தரப்புல இருந்து அவரா, இவரான்னு திண்டாடி, இப்ப பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதிக்கு பரிந்துரை பண்ணியிருக்காங்க.
அப்புறம் மம்தா பானர்ஜி நம்ம ஊரு அப்துல் கலாமை ஜனாதிபதியா நிறுத்தனும்னு ரொம்பவே மெனக்கட்டு அவருக்காக ஆதரவை திரட்டிட்டு இருக்காங்க. நம்ம ஜெயலலிதா பி.ஏ.சங்மாவை நிறுத்தனும்னு சொன்னாங்க. ஆனா இப்போ அவருக்கு எந்த அளவுல ஆதரவு இருக்குன்னு தெரியல. பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியும் ஜனாதிபதி தேர்தல்ல நிக்க விருப்பம் தெரிவிச்சு இருக்கார். ஆக, இப்படி, ஜனாதிபதி ரேசில், பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, ராம்ஜெத் மலானி என நாலு பேர் இருக்குற மாதிரி தெரியுது. எந்தெந்த கட்சி ஆதரவு இவங்களுக்கு கிடைக்குதுன்னு எப்படியும் பேரம் நடந்திட்டு தான் இருக்கும். ஆனாலும் இப்ப அஞ்சு வருசமா பிரதீபா பாட்டில் ஜனாதிபதியா இருந்திருக்காங்க. என்ன செஞ்சு நாட்டை முன்னேற்றி இருக்காங்கன்னு தெரியல. ஆனா நிறைய டூர் போயி நிறைய செலவு செஞ்சிருக்றதா சொல்றாங்க. சரி விடுங்க, அவங்க ஜனாதிபதி காலம் முடியப்போகுது. ஆண்டு அனுபவிச்சுட்டாங்க. அடுத்து வர்றவங்களாவது ஏதாவது பிரயோசனமா செய்வாங்களா?
மம்தாஜி சொல்றது போல கலாம் மீண்டும் ஜனாதிபதியா வந்தா இந்தியா ஓரளவு நல்ல பாதையில் செல்லும் என பெரும்பாலான மக்களின் விருப்பம். ஆனா ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பவர்களின் ஆதரவு அவருக்கு முழுமையாக கிடைக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பவர்கள் மேலிடம் சொல்வதையே செய்வார்கள். வேற வழி..... அவர்கள் அந்த இடத்தில் பிழைப்பு நடத்த வேண்டி மேலிடம் சொல்வதைத் தான் கேட்பார்கள்.
ஆளுங்கட்சி நிறுத்தியிருக்கும் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வெறும் கையெழுத்துக்காக இல்லாமல் பிரயோஜனமாக, மக்களின் விருப்பப்படி, இந்தியாவின் நலனுக்காக, இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவைகள் நிறைவேறாமல் போனால் இந்தியாவின் வரும் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போய் விட வாய்ப்புகள் மிக அதிகம்.
21 கருத்துரைகள்:
Aasaiyai.....paaru.....
Nadakkaatha....
Pagal...kanavu....
Ellam....
Kandukkittu.........
பிரசிடெண்ட வழிமொழியுமளவுக்கு, நீர் அம்மாம் பெரிய அப்பாடக்கரா?
///வெறும் கையெழுத்துக்காக இல்லாமல் பிரயோஜனமாக, மக்களின் விருப்பப்படி, இந்தியாவின் நலனுக்காக, இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்க வேண்டும்////
இந்திய அரசியல் சட்டப்படி ஒரு ஜனாதிபதி இப்படி இயங்கமுடியுமா?
@வெளங்காதவன்™
பிரசிடெண்ட வழிமொழியுமளவுக்கு, நீர் அம்மாம் பெரிய அப்பாடக்கரா?//////
நம்மளால இப்படி பேசத்தானே முடியும்... தேர்ந்தெடுக்க உரிமை இல்லையே வெளங்கா...
@பன்னிக்குட்டி ராம்சாமி
இந்திய அரசியல் சட்டப்படி ஒரு ஜனாதிபதி இப்படி இயங்கமுடியுமா?///
அரசியல்வாதிகளின் சட்டப்படி செய்ய முடியாதுன்னு நினைக்கிறேன்... ஹி..ஹி...
ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி நமது நாட்டுக்கு தேவை இல்லை என்பதே என் கருத்து
வணக்கம் பிரகாஷ்!புரியுது,என்ன பண்ண?உலகம் பூரா இப்போ ஜனாதிபதி பதவிங்கிறது ரப்பர் ஸ்டாம்பு மாதிரி தான்!ஒரு சில எதேச்சார நாடுகள்(உ-ம்;இலங்கை)தவிர!!!
ஜனாதிபதியானவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்.நாட்டின் உயர் பதவியான உச்ச நீதிமன்ற நீதிபதியையும்,இந்திய தேர்தல் ஆணையரையும் நியமிக்கும் அதிகாரம் இவரிடம் தான் உள்ளது.ஆனால் பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒரு மத்திய அமைச்சரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டது வெட்கக்கேடு.அதுவும் காங்கிரசை வழிநடுத்தும் ஒரு மூத்த தலைவர்.இவர் காங்கிரஸ் நலனைப் பார்ப்பாரா அல்லது நாட்டு நலனைப் பார்ப்பாரா?
Fuse போன bulb-பால எந்த பிரயோசனமும் இல்லை பாஸ், நம்ம நாட்டில ஜனாதிபதி பதவிங்றது Fuse போன bulb மாதிரித்தான்., இதுல இவரு வந்தா இப்படி பன்னிருவாறு அவரு வந்தா அப்படி பன்னிருவாறுங்கற பேச்சுக்கே இடமில்லை.!
மம்தாஜி, நாட்டின் மீது அக்கறைக் கொண்டா கலாமை முன்னிறுத்துகிறார்? அவரது பிரச்சனையே பிரணாப் தான்.பிரனாப்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று காங்கிரஸ் அறிவித்தப்பின் தான் கலாம் பெயர் இங்கே அடிபடுகிறது.இவர் ஆறு மாதத்திற்கு முன்பே இந்த யோசனையை வெளியிட்டிருந்தால் நிச்சயம் தமிழக கட்சிகள் ஆதரவு அளித்திருக்கும் மேலும் இந்தியா முழுவதிலும் ஆதரவு பெருகியிருக்கும்.எனக்கென்னவோ கலாம்,மம்தாவின் பகடைக்காயாக ஆக்கப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
//பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வெறும் கையெழுத்துக்காக இல்லாமல் பிரயோஜனமாக, மக்களின் விருப்பப்படி, இந்தியாவின் நலனுக்காக, இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்//
இதுலாம் பேராசை .. மந்திரி பதவியிலேயே ஒன்னும் கிழிக்க முடியல இவர் போய் ............. போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு
"பில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு ?
நம்ம நாட்டு ஜனாதிபதி பதவிக்கே ஒரு மதிப்பு ஏற்பட்டது கலாம்அவர்களால்...! மத்தவங்க காங்கிரஸ் அரசு இருந்தவரை இருக்கும் வரை டம்மி பீஸ்தான் ஜனாதிபதி!
@PREM.S
ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி நமது நாட்டுக்கு தேவை இல்லை என்பதே என் கருத்து///
அட... எல்லோருமே ரப்பர் ஸ்டாம்ப்ன்னு நெனக்கிறாங்களா???.....
@Yoga.S.
என்ன பண்ண?உலகம் பூரா இப்போ ஜனாதிபதி பதவிங்கிறது ரப்பர் ஸ்டாம்பு மாதிரி தான்!ஒரு சில எதேச்சார நாடுகள்(உ-ம்;இலங்கை)தவிர!!!///
உண்மை ஐயா...
@Manimaran
காங்கிரஸ் நலனைப் பார்ப்பாரா அல்லது நாட்டு நலனைப் பார்ப்பாரா?////
டவுட்டே வேணாம்...
@வரலாற்று சுவடுகள்
Fuse போன bulb-பால எந்த பிரயோசனமும் இல்லை பாஸ், நம்ம நாட்டில ஜனாதிபதி பதவிங்றது Fuse போன bulb மாதிரித்தான்.,//
பியுஸ் போகாத பல்பு எங்க விப்பாங்க...
@Manimaran
எனக்கென்னவோ கலாம்,மம்தாவின் பகடைக்காயாக ஆக்கப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.////
இருக்கலாம் மணி சார்.....
உண்மையான ஆதங்கம்! எனக்கும் தான்!
என்னுடைய ஆதரவும் விருப்பமும் கண்ணடிப்பா அது நம்ம முன்னால் ஜனாதிபதி கலாமுக்கு தான்
கலாம் அவர்களை நாம் நிறைய பேர் ஆதரித்தாலும் இந்த தேர்தலில் நாம் வாக்களிக்க முடியாது என்பதால், அவர் வெல்வது சாத்தியம் இல்லை...
நல்ல முடிவை எடுத்திருக்கிறார்!!