CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label ஏமாற்றம். Show all posts
Showing posts with label ஏமாற்றம். Show all posts


மதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்

மதுரையில் பொழுதுபோக்குவதற்கான சிற்சில இடங்களில் தல்லாகுளம் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே இருக்கும் சுற்றுச்சூழல் பசுமை பூங்காவும் ஒன்று. மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தில் இயற்கையை சுவாசிக்க நகருக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இடம் இது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சென்ற வாரம் பசுமையை ரசிக்கலாம் என சென்றிருந்தேன். 

மேலும் வாசிக்க... "மதுரை மக்களை ஏமாற்றும் பசுமை பூங்கா - எக்கோ பார்க்"



சமையல்காரர் - சிறுகதை

"ஹலோ... ஹலோ.... அப்பாதுரை சமையல்காரர் இருக்காரா? நான் கேசவன் பேசறேன்....."


"சார் சொல்லுங்க நான் அப்பாதுரை தான் பேசறேன்... எப்படி சார் இருக்கீங்க, தம்பிக்கு கல்யாண ஏற்பாடு ஆயிருச்சுங்களா?....."


"ஆமா துரை... கல்யாணம் ஏற்பாடாயி தேதியும் குறிச்சாச்சு... சமையலுக்கு உன் தேதி தான் வேணும்....."


"சார் எந்த தேதின்னு சொல்லுங்க... நம்ம புள்ளைக்கு நான் செய்யாம வேற யார் செய்வா? வர்ற ஞாயிறு பிரீ தானே, வீட்டுக்கே வர்றேன். பேசிக்கலாம்....."


"சரி துரை, ஞாயிறு சாயிந்திரமா வந்திரு... தம்பியும் இருப்பான். சமையல் வகைகளை பேசிறலாம்....."


(கேசவன் வீட்டில்)
"வா அப்பாதுரை, உட்காரு... வீட்டுல தங்கச்சி சவுக்கியமா? கடைசி மகளுக்கு கல்யாணம் கூடி வருதா?......"


"இல்லைங்க சார், மொத ரெண்டு மகள்களையும் கஷ்டப்பட்டு கரை ஏத்திட்டேன். கடைசி மவ ஆசைப்பட்டான்னு பீஎட் வரை படிக்க வச்சேன். அதனால மாப்பிள்ளையும் அதுக்கேத்த மாதிரி பாக்கனும்ல. வர்ற வரங்களும் பவுன் அதிகமா எதிர்பாக்கறாங்க. என்ன செய்ய?....."


"சரி துரை, கவலைப்படாத.... சீக்கிரம் ஒரு வரன் அமையும்... அந்த ஆண்டவன் இருக்கான்... நம்பிக்கையை விட்டுடாதே....."


"ஆமாங்க சார் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன். நான் வேலை பாக்குற ஆபீசிலும் மொத ரெண்டு பொண்ணுங்களுக்காக லோன் மேல லோன் போட்டுட்டேன். அதனால கொஞ்சம் பணக்கஷ்டம் இருக்கு. இவளும் ஒரு ஸ்கூலுக்கு வேலைக்கு போயிட்டு தான் இருக்கா... என்ன சம்பளம் தான் கம்மியா இருக்கு. சரிங்க சார் என் கதையை பேசிட்டு இருக்கோம். நம்ம தம்பி கல்யாண விஷயத்துக்கு வருவோம். சொல்லுங்க சார் என்னென்ன செய்யணும்?......"


"முதல் நாள் நிச்சயதார்த்தம், அதுல இருந்து கல்யாணம் காலை டிபன் முதல் மதியம் சாப்பாடு வரை என்னென்ன செய்யணும்னு இதுல லிஸ்ட் இருக்கு துரை, இதுக்கு மொத்த காண்ட்ராக்ட் எடுத்துக்க. எவளவு செலவு ஆகும்னு கணக்கு போட்டு சொல்லு, அட்வான்ஸா இந்த பணத்தை இப்போ வச்சுக்க......" 


(கல்யாணத்துக்கு மொத்தம் எத்தன நபர்கள் வருவார்கள் என கேட்டு அதற்கான சமையல் சாமான்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு இறுதி சமையல் காண்ட்ராக்ட் கூலியை சொன்னார் துரை)


"ரொம்ப சந்தோஷம் துரை, ஓரளவு ரீசனபில்லா அமௌன்ட் வந்திருக்கு. அதுக்கு தான் நீ வேணும்னு சொல்றது. நம்ம வீட்டுக்கு நீ எத்தன விஷேசங்களுக்கு சமையல் செஞ்சிருக்க, எல்லோரும் வாயார புகழ்ந்து தான் பேசுவாங்க. எல்லாமே துரை உன்னைய தான் சேரும்......"


"சார் ரொம்ப புகழாதிங்க, நீங்க, நான் கேட்ட சாமான்களை சரியா வாங்கித் தர்றிங்க. என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தனா மதிச்சு நடத்தறிங்க. உங்களுக்கு என்னால முடிஞ்சா அளவு செஞ்சு தர்றேன் அவ்வளோதான்......"


(கல்யாணம் சீரும் சிறப்பாக அறுசுவையோடு முடிந்தது. கேசவன் பெருமகிழ்ச்சி அடைந்து துரை கேட்ட தொகையை விட அதிகமாகவே கொடுத்தார்)


(அப்பாதுரை வீட்டில் இரவு...)
"ஊரார் கல்யாணமெல்லாம் சீரும் சிறப்புமா நடக்குது. இந்த மனுசனும் நல்லா ஆக்கிப் போட்டுட்டு வருது. எம் பிள்ளைக்கு ஒரு கல்யாணம் கூட மாட்டிங்குதே. அப்பவே சொன்னேன், அடியே படிச்சு கிழிச்சது போதும், வரன் அமையறது கஷ்டமாயிரும்ன்னு. கேட்டியாடி....." 


"அடியே, கண்ணம்மா, ஏண்டி இப்ப இப்படி அவகிட்ட கத்திட்டு இருக்க, சொல்றத என் மூஞ்சிக்கு முன்னாடி சொல்லத்தொலை...."


"ஆமாய்யா... என் ஆத்திரம் எனக்கு, புள்ளைக்கு வர்றவனையேல்லாம் அம்புட்டு நகை வேணும், இவ்வளவு சீர் வேணும்னு வரிசையா பெரிய லிஸ்ட் சொல்றாணுக. நீ வேலை பாக்குற ஆபீசு கவர்மென்ட்னாலும் அந்த கேண்டீன் சமையல் வேலைக்கு உன் சம்பளம் அந்த காலத்துல இருந்து என்னமோ கம்மியா தான் இருக்கு. அதுல மொத ரெண்டை கரையேத்த வாங்கின லோனு போக தெனம் பொழப்பு ஓட்ட மட்டுமே காசு மிஞ்சுது. இவளும் ஸ்கூலுல வேல பார்த்துட்டு கொண்டு வர்ற காச தான் சேத்து வச்சிட்டு வர்றேன். இப்ப விக்கிற விலைவாசிக்கு இன்னும் நாம நெறைய சேக்கணும் இவ கல்யாணத்துக்கு...."


சரிடி, இந்தா பிடி, கேசவன் ஐயா வீட்டு கல்யாணத்துக்கு சமையல் பணம்... வீட்டு செலவுக்கும், மிச்சத்த சேர்த்தும் வச்சுக்க"


(இரவு அப்பாத்துரைக்கு தூக்கம் வரவே இல்லை. பொண்டாட்டி பேசிய பேச்சு திரும்ப திரும்ப அவர் காதில் ஒலித்தது. கவர்மென்ட் வேலையா இருந்தாலும் வரவு கம்மியா இருக்கே எனவும் யோசித்தார். அப்படியே தூங்கிப் போனார்)


அடுத்த நாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்றார் அப்பாதுரை. அவர் அந்த ஆபிஸ் கேண்டீனில் சமைக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அந்த சமையலறையில் கேஸ் வெடித்து சிதறியது, அப்பாதுரையும் தீயில் கருகினார். அங்கே இருந்தவர்கள் தீயணைப்பு வண்டிக்கு சொல்லிவிட்டு அப்பாத்துரையை ஒரு வழியாய் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவர் குடும்பம் மொத்தமும் ஆஸ்பத்திரிக்கு வந்தது. ஒவ்வொருத்தரும் அவ்வொரு பக்கமாய் அழுத்த வண்ணம் இருந்தார்கள்.


விஷயம் கேள்விப்பட்டு கேசவன் ஓடி வந்தார். அப்பாதுரை குடும்பத்தாரிடம் பேசி விட்டு அப்பாத்துரை கிடத்தியிருந்த படுக்கைக்கு வந்தார். அப்பாத்துரைக்கு தீக்காயம் முழுதும் இருந்ததால் அவரால் யாரையும் சரியாக அடையாளம் காண முடியவில்லை. இருந்தும் தட்டுத்தடுமாறி கேசவனிடம் பேச முயற்சி செய்தார். கேசவனும் காதை அருகில் கொண்டு சென்றார். 


"ஐயா, எம் புள்ளைகள பாத்துக்கங்க. நான் செத்தா கவர்மேன்ட்டுல இருந்து இன்சூரன்ஸ் பணம், அந்த பணம், இந்தப்பணம் என எப்படியும் ரெண்டு மூணு லட்சம் வரும். அதை எப்படியாவது சீக்கிரம் வாங்கி எம்மக கல்யாணத்த நடத்தீருங்க. என்ன மன்னிச்சுக்கங்க ஐயா, சமைக்கும் போது கேஸ் லைனை பிடுங்கி விட்டுட்டேன் ஐயா"... சொல்லிக் கொண்டே அவர் குரல் விம்மி கண் மூடியது.
-முற்றும்-


(மேற்கண்ட கதையின் கரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டது. கதாபாத்திரங்களும், சம்பவங்களும் சற்றே கற்பனை கலந்தது.)

மேலும் வாசிக்க... "சமையல்காரர் - சிறுகதை"



பஜார் கடை பஞ்சர் ஆன கதை



அந்த ஊர் ரொம்ப பேமசான ஓரளவு பெரிய ஊர். சுத்துபதினெட்டு ஊர் மக்களும் அந்த ஊருக்கு தான் எந்த சாமான்கள் வாங்கனும்னாலும் வந்து போவாங்க. அந்த ஊரோட பஜார்ல கிடைக்காத பொருளே இல்லை. அந்த பஜார்ல விதவிதமான கடைகள் விதவிதமான பொருட்கள் இருக்கும். அதனால ஊர் மக்கள் எல்லோரும் அவங்களுக்குன்னு பரிச்சியமான கடைகளை பழகி வச்சிருந்தாங்க. 

அதே போல பஜார் கடைகளும் மக்களை கவர போட்டி போட்டுட்டு விளம்பரங்கள், இலவச இணைப்புகள், கவர்ச்சித் திட்டங்கள் என பல யுத்திகளை செய்துட்டு வந்தாங்க. மளிகை சாமான்களுக்கு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், துணிமணி வகைகளுக்கு  என மக்கள் தகுதிக்கு ஏற்ப பெரிய கடையில் இருந்து சின்ன கடைகள் வரை அந்த பஜாரில் பரவலா இருந்துச்சு. நிறைய கடைகள் இருந்தாலும் சில கடைகளே மக்களுக்கு பேவரிட்டாக இருந்து வந்துச்சு. மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள் என எல்லா வகையான மக்களும் அந்த பஜார் கடையையே நம்பி இருந்தாங்க.

இப்படி இருக்கறப்ப ஒரு கடையில திடீர்னு அதன் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைய ஆரம்பிச்சுச்சு. அந்த கூட்டம் எல்லாம் வேற வேற கடைகளுக்கு போக ஆரம்பிச்சாங்க. அந்தக் கடையோட கூட்டம் குறைய என்ன காரணம்னு விசாரிச்சப்ப கலப்பட பொருட்களை விற்பனை செய்வதோடு மட்டுமில்லாம கவர்ச்சியான திட்டங்களில் சேர்ந்த மக்களை கொஞ்சம் கொஞ்சமா ஏமாற்றியதா தெரிய வந்திச்சு. இப்படி இருந்தாலும் அந்த கடைக்காரன் கொஞ்சம் முதலீடெல்லாம் போட்டு என்னென்னவோ திட்டமெல்லாம் போட்டு பார்த்தான். ம்ஹும்... கூட்டம் மறுபடியும் வந்த பாடில்லை. அப்படியே கூட்டம் வந்தாலும் சும்மா சுத்தி பாத்துட்டு போனாங்களே தவிர பொருட்களை வாங்க யாருமே முன்வரல. 

கடைக்காரன் தலையில அடிச்சுக்கிட்டான். ச்சே..ச்சே... எப்படி பொருட்கள் இருந்தாலும் வர்ற கூட்டம் கண்டிப்பா வரும்னு கொஞ்சம் கலப்படமும், போலி பொருட்களையும் உள்ள விட்டா அது நமக்கே ஆப்பாயிருச்சே, என அவனோட வீட்டுல, நண்பர்கள் கிட்ட புலம்ப ஆரம்பிச்சுட்டான் அந்த ஜால்ரா நண்பர்கள் கூட்டமும் கலப்பட, போலிகளை உலாவ விட்டாச்சு. அது தீரும் வரைக்கும் நாம சரக்கை மாத்த முடியாது. அதுக்காக போட்ட காசெல்லாம் வீணா போயிரும்னு அந்த கடைக்காரனை மேலும் குழப்பினார்கள். இருந்தாலும் அந்த கடைக்காரன் என்ன முடிவெடுக்கரதுன்னே தெரியாம முழிக்க, ஒருவழியா அவனே சமாளிச்சு மறுபடியும் புது சரக்கெல்லாம் வாங்கி புதுப்புது விளம்பரம் செய்ய ஆரம்பிச்சான். 

ஆனா அதுக்குள்ளே அவனோட பழைய மக்கள் கூட்டமெல்லாம் வேற வேற கடைகளுக்கு வாடிக்கையாளரா மாறியிருந்தாங்க. என்ன செய்ய? கூட்டத்தை நம்பி மக்களை ஏமாற்ற நெனச்ச அவனுக்கு மக்கள் சரியான ஆப்பு வச்சுட்டாங்க. மிச்ச சொச்ச கூட்டமும் படிப்படியா குறையாமலா போகும்? ஆக, மக்களே மக்களை ஏமாற்ற நெனச்சவன் ஏமாந்து போவான் என்பதை இக்கருத்துகள் உணர்த்துகிறது.
மேலும் வாசிக்க... "பஜார் கடை பஞ்சர் ஆன கதை"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1