CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013

வணக்கம் வலை நண்பர்களே,

        2013-ம் வருடம் இறுதி நாட்களை நெருங்கி விட்டது. பல பதிவர்களும் பல டாப் 2013 பதிவுகள் பகிர்ந்து வரும் இவ்வேளையில் தமிழ்வாசியில் இந்த வருடம் எழுதிய பதிவுகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் வாசகர்கள் அதிகம் வாசித்து அதிக பக்கப்பார்வைகள் பெற்ற பத்து பதிவுகளை வரிசையாக தொகுத்துள்ளேன். அவற்றை பார்ப்போமா?

மேலும் வாசிக்க... "வாசகர்கள் விரும்பிய டாப் பத்து பதிவுகள் 2013"



ஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி? வாசி'ஸ் கிச்சன்

        வீட்டில் மட்டும் சமைத்து ருசி பார்த்துக் கொண்டிருந்த நான் இன்று வெளியான இரண்டு முக்கிய சமையல் பதிவுகளால் சற்று ஆடிப்போனேன். ஏனெனில் உப்பு, எண்ணெய், காரம், புளிப்பு, இனிப்பு என எதுவும் சேர்க்காமல் தண்ணீரை சுவையானதாக உடலுக்கு ஆரோக்கியமான, இதமான சுடு தண்ணீராக சமைப்பது எப்படி என பதிவுகள் போட்டு அனைவரின் வீட்டிலும் புதியதொரு சமையல் குறிப்பை ஆடவர்களிடத்தில் அளித்து பெரும் சேவை செய்திருந்தார்கள். அவர்களது சுடு தண்ணீரை வச்சு, சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாயினுள் திணித்து சாப்பிடும் அவித்த முட்டை செய்வது எப்படின்னு உங்களுக்கு இங்க சொல்லப் போறேன்...

மேலும் வாசிக்க... "ஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி? வாசி'ஸ் கிச்சன்"



வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி? Updated!


வணக்கம் வலை நண்பர்களே,
இன்னும் ஆறே நாட்களில் 2014-ம் வருடம் துவங்க உள்ளது. புது வருடத்திற்காக நமது வலைத்தளத்தில் பதிவை வாசிக்க வரும் வாசகர்களுக்கு வாழ்த்து சொல்ல நமக்கெல்லாம் விருப்பம் இருக்கும். ஒரு அனிமேட்டட் படம் மூலம் வாழ்த்து சொன்னால் மிகவும் நல்லா இருக்கும். அதற்காக சில வாழ்த்து படங்கள் இங்கே இணைத்துள்ளேன். இணைப்பதற்கான வழிமுறையும் பகிர்ந்துள்ளேன். அதன்படி உங்கள் வலையில் இணைத்து வாசகர்களுக்கு ஹேப்பி நியு இயர் சொல்லுங்கள்.

மேலும் வாசிக்க... "வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி? Updated!"



மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று!


வணக்கம் வலை நண்பர்களே,
மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் மதுரை சம்பந்தமான செய்திகள் சில தொகுப்பாக எழுதியுள்ளேன். வாசித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

காற்றில் பறக்கும் தலைக்கவசம்:
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய வேண்டும் என்கிற சட்டம் இப்போது அமலில் இருக்கான்னு தெரியல. அப்படியே அமலில் இருந்தாலும் யாரும் தலைகவசம் அணிவதே இல்லை. அவர்களை காவல்துறையும் கண்டுகொள்வது கிடையாது. மதுரையில் கடந்த சில மாதங்களாக எந்த இடத்தில பார்த்தாலும் காவல்துறை இருசக்கர வாகனங்களை பிடித்து ஆவணங்களை சோதனை செய்து, இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கிறார்கள். ஆனால், தலைக்கவசம் அணியாதவர்களை ஒன்றுமே செய்வது இல்லை. அவர்களை விட்டுவிடுகிறார்கள். 

கடந்த மாதம் மதுரையில் இருசக்கர வாகன விபத்துகள் கொஞ்சம் அதிகம் தான். உயிரிழப்பும் அதிகம். இவை பெரும்பாலும் குடி போதையாலும், தலைக்கவசம் இல்லாததாலுமே உயிரிழப்பு ஏற்பட்ட விபத்துக்கள். எனவே காவல்துறை முதலில் தலைகவசம் அணியாதவர்களை பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வைகை:
மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவில், அதற்கடுத்து நினைவுக்கு வருவது வைகை ஆறு. இப்போதெல்லாம் ஆற்றில் கழிவு நீரைத் தவிர தண்ணீர் ஓடுவதென்பது அபூர்வமாகி விட்டது. ஏப்ரல் மாதம் மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டி கள்ளழகர் வைகையில் இறங்கும் நாளில் மட்டும் எப்பாடுபட்டாவது வைகை அனையிலிருக்கும் சொற்ப தண்ணீரை அரசானை மூலம் வர வைத்து விடுவார்கள். அன்று மட்டும் ஆற்றின் அகலத்திற்கு தண்ணீர் ஓடும். மாமதுரை எனும் மதுரை பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சியில் வைகையைப் போற்றுவோம் என வைகைக்காக சுத்தம் செய்து சீர் படுத்தி ஒரு நாள் விழாவே கொண்டாடினார்கள். ஆனால் இன்றோ வைகை எப்படியுள்ளது என படத்தில் பாருங்கள்.



மீனாட்சியம்மன் கோவில் அதிசயம்:
 மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஓர் அதிசயம்...... யாரேனும் பார்த்து உள்ளீர்களா????? வேப்பமரத்தில் அரச மரம் ஒட்டி வளர்ந்து இருக்கும்....
அரச மரத்தின் வேர், வேப்ப மரத்தில் மையப்பகுதியில் இருந்து ஒட்டி வளர்ந்து இருக்கும்.... (ஒரு படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்)

கோவிலின் வெளிப்புற நடைபாதையில் மேற்கு கோபுரம் உள்ள பகுதியில் வலப்பக்கமாக தென் பக்கம் நோக்கி வருகையில் தென் கோபுரம் நோக்கி திரும்புகிற இடத்தில் இந்த இரட்டை மரம் உள்ளது.....


செல்லூர் பாலம்:
மதுரையின் சாலை மேம்பாலங்களில் மிக முக்கியமானது செல்லூர் மேம்பாலம் ஆகும். இந்த பாலம் வருவதற்கு முன் திண்டுக்கல் மார்க்கமாக வருகிற ரயில்களால் செல்லூர் ரயில்வே கிராஸிங் பெரும்பாலும் மூடியே இருக்கும். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் முதல் கோரிப்பாளையம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் கிமி தூரங்களாக நிற்க வேண்டி இருக்கும். செல்லூர் மயானத்திற்கு செல்லும் இறந்தவர்களின் உடலும் ரயில் கேட் திறக்கும்வரை காத்திருக்கும் அவலமும் இருந்தது. 


 (படங்கள்: செல்லூர் பாலத்தில் இருந்து வைகையை கடந்து செல்லும் இருப்பாதை பாலங்கள்)

இதனால் பாலம் கட்ட வேண்டும் என முடிவெடுத்து பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடிக்கப்பட்டு பயனுக்கு வந்து சுமார் நாலைந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உயிரற்ற உடல்களும், அவசர ஊர்திகளும் தடையின்றி செல்ல முடிகிறது. ஆனால் இந்த ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. உரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் நலமாக இருக்கும்.


மின்சார சிக்கனம் தேவை எ(இக்கணம்):
அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றில் இக்கால நாகரீகவாழ்வில் மின்சாரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மின்சார பற்றாக்குறையால் கரண்ட் எப்ப இருக்கும்? போகுமென தெரியாத நிலையில் அன்றாட வாழ்வை நகர்த்தியாக சூழ்நிலையில் நாம் இருக்கையில் அரசாங்கமோ மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதை இந்தப் படத்தில் பாருங்கள்.


இடம்: மதுரை - பாத்திமா காலேஜ் - வழிவிடும் பெருமாள் கோவில் அருகில் - திண்டுக்கல் ரோடு.

நேரம்: காலை 10:15

****************************************************
மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் செய்திகள் இன்னும் வரும்....
மேலும் வாசிக்க... "மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று!"



மதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்

மதுரையில் பொழுதுபோக்குவதற்கான சிற்சில இடங்களில் தல்லாகுளம் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே இருக்கும் சுற்றுச்சூழல் பசுமை பூங்காவும் ஒன்று. மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தில் இயற்கையை சுவாசிக்க நகருக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இடம் இது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சென்ற வாரம் பசுமையை ரசிக்கலாம் என சென்றிருந்தேன். 

மேலும் வாசிக்க... "மதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்"



வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000!

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.
எங்களது வெட்டி பிளாக்கர் முகநூல் குழுமத்தில் இணைய இங்கே அழுத்துங்கள்



சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும், நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!


ஆனாலும் வலையில் எழுதுபவர்கள் குறைந்து வருகின்றார்கள், அதிகமாக முகப்புத்தகத்தில் இருக்கின்றார்கள், சிலருக்கு இப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் முகநூலில் பெரிய இடுகைகளைக் கூட வெளியிடுகின்றார்கள் அவர்களின் கவனம் வலைப்பதிவின் பக்கம் திருப்புவதற்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.


பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு



விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம், க்ரைம், சஸ்பென்ஸ், நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.



கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்

----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைத்தள முகவரி,உங்கள் தொடர்புஎண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு

25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும்.

கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 


நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது. 

கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்



நடுவர்கள்

முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்


இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)


மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)



ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.
source: vettiblogger
மேலும் வாசிக்க... "வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 5000!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1