வணக்கம் வலை நண்பர்களே,
கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும் சென்னையில் பதிவர் சந்திப்பு, திருவிழாவாக வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் அரங்கத்தில் நடந்தது. இவ் விழாவிற்காக உழைத்த பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அழைப்பு:
கடந்த வருடம் போலவே இந்த வருடமும் பொது அழைப்பு விடுத்ததை வைத்தே பதிவர்கள் கலந்து கொண்டார்கள். ஞாயிறு பலருக்கு விடுமுறையாக இருந்தாலும், என்னைப் போல வேலைக்கு விடுமுறை சொல்லி விட்டு வந்தவர்களும் ஏராளம். அவர்கள், இணையத்தில் நட்பாய் இருப்பவர்களையும், நன்றாக பதிவு எழுதக் கூடியவர்களையும் பார்த்து பேசி, உணர்வை வெளிப்படுத்தவே வந்திருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பதிவர் சந்திப்பு முடிந்து பலரும் பதிவுகள் எழுதி வரும் நிலையில், சந்திப்பு விமர்சனம் என்ற திசையில் பயணம் செய்ததால், என் தரப்பு விமர்சனத்தையும் இங்கே பகிர்கிறேன்.
இந்த பதிவில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு இந்த பதிவில் பதில் இருக்கும் என்றே நினைகின்றேன்...
1. விழா அரங்கம், விழா குழு, மதிய உணவு:
இந்த வருடம் குறைந்த வாடகைக்கு மண்டபம் தேர்வு செய்திருந்தார்கள். அதற்கு காரணம் கடந்த ஆண்டு மண்டப செலவு சற்று அதிகம். அந்த செலவை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என கடந்த வருட பதிவர் சந்திப்பு பற்றிய ஒருவரது பதிவில் ஒரு நண்பர் கேட்டிருந்தார் ( எந்த பதிவு, கருதிட்டது யார் என நியாபகம் இல்லை). அதற்கேற்ப இந்த வருடம் விழா குழுவினர் இடத்தை தேர்வு செய்துள்ளார்கள்.
இது பற்றி மெட்ராஸ்பவன் சிவாவிடம் பேசிய போது மேற்கண்ட தகவலை சொல்லி மண்டபம் தேர்வு செய்த காரணத்தை சொன்னார்.
விழா மேடை நமது நிகழ்ச்சிக்கு போதுமானதாகவே இருந்தது. யாருக்கும் இட நெருக்கடியாக இருந்ததாக தெரியவில்லை.
ஆனால் போதுமான காற்று வசதி இருந்தும் ஆஸ்படாஸ் கூரை இருந்ததால் அரங்கம் வெக்கையாக இருந்தது.ஆனாலும் பதிவர்கள் இருக்கைகளில் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
விழா குழுவினர் ஆங்காங்கே பிரிந்து சிறு சிறு குழுவாக இருந்ததால் வந்திருந்தவர்களின் தேவையை அறிந்து உதவிகள் செய்ய முடிந்தது. செல்வின், ஆரூர் மூனா ஒவ்வொருவருக்கும் குடிதண்ணீர் பிடித்து கொடுத்தார்கள். சிவா, ஸ்கூல்பையன் மற்றும் சிலர் மேடைக்கு அருகில் இருந்து மேடை நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுத்தார்கள். KRP. செந்தில், சீனு மேடை பக்கவாட்டில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
உணவு பப்பே முறை என்பதால் அமர்ந்து சாப்பிட இடம் ஒதுக்கவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் சிலர் அரங்கத்தில் இருந்த சேர்களை எடுத்து அமர்ந்து பிரியாணியை வெட்டினார்கள். நானும் கவிதவீதி சௌந்தரும் இருமுறை பிரியாணி, கத்தரிக்காய் சைட்டிஷ் என கேட்டு வாங்கி சாப்பிட முடிந்தது. அதில்லாம, நானும் சௌந்தரும் ரெண்டு ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டோம். நக்ஸ் ஐஸ்கிரீம் டப்பா பின்னாடியே அலஞ்சுச்சுட்டு இருந்தார். இப்படி உணவு முறை இருந்ததாலோ என்னவோ என்னால் பெரும்பாலான புகைப்படங்கள் எடுக்க முடிந்தது. திரு. பாமரன், கிராமத்துக் காக்கை பதிவர் என அறிமுகம் கிடைத்தது.
2. வரவேற்பு:
பதிவர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்று, அவர்களுடைய குறிப்புகள் எழுதி வாங்கி, அடையாள அட்டை போட்டு கொடுத்தார்கள் இளைய பதிவர்கள்.இந்த வேலைக்கு சீனு, ரூபக்ராம் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் உதவி செய்ததாக கேள்விப்பட்டேன். உண்மையா சீனு?
புலவர் ஐயா, கவியாழி, சசிகலா அக்கா, மதுமதி, மற்றும் விழா குழுவினர், நான், திண்டுக்கல் தனபாலன், மதுரை சரவணன், சதீஷ் செல்லத்துரை, கோவை நண்பர்கள்(இன்னும் சிலர் பெயர் நியாபகம் வரவில்லை) என முதலில் வந்த அனைவரும் பதிவர்களை வரவேற்று அரங்கத்தினுள் அமர வைக்கப்பட்டார்கள். இதனால் மண்டபம் வெளியே நிறைய பதிவர்கள் இருப்பது போல தெரிந்தது.
3. பதிவர் அறிமுகம்:
ஒவ்வொரு பதிவர் சந்திப்பின் போதும் இந்நிகழ்ச்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் தான் புதிய பதிவர்களை அடையாளம் காண முடியும். இரண்டு வருடத்திற்கு முன் ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடந்த போது, நிகழ்ச்சியின் இறுதியில், பதிவர்கள் மேடையேறி தங்களை அறிமுகம் செய்யலாம் எனச் சொல்லி விழா குழுவினர் உணவருந்த சென்றுவிட்டார்கள். நான், தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், வீடு சுரேஷ், இன்னும் நிறைய பதிவர்கள் விழாக் குழுவினர் இல்லாமலே தாங்களாகவே அறிமுகம் செய்துக் கொள்ள நேரிட்டது. இக் குறையை தவிர்க்கவே அதன் பின்னர் நடந்த சென்னை பதிவர் சந்திப்பில் பதிவர் அறிமுகம் விழா ஆரம்பத்திலேயே இருக்க வேண்டும், அதுவும் வருகை தந்த அடிப்படையில் அவர்கள் பெயர் வாசித்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையில் பதிவர்கள் அறிமுகம் நடந்தது மிக அருமை.
கடந்த வருடம் சிபி, கேபிள், சங்கவி, ஜாக்கி சேகர் போன்றோர் பதிவர்கள் பெயர்களை வாசித்து, அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி பதிவர்களை அறிமுகம் செய்ய அழைத்தார்கள். இது சிலரால் வரவேற்கப்பட்டது. சிலரால் விமர்சனமும் செய்யப்பட்டது. அதனாலேயே இந்த வருடம் பதிவர்கள் பெயரை மட்டும் சொல்லி, பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்ய அழைக்கப்பட்டார்கள்.
4. சிறப்புரை, தனித்திறமை நிகழ்ச்சிகள்:
பதிவர்கள் அறிமுகம் முடிந்ததும், சிறப்பு விருந்தினர் திரு. பாமரன் அவர்கள் பேசினார்கள். சிறப்புரையாக எழுத்தாளர் பாமரன் பேச்சு மிக அருமை. இடையில் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டாலும், யாரும் விழாவை புறக்கணித்து செல்லவில்லை.
சில முக்கிய பதிவர்கள் சிறப்புரை ஆற்றி இருக்கலாம். நல்ல யோசனை தான். தொழிநுட்ப பதிவர்கள் பேசியிருக்கலாம். சரியான யோசனை தான். ஆனால் விழாவில் ஒரு பதிவர், "ஏண்டா பிளாக் அடிப்படை பற்றி தொடர்னு வெட்டியா எழுதிட்டு இருக்க, நான் படிக்கவே மாட்டேன்னு சொன்னார்". அவர் படிச்சிருந்தா பறவையை கொன்று தூக்கி எறிஞ்சிருக்கலாம். அதே நேரத்தில் பல தெரியாத பதிவர்கள் அந்த தொடர் பற்றி பெருமையாக பேசினார்கள். இப்படிப் பட்ட நிலையில் மேடையில் தொழில்நுட்பம் பற்றி பேசினால் எத்தனை பேருக்கு புரியும்?
இன்னும் சிலர் எவ்வளவு எளிதாக ப்ளாக் பற்றி பதிவுகள் எழுதினாலும், அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீயே பார்த்துக் கொள் என அவர்களது பிளாக் கணக்கையே, முகம் பார்த்திராத என்னை நம்பி தந்திருக்கிறார்கள். அட, பதிவர் சந்திப்பிலேயே ஒரு பெண் பதிவர் அவரது பிளாக்கை சீர் படுத்தி தருமாறு சொன்னார். நம்ம உண்மைத்தமிழனும் ஒரு பிரச்னையை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். இப்படி தங்களுக்கு பிரச்சனை எனில் சம்பந்தப்பட்ட பதிவர்களை நாடி பிரச்சனை பற்றி சொன்னாலே தீர்வு கிடைத்து விடும். அதற்கு தனியாக தொழில்நுட்ப பதிவரின் மேடை பேச்சு அவசியம் சூழ்நிலையைப் பொறுத்தது என தோன்றுகிறது.
மதிய உணவுக்கு பின் பதிவர்களின் தனித்திறமை மேடையேறியது. மயிலனின் பக்கோடா கவிதை அருமை. நானும் சௌந்தரும் அருகருகே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தோம். சௌந்தர் எதையோ வாசிக்க வேண்டும் என சொன்னார். ஆனால் வாசிக்க வேண்டாமென்றும் சொன்னார். ஒரு வேளை முதலாம் சந்திப்பு போல, ஏதேனும் தலைப்பு கொடுத்திருந்தால் (கவியரங்கம், குறுங்கதை, காமெடி என பிரித்து) நிறைய பதிவர்கள் மேடையேறி இருப்பார்களோ என்னவோ? (தனித்திறமை என்பதும் ஒரு தலைப்பு தான் என்கிறீர்களா?)
ஸ்பீக்கர் சவுன்ட் கொஞ்சம் அதிகமா இருந்ததால் எக்கோ அடித்தது போல இருந்தது. நலம்விரும்பிகள் யாராவது விழா குழுவினரிடம் சொல்லியோ, ஆடியோ அமைப்பாளரிடம் சொல்லியோ சரி செய்திருக்கலாம். ஏனோ (நான் உட்பட) யாரும் அதற்கு முயற்சித்தது போல தெரியவில்லை.
மதுமதியின் குறும்படம் அருமை. அது பற்றிய விமர்சனம் தனிப் பதிவாகவே
போட்டுள்ளேன்.
திரு. கண்மணி குணசேகரன் பேச்சு அனைவரையும் கவர்ந்தாலும், சிலருக்கு ஓவர் டோஸ் ஆக அமைந்தது. அவரது பேச்சை என் மொபைலில் ரெகார்ட் செய்திருந்தேன். ஆனால் ஸ்பீக்கர் சத்தத்தால் தெளிவாக இல்லை. ஆனாலும், சமூகத்தில் உள்ள எதார்த்தத்தை கதையாக எழுத திறமை வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
நினைவுப்பரிசு, புத்தக வெளியீடு:
சிறப்பு பேச்சாளர் பேசி முடித்ததும், விழாவிற்கு உழைத்த குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அந்த சமயம் நான் சௌந்தருடன் தண்ணீர் பாட்டில் வாங்கவும், ATM-இல் பணம் எடுக்க வெளியே சென்றதால் என்னால் நினைவுப்பரிசு வாங்க இயலவில்லை. புத்தக வெளியீட்டிற்கு பின் என்னையும், வீடு சுரேஷ்குமாரையும் அழைத்து கொடுத்தார்கள்.
புத்தக வெளியீடு நிகழ்ச்சி சற்று நீளமாக தெரிய நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டதே காரணமாக இருக்கலாம். சுரேகா புத்தக வெளியீடும் திடீரென சேர்ந்தது. புத்தகத்தை பற்றி சில வார்த்தைகள் புத்தக வெளியீட்டாளர்கள், ஏற்புரையாக புத்தக எழுத்தாளர்கள் பேசினார்கள். இவர்களின் பேச்சு அடுத்த பதிவர் சந்திப்பில் புத்தகம் வெளியிட, சில பதிவர்களுக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
சந்திப்பு அரங்கிற்கு வெளியே வேடியப்பனின் புத்தக கண்காட்சியும், பதிவர்களின் புத்தக கண்காட்சியும் வைத்திருந்தார்கள். சீனு நடத்திய காதல் கடிதம் போட்டிக்கான பரிசுகளை சீனு வெற்றியாளருக்கு வழங்கினார்.
ஏமாற்றம்:
அடுத்த பதிவர் சந்திப்பு மதுரையில் தான் நடத்துவோம் என ஒரு மாசத்திற்கு முன்பே முகநூலில் பகிர்ந்திருந்தேன். ஆனாலும், பதிவர் சந்திப்பின் போது சென்னை நண்பர்கள் அடுத்த வருடம் மதுரையில் தானே என கேட்க, நானும் சிலரிடம் பேசிவிட்டு அடுத்த சந்திப்பு மதுரையில் தான் என சொன்னேன்.
பதிவர் சந்திப்பு நடத்துவது அவ்வளவு ஈஸி இல்லை என்றும் சொன்னார்கள். உண்மை தான் மதுரையில் சென்னை அளவுக்கு விழா குழுவில் பங்கு கொள்ள ஆட்கள் இல்லை. ஆனாலும் நாங்களும் முயற்சித்து பார்கிறோமே, இன்னும் நாட்கள் இருக்கிறதே என்றேன். விழா முடிகிற நேரத்தில் மதுரையில் அடுத்த பதிவர் சந்திப்பு நடக்க இருப்பதாக அறிவிக்க போகிறார்கள் என்று நாங்கள் (விழாக் குழு உட்பட) நினைத்திருந்த வேளையில் அறிவிப்பாளர் சுரேகாவிடமிருந்து அடுத்த பதிவர் சந்திப்பு ஈரோடில் என அறிவிப்பு வெளியானது. என்னுடன் சேர்ந்து, தனபாலன், ரமணி, சிவகாசிக்காரன், மற்றும் விழா ஏற்பாடு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். எப்படி இவ்வாறு அறிவிப்பு வந்தது?
அடுத்த சந்திப்பிற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில் இந்த விமர்சனத்தை முடிக்கின்றேன்.
22 கருத்துரைகள்:
// விழா முடிகிற நேரத்தில் மதுரையில் அடுத்த பதிவர் சந்திப்பு நடக்க இருப்பதாக அறிவிக்க போகிறார்கள் என்று நாங்கள் (விழாக் குழு உட்பட) நினைத்திருந்த வேளையில் அறிவிப்பாளர் சுரேகாவிடமிருந்து அடுத்த பதிவர் சந்திப்பு ஈரோடில் என அறிவிப்பு வெளியானது. என்னுடன் சேர்ந்து, தனபாலன், ரமணி, சிவகாசிக்காரன், மற்றும் விழா ஏற்பாடு குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். எப்படி இவ்வாறு அறிவிப்பு வந்தது? //
மதுரையை சேர்ந்த 2 பதிவர்கள் எங்களால் நடத்துவது மிக சிரமம் எங்களுக்கு ஆட்கள் குறைவு என்று வால்பையனிடம் கூறியபின் அவர் என்னை அழைத்து சொன்னார் பின் நான் மதுமதி, ஆரூர் முனா, சீனி அவர்களிடம் சொல்லிய பின் தான் மேடையில் உறுதியாக அறிவித்தோம்....
நீங்கள் நடத்துவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை எங்களால் இயன்ற உதவியை செய்வோம்... பட் அடுத்த சந்திப்பு ஈரோட்டில் நடத்துவோம் அது அடுத்த வருடமாக இருக்கலாம். இடையிலும் இருக்கலாம் ஆனால் தமிழ் வலைப்பதிவர்கள் என்ற பெயரில் தான் சந்திப்பு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...
ஒவ்வொரு விளக்கமும் வராதவர்களுக்கு (வெ)விளங்கினால் சரி...
மதுரையா...? ஈரோடா...? இந்தப் போட்டியும் சந்தோசம் தான் சங்கவி அவர்களே...
/// பட் அடுத்த சந்திப்பு ஈரோட்டில் நடத்துவோம்.../// பார்ரா...
மதுரையா?! ஈரோடா?!ன்னு குழப்பமா இருக்கா?! ஐபிஎல் மேட்ச் போல ஏலம விடலாமா!? என் தலமையில்!! ஏலத்தொகையில் 25% கமெசன் எனக்கு!!
@சங்கவி
மதுரையை சேர்ந்த 2 பதிவர்கள் எங்களால் நடத்துவது மிக சிரமம் எங்களுக்கு ஆட்கள் குறைவு என்று வால்பையனிடம் கூறியபின் அவர் என்னை அழைத்து சொன்னார் பின் நான் மதுமதி, ஆரூர் முனா, சீனி அவர்களிடம் சொல்லிய பின் தான் மேடையில் உறுதியாக அறிவித்தோம்..///
அப்படியா? காலை முதலே என்னிடம், தனபாலன், ரமணி ஆகியோரிடம் கேட்டவர்கள் வேறு நண்பர்கள். வாழ் பையன் கேட்கவில்லை...
ஆனால் அந்த இருவரிடம் மட்டும் வால்பையன் கேட்டுவிட்டு முடிவை மேடையில் அறிவித்து விட்டீர்கள்...
இது செந்திலுக்கும் தெரியும்????? அப்படியா செந்தில்????
சரிதான் நண்பர்களே....
நாங்கள் கேட்ட இருவரும் மதுரையின் சீனியர் பதிவர்கள் பிரகாஷ்...
நீங்கள் நடத்துவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை...
நான், வால்பையன், தாமோதர் மூவரும் மேடையிலேயே கோரிக்கை வைச்சோம் பிரகாஷ்...
பட் மதுரையில் இருந்து மேடையில் யாரும் கோரிக்கை வைச்சார்களா என்று நீங்க தான் சொல்லனும்....
madurai yil nadanthal athai munn nindru vazhi nadathupavarkal cheena ayya & pirakash pondravarkale ivarkalidam kettu mudivu solli irukka vendum.
ivarkal 1 month munn iruthe solli kondu iruntharkal. antha status yil ellorum atharavu therivuthu irunthom.
pirakash & cheena ayya maduraiyil nadatha virumbinal 2014 santhippu mathuraiyilum 2015 Erode lim nadathalam.
this is my opinion .
அடுத்த சந்திப்பு பற்றிய போட்டி இப்போதே ஆரம்பித்து விட்டதா ? இதுவும் சுவார்யஸ்மே.
ஜெய்... நடத்ததுட்டும் பாஸ் வேண்டாம் என்று சொல்லவில்லை... நாங்கள் எப்போது வேண்டுமானாலும் நடத்த தயாராக இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள் நிகழ்ச்சி முடியும் போது மேடையிலேயே அடுத்த நடத்துவது மதுரை என்று அறிவிக்கலாமே..
உங்களிடம் கேட்டார்ன்னு தான் சொல்றீங்க...
பதிவோ அல்லது மேடையிலே கேட்டால் ஒகே... நாங்க எப்பவே வேண்டுமானாலும் நடத்த தயார் பாஸ்... கொங்கு மண்டலம் தயாராகவே இருக்கிறது... தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவை நடத்த....
சர்ச்சைகளுக்கு பதில் தந்த பதிவு! சிறப்பு! என் புகைப்படம் பார்த்து மகிழ்ந்தேன்! நன்றி!
மதுரையா? ஈரோட ? ஜெய்க்க போவது யாரு?
பார்க்க,கேட்க முடியாத பல ரகசியங்களையும்?! பகிர்ந்தமைக்கு நன்றி,பிரகாஷ்!பெரு நகரில் சந்திப்புக்கள் நடத்தப்படுவது 'கொஞ்சம்' சுலபம் தான்.சிறு நகரங்களுக்கு போக்குவரத்து,மற்றும் நேர விரயம் நேரத்தை வீணடித்து விடுவதுடன்,செலவு அதிகம்.இதற்கு,சிறு மண்டபங்களை பெரு நகரின் புறத்தில் நடாத்துவது ஏற்கற்பாலதே!///சிலர் அரங்கத்தில் இருந்த சேர்களை எடுத்து அமர்ந்து பிரியாணியை வெட்டினார்கள்.////அப்போ டேபிள் தேவைப்படலியோ?§§§"பிரியாணி" ங்கிறது,பர்த் டே 'கேக்' மாதிரி தானே இருக்கும்?ஹி!ஹி!!ஹீ!!!
என் பெயர் உமாமஹேஸ்வரி .இரண்டு நாள் முன்பு கூட உங்களுடன் நான் போனில் பேசினேன்..எனக்கு ஒரு மொழிபெயர்ப்பு வேலை வந்து விட்டதால் மெயில் அனுப்பவில்லை எனக்கும் பிளாக்கில் பல சந்தேகங்கள் உள்ளது.. பொது நிகழ்ச்சியில் சின்ன சந்தேகங்களை வேண்டுமானால் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே தவிர பிளாக் பற்றிய வகுப்பு எடுக்கமுடியாது..எடுத்தாலும் தெரிந்தவர்களுக்கு போரடிக்கும்..தெரியாதவர்களுக்கு (என் போன்றோர்களுக்கு)தியரி சொல்லி புரியவைப்பது கஷ்டம்,practical ஆக செய்து பார்த்தால்தான் புரியும். இது என் தனிப்பட்ட கருத்து..
பதிவர் சந்திப்பு குறித்த வித்தியாச பதிவு....
தமிழ் வாசி இதற்கு இன்னும் நேரம் இருக்கிறது..மதுரையில் நடத்துவது என்றாலும் மகிழ்ச்சிதான்..நானும் வாலும் சங்கவியும் எங்கள் விருப்பத்தை மேடையிலேயே சொன்னதை வைத்து அறிவித்து விட்டார்கள்.. எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிதான்..அனைவரும் இணைந்திருப்போம்..நீங்கள் நடத்தினாலும் நாங்களும் கூட இருப்போம்..
பாஸ்.. 2015 கோவையில..
பார்க்க,கேட்க முடியாத பல ரகசியங்களையும்?! பகிர்ந்தமைக்கு நன்றி,பிரகாஷ்!பெரு நகரில் சந்திப்புக்கள் நடத்தப்படுவது 'கொஞ்சம்' சுலபம் தான்.சிறு நகரங்களுக்கு போக்குவரத்து,மற்றும் நேர விரயம் நேரத்தை வீணடித்து விடுவதுடன்,செலவு அதிகம்.இதற்கு,சிறு மண்டபங்களை பெரு நகரின் புறத்தில் நடாத்துவது ஏற்கற்பாலதே!///சிலர் அரங்கத்தில் இருந்த சேர்களை எடுத்து அமர்ந்து பிரியாணியை வெட்டினார்கள்.////அப்போ டேபிள் தேவைப்படலியோ?§§§"பிரியாணி" ங்கிறது,பர்த் டே 'கேக்' மாதிரி தானே இருக்கும்?ஹி!ஹி!!ஹீ//யோகா ஐயாவின் பின்னூட்டத்தை மீறி என்னாலும் ஏதும் ஜோசிக்க முடியல பிரகாஸ்§
அருமையான பதிவு.
வாழ்த்துகள் பிரகாஷ்.
@சங்கவி
நான், வால்பையன், தாமோதர் மூவரும் மேடையிலேயே கோரிக்கை வைச்சோம் பிரகாஷ்...
பட் மதுரையில் இருந்து மேடையில் யாரும் கோரிக்கை வைச்சார்களா என்று நீங்க தான் சொல்லனும்.... ////
மேடையில் கோரிக்கை வைக்கவில்லை... ஆனால் விழா குழுவினரிடம் பேசிட்டோமே...
///ஜெய்... நடத்ததுட்டும் பாஸ் வேண்டாம் என்று சொல்லவில்லை... நாங்கள் எப்போது வேண்டுமானாலும் நடத்த தயாராக இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள் நிகழ்ச்சி முடியும் போது மேடையிலேயே அடுத்த நடத்துவது மதுரை என்று அறிவிக்கலாமே../////
அடுத்த சந்திப்பு மதுரை என அறிவிக்க சொன்னேன்... ஆனால், நடந்தது வேறு...
மச்சி, உங்கள் ஊரில் பலமுறை சந்திப்பு நடந்துள்ளது ஆனால் இதுவரை மதுரையில் பதிவர் சந்திப்பு நடந்தது இல்லை.. நடத்துகிறோமே..
////தமிழ் வாசி இதற்கு இன்னும் நேரம் இருக்கிறது..மதுரையில் நடத்துவது என்றாலும் மகிழ்ச்சிதான்..நானும் வாலும் சங்கவியும் எங்கள் விருப்பத்தை மேடையிலேயே சொன்னதை வைத்து அறிவித்து விட்டார்கள்.. எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிதான்..அனைவரும் இணைந்திருப்போம்..நீங்கள் நடத்தினாலும் நாங்களும் கூட இருப்போம்.. ///
மேடையில் நாங்கள் அறிவிக்கவில்லை உண்மை தான்...
உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது தாமோதர் சந்துரு சார்...
2015 கோவையில் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...கோவை தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம்.ஏற்கனவே ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது.
சரியான விமர்சனமும் பதிவும் கூட.வாழ்த்துக்கள்