வீட்டில் மட்டும் சமைத்து ருசி பார்த்துக் கொண்டிருந்த நான் இன்று வெளியான இரண்டு முக்கிய சமையல் பதிவுகளால் சற்று ஆடிப்போனேன். ஏனெனில் உப்பு, எண்ணெய், காரம், புளிப்பு, இனிப்பு என எதுவும் சேர்க்காமல் தண்ணீரை சுவையானதாக உடலுக்கு ஆரோக்கியமான, இதமான சுடு தண்ணீராக சமைப்பது எப்படி என பதிவுகள் போட்டு அனைவரின் வீட்டிலும் புதியதொரு சமையல் குறிப்பை ஆடவர்களிடத்தில் அளித்து பெரும் சேவை செய்திருந்தார்கள். அவர்களது சுடு தண்ணீரை வச்சு, சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாயினுள் திணித்து சாப்பிடும் அவித்த முட்டை செய்வது எப்படின்னு உங்களுக்கு இங்க சொல்லப் போறேன்...
நண்பர்களே,
சுவையான அவித்த முட்டை சமைப்பது எப்படி என்ற அருமையான டிப்ஸ் இதோ உங்கள் முன்....
சீனு'ஸ் கிச்சனில் அவித்த முட்டை எப்படி செய்வது என கேட்டிருந்த மனதில் உறுதி வேண்டும் "மணிமாறன்" அவர்களுக்காக இந்த பதிவு.
வாங்க வாசி'ஸ் கிச்சன் போலாம்.. ஆனா, கிச்சன் போறதுக்கு முன்னாடி மொதல்ல கடைக்கு போகணும். அவித்த முட்டை செய்றதுக்கான தேவையான பொருளான முட்டை வாங்கும் போது சில விசயங்களை கவனமாக கடைபிடிக்க வேண்டும்.
அவை என்னென்ன?
பிராய்லர் முட்டை, நாட்டுக்கோழி முட்டை, போந்தா கோழி முட்டை என பலவகை கோழி முட்டைகள் இருந்தாலும் கடையில் அதிகமா கிடைக்கும் பிராய்லர் முட்டையே நம்ம சாய்ஸ் ஆக வச்சுக்கலாம்.
1. முட்டை கோழிப்பீய் இல்லாம இருக்கான்னு பாக்கணும். (இருந்தாலும் பரவாயில்ல கழுவிக்கலாம்).
2. முட்டை உடையாம இருக்கான்னு பாக்கணும்.
3. முட்டை முட்டை வடிவத்துல இருக்கான்னு பாக்கணும்.
4. நமக்கு பிடிச்ச முட்டையை சூஸ் செஞ்சு உடையாம இருக்க முட்டை பாக்ஸில் வாங்க வேணும்.
வாங்க கிச்சன் போலாம்...
தேவையான பொருட்கள்:
1. அகலமான பாத்திரம் ஒன்று.
2. முட்டை ஒன்று
3. தேவையான அளவு உப்பு (தேவையான அளவு என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்).
4. சுத்தமான தண்ணீர்.
செய்முறை விளக்கம்:
1. கடையில் பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்த முட்டையை நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். கழுவும் போது முட்டை உடையாமல் கவனமாக கழுவுவது அவசியம்.
2. பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு முட்டை நன்றாக மூழ்கும் அளவு சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும்.
3. பின்னர் அடுப்பை பற்ற வைத்து தண்ணீர் நன்றாக சூடு ஆகி கொதித்து வரும் வரை காத்திருக்கவும். (அந்த நேரத்தில் ஏதாவது செய்கிறோம் பேர்வழி என முட்டையை உடைக்காமல் இருக்கவும்).
4. தண்ணீர் தேவையான அளவு சூடாகி கொதித்தவுடன் முட்டையை மெதுவாக பாத்திரத்தில் இடுக்கி துணையுடன் வைக்கவும்.
5. எடுத்து வைத்த உப்பை பாத்திரத்தில் போடவும்.
6. முட்டை பாத்திரத்தில் போட்டதிலிருந்து சுமார் ஐந்து நிமிடத்தில் பக்குவமாக அவிந்து விடும். (அல்லது) முட்டை ஓடு வெந்து சிறு சிறு விரிசல் விட்டிருந்தால் முட்டை அவிந்து விட்டது என அறியலாம். முட்டை அவிந்ததை அறிய இம்முறையை தான் நான் எப்போதும் பயன்படுத்துவேன்.
7. அவித்த முட்டையை பார்த்து உடனே ஆர்வமாகி கையை விட்டால் கை சுடு தண்ணீரால் வெந்து விடும். எனவே சுத்தமான இடுக்கி துணையுடன் முட்டையை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் போட வேண்டும்.
8. சில நொடிகள் குளிர்ந்த நீரில் முட்டை இருந்தவுடன் எடுத்து முட்டை ஓட்டை மெதுவாக உரிக்க வேண்டும்.
9. முட்டை ஓட்டை உரித்தவுடன் நாம் சாப்பிட தேவையான அவித்த முட்டை தயாராகி விடும்.
ஐந்தே நிமிடத்தில் சுவையான அவித்த முட்டை உங்கள் வீட்டிலேயே தயார். எந்த உணவுடனும் அவித்த முட்டையை வாயில் போட்டு சப்புக்கொட்டி முழுங்கலாம்.
இத்துடன் அவித்த முட்டை சமைப்பது என்ற டிப்ஸ் முடிந்தது. முட்டை அவிப்பதற்கு முன், தண்ணீரை கொதிக்க வைக்க வழிமுறை தெரியவில்லையா? இதோ சீனு'ஸ் கிச்சன், ஆவி'ஸ் கிச்சன் பதிவை வாசிக்கவும்.
38 கருத்துரைகள்:
ஸ்கூல்ல நான் வாங்குன முட்டையை வச்சு இதை செய்யலாமா??
#டவுட்டூ
// பாத்திரத்தை அடுப்பில்
வைத்து ஒரு முட்டை நன்றாக மூழ்கும்
அளவு //
அப்போ அதுவரை முட்டை "முழுகாமல்" இருக்குமா???
@RAJATRICKS - RAJA
ஸ்கூல்ல நான் வாங்குன முட்டையை வச்சு இதை செய்யலாமா??
#டவுட்டூ///
அந்த முட்டையை வச்சு உங்க அப்பா உம் முதுகில் ஆம்ப்லேட் போட்டு சாப்பிட்டு காலி செஞ்சிருப்பாரே???
ஏன் முடியாது
முயற்சி திருவினையாக்கும் ஸ்கூல்லில் சொல்லி தரல
@RAJATRICKS - RAJA
அப்போ அதுவரை முட்டை "முழுகாமல்" இருக்குமா???///
ஆமா, தண்ணிக்குள்ள தான் மூழ்கி இருக்கணும்
யோவ்.. வாத்தி... நீயே இப்டி டவுட்டு கேட்டா பசங்க பாவம்யா.... :-)
@முத்தரசு
ஏன் முடியாது
முயற்சி திருவினையாக்கும் ஸ்கூல்லில் சொல்லி தரல///
முத்தரசு மாம்ஸ்க்கு ஏற்கனவே அனுபவம் இருக்கும் போல....
வாத்தியிடம் பயின்ற மானாக்களை சந்திக்க ஆவா
ஆமாமா அவிச்சி திங்கருதுல
// வாத்தியிடம் பயின்ற
மானாக்களை சந்திக்க ஆவா//
பாவம் அந்த அப்பாவிகளை விட்டுடுங்க. . .
மாப்ளே லைக் பட்டன் இல்லே
நானும் முட்டையை அவிச்சு சாப்டேன். பக்கத்துவீட்டுகாரன் சண்டைக்குவரான். (அவர் வீட்டு கோழிமுட்டை அவர்க்குதான் சொந்தமாம். என்ன ஜனநாயகம் இது?)
@முத்தரசு
ஆமாமா அவிச்சி திங்கருதுல///
வரலாற்றில் பதிக்க வேண்டிய விஷயம் மாம்ஸ்
[[எடுத்து வைத்த உப்பை பாத்திரத்தில் போடவும்.]]
உப்பு எதற்கு போடணும்? நல்ல பதிவு!
தமிழ்மணம் =1
ஓட்டுப் பட்டையை எங்க சாமி ஒளித்து வைத்துள்ளீர்கள்?
கண்டு பிடிச்சிட்டேன்; போட்டும் விட்டேன்!
இந்த ஆ.வி ஆரம்பிச்சு வச்ச அராஜகம்
இன்னும் எத்தனை பேர் தொடரப்போறங்கன்னு தெரியலயே?
நான் விட்டை போறேன்ன்னு’ அறிக்கை விட்டாத்தான் அடங்குவாங்க போல இருக்கு!
அருமையான பதிவு. உபயோகமான பதிவு.
ஒரு முட்டை என்று சொல்லியுள்ளீர்கள். படத்தில் பத்து முட்டை தெரிகிறது. கொதிக்கும் நீரில் போட்டவுடன் ஒன்று பத்தாகிவிடுமா என்று நீங்கள் சொல்லவில்லை. அல்லது நீங்க ஒரு முட்டைன்னு சொன்னா பத்து முட்டைகளுக்குச் சமமோ?
முட்டை "முழுகாமல்" இருந்தால் சம்திங் "ராங்"காக இருக்குமோ? விம் ப்ளீஸ்.. ;-)
@ஸ்ரீராம்.
பதிவை படிச்சுட்டு படத்தை பார்த்ததும் எனக்கும் இந்த டவுட் வந்துச்சு!!
உள்ளேன் ஐயா
சரிதான்..முட்டையை அவிக்கும் முறையை முறையாக சொல்லிக்கொடுத்த வாசி'ஸ் கிச்சன்ஸ்க்கு நன்றி..! (ஐயோ..சாமி...இன்னும் எவ்வளவு கைவசம் வச்சிருக்கீங்கன்னு தெரியலையே..)
அது சரி.... அவிமுறை விளக்கம் அருமை...
அது சரி.... அவிமுறை விளக்கம் அருமை...
இந்த டிஷ் செய்வதற்கு மிக கடினமாக இருப்பது போல் தெரிகிறதே பிரகாஷ்... இதற்கான வீடியோ லிங்க் ஏதாவது இருக்கிறதா...? இதே போன்று செட்டிநாட்டு அவித்த முட்டை , ஹைதராபாத் அவித்த முட்டை , ஆம்பூர் அவித்த முட்டை ... இவைகளையும் செய்வது எப்படி என்று வெளியிட்டால் மிக பயனுள்ளதாக இருக்கும்..
//முட்டை ஓட்டை உரித்தவுடன் நாம் சாப்பிட தேவையான அவித்த முட்டை தயாராகி விடும்.//
அடுத்ததாக முட்டையிலிருந்து ஓட்டைப் பிரிப்பது எப்படி என்று யாராவது எழுதுவார்கள் என அவதானிக்கிறேன்... :-)))
பாஸ் உங்க பாணியில் நான் போட்ட பதிவு ...
பாத்திரம் கழுவுவது எப்படி ? கிங்’ஸ் கிச்சன்
உப்பு போட்டு வேகவைத்தால் எந்த உணவாக இருந்தாலும் சீக்கிரம் வெந்துவிடும் என்று சொல்வார்கள்....
என்ன நடக்கிறது இங்கே!!!
ஒரே நொடியில் அவித்த முட்டை செய்வது எப்படி?!
தேவையான பொருட்கள்:
அவித்த முட்டை (வேண்டிய அளவு!)
இப்போது சுவையான அவித்த முட்டை ரெடி!
எமது அடுத்த பதிவு:
அவித்த முட்டை மசாலா செய்வது எப்படி?! :)
அடடே... இதுவல்லவோ அழகான சமையல் குறிப்பு. வாழ்த்துகள்!
சிறப்பான பகிர்வுக்கும் பிறக்கப் போகும் புத்தாண்டில் இன்பங்கள் சூழ்ந்திடவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் சகோதரா .
உபயோகமான பதிவு!
என்பதால்... இரு தடவைகள் படித்து மனதில் இடம் பிடித்து வைத்துக் கொண்டேன்.
//ஐந்தே நிமிடங்களில் அவித்த முட்டை செய்வது எப்படி? //
ஐந்தே நிமிடங்களில் முட்டை அவிப்பது எப்படி?
எந்தத் தலைப்பு பொருத்தம்?
த. ம. +1
ராஜி புண்ணியத்துல வலைச்சரத்தில் இருந்து உங்க கிச்சன் வந்துட்டேன்...
என் பசங்களுக்கு இதெல்லாம் புக்மார்க் பண்ணிக் கொடுத்துடறேன்.. :)
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கணும் சாமி!!... இதுவரையில் முட்டை அவிப்பது எப்படின்னு தெரியாம பச்சை புள்ளையாட்டமாவே இருந்துட்டேன்... இப்போ தெரிஞ்சுகிட்டேன்.... என் கண்ண திறந்த மகராசன் நீங்க...
அப்படியே டாஸ்மார்க்குல குடித்துவிட்டு ஐந்தே நிமிடத்தில் மட்டையாவது எப்படின்னு ஒரு பதிவும் போட்டீங்கன்னா ரொம்ம்ப புண்ணியமா போகும்...
இப்படிக்கு உங்க பதிவுக்காக ஏங்கும் ஒரு இந்திய குடிமகன்