CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts


சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி? வீடியோ இணைப்பு

வணக்கம் நண்பர்களே...
இன்றைய நாட்களில் இணைய இணைப்பு மிகக் குறைந்த விலையில், கிட்டத்தட்ட இலவசமாக பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது. இதனால் சினிமா, பாடல்கள் என டவுன்லோட் செய்பவர்கள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை சிறந்த download manager கிடைக்காமல்/அறியாமல் இருப்பது. அப்படியே பயன்படுத்தினாலும் அதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும்.

மேலும் வாசிக்க... "சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி? வீடியோ இணைப்பு"



முகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective

       
        முகநூல் (facebook) என்ற சமூக இணையதளத்தில் துவங்கப்படும் பயனர் கணக்குகளில், புற்றீசல் போல போலியான முகநூல் கணக்குகளும் (fake id) நிறைய உருவாக்கபடுகிறது. சமூகத்தில் குறிப்பாக பெண்களை ஏமாற்றவும், வக்கிரமாக உரையாடவும், அனுதாபத்தை ஏற்படுத்தி பணம் பிடுங்கவும், மொத்ததுல தீய எண்ணங்களுடன் எதிர்மறை போக்கை உண்டாக்கவே போலி கணக்குகள் தொடங்கப்படுகிறது. அநேகமாக ஓட்டு மொத்த முகநூல் கணக்கில் சுமார் 20%-30% வரையான கணக்குகள் போலியானவை என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வருகிற நாட்களில் அதிகரிக்கும் என்பது வேதனைக் குறிய விஷயம். 
மேலும் வாசிக்க... "முகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective"



கம்ப்யூட்டரில் ஸ்கிரீன்ஷாட் படம் எடுக்க எளிதான மென்பொருள் PICPICK!!!


வணக்கம் வலை நண்பர்களே,

நம்மில் பலரும் தங்கள் அலுவலக வேலைகளுக்காகவும், இணையதள பதிவுகளுக்காகவும், புகைப்படமாக மாற்றவும் இன்னும் பல தேவைகளுக்காக கம்ப்யூட்டரில் இணைய தளங்களில் உள்ள செய்திகள், படங்கள் போன்றவற்றை ஸ்கிரீன்ஷாட் எடுக்க அவசியம் ஏற்படுகிறது.

ஸ்கிரீன்ஷாட் எடுக்க பலருக்கும் தெரிந்த ஒரே வழி PRINT SCREEN கொடுத்து PAINT software மூலமா edit செஞ்சு பயன்படுத்துவிங்க. ஆனால் screenshot எடுக்க பல softwares இருக்கு. மேலும் browser extensions, addon உள்ளது. ஆனால் நான் கடந்த சில வருடங்களா ஒரு எளிமையான, இலவச software பயன்படுத்தறேன். அதைப் பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

மேலும் வாசிக்க... "கம்ப்யூட்டரில் ஸ்கிரீன்ஷாட் படம் எடுக்க எளிதான மென்பொருள் PICPICK!!!"



வலைதளத்தில் பொங்கல் வாழ்த்து அட்டையை இணைப்பது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே,
நாளை தைத்திருநாளாம், உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை. உற்றார், உறவினர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் உங்கள் வலைப்பூ மூலமும், உங்கள் தளத்தை வாசிக்க வருபவர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஆசையா? அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, கீழே சொல்லப்பட்டிருக்கும் மிக எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்.

மேலும் வாசிக்க... "வலைதளத்தில் பொங்கல் வாழ்த்து அட்டையை இணைப்பது எப்படி?"



வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி? Updated!


வணக்கம் வலை நண்பர்களே,
இன்னும் ஆறே நாட்களில் 2014-ம் வருடம் துவங்க உள்ளது. புது வருடத்திற்காக நமது வலைத்தளத்தில் பதிவை வாசிக்க வரும் வாசகர்களுக்கு வாழ்த்து சொல்ல நமக்கெல்லாம் விருப்பம் இருக்கும். ஒரு அனிமேட்டட் படம் மூலம் வாழ்த்து சொன்னால் மிகவும் நல்லா இருக்கும். அதற்காக சில வாழ்த்து படங்கள் இங்கே இணைத்துள்ளேன். இணைப்பதற்கான வழிமுறையும் பகிர்ந்துள்ளேன். அதன்படி உங்கள் வலையில் இணைத்து வாசகர்களுக்கு ஹேப்பி நியு இயர் சொல்லுங்கள்.

மேலும் வாசிக்க... "வலைதளத்தில் Happy New Year Banner இணைப்பது எப்படி? Updated!"



எல்லாமே பேஸ்புக் சரக்கு!

வணக்கம் வலை நண்பர்களே,

நானும் இங்க எழுதறேன் பேஸ்புக் ஸ்டேடஸ்.... இது ச்சும்மா TRIAL தான்...
மேலும் வாசிக்க... "எல்லாமே பேஸ்புக் சரக்கு!"



வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!!

வணக்கம் வலை நண்பர்களே,

தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது  வலைச்சரம் (www.blogintamil.com) என்னும் தளத்தில் ஆசிரியராக பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். தாங்கள் விரும்பி வாசிக்கும் தளத்தில் பிடித்த பதிவுகள் பற்றி, வலைப்பூவை பற்றி சில வரிகள் தொகுத்து வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினம் ஒரு பதிவாக பதிவிட வேண்டும்.

வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக தங்களுக்கு அழைப்பு வந்து, தாங்களும் ஏற்றுக் கொண்ட பின், வலைச்சரத்தில் இணைவது எப்படி? பதிவு எழுதுவது எப்படி? என சில சந்தேகங்களுக்கான விடை தான் இந்த பதிவு...

வலைச்சரத்தில் பதிவு எழுத தங்களை இணைப்பது எப்படி?

தங்களின் அனுமதி வலைச்சர குழுவிற்கு கிடைத்த உடன், உங்களுக்கு வலைச்சரத்தில் இருந்து ஒரு மெயில் அனுப்பப்படும். அந்த மெயில் கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல இருக்கும்.


அந்த மெயிலில் Accept Invitation என்பதை க்ளிக் செய்தால்... கீழே படத்தில் உள்ளவாறு ஒரு பக்கம் திறக்கும்.
பின்னர் click here to sign in என்பதை கிளிக் செய்து பிளாக்கர் கணக்கில் நுழைந்த உடன் Accept invitation என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பிளாக்கர் டேஷ்போர்டில் வலைச்சரம் இணைந்து இருக்கும்.
மேலே படத்தில் உள்ளவாறு எனது தமிழ்வாசி பிளாக்குடன் டேஷ்போர்டில் வலைச்சரமும் இணைந்துள்ளது. அதே போல உங்களது டேஷ்போர்டில் இருக்கும். 

பதிவில் லிங்க் இணைப்பது எப்படி?

பின்னர் New post எழுதும் பக்கத்தை திறந்து தகுந்த தலைப்பிட்டு பதிவுகள் எழுத வேண்டும். பதிவில் பலரது வலைப்பூக்களையும் அறிமுகம் செய்ய வேண்டி இருப்பதால், அந்த வலைப்பூ பதிவுகளின் லிங்க் எவ்வாறு தர வேண்டும் என்ற சந்தேகம் எழும். நம் பதிவில் மற்ற வலைப்பூவின் பதிவு லிங்க் இணைக்க அந்த வலைப்பூவின் URL முகவரியை COPY செய்து கொள்ள வேண்டும். 

1. கீழே உள்ள படத்தில் "வலைச்சரத்தில்" என்ற வலைப்பூவை லிங்க் தருவதற்கு தேர்ந்தெடுத்து உள்ளேன்.  பார்க்க படம்:


2. வார்த்தையை தேர்ந்தெடுத்த பின் பதிவு எழுதும் இடத்திற்கு மேலே வரிசையாக நிறைய ICONS இருக்கும். அதில் Link என்பதை தேர்வு செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு கட்டம் திறக்கும்.


3. திறந்த கட்டத்தில் text to display என்ற இடத்தில் நாம் தேர்வு செய்த வார்த்தை இருக்கும்.  அதற்கு கீழே link to என்பதில் web address தேர்வு செய்து, அதற்கு பக்கத்தில் உள்ள கட்டத்தில் நாம் Copy செய்த வலைப்பூ பதிவின் URL-ஐ PASTE செய்ய வேண்டும். பார்க்க மேலேயுள்ள படம்.

4. பின் open this link in a new window என்ற கட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நாம் கொடுத்த லிங்க் வேறு பக்கத்தில் திறக்கும். 

பதிவில் லேபிள் இணைப்பது எப்படி?

வலைச்சரத்தில் நீங்கள் பதிவு எழுதும் போது தவறாமல் லேபிள் தர வேண்டும். அதில் நீங்கள் வலைப்பூவில் பயன்படுத்தும் பெயரை குறிப்பிட வேண்டும். பார்க்க படம் கீழே.
உங்கள் பெயரை கொடுத்த பின் Done என்பதை க்ளிக் செய்தால் உங்களது வலைச்சர பதிவில் லேபிள் இணைந்து விடும். 
மேலும் லேபிள் பற்றி விரிவாக அறிய இங்கு க்ளிக்  செய்யவும்.

நண்பர்களே, இந்த பதிவில் வலைச்சர ஆசிரியர்களாக வரும் பெரும்பாலான பதிவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களான, லிங்க் தருவது பற்றியும் லேபிள் தருவது பற்றியும் பார்த்தோம். 

பதிவில் படங்களை எவ்வாறு இணைக்க வேண்டும் என சந்தேகம் இருப்பின், பதிவில் படங்களை இணைப்பது என்ற லிங்க்கை க்ளிக் செய்து பதிவை வாசிக்கவும்.

மேலும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் கேட்கவும்.
மேலும் வாசிக்க... "வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!!"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18

வணக்கம் வலை நண்பர்களே,

இத்தொடர் வாயிலாக வலைப்பூ உருவாக்குவது, செட்டிங் அமைப்பது, layout அமைப்பது என பார்த்து வருகிறோம். இன்றைய பகுதியில் layout பற்றி பார்க்க இருக்கிறோம். 

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-18"



வலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே,
கடந்த பதிவில் இஸ்லாமிய பதிவர்களுக்காக ரமலான் அசையும் விளக்கு படத்தை நமது வலைப்பூவில் எப்படி இணைப்பது என பார்த்தோம். அந்த பதிவில் பலரும் சுதந்தினதினம் வருதே,சுதந்திர வாழ்த்தை தெரிவிக்கும் விதமான பேனரை வலைப்பதிவில் இணைக்க வழிமுறை கேட்டிருந்தார்கள். 

மேலும் வாசிக்க... "வலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எப்படி?"



இஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern


வணக்கம் வலை நண்பர்களே,

இந்த மாதம் ரமலான் மாதம். இஸ்லாம் மதத்தில் ரமலான் புனித திருவிழாவாக கருதப்பட்டு இஸ்லாமியர்கள் சூரியன் உதயத்தில் இருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள்.
நமது இஸ்லாமிய பதிவர்களுக்காக அழகிய அசையும் ரமலான் விளக்கை தங்கள் வலைப்பதிவில் வைத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கே பதிந்துள்ளேன்.
மேலும் வாசிக்க... "இஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ramadan Lantern"



உங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா? இல்லையா? (Follower widget)

வணக்கம் வலை நண்பர்களே,
நீங்கள் வலைப்பூ எழுதுபவராகவும் இருக்கலாம், வாசிப்பவராகவும் இருக்கலாம். வலைப்பூ எழுதுபவர்கள் உங்கள் பதிவுக்கு வாசகர்கள் நிறைய பேர் வர வேண்டுமானால் உங்கள் வலைப்பூவில் பாலோயர் விட்ஜெட் முக்கியமாக இருக்க வேண்டும். 

மேலும் வாசிக்க... "உங்கள் வலைப்பூவில் பாலோயர் இருக்கா? இல்லையா? (Follower widget)"



பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்!


வணக்கம் வலை நண்பர்களே!
இன்று பேஸ்புக்  மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) என்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.

எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?

முதலில் இந்த பக்கத்தை ஓபன் செய்து அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்து, I agree என்ற கட்டத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.
பின்னர் download என்பதை க்ளிக் செய்தால் கம்ப்யூட்டரில் ஒரு file download ஆகும்.

Download செய்த file-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

இன்ஸ்டால் செய்த பின்  task bar - இல் right clik செய்து முதலாக உள்ள toolbars-ஐ க்ளிக் செய்து அங்கே காட்டும் language bar-இல் க்ளிக் செய்யவும். 


க்ளிக் செய்தால் computer Task bar-இல் வலது பக்கம் நேரம், தேதி காட்டும் இடத்திற்கு அருகில் EN என்ற ஐக்கான் இருக்கும். இந்த ஐகான் இருந்தால் google tamil input கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிட்டது என அறியலாம்.
EN என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில், EN English (United states), TA Tamil (India) எனவும் இருக்கும். அதில் டிக் மார்க் EN - இல் இருப்பதால் டைப் செய்தால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வரும். எனவே தமிழ் மொழி வர வேண்டும் என்பதால் நாம் TA என்பதை டிக் மார்க் செய்ய வேண்டும். 

டிக் மார்க் செய்தால் taskbar மேலே கீழேபடத்தில் உள்ளது போல ஒரு bar தோன்றும்.

பின்னர் டைப் செய்ய வேண்டிய இடத்தில், தமிழ் மொழி வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, "வணக்கம்" என தமிழில் டைப் செய்ய வேண்டுமெனில், "vanakkam" என டைப் செய்து spacebar button-ஐ ஒரு அழுத்து அழுத்தினால் தமிழில் வணக்கம் என தோன்றும். 

மேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் பொது அந்த உச்சரிப்பு ஒலிக்கு தொடர்புடைய மற்ற தமிழ் வார்த்தைகளும் அடுத்தடுத்து காட்டும். இங்கே கீழே படத்தில் பாருங்களேன், "காட்டும்" என்பதற்கு kaattum என டைப் செய்யாமல் katum என தவறாக டைப் செய்ததால் கட்டும் என்று முதலில் காட்டுகிறது. ஆனால் மூன்றாவதாக "காட்டும்" என இருப்பதால் நான் மவுஸ் மூலம் மூன்றாவதை தேர்வு செய்தேன்.

இவ்வாறு நாம் தேவையான தமிழ் வாக்கியத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு தமிழ் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.

சரி, இந்த google tamil input மூலம் பேஸ்புக்கில் எப்படி டைப் செய்வது என கேட்கறீர்களா?
ரொம்ப ஈசி///
பேஸ்புக் ஸ்டேடஸ் கட்டத்தில் கர்சரை வைத்து TN என்பதை செலக்ட் செய்து தமிழ் வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை டைப் செய்தால் தமிழில் வாக்கியங்கள் கிடைக்கும். அவ்வளவு தான். 

சிலர் google translate மூலம் டைப் செய்து காப்பி செய்து பேஸ்புக்கில் பேஸ்ட் செய்வதாக தெரிகிறது. இம்முறையை பயன்படுத்தினால் காப்பி/பேஸ்ட் அவசியமில்லை. வேகமாக சாட் செய்யலாம்.
Google tamil input மொத்தம் 22மொழிகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
மேலும் விளக்கங்கள் அறிய கீழே உள்ள படத்தில் வாசியுங்கள்.

குறிப்பு:
1. மிக முக்கியமாக இதன் மூலம் இணைய தொடர்பு இல்லாத சமயத்திலும் தமிழில் எழுதலாம். 

2. MS OFFICE, NOTEPAD, BLOG, EMAIL, TWITTER என எதில் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம்.

3. Control பட்டனையும் G பட்டனையும் (Ctrl+G) அழுத்தினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் எளிதாக மாற்றி எழுதலாம்,

மேலும் வாசிக்க... "பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்!"



பேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா? தவிர்ப்பது எப்படி?


வணக்கம் வலை நண்பர்களே!

பேஸ்புக்கில் சிலரது பக்கத்தில் Facebook profile viewers tag என மற்ற பேஸ்புக் நண்பர்களால் tag செய்யப்படுவதாகவும், அவ்வாறு tag செய்யப்பட்டதை க்ளிக் செய்தால் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் அதே மாதிரியான Facebook profile viewers tag செய்யப்படுகிறது. இதனால் புற்றீசல் போல நிறைய பேஸ்புக் பயனாளிகளுக்கு இந்த Facebook profile viewers tag பரவுகிறது.

இவ்வாறு Facebook profile viewers tag செய்தாலும் நம்மால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க ஒரு வழி உள்ளது. மேலும் வாசிக்க...
மேலும் வாசிக்க... "பேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா? தவிர்ப்பது எப்படி?"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-17

வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் கடந்த பாகத்தில் ப்ளாக் டாஸ்போர்ட்-இல் உள்ள LAYOUT-இல் சிலவற்றைப் பற்றி பார்த்தோம். இனி மற்ற பகுதிகளை பார்ப்போம்.

Blog posts:
இந்த பகுதியில் பதிவு சம்பந்தமான settings அமைக்கலாம். 
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-17"



பேஸ்புக்கில் புதிய வசதி - FACEBOOK STATUS WITH SMILEY - New Feature

வணக்கம் வலை நண்பர்களே,

நம்மில் பலருக்கும் நாள் முழுசும் கூடவே இருக்கறது பேஸ்புக். பேஸ்புக்-கில் ஸ்டேடஸ், லைக், கமெண்ட்ஸ், சாட்டிங் என பலவாறாக யூஸ் செய்துட்டு இருப்போம். அதில், ஸ்டேடஸ்-க்கு கமெண்ட்ஸ் போடுகையில் ஸ்மைலி சேர்க்கும்படியான வசதி ஏற்கனவே உள்ளது. மெசேஜ் பாக்ஸிலும் ஸ்மைலி சேர்க்கும் வசதி உள்ளது.

அது போல தற்பொழுது ஸ்டேடஸ் போடும் பொழுதும் நம் செய்திக்கேற்ற ஸ்மைலி சேர்க்கலாம். அதற்கான வசதி தற்பொழுது பேஸ்புக்-கில் புதியதாக சேர்த்துள்ளார்கள். சிலருக்கு முன்னோட்டமாக இந்த வசதி ஏற்கனவே இருந்திருக்கும்.

மேலும் வாசிக்க... "பேஸ்புக்கில் புதிய வசதி - FACEBOOK STATUS WITH SMILEY - New Feature"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-16

வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இந்த பாகத்தில் ப்ளாக் டாஸ்போர்ட்-இல் உள்ள LAYOUT பற்றி பார்க்க போகின்றோம். 

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-16"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-15

வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer-இல் உள்ள Advanced options பற்றி பாப்போம்.
கீழே படத்தில் பாருங்கள், இதில் advanced என்ற option-இல் நமதுவலைப்பூவின் டெம்ப்ளேட்- அமைப்பில் பல மாற்றங்களை செய்ய பல வசதிகள் உள்ளது. கீழே படத்தில் advanced என்பதை வட்டமிட்டும், அதற்கு பக்கத்தில் அதன் உட்பிரிவு options-ம் கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. 


Advanced:

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-15"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-14



வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer-இல் உள்ள options பற்றி பாப்போம்.

Adjust widths:
ஒவ்வொரு வலைப்பூவுக்கும் அதன் பக்க அகலம் சரியான அளவில் இருந்தால் தான் தோற்றம் அழகாக இருக்கும். பக்க அகலம் சிறியதாக இருந்தால்சிறிய பதிவுகள் கூட பெரிய பதிவாக காட்டும். படங்களையும் சற்று பெரியதாக இணைக்க முடியாது. Sidebar அகலமும் சரியான அளவில் இருக்க வேண்டும். பக்க அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை கீழ்க்கண்ட படத்தில் விளக்கியுள்ளேன்.

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-14"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-13

வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான blogger template designer பற்றி பாப்போம்.
 
டெம்ப்ளேட் மாற்றங்களின் போது பொறுமை மிக அவசியம் நண்பர்களே, ஒவ்வொரு option-யும் தேர்வு செய்து Apply to blog கொடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து திட்டமிடுங்கள்.

Blogger டாஸ்போர்டில் template என்ற பகுதியில் customize என்பதை க்ளிக் செய்தால் கீழ்க்கண்டவாறு பக்கம் ஓபன் ஆகும். இவற்றை blogger template designer என சொல்லாம். இந்தப் பகுதியானது  நமது வலைப்பூவின் டெம்ப்ளேட்டின் உள் அமைப்புகளை மாற்றப் பயன்படுகிறது.
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-13"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-12

வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான Template, Layout settings பற்றி பாப்போம்.

Template:

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-12"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1