வணக்கம் வலை மக்களே....
"சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..." இந்த வரி ரஜினிகாந்த் நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் வரும் பாடல். அதற்கேற்ப 1980-களில் திரைப்படங்களில் முடி சூடா மன்னனாக திகழ்ந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் தேடி வந்தது.
அவருக்கு முன் நடிப்பில் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று பெரும் புகழோடு திகழ்ந்தவர்கள் என்றால் சிவாஜிகணேசன் மற்றும் எம்ஜிஆர் ஜாம்பவான்களை சொல்லலாம். ஆனால் அவர்களை சூப்பர் ஸ்டார் என சொல்லிவிட முடியாது. ஏனெனில் அவர்களுக்கு தங்களின் பெயர்களுக்கு முன்னால் போடக்கூடிய தனி பட்டம் இருந்தது. அந்தப் பட்டம் அவர்களில் நடிப்புத்திறமைக்கு(மக்கள் திலகம், நடிகர் திலகம்) ஏற்ப மக்களால் வழங்கப்பட்டது.
ரஜினிக்கு பின்னும் இக்காலத்தில் பல திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் வழங்கிய/தானாக வைத்துக் கொண்ட பட்டம் உள்ளது. அவர்களுக்கு அதுவே அடையாளம்.
ஆனால் இன்றோ ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் எந்த நடிகருக்கு வழங்கலாம் என ஒரு வார இதழ் மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தி அதன் மூலம் விஜய் தேர்வாகியுள்ளாராம். அவருக்கு இந்தப் பட்டம் எத்தனை வருடத்திற்கு உரிமையானது?? இது எப்படி இருக்கு தெரியுமா? தேர்தலில் ஒரு கட்சி ஆட்சியை பிடித்து அஞ்சு வருஷம் நாட்டை ஆண்ட பிறகு அடுத்து வரும் தேர்தலில் அந்த கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்போமா? மாட்டோமா? எனற கேள்வியுடன் தேர்தலில் நிற்கிறது. மக்கள் அந்த கட்சிக்கு பெருவாரியாக ஓட்டு போட்டு தேர்வு செய்யப்படவில்லை எனில் அந்த கட்சி இருக்கும் இடம் இல்லாமல் போகும் வாய்ப்பும் ஏற்ப்படுகிறது.
ஆகவே தற்சமயம் கருத்து கணிப்பு மூலம் சூப்பர் ஸ்டார் என்ற பெயரைப் பெற்ற நடிகரும் அடுத்த கருத்து கணிப்பு நடக்கும் போது அந்தப் பெயரை இழக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அல்லது கருத்து கணிப்பு பட்டியலில் அவர் பெயர் இடம் பெறாமல் போகவும் கூடும்.
ரஜினிகாந்த் தனது ஓய்வில்லா நடிப்புகளால் சாதாரண நடிகன் என்ற நிலையில் இருந்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை மக்களிடமிருந்து பெற்றார். அவருக்கு இந்தப் பட்டம் கருத்து கணிப்பு மூலமாகவோ, சீட்டுக் குலுக்கி போட்டோ, பணம் கொடுத்து வாங்கப்பட்டதோ அல்ல. மக்களிடம் இருந்து தானாக வந்த சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு முன்னால் கருத்து கணிப்பின் மூலம் வந்த சூப்பர் ஸ்டார் நிரந்தரம் அல்ல. என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே....
இந்த சூப்பர் ஸ்டார் சம்பந்தமாக 2011-இல் நண்பர் செங்கோவி எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு: அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?
டிஸ்கி:
1. வார இதழில் வந்த கருத்து கணிப்பிற்கான கேள்வி சரியா???
சூப்பர் ஸ்டாரை விடுத்து வேற பெயருடன் கருத்து கணிப்பு கேள்வி இருந்திருக்கலாமோ??? அடுத்த நம்பர் ஒன் யார் என்றோ?
2. இப்பதிவு சூப்பர் ஸ்டார் பெயரை பெற்ற இளையதளபதி நடிகருக்கு எதிர்பதிவு அல்ல..
7 கருத்துரைகள்:
கலக்கிட்டீங்க பிரகாஷ். விஜய்க்கு ஏற்கனவே இளைய தளபதின்னு சொந்தப் பட்டம் இருக்கும்போது, இன்னொருவரின் பட்டத்தைப் பிடுங்க வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்த நம்பர் ஒன் நடிகர் யார் என்று கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தால், பிரச்சினையே இல்லை.
மக்கள் கொடுக்கும் பட்டம்தான் நிலைக்கும்! என்றைக்கும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார்! மிகச்சரியா சொன்னீங்க! குமுதம் பத்திரிக்கைக்கு எதையாவது சிண்டு முடிவதே வேலை!
இவனுங்க விட்ட, “அடுத்த அப்பா யாரு? அடுத்த அம்மா யாரு?”ன்னுலாம் கருத்துக்கணிப்பு நடத்துவாய்ங்க.. எங்க எவனாவது ஒருத்தன அடுத்த எம்.ஜி.ஆர் யாருன்னு கருத்து கணிப்பு நடத்தச்சொல்லுங்க பாப்போம்... ப்ளடி..
ரஜனியைத் தவிர இன்னொருத்தர் இந்தப் பட்டத்தைப் பெற்றால் அது அவ்வளவு அழகாக இருக்காது இந்தப் பட்டம் ரஜனிக்கே மிகப்
பொருத்தமானது சூப்பர் ஸ்டாரு
யாருன்னு கேட்டா சின்னப் பிள்ளையும் சொல்லும் :))))))))))) .பகிர்வுக்கு மிக்க நன்றி
சகோ .
மக்கள் தீர்ப்பே ________________
சகோ ஏதோ பத்திரிகை தன் விளம்பர நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டது அது தானே உண்மை :)