CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

வணக்கம் வலை நண்பர்களே,

தினமலர் ஆன்லைன் செய்திகளை படிக்காமல் நாம் ஒரு நாளும் இருந்தது இல்லை. செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்வது, முதல்பக்க செய்தி, அரசியல் செய்தி என எல்லா வகை செய்திகளையும் முந்தித் தருகிறது. ஒவ்வொரு செய்திகளுக்கு கீழும் வாசகர்களின் கருத்தை தெரிவிக்க வசதியும் உள்ளது.  
 
அங்கு வாசகர்களின் கருத்தை யாராவது வாசித்து இருகிங்களா? சண்டை, கிண்டல், போட்டிக் கருத்து, ஒரு பக்க சாரர் கருத்து என முகநூலை விட கருத்துக்கள் பயங்கரமா இருக்கும். அதிலும், செய்தியில் குறிப்பிட்டுள்ள நபர் அந்த கருத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை எனில், எதிர் கருத்து போட்டு அந்த நபரை துவைத்து எடுத்து விடுவார்கள். உதாரணத்திற்கு இன்று இளையராஜா பேட்டி பகிர்ந்திருந்தார்கள். அந்த பேட்டியில் இளையராஜா தனது கருத்தை எதார்த்தமாக (எனக்கு தெரிஞ்சு) சொல்லி இருந்தார். அவரது பேட்டிக்கு, வாசகர்கள் பகிர்ந்த கருத்தை கீழே பகிர்ந்துள்ளேன் பாருங்கள்.


வாசகர்கள் கருத்து:
1. இசைராஜா சார் இதுமாதிரி பேசுவதை விட்டுவிட்டு ஆஸ்கார் வாங்க வழிய பாருங்க சார் உலகம் உங்க பின்னாடி வரும் சார் . 

2. இவர் ஏன் பொலம்பிட்டே இருக்காரு 

3. தன்னை பற்றியே பெருமை பீத்தி கொள்ள இவரையும், இவர் மவனையும் தவிர யாருமே இருக்க முடியாது,, ஒரு படத்துக்கு 3 நாள்னு சொல்றிங்க,, அப்பா 750 படத்துக்கு ஒரு 6 முதல் 7 வருஷம் தானே ஆகும்,, அனால் நீங்க திரைத்துறையின் 40 வருசத்துக்கு மேல இருந்து இருப்பிங்க போல,,, மீதி 33 வருசமா பிளான் பண்ணி இருப்பிங்களே,, எப்படி மியூசிக் போடலாம்னு,,, பலே பலே ராஜா ராஜா தான்,, 

4. அப்படியே அந்த படத்துல போட்ட மூணு பாட்டு பத்தியும் பேசியிருக்கலாம், ஒண்ணு போனிஎம் காப்பி, இன்னொன்னு இங்க்லீஷ் ஆல்பம் இன்ஸ்பிரசன், மூணாவது பிரபலமான இந்தி பாட்டோட இன்ஸ்பிரேசன், கேட்டா தயாரிப்பாளார் சொன்னாரு, தட்ட முடியல, ஏன்னா நான் அப்ப வளர்ந்து வந்த மியூசிக் டைரக்டர் ஒரு சப்பை கட்டு வேற, இந்த லட்சணத்துல மத்தவங்களுக்கு சவால் ஒரு கேடு.

5. இப்படி பேசி பேசி தான் இந்த ஆளு வீணா போனது. சந்தானம் காமெடி இவருக்கு கரெக்டா இருக்கும். "இராணுவத்துல அழிஞ்சவன விட, ஆணவத்துல அழிஞ்சவன் அதிகம்." 

6. நீங்கள் தான் இசை கடவுள் என்று உலகம் ஒத்துகொண்ட பிறகும் இந்த பெருமை தேவை தான??? நீங்கள் அப்பொழுது அடக்கமாக இருந்துவிட்டு இபொழுது ஏன் இந்த சவால்?ஆஸ்கார் உறுத்துகிறதோ?? 

சிலரின் கருத்துகளை மேலே பகிர்ந்துள்ளேன். அதில் பலரும் அவருக்கு தலைக்கனம், பெருமை பீத்தல், ஆஸ்கார் ஆசை என சொல்லி இருந்தார்கள். இவர்கள் இப்படி சொல்ல இளையராஜா என்ன பேட்டி அளித்தார்? 
இதோ கீழே:

"நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில் நடப்பது, ஷாப்பிங் பண்ணுவது, டால்பின் ஷோ பார்ப்பது, இப்படி அந்த காட்சிகள் இருக்கும். இதற்கு பத்து நிமிடம் தொடர்ந்து பின்னணி இசை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் அது தனித்தனியாக இருக்க வேண்டும். அதற்கு நான் ஒரு மணி நேரத்தில் இசை அமைத்தேன். இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் ஏன் உலகதில் உள்ள எந்த இசை அமைப்பாளரிடமும் இந்தக் காட்சியை கொடுங்கள் குறைந்தது ஒரு மாதம், இரண்டு மாதம் எடுத்துக் கொள்வார்கள். நான் எந்தப் படத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் இசை அமைத்தது இல்லை. 750 படங்களுக்கு இசையை அப்படித்தான் அமைத்திருக்கிறேன்.

இப்போது இசைக்குள் கம்ப்யூட்டர் வந்து விட்டது. கம்யூட்ரைக் கொண்டு புத்திசாலித்தனமாக அமைக்கப்படும் இசை மூளைக்குத்தான் செல்லுமே தவிர மனசுக்குள் தங்காது. இசை அமைப்பின் வேலைகளை கம்ப்யூட்டர் செய்து விடுவதால் இசை அமைப்பாளர்கள் சோர்ந்து விடுகிறார்கள். அன்று நான் அரை மணிநேரத்தில் நோட்ஸ் எழுதி இரண்டு மணிநேரத்தில் ரெக்கார்ட் செய்த பாடலை இன்று ரீகிரியேட் செய்ய இரண்டு நாட்கள் ஆகிறது. இப்போதுள்ளவர்கள் இது எப்படி அன்று உங்களால் செய்ய முடிந்தது என்று ஆச்சர்யப்படுகிறார்கள். அதுவாக வந்தது, நான் உங்களுக்குத் தந்தேன். இது இறைவன் தந்தது வேறென்ன சொல்ல என்றார்.

தினமலரில் வாசிக்க:

இந்த தலைப்பு கூட வாசகர்கள் எதிர் கருத்துக்களை பகிர காரணமாகவும் இருக்கலாம்.

தினமலர் வாசிப்பவர்கள் வாசகர்களின் கருத்துகளையும் வாசித்து பாருங்கள். நம் ஆட்கள் எந்தளவுக்கு கீழிறங்கி, மட்டரகமாக தங்கள் கருத்தை சொல்கிறார்கள் என தெரியும்...


14 கருத்துரைகள்:

ராஜி said... Best Blogger Tips

எழுத இடம் கிடைச்சா அதுவு அடுத்தவரை பற்றி கருத்துரைக்க நம்ம ஆட்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா விடுவாங்களா?! அதான் புகுந்து விளையாடி இருக்காங்க!!

Unknown said... Best Blogger Tips

வயசான பெரிய மனுசங்களுக்கு வெலைஇல்லைனா இப்படித்தான் பேச ஆரம்பித்து இருக்கிற மரியாதையையும் கெடுத்துக் கொள்கிறார்கள் !

டிபிஆர்.ஜோசப் said... Best Blogger Tips

அவர் இப்படியெல்லாம் பேசுனா ஏன் நக்கல் பண்ண மாட்டாங்க?

நிறைகுடம் தளும்பாதுன்னு சொல்வாங்களே அப்போ இவர் அது இல்லையான்னும் கேக்க தோனுது.

தனிமரம் said... Best Blogger Tips

நம்மவர்களுக்கு எப்போதும் நம்மவர்கள் இளக்காரமாகத்தான் தெரியும் !

Manimaran said... Best Blogger Tips


தினமலர்ல ஒரு காலத்தில நானும் இப்படி கருத்து போட்டு சண்டை போட்டுருக்கேன்.. ஆனா அவர்கள் நேர்மையான கருத்துகளை அனுமதிக்க மாட்டார்கள்... கலைஞரை நாராச பாணியில் யார் திட்டினாலும் அந்த கமென்ட் அனுமதிக்கப்படும். அதுவே ஜெயவைப்பற்றி ஏதாவது சொன்னால் அந்த கமென்ட் வராது. அதேபோல ஒரு குறிப்பிட்ட நபர்களின் கமெண்டை மட்டும் தொடர்ந்து அனுமதிப்பார்கள். சிங்கப்பூரில் அம்மாவின் அதி தீவிர சொம்பு ஒன்னு இருக்கு. கலைஞர் எந்த அறிக்கை விட்டாலும் அடுத்த செகண்டே கலைஞரை திட்டி கமெண்டு போட்டுடும்... அதைத்தான் உடனே தினமலர் வெளியிடும்... இந்த கொடுமைக்காகவே அதுல கமென்ட் போடுறதில்ல.

Manimaran said... Best Blogger Tips

இளையராஜா சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. அவர் கோலேச்சியிருந்த பதினைத்து வருடத்தில் எவ்வளவு அருமையான பாடல்கள் வந்ததன...! இப்போ வருகிற பாடல்கள் எப்படி இருக்கிறது.? முதல் மரியாதை படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல்களையும் கம்போஸ் செய்தாராம்... இப்படி ஒரு திறமை இந்தியாவில் யாருக்கு இருக்கிறது...? ஒரு பாட்டு போடுறதுக்கு மூணு மாசம்,,,அதுவும் வெளிநாட்டில்... கடைசில பாத்தா அது எதோ ஒரு வெஸ்டர்ன் பாடலை காப்பியடிச்சி எடுத்திருபானுவ...

இசைஞானியை வெல்ல இன்னொருத்தன் பொறந்து வரணும்..

செங்கோவி said... Best Blogger Tips

அவர் ஓவராகப் பேசுகிறார் என்பதற்காக, அவர் ஒரு மேதை என்பது இல்லாமல் போய்விடாது

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Manimaran
அதேபோல ஒரு குறிப்பிட்ட நபர்களின் கமெண்டை மட்டும் தொடர்ந்து அனுமதிப்பார்கள்.///

நான் சில சமயம் தினமலருக்கு எதிராக கருத்து சொல்லியிருக்கேன்.. ஆனா அவர்கள் வெளியிட்டது கிடையாது...
மேலும், ப்ரோபைல் பக்கத்தில் என் கருத்து வெளியிட்டது போல காட்டும். ஆனால் அந்த செய்தி லிங்கில் பார்த்தால் யாருடைய கருத்தும் காட்டாமல், தங்களின் முதல் கருத்தை பதிவு செய்யுங்கள் என்றே இருக்கும்...

வெற்றிவேல் said... Best Blogger Tips

அவரோட திறமை மேல அவருக்கு நம்பிக்கை...

குட்டன்ஜி said... Best Blogger Tips

அவரின் பேச்சு அகங்காரமாகப் படலாம்.அது வித்தையில் பிறந்த அகங்காரம்

Avargal Unmaigal said... Best Blogger Tips

தினமலரில் வரும் பாதிக்கும் மேல் உள்ள கமெண்டுக்கள் அங்கு பணி புரிபவர்களே பல் போலி ஐடி உருவாக்கி கருத்துகள் பறிமாறிக் கொள்வார்கள். அதை நிஜம் என்று நீங்களும் நம்பிவீட்டீர்களா என்ன

வெங்கட் நாகராஜ் said... Best Blogger Tips

தினமணி படித்தாலும் கீழுள்ள கருத்துகளை பெரும்பாலும் படிப்பதில்லை....

Anonymous said... Best Blogger Tips

வீண் கருத்தாடல்கள் கருத்துப் போடுவோருக்குத் தான் மன உளச்சல் தரும். பேஸ்புக்கில் இது தான் நடக்கின்றது. நியாயமான நாகரிகமான விவாதங்கள், கருத்துப் பகிர்வுகள் நல்லது. தேநீர்க் கடை பெஞ்சுக் கதைப் போல கண்டபடி திட்டுவதால் சம்பந்தபட்ட பிரபலம் திருந்தவாப் போறாங்கள், கண்டுக்கத் தான் போறாங்களா? ம்ம்ம். வீணே !

சேலம் தேவா said... Best Blogger Tips

வாவ்..தினமலர் கூட படிக்கிறீங்களா..?! :)

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1