வணக்கம் வலை நண்பர்களே....
இன்று செய்தித்தாள்களை வாசித்துக் கொண்டிருக்கையில் மதுரை நிலத்தடி நீர்மட்டம் பற்றி செய்தி கண்ணில் பட்டது.
நிலத்தடி நீரை குடிநீராகவும், சமையலுக்கும் பயன்படுத்துவோர் அதன் தன்மையை அறிவது இல்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத கிராமம், நகர் பகுதிகளிலும் நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த நிலத்தடி நீர் மாசுபட்டு அதன் தன்மை மாறுபட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் இது குறித்த நடத்திய ஆய்வில் கடின தன்மையும், பொட்டாசியமும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக நிலத்தடி நீரை எடுத்து பரிசோதனை செய்ததில் ஒரு லிட்டர் நீரில் கடின தன்மை, பொட்டாசியம், புளோரைடு, கால்சியம் எத்தனை மில்லி கிராம் கலந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி, திருமங்கலம் தாலுகாவில் ஒரு லிட்டர் நீரில் 658 மி.கிராம், திருமங்கலம் தாலுகாவில் 568 மி.கிராம் உள்ளது. மற்ற தாலுகா பகுதிகளில் 500 மி.கிராமுக்கு குறைவாக உள்ளது.
பொட்டாசியம்: பொதுவாக ஒரு லிட்டர் நீரில் பொட்டாசியம் 10 மில்லி கிராம் வரை இருக்கலாம். மதுரை தெற்கு தாலுகா பகுதியில் மட்டும் 9 மி.கி. உள்ளது. ஏனைய பகுதிகளில் அதிகமுள்ளது. மதுரை வடக்கு, மேலூர், உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி தாலுகாவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. மேலூர் தாலுகாவில் ஒரு லிட்டரில் 39 மி.கிராம், மதுரை வடக்கு தாலுகாவில் 30 மி.கி, உசிலம்பட்டியில் 29 மி.கி, திருமங்கலத்தில் 16 மி.கி, வாடிப்பட்டி, பேரையூரில் தலா 11 மி.கி. உள்ளது.
புளோரைடு: உசிலம்பட்டி தாலுகாவில் ஒரு லிட்டர் நீரில் 0.91 மி.கிராம், மதுரை தெற்கு தாலுகாவில் 0.85 மி.கி, பேரையூரில் 0.83 மி.கி, மதுரை வடக்கில் 0.72 மி.கி, திருமங்கலத்தில் 0.68 மி.கி, வாடிப்பட்டியில் 0.63 மி.கி. மேலூரில் 0.61 மி.கி. கலந்துள்ளது.
கால்சியம்: இதன் அளவு திருமங்கலம் தாலுகாவில் 107 மி.கி., உசிலம்பட்டியில் 101 மி.கி. மேலூரில் 85 மி.கி, மதுரை தெற்கில் 78 மி.கி, மதுரை வடக்கில் 75 மி.கி, பேரையூரில் 63 மி.கி, வாடிப்பட்டியில் 49 மி.கி. உள்ளது.
சோடியம்: இதன் அளவு மதுரை தெற்கு தாலுகாவில் 197 மி.கி, உசிலம்பட்டியில் 186 மி.கி. மேலூரில் 175 மி.கி, மதுரை வடக்கு, திருமங்கலம் தாலுகாக்களில் தலா 162 மி.கி, பேரையூரில் 109 மி.கி. வாடிப்பட்டியில் 77 மி.கி, உசிலம்பட்டியில் 98 மி.கி. திருமங்கலத்தில் 73 மி.கி, மதுரை வடக்கில் 70 மி.கி, மதுரை தெற்கில் 59 மி.கி, வாடிப்பட்டியில் 53 மி.கி, மேலூரில் 52 மி.கி, பேரையூரில் 51 மி.கி. கலந்துள்ளது.
கடின தன்மை, பொட்டாசிய அமிலம் அதிகரித்து நஞ்சாக மாறும் தண்ணீரை குடிப்பதால், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை பாதிக்கும் நோய் நம்மை அறியாமல் உண்டாகிறது. பலரும் உயிரிழக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
மதுரை நகரில் நிலத்தடி நீர் குறித்து ஆய்வில், நிலத்தடி நீர் பாதாளத்திற்கு இறங்கி கொண்டே போகிறது. இதனால் நிலத்தடி நீர் அதிகம் மாசடைந்துள்ளது. பாதாள சாக்கடை முழுமையாக நிறைவேறிய பகுதிகளில் நிலத்தடி நீரில் நோய் தாக்கும் நுண்ணுயிர் கிருமிகள் குறைவாக உள்ளன. பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் நுண்ணுயிர் கிருமிகள் அதிகம் உள்ளன’ என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகள் அரசின் பொதுப்பணித்துறைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் தர குறியீடு
மதுரை நகரில் நிலத்தடி நீரின் தர குறியீடு 25 யூனிட் வரை சூப்பராகும். அதற்கு மேல் 50 யூனிட் வரை நன்றானது. அதற்கு மேல் 75 யூனிட் வரை மோசம். அதற்கு மேல் 100 யூனிட் வரை மிக மோசம் என மதிப்பிடப்படும்.
நகர் பகுதியில் நிலத்தடி நீரின் தரக்குறியீடு வருமாறு:
டிவிஎஸ் நகர்- 245.
சந்தைபேட்டை- 211.
மாட்டுத்தாவணி- 179,
பீபிகுளம்- 169.
வில்லாபுரம்- 169.
புதூர்- 161.
ஜெய்ஹிந்துபுரம்- 158.
கே.கே.நகர்- 161.
நரிமேடு- 156.
ஆரப்பாளையம்- 152.
காளவாசல்- 139.
அண்ணாநகர்- 139.
தல்லாகுளம்- 134.
தெற்குவாசல்- 132.
சொக்கிகுளம்- 113.
தத்தநேரி- 108
கோரிப்பாளையம்- 105.
அனுப்பானடி- 94.8
பெரியார் பஸ் ஸ்டாண்ட்- 94.3.
எஸ்.எஸ்.காலனி- 87.5.
எல்லீஸ் நகர்- 85.3.
9 கருத்துரைகள்:
காலங்கடந்த நிலையிலிருந்தாலும் இனியாவது விழித்துக்கொண்டு மிச்சம் மீதி இருக்கும் நீர் வளத்தை தக்க வைத்துக்கொள்வோமா!?
திண்டுக்கல் 00000
dgl 00000
dindigul 00000
அரசு மக்களின் நலன் கருதி விரைவில் எடுத்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் !இயற்கை வளங்ககளை மனிதன் அழித்தான் இனி மனிதனின் உயிருக்கு இயற்கை விடும் இது போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து தன்னைத் தான் பாது காக்க இனியேனும் கற்றுக்கொள்ள வேண்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .
உங்கள் மதுரையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க இந்த நிலைமைதான். பல் இடங்களில் ஏற்கனவே போட்ட ‘போர்’ கள் தூர்ந்து வருகின்றன. வரும் மழைக் காலத்திலாவது மழை நன்றாகப் பெய்தால்தான் பிரச்சினை தீரும்.
மதுரையில் இருந்த எல்லா குளங்களையும் அழித்து வீடு கட்டியாச்சு, பழைய தார் ரோட்ட எடுத்துட்டு புது ரோடு போடாமல், இருக்க ரோட்டு மேலே புது ரோடு போட்டு ஊர மேடு ஆக்கியாச்சு. இந்நிலைமையில் மழை நீர் தேங்காமல் எப்படி நிலத்தடி நீர் உயரும்.
பயனுள்ள தகவல்
அதிர்ச்சி தரும் தகவல்....
அருமையான பதிவு. நன்றி & வாழ்த்துகள் பிரகாஷ்.
நல்ல விழிப்பு பகிர்வு.