CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts


தென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா...

        தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம்  சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றில் ஒரு வெற்றியுடன் தோல்வியை தழுவியது, அடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறு போட்டிகள் அடங்கிய ஒரு நாள் தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நான்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

image courtesy: TOI
மேலும் வாசிக்க... "தென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா..."



இந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா?

இந்த வருடம் நமது நாட்டிற்கு 13-வது ஜனாதிபதி தேர்தல் வரபோகுது. நாமெல்லாம் இதுக்கு ஓட்டு போட முடியாது. நாம விருப்பப்பட்டு? தேர்ந்தெடுத்த பெரிய ஆளுங்க எல்லாம் சேர்ந்து ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பாங்க. எப்பவுமே ஜனாதிபதி தேர்தல்ல ஆளுங்கட்சி ஒருத்தரை சொல்வாங்க, மற்ற கட்சிகள் எல்லாம் அவரை ஆதரிச்சு அவரையே ஜனாதிபதியா உட்கார வச்சிருவாங்க. ஆனா இந்த வருஷம் எம்எல்ஏ, எம்பி தேர்தல் போல ஜனாதிபதிக்கும் ஏகப்பட்ட போட்டி வந்திருச்சு. ஆளுங்கட்சி தரப்புல இருந்து அவரா, இவரான்னு திண்டாடி, இப்ப பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதிக்கு பரிந்துரை பண்ணியிருக்காங்க.

அப்புறம் மம்தா பானர்ஜி நம்ம ஊரு அப்துல் கலாமை ஜனாதிபதியா நிறுத்தனும்னு ரொம்பவே மெனக்கட்டு அவருக்காக ஆதரவை திரட்டிட்டு இருக்காங்க. நம்ம ஜெயலலிதா பி.ஏ.சங்மாவை நிறுத்தனும்னு சொன்னாங்க. ஆனா இப்போ அவருக்கு எந்த அளவுல ஆதரவு இருக்குன்னு தெரியல. பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியும் ஜனாதிபதி தேர்தல்ல நிக்க விருப்பம் தெரிவிச்சு இருக்கார். ஆக, இப்படி, ஜனாதிபதி ரேசில், பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, ராம்ஜெத் மலானி என நாலு பேர் இருக்குற மாதிரி தெரியுது. எந்தெந்த கட்சி ஆதரவு இவங்களுக்கு கிடைக்குதுன்னு எப்படியும் பேரம் நடந்திட்டு தான் இருக்கும். ஆனாலும் இப்ப அஞ்சு வருசமா பிரதீபா பாட்டில் ஜனாதிபதியா இருந்திருக்காங்க. என்ன செஞ்சு நாட்டை முன்னேற்றி இருக்காங்கன்னு தெரியல. ஆனா நிறைய டூர் போயி நிறைய செலவு செஞ்சிருக்றதா சொல்றாங்க. சரி விடுங்க, அவங்க ஜனாதிபதி காலம் முடியப்போகுது. ஆண்டு அனுபவிச்சுட்டாங்க. அடுத்து வர்றவங்களாவது ஏதாவது பிரயோசனமா செய்வாங்களா?

மம்தாஜி சொல்றது போல கலாம் மீண்டும் ஜனாதிபதியா வந்தா இந்தியா ஓரளவு நல்ல பாதையில் செல்லும் என பெரும்பாலான மக்களின் விருப்பம். ஆனா ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பவர்களின் ஆதரவு அவருக்கு முழுமையாக கிடைக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பவர்கள் மேலிடம் சொல்வதையே செய்வார்கள். வேற வழி..... அவர்கள் அந்த இடத்தில் பிழைப்பு நடத்த வேண்டி மேலிடம் சொல்வதைத் தான் கேட்பார்கள்.

ஆளுங்கட்சி நிறுத்தியிருக்கும் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வெறும் கையெழுத்துக்காக இல்லாமல் பிரயோஜனமாக, மக்களின் விருப்பப்படி, இந்தியாவின் நலனுக்காக, இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவைகள் நிறைவேறாமல் போனால் இந்தியாவின் வரும் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போய் விட வாய்ப்புகள் மிக அதிகம்.
மேலும் வாசிக்க... "இந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா?"



இந்திய அரசே... எனக்கும் வீங்குதே! என்ன செய்ய?

இந்த நிலைக்கு இந்தியா தள்ளப்படுமா?
அய்யா மத்திய அரசே, உங்களுக்கு கஜானா காலி ஆனாலும், நாட்டுல பண வீக்கம் ரொம்ப வீங்கினாலும், இன்டர்நேசனல் பேங்க் கடன் அதிகமானாலும் நீங்க கையை வைக்கறது எங்க அடி மடியில தானே, ஏன்னா உங்களுக்கு இளப்பம் நாங்கதானே. இவிங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டான்னு எங்க நெத்தியில போஸ்ட்டர் அடிச்சு எப்பவோ ஒட்டிட்டிங்களே. நாட்டை ஆள நீங்க மட்டுமல்ல, யாரு வந்தாலும் எங்கள அடிக்கறாங்கயா, எவ்வளவு தான் நாங்களும் தாங்குவோம்? எங்க புலம்பல், எங்க ஏழ்மை, எங்க குடும்ப பொருளாதார வீக்கம் (ஏன், அரசுக்கு மட்டும் தான் பொருளாதாரம் வீங்குமா?) என எதுவுமே உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு சுமை தாங்கியே நாங்க தான?

ரொம்ப  நல்லா ஆட்சி நடத்தி, எங்க வாழ்வாதாரத்தையும் முன்னேத்தி, நாட்டையும் சர்வதேச அளவுல முன்னேத்த உங்கள நம்பி கொண்டு வந்தோம். ஆனா நீங்க எங்கெல்லாம் ஓட்டை, ஓடிசல் இருக்குன்னு பாத்து அங்க போயி எல்லாத்தையும் காலி பண்ணி சுத்தமா தொடச்சு அவங்களோட பாக்கெட்டை நொப்பிக்கறாங்க(நொப்பிக்கிட்டாங்க). அது மட்டுமில்லாம என்னன்னமோல்லாம் நடக்குது. அட, என்னவேனாலும் நீங்க நடத்துங்க. ஆனா எங்களை ஏன் கஷ்டப்படுத்துறிங்க? நாங்க சம்பாதிக்கிற பணத்துக்கும் வரி காட்டுறோம். அதுல நாட்டை ஆள பணம் பத்தலையா? ஏன் பத்தலை? பல முதலைங்க வரி கட்டாம ஏப்பம் விடறாங்க. வெள்ளைப் பணத்தை கருப்பாக்கி உலகத்துல எங்கேயோ ஒரு மூலையில பதுக்குறாங்க. அட, அந்த கறுப்பை பதுக்க நம்ம நாடு கூட அவங்களுக்கு லாயக்கு இல்ல போல... சரி, இதெல்லாம் காலங்காலமா நடந்துட்டு வருது.

இப்ப  நமக்கு என்ன முக்கியம்? விலை வாசி கையை கடிக்க கூடாது. கொஞ்சமாச்சும் நம்ம வருமானத்துல சேமிக்கணும்னு ஆசை வரும். ஆனா நாளைக்கு எதுல விலை கூடப் போகுது? நாளான்னைக்கு எதுல கூடப்போகுதுன்னு தெரியாதுல. அதனால சேமிக்கிற ஆசையும் வேணாம் நமக்கு. பஸ் டிக்கட் ரேட் கூடுனதுல ஒரு லாபம் இருந்துச்சு. அதாவது ரெண்டு பேரு சேர்ந்து பைக்ல போனா கொஞ்சம் காசு மிச்சமாகும். நேரமும் மிச்சமாகும்னு இருந்துச்சு. ஆனா எப்போ பெட்ரோல் உரிமை அரசுக்கிட்ட இருந்து அந்த நிறுவனங்களுக்கு போச்சோ? அப்பவே பைக்ல சேர்ந்து போகறதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்கயா. ஆமா, அரசு கிட்ட பவர் இருக்குறப்போ வருசத்துல ரெண்டு மூணு வாட்டி பெட்ரோல், டீசல் விலையேத்துவாங்க. அதுவே நம்ம வருமானத்தை மீறி செலவுல வீங்கும். 
இந்தப் படத்துல உள்ள டீடெயில்ல பார்த்து மலைச்சு போயிராதிங்க?

ஆனா, இந்த நிறுவனத்துக்கு பவர் எப்போ போச்சோ? அப்பவே போச்சுங்க நம்ம நிம்மதி. எங்கேயோ சர்வதேசத்துல ரேட் கூடுதாம். அதனால இங்க செலவு கட்டுபடி ஆகலையாம். அப்படியும் மீறி செலவு பண்னுன்னா பண வீக்க விகிதம் ரொம்பவே வீங்குதாம். அதனால பெட்ரோல் ரேட் ஒரு கணக்கு போட்டு கூட்டுவாங்க. இங்க தாங்க அவங்க ஆட்டம் அடங்காம போக ஆரம்பிச்சுச்சு. அவங்க கையிக்கு பவர் போனதுல இருந்து சுமாரா பதினெட்டு தடவ ரேட் கூடியிருக்கு. அதனால நுகர்வோர் பொருட்களின் விலையும் பதினெட்டு தடவ கூடியிருக்கு(இப்படியும் எடுத்துக்கலாம்ல). ஆனா நம்மளோட வருமானம் மட்டும் கூடாது. ஏன்னா, அது நாம வேலை பாக்குறவங்க கையில இருக்கு. அப்படியும் அவங்க வருசத்துக்கு ஒரு தடவ வருமானத்தை கூட்டும் போதும் இந்த விலையேற்றத்தை கவனத்துல வைப்பாங்களா? ம்ஹும்.... ம்ஹும்....

பால் விலை, ஸ்கூல் பீஸ், பஸ் டிக்கட், நுகர்வோர் சாமான்கள் விலையேற்றம், ஆட்டோ,கார் வாடகை ரேட், நெடுந்தூர பேருந்து ரேட், என இப்படி எல்லாமும் விலையேறி சாமானிய மக்களும் நிம்மதியா குடும்பத்த ஓட்ட முடியால. இந்த ரெண்டு மூணு வருசத்துல எல்லா விலையுமே எவரெஸ்ட் மலை மாதிரி ஏறிப் போச்சு. ஆக, இந்த எவரெஸ்ட் மலையில் நாம தான் ஏறணும்? எத்தன பேரால அந்த மலையில ஏற முடியும்? ஏதாவது குறுக்கு வழியில சம்பாதிப்பவன், கறுப்பு பணத்தை பெருக்குறவன், பெரிய பெரிய பவர் இருக்குறவங்க தாராளமா விலையேற்ற எவரெஸ்ட் மலையில் ஏறலாம். ஆனா சாமானிய மக்களான நாம அதுல கண்டிப்பா ஏறித்தான் ஆகணும். ஆனா முடியாது? அதுக்குள்ள இன்னொரு ரூபத்துல ஏதாவது விலையேற்றம் வந்து நம்மள கீழ தள்ளி விட்டுரும். நாம கீழ விழுந்து அடிப்பட்டு நம்ம ஒடம்பு வீங்கும், அதாவது நம்ம குடும்ப வருமானத்தை மீறி செலவு வீங்கும். இந்த வீக்கத்துக்கு மருந்து போட யாரும் வர மாட்டாங்க. வேணும்ன்னா வீக்கத்தை கிள்ளிப் பாக்க வேணா வருவாங்க. அதுதான் இவங்கள நம்புனதுக்கு நமக்கு கெடச்ச பரிசு. 

எல்லா ரேட்டும் ஏறிப்போச்சுங்க, இன்னும் நம்மள எவ்வளவு தான் வீங்க வப்பாங்களோ? ஓட்டு பொட்டு இவங்கள உட்கார வச்சதுக்கு நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்? சரி, விடுங்க ஏதோ பொலம்பிட்டேன் இன்னைக்கு.... (நான் மட்டுமா புலம்பறேன்? இந்தியாவே புலம்புது)
மேலும் வாசிக்க... "இந்திய அரசே... எனக்கும் வீங்குதே! என்ன செய்ய?"



சீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி!

          சுமார் 5000கிமீ தூரம் பாய்ந்து பக்கத்து நாடுகளை தாக்கும் வகையில் நவீன ரக அக்னி - 5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிக்கரமாக முடித்துள்ளது. இந்த ரக ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை சீனாவின் எந்த பகுதிகளிலும் தாக்கலாம். அந்த அளவு தூரமாக பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணை நேற்று காலை ஒடிசா மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டது. திட்டமிட்டபடி இலக்கை தாக்கி ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
AGNI-V
இந்த வகை அதிநவீன ஏவுகணை மூலமாக நவீன ஏவுகணைகள் வைத்திருக்கும் உலக பெரும் நாடுகளான அமேரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா நாடுகளுடன் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. இந்த ஏவுகணை சுமார் ஒரு டன்னுக்கும் அதிகமாக ஆயுதங்களை தாங்கிச் சென்று அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் இந்தியாவிடம் குறைந்த தூரமே தாக்கும் வகையில் ஏவுகணைகளே இருந்தது. இந்த நவீன அக்னி-5 மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில், உதாரணத்திற்கு பக்கத்தில் உள்ள சீனாவின் எந்த பகுதிகளையும் துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு வகையான சோதனைகள் நடத்தப்பட இருப்பதாகவும், அவை முடித்து இன்னும் இரண்டு ஆண்டுக்குள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த அக்னி-5 ஏவுகணை முற்றிலும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் நம்மால் அதி நவீன ரக ஏவுகணைகளும் தயாரிக்க முடியும் என உலகிற்கு அறிய வைத்துள்ளோம் என்பதில் ஒரு இந்தியனாக பெருமை கொள்ளுங்கள் நண்பர்களே!  ஜெய்கிந்த்!!
மேலும் வாசிக்க... "சீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி!"



ஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்!

செய்தி:
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, விதிமுறைகளை மீறி ராணுவ நிலம், அளவுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
நம்ம கமென்ட்: 
இதெல்லாம் ரொம்ப கம்மி. நம்ம ஊரு பெரும்புள்ளிகள் கிட்ட தகவல் அறியும் சட்டம் பாய்ந்தால் கையாடல் செய்த நிலத்தில் ஒரு குட்டி கண்டமே உருவாக்கலாம்.

செய்தி:
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்காக, மகாராஷ்டிரா மாநில அரசு இதுவரை, 25 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
நம்ம கமென்ட்: 
மொத்ததுல அவனோட கூட்டத்துக்கே  இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த ரொம்ப குறைவாகவே பணம் செலவாயிருக்கும். இந்தளவு பணம் இருந்திருந்தா இன்னும் புதுசா டெக்னாலஜியோட தாக்கி இருப்பானுக?

செய்தி:
இதுவரையில் நாம் இளைய சமுதாயத்தினரை பார்த்து, "இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்' என கூறுவதை, பழமொழியாக கொண்டிருந்தோம். இனி, "இன்றைய அமைச்சர்கள் நாளைய சிறைக் கைதிகள்' என்ற சூழ்நிலை உருவாகும் என, கம்யுனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் பேச்சு.
நம்ம கமென்ட்: 
ஒரு வேளை ரொம்ப அனுபவமா இருக்குமோ? இன்றைய சிறைக் கைதிகளும் நாளைய அமைச்சர்கள்ன்னு சொன்னாலும் பொருந்துமே!

செய்தி:
சித்திரை முதல் நாளையே தமிழ் புத்தாண்டாக மீண்டும் அறிவிக்க வேண்டுமென பல கோடி தமிழர்கள் விரும்பியதால், அரசு மாற்றி அறிவித்தது' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நம்ம  கமென்ட்: 
அப்போ நம்ம ஐயா அந்த பல கோடி தமிழர்கள் லிஸ்ட்டில் இல்லையா? என்ன கொடுமை?

செய்தி:
"விஜயகாந்த் கோபப்படுகிறான் என்று கூறுகின்றனர். மக்களுக்கு நல்லது செய்யவில்லை எனில், எனக்கு கோபம் வரும். மற்றவர்கள் நல்லதைச் செய்திருந்தால், நான் கட்சி ஆரம்பித்திருக்க மாட்டேன்" விஜயகாந்த் பேச்சு.
நம்ம கமென்ட்: 
நீங்க மட்டும் கோவப்படல. உங்க கட்சியில இருக்குற மிச்சம் சொச்சம் தொண்டர்களும் ரொம்ப கோவமா இருக்கறாங்க போல?

செய்தி:
மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பதில் ஆளுங்கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நம்ம கமென்ட்: 
வரலாறு ரொம்ப முக்கியம் அரசியல்வாதிகளே, இந்த மாதிரி அடிக்கடி மறந்துட்டு சண்டை போடாதிங்க!

செய்தி:
கர்நாடகாவில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல். பீர் தயாரிப்பு மற்றும் சப்ளையில் எந்த பாதிப்பும் இல்லை' என, மாநில கலால் துறை அமைச்சர் கூறினார்.
நம்ம கமென்ட்: 
பீருல ஏதோ உள்நாட்டு குழப்பம் வந்திருக்கும் போல. கணக்கு பாக்ரவங்க பீர் அடிச்சு மப்பாகி கணக்கு வழக்கு குழம்பியிருக்கும்!
மேலும் வாசிக்க... "ஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும்!"



லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

            லஞ்சம் தரனும்னா என்னென்ன தரலாம். பணம், நகைகள், அல்லது கிப்ட் பொருட்கள் அப்படின்னு நிறைய இருக்கு. ஆனா உத்திரபிரதேசம் லக்னோல இருக்குற ஒரு கிராமத்து விவசாயிகள் கிட்ட லஞ்சம் கேட்ட அரசு அபீசர்களுக்கு வித்தியாசமான முறையில லஞ்சம் கொடுத்திருக்காங்க அந்த விவசாயிகள். அந்த விவசாயிகள் லஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் ரெண்டு மூணு சாக்கு பைகள் கொடுத்திருக்காங்க. அந்த அதிகாரிகளும் ஆசையா பிரிச்சு பார்த்து ஷாக் ஆயிட்டாங்க. பணத்துக்கு பதிலா விஷமுள்ள பாம்புகள் இருந்துச்சாம் அதுல. உடனே அதிகாரிகள் பையை கீழே போட்டுட்டு அங்க இங்க ஓடினாங்க. ஒரு சிலர் அந்த பாம்புகளை விரட்ட ஏதேதோ செய்திட்டு இருந்தாங்க. அவங்க அளப்பறையை இங்கே வீடியோவா பகிர்ந்திருகேன். பாருங்க. லஞ்சம் கேட்ட அதிகாரிகள் வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளார்கள்.
    இந்த செய்தியை ரெண்டு மூணு நாள்களுக்கு முன் புதியதலைமுறை செய்தி சேனலில் செய்தியாக பகிர்ந்தார்கள். அப்போது ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இனியும் இவர்களால் லஞ்சம் கேட்க முடியுமா? அப்படி கேட்டால் பாம்பு போல இன்னும் நிறைய தர விவசாயிகள் ரெடி...
நன்றி: புதியதலைமுறை

இன்றைய பொன்மொழி:
பசு மாடு கறுப்புன்னா பாலும் கறுப்பா இருக்குமா?

இன்றைய விடுகதை:
யாரும் இறங்காத கிணற்றிலே
அரிச்சந்திரன் இயங்குகிறான். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: சிலந்திவலை
மேலும் வாசிக்க... "லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு"



அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?

        நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான மற்றும் வேதனையான செய்தி சொல்லப் போறேன். பர்ஸ்ட் மகிழ்ச்சி செய்தியை சொல்லிறேன். விலைவாசி கண்டமேனிக்கு ஏறிப் போச்சு என்னையா மகிழ்ச்சியான செய்தின்னு கேட்க்கறிங்களா? உண்மையிலே மகிழ்ச்சி தான்... 
       ஆமா மறுபடியும் பெட்ரோல் விலை குறையப் போகுதாம். சர்வதேச அளவுல கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கி இருக்றதுனால நம்ம நாட்டு பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை கொஞ்சம் குறைக்கலாம்னு முடிவு செய்திருக்காங்க. போன வருஷம் மதிய அரசு கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுப்பாட்டை நீக்கி பெட்ரோலிய நிறுவனங்களின் கையில் ஒப்படைத்தது. அது முதல் பெட்ரோல் விலை கிடு கிடுவென உயர்ந்து. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுமார் 74 ரூபாய் வரை அதிகரித்ததே வரலாற்று சாதனையாக இருந்தது. அந்த விலையில் இருந்து இரண்டு ரூபாய் குறைத்து வயிற்றில் பாலை (பெட்ரோலை) வார்த்தனர். இந்நிலையில் மேலும் விலையை குறைக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
        அப்படி எவ்வளவு ரூபாய் குறைக்க போறாங்கன்னு தெரியுமா? வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. அந்த ஒரு ரூபாயில் நாம ஒரு கிலோ மீட்டர் கூட அதிகமா போக முடியாது. என்னத்த கொறச்சு?, நாம இப்படியே அவங்க தர்ற அல்வாவுக்கு வாயை தொறந்துகிட்டே இருக்க வேண்டியது தான். ஒரு சொட்டு நெய் கூட நம்ம வாயில விழாது. அப்புறம் இப்படி விலையை குறைச்சா ஒரு சாதனையாம். ஆமாங்க கடந்த 2009ம் ஆண்டு இப்படி அடுத்தடுத்து ரெண்டு முறை விலையை குறைச்சாங்களாம். அந்த சாதனையை இந்த வருஷம் சமன் செய்ய போறாங்களாம். எப்படியெல்லாம் சாதனை செயறாங்கப்பா, முடியல...

இப்போ வேதனையான செய்தி:


  மின்சார கட்டணம் கூட போகுதுன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்களே அதோட சேர்ந்து சின்ன பூச்சாண்டியும் காட்ட போறாங்க.  அதாவது ஏற்கனவே மின்சார வாரியம் மின்சார பயனீட்டு அளவுக்கு ரேட்டை உயர்த்தி ஒரு மாதிரியை மக்கள் மத்தியில் சர்வே மாதிரி பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்கள்ல. அந்த ரேட்டே இப்போ இருக்கிற அளவை விட ரெண்டு மடங்கு அதிகமா ஒரு யூனிட்க்கு அதிகமாயிருச்சு. அதே போல கொறஞ்சபட்ச மாதாந்திர கட்டணமும் ரெண்டு மடங்கா அதிகரிக்க போறாங்களாம். அதாவது நாப்பது ரூபாயில் இருந்து, நூத்திபத்து ரூபாயாக ஏத்த போறாங்க.
         அது என்னான்னா நாம கரண்ட் யூஸ் பண்ணினாலும் இல்லைனாலும், மினிமம் அமௌன்ட் மாசா மாசம் கட்டனுமாம். அந்த அமௌன்ட்டும் அதிகமாயிருச்சு. இப்போ சொல்லுங்க ஒரு நாளைக்கு அஞ்சாறு மணிநேரம் கரண்ட் இருக்கிறது இல்லை. இப்போ ரேட்டும் அதிகமாயிருச்சுன்னா நாம கரன்ட்டை சிக்கனமா பயன்படுத்தறோம்னு சொல்லி ஆதிகாலத்துக்கு போகாம இருந்தா சரி தான்...

இன்றைய பொன்மொழி:
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே!

இன்றைய விடுகதை:
செடியில் விளையாத பஞ்சு
தறியில் நூற்காத நூல்
கையில் தொடாத துணி. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: குடம்
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0



மேலும் வாசிக்க... "அரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்? ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா?"



பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க...


     அந்த காலத்தில் இந்தியா எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த பழைய  புகைப்படங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். 















நன்றி: கூகிள் சர்ச்  
நண்பர்களே, 

மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள் 

இந்த இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை நிலக்கடலை.


டிஸ்கி:  பொன்மொழிகள், விடுகதைகள் வழக்கம் போல அடுத்த இடுகை முதல் வெளி வரும்.


மேலும் வாசிக்க... "பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க..."



பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா? அண்ணா ஹசாரே

     
     ஊழலை ஒழிக்க வலுவான மக்கள் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் வருகின்ற 30-ம் தேதிக்குள் நிறைவேற்றக்கோரி பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசாரே மீண்டும் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார். அதேசமயத்தில் இந்த பிரச்சினையில் நீக்கப்போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், அனைத்து தரப்பினர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும் தயார் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.  இந்தநிலையில் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரே,தன்னுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறினார். பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மத்திய அரசும் அறிவித்திருந்தாலும் இது தொடர்பாக எங்களுடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் எங்கே, எப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, இதில் யார் யார் கலந்துகொள்வது தொடர்பாக மத்திய அரசு சார்பாக யாரும் எங்களுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார். மக்கள் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தரக்கோரி எம்.பி.க்கள் வீடுகள் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஹசாரே கேட்டுக்கொண்டார்.
       இதற்கிடையில் அண்ணாஹசாரே உடல்நிலையில் மத்திய அரசு அக்கறை கொள்வதாக தெரியவில்லை என்று ஹசாரேயின் ஆதரவாளர்களில் ஒருவரான கிரண்பேடி கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். மக்கள் லோக்பால் மசோதாவுக்கு தீர்வுகாணுவதில் மத்திய காலம் தாழ்த்தி வருகிறது. உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் சுகாதார வசதி எதுவும் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என்றும் கிரண்பேடி கூறினார். அண்ணா ஹசாரேயின் இந்த உண்ணாவிரத போராட்டத்தால் நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்தில் மழைவெள்ளம் தேங்கி கிடப்பதாகவும் சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன என்றும் கிரண்பேடி கூறினார். 
             அண்ணா ஹசாரேயுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துமா? அப்படி நடத்தினால் அரசின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

அண்மைய தகவல்: 
பேச்சு வார்த்தைக்கு பிரதமர் அவர்கள் சம்மதம் தெரிவித்ததாக தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டு உள்ளது.
மேலும் வாசிக்க... "பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா? அண்ணா ஹசாரே"



இந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்?!

            உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப நல்லது. நோயை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவே தான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வது தான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?

  • 2 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை பல் பரிசோதனை.
  • 3 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை.
  • 18 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.
  • 18 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.
  • 30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை.
  • 30 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.
  • 40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.
  • 50 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோதனை.
  • 50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு. கருப்பை புற்றுநோய் பரிசோதனை.

எனவே நண்பர்களே, உங்கள் வயதுக்கேற்ற உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக நல்லது.

இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் பற்றியும் தெரிஞ்சுக்கலாம்:

  • கொலஸ்ட்ரால் நமது இரத்தத்தின் ஒரு முக்கியமான பகுதி மேலும் நமது உடலுக்குள்ளேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாகும் போது தீங்கு விளைவிக்க கூடும்.
  • உங்கள் உடம்பில் மொத்த கொலஸ்டிரால் எவளவு உள்ளது என்பதையும் அது உங்கள் உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். அதிக அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் அதிக அளவிலும், குறை அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் குறைந்த அளவிலும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • காய்கறிகளில் உள்ள கொழுப்புகளில் கொலஸ்டிரால் எப்போதும் இருப்பது இல்லை.
  • பல நிலை பூரிதக் கொழுப்பு, ஒரு நிலை பூரிதக் கொழுப்புகளும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கின்றன.

   நமது ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் வாசிக்க... "இந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்?!"



சுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வரையிலான படங்கள்

முதல் சுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வரையிலான முக்கிய படங்களின் தொகுப்பு
Capture of Bahadur Shah Zafar and his sons by William Hodson at Humayun's tomb on 20 September 1857.
The hanging of two participants in the Indian Rebellion of 1857. Albumen silver print by Felice Beato, 1858.
Forced disarmament of cavalry of Berhampore.
British soldiers looting Qaisar Bagh, Lucknow, after its recapture (steel engraving, late 1850s).
Secundra Bagh after the slaughter of 2,000 Rebels by the 93rd Highlanders and 4th Punjab Regiment. Albumen silver print by Felice Beato, 1858.
Blowing from Guns in British India (1884) by Vasily Vereshchagin.
Gandhi in 1918, at the time of the Kheda and Champaran satyagrahas
The Jallianwala Bagh couple of months after the April 1919 massacre which killed about 1,526 people.
Gandhi on the Salt March.
Gandhi at Dandi, April 5, 1930.
Indian freedom fighter Bhagat Singh, at the age of 21 in jail.
Procession view at Bangalore.
Netaji Subhas Chandra Bose in INA Uniform 1943 August 15. 
Cabinet members of the Provisional Government of Azad Hind, 1943:
1st Row (L to R): Lt Col Chatterjee, Lt Col J K Bhonsle, Dr Lakshmi Swaminadhan, Subhas Chandra Bose, A. M. Sahay and S A Ayer
2nd Row (L to R): Lt Col Gulzara Singh, Lt Col Shah Nawaz Khan, Lt Col Aziz Ahmed, Lt Col M Z Kiani, Lt Col N S Bhagat, Lt Col Ehsan Qadir, Lt Col Loganathan.
An old Sikh man carrying his wife. Over 10 million people were uprooted from their homeland and travelled on foot, bullock carts and trains to their promised new home.
Midnight of August 14, 1947 Jawaharlal Nehru Claiming Independence from British
நன்றி: கூகிள் தேடல்.
மேலும் வாசிக்க... "சுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வரையிலான படங்கள்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1